சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே
கிழக்கு வெளுத்தடா மனசும் அங்கே சிவந்ததடா
சுட்டவடு ஆறல நெஞ்சில் பட்டபின்பு மாறல
சுட்டவடு ஆறல பட்டபின்பு மாறல
சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே
சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே
நெஞ்சிலே நெருப்ப வச்சா நீரும் அணைக்கமுடியுமா
கண்ணிலே முள்ளு தச்சா இமையும் மூட முடியுமா
பாரதக்கதையும் கூட பழியில் முடிஞ்ச காவியந்தான்
இருப்பதும் இறப்பதும் அந்த இயற்கையோட கையில
இருப்பதும் இறப்பதும் அந்த இயற்கையோட கையில
நான் மறஞ்சபின்பும் நிலைப்பது என் உயிர் எழுதும் கதையில
சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே
சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே
நீயும் நானும் வாழணும்னா தீமையெல்லாம் தீயிடு
கெட்டதிங்கு அழியணும்னா கொடுமையெல்லாம் பலிகொடு
கண்ணன் கீதையில சொன்னதப்போல் நடந்திடு
பச்சப்பயிர் வாழ மண்ணில் களையெடுத்தா தவறில்ல
பச்சப்பயிர் வாழ மண்ணில் களையெடுத்தா தவறில்ல
அந்த முடிவில் தானே தொடக்கம் தேடி புதுக்கத நான் எழுதல
சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே
சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே
கிழக்கு வெளுத்தடா மனசும் அங்கே சிவந்ததடா
சுட்டவடு ஆறல நெஞ்சில் பட்டபின்பு மாறல
சுட்டவடு ஆறல பட்டபின்பு மாறல
சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே
சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே
No comments:
Post a Comment