துள்ளித் திரிந்ததொரு காலம் - Thulli Thirinthathoru Kaalam Lyrics

துள்ளித் திரிந்ததொரு காலம்
பள்ளிப் பயின்றதொரு காலம்
துள்ளித் திரிந்ததொரு காலம்
பள்ளிப் பயின்றதொரு காலம்
காலங்கள் ஓடுது பூங்கொடியே பூங்கொடியே
இன்பத்தை தேடுது பூங்கொடியே பூங்கொடியே

துள்ளித் திரிந்ததொரு காலம்
பள்ளிப் பயின்றதொரு காலம்


அன்னை மடிதனில் சிலநாள்
அதை விடுத்தொரு சிலநாள்
திண்ணை வெளியினில் சிலநாள்
உண்ண வழியின்றி சிலநாள்
நட்பின் அரட்டைகள் சிலநாள்
நம்பித்திரிந்ததும் பலநாள்
கானல் நீரினில் சிலநாள்
கடல் நடுவிலும் சிலநாள்
கன்னி மயக்கத்தில் திருநாள்
கையில் குழந்தையும் அதனால்
ஓடி முடிந்தது காலங்கள் காலங்கள் பூங்கொடியே

துள்ளித் திரிந்ததொரு காலம்
பள்ளிப் பயின்றதொரு காலம்
துள்ளித் திரிந்ததொரு காலம்
பள்ளிப் பயின்றதொரு காலம்


துள்ளும் அலை என அலைந்தேன்
நெஞ்சில் கனவினை சுமந்தேன்
வாழ்க்கைப் பயணத்தை தொடர்ந்தேன்
வானம் எல்லையென நடந்தேன்
காதல் வேள்விதனில் விழுந்தேன்
கேள்விக்குறியென வளைந்தேன்
உன்னை நினைத்திங்கு சிரித்தேன்
உண்மைக் கதைதனை மறைத்தேன்
பதில் சொல்லிட நினைத்தேன்
சொல்ல மொழியின்றி தவித்தேன்
வாழ்கின்ற வாழ்வெல்லாம் நீர்க்குமிழ் போன்றது பூங்கொடியே

துள்ளித் திரிந்ததொரு காலம்
பள்ளிப் பயின்றதொரு காலம்
துள்ளித் திரிந்ததொரு காலம்
பள்ளிப் பயின்றதொரு காலம்
காலங்கள் ஓடுது பூங்கொடியே பூங்கொடியே
இன்பத்தை தேடுது பூங்கொடியே பூங்கொடியே

துள்ளித் திரிந்ததொரு காலம்
பள்ளிப் பயின்றதொரு காலம்
துள்ளித் திரிந்ததொரு காலம்
பள்ளிப் பயின்றதொரு காலம்

3 comments:

  1. அஅருமை

    ReplyDelete
  2. 👍🏻👍🏻👏🏻👏🏻👏🏻

    ReplyDelete
  3. good lyrics it touching and become so depressed . what is the movie

    ReplyDelete