மயக்கமா கலக்கமா மைண்டு - Mayakkamaa Kalakkamaa Mind full ah Lyrics - Thiruchitrambalam Lyrics

மயக்கமா கலக்கமா
மைண்டு ஃபுல்லா குழப்பமா
இருக்குதா இல்லியா
இந்த டென்ஷன் எனக்குமா
ஆல்ரெடி நான் வாங்கிட்டேன் பல்பு
லவ்வுல எனக்கெடுக்கல செல்ஃபு
என்ன சங்கதி புரியலயே
இப்போ என் கதி தெரியிலயே

மயக்கமா கலக்கமா
மைண்டு ஃபுல்லா குழப்பமா
இருக்குதா இல்லியா
இந்த டென்ஷன் எனக்குமா



வேரா என் லைஃப்பில் நீதான்
பேரா எந்நாளும் பாக்கல நான் தான்
எனக்கு நீதானா பெஸ்டு
கடவுள் வச்சானே டெஸ்டு டெஸ்டு
பாசம் வச்சேன் ஓவரா
இது தான் லவ் ஃபீவரா
நான் என்ன பண்ணுவேன்
நீயே சொல்லு ஈஸ்வரா
என் நெஞ்சில் பூந்துகிட்ட
இப்ப நான் மாட்டிக்கிட்டேன்

தேன்மொழி பூங்கொடி
மைண்டு ஃபுல்லா நீயடி
வான்மதி பைங்கிளி
தோழி இப்போ காதலி.. ஏ..

தேன்மொழி பூங்கொடி வாடிப்போச்சே - Thenmozhi Poongodi Vaadipoche Lyrics

தேன்மொழி பூங்கொடி
வாடிப்போச்சே என் செடி
வான்மதி பைங்கிளி
ஆசை தீர வாட்டு நீ

உன்ன நெனச்சொன்னும் உருகல போடி
சோகத்தில் ஒன்னும் வளக்கல தாடி
கெத்து காட்டிட்டு அழுவுறேனே
அழுது முடிச்சுட்டு சிரிக்கிறேனே

தேன்மொழி பூங்கொடி
வாடிப்போச்சே என் செடி
வான்மதி பைங்கிளி
ஆசை தீர வாட்டு நீ.. ஏ...



நெஜமா நான் செஞ்ச பாவம்
முழுசா உன் மேல விதைச்ச பாசம்
நிழலும் பின்னால காணோம்
அதுக்கும் அம்மாடி புதுசா கோவம்
பாலே இங்க தேறல
பாயாசம் கேட்குதா
காத்தே இங்க வீசல
காத்தாடி கேட்குதா
உன் மேல குத்தம் இல்ல
நீ ஒன்னும் நானும் இல்ல

தேன்மொழி பூங்கொடி
வாடிப்போச்சே என் செடி
வான்மதி பைங்கிளி
ஆசை தீர வாட்டு நீ.. ஏ..

உன்ன நெனச்சொன்னும் உருகல போடி
சோகத்தில் ஒன்னும் வளக்கல தாடி
கெத்து காட்டிட்டு அழுவுறேனே
அழுது முடிச்சுட்டு சிரிக்கிறேனே

தேன்மொழி பூங்கொடி
வாடிப்போச்சே என் செடி
வான்மதி பைங்கிளி
ஆசை தீர வாட்டு நீ.. ஏ..

ஆராரிரோ பாடியதாரோ தூங்கிப் போனதாரோ - Aaraariro Paadiyathaaro Thoongiponathaaro Lyrics

ஆராரிரோ பாடியதாரோ
தூங்கிப் போனதாரோ
யாரோ யாரோ 
எனக்காரோ யாரோ
என் தெய்வமே இது பொய் தூக்கமா
நான் தூங்கவே இனி நாள் ஆகுமா
ஆராரிரோ பாடியதாரோ யாரோ



நீ முந்திப் போனது 
நியாயம் இல்லையே
நான் முந்திப் போகவே 
யோகம் இல்லையே
கூட்டை விட்டு தாய் கிளி பறந்ததிங்கே
பசித்தவன் கேட்கிறேன் பால் சோறு எங்கே
என் தேவியே நானும் செய்த 
குற்றம் என்ன கூறு
ஒரு பார்வை பாரு

ஆராரிரோ பாடியதாரோ
தூங்கிப் போனதாரோ
யாரோ யாரோ 
எனக்காரோ யாரோ



பொழுதாகிப் போனதே
இன்னும் தூக்கமா
சொல்லாமல் போவது
தாயே நியாயமா
உயிர் தந்த தேவிக்கு உயிர் இல்லையோ
பாலூட்டிப் பார்த்தியே பாலூத்தலாமோ
அன்னம் போட்ட என் தாயே உனக்கு 
அரிசி போட வந்தேன்
என்ன நானே நொந்தேன்

ஆராரிரோ பாடியதாரோ
தூங்கிப் போனதாரோ
யாரோ யாரோ 
எனக்காரோ யாரோ
என் தெய்வமே இது பொய் தூக்கமா
நான் தூங்கவே இனி நாள் ஆகுமா
ஆராரிரோ பாடியதாரோ
தூங்கிப் போனதாரோ
யாரோ யாரோ 
எனக்காரோ யாரோ

பட்டு வண்ண ரோசாவாம் பார்த்த கண்ணு மூடாதாம் - Pattu Vanna Rosaavaam Paartha Kannu Moodaathaam Lyrics

பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
பாசம் என்னும் நீர் இறைச்சேன்
ஆசையிலே நான் வளர்த்தேன்

பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
பாசம் என்னும் நீர் இறைச்சேன்
ஆசையிலே நான் வளர்த்தேன்
அள்ளிவச்ச வேளையிலே
முள்ளிருந்து பட்டதம்மா
பட்டாலும் குத்தமில்லே
பாவம் அந்த பூவுக்கில்லே

பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்



காத்து பட்டாலே கரையாதோ கற்பூரம்
கரையுது என் மனசு உன்னாலே
காத்து பட்டாலே கரையாதோ கற்பூரம்
கரையுது என் மனசு உன்னாலே
அடி சத்தியமா
அடி சத்தியமா நான் இருப்பேன் உன்னாலே
உயிர் போனாலும் உன் ஆசை போகாது
உயிர் போனாலும் உன் ஆசை போகாது
மனம் கல்லாலே ஆனதில்லே கண்ணம்மா
மனம் கல்லாலே ஆனதில்லே கண்ணம்மா

பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
பாசம் என்னும் நீர் இறைச்சேன்
ஆசையிலே நான் வளர்த்தேன்
அள்ளிவச்ச வேளையிலே
முள்ளிருந்து பட்டதம்மா
பட்டாலும் குத்தமில்லே
பாவம் அந்த பூவுக்கில்லே

பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்



ஓடும் தண்ணீரும் நீ தொட்டா பன்னீரு
உனக்கென்ன ராசாத்தி கண்ணீரு
ஓடும் தண்ணீரும் நீ தொட்டா பன்னீரு
உனக்கென்ன ராசாத்தி கண்ணீரு
உன்ன காத்திருப்பேன்
உன்ன காத்திருப்பேன் கண்ணுக்கொரு கண்ணாக
நல்ல நாள் ஒண்ணு எல்லார்க்கும் உண்டாகும்
நல்ல நாள் ஒண்ணு எல்லார்க்கும் உண்டாகும்
இந்த நம்பிக்கை தான் நம்மையெல்லாம் காக்கோணும்
இந்த நம்பிக்கை தான் நம்மையெல்லாம் காக்கோணும்

பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
பாசம் என்னும் நீர் இறைச்சேன்
ஆசையிலே நான் வளர்த்தேன்
அள்ளிவச்ச வேளையிலே
முள்ளிருந்து பட்டதம்மா
பட்டாலும் குத்தமில்லே
பாவம் அந்த பூவுக்கில்லே

பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்

பூங்குயில் ராகமே புதுமலர் வாசமே - Poonguyil Raagame Puthu Malar Vaasame Lyrics

பூங்குயில் ராகமே
புதுமலர் வாசமே
நாளை நம் வானிலே
நாளும் புது ஊர்வலம்
நாளை நம் வானிலே
நாளும் புது ஊர்வலம்

பூங்குயில் ராகமே
புதுமலர் வாசமே
நாளை நம் வானிலே
நாளும் புது ஊர்வலம்
நாளை நம் வானிலே
நாளும் புது ஊர்வலம்

கண்மணி கண்மணி
என்னுயிர் கண்மணி
என்றும் உன் மூச்சிலே
வாழும் என் ஜீவனே
என்றும் உன் மூச்சிலே
வாழும் என் ஜீவனே
கண்மணி கண்மணி



ஜென்ம ஜென்மங்கள்
ஒன்றாக நாம் சேரணும்
கண்ணே நான் காணும்
ஆகாயம் நீயாகணும்
என்றும் ஓயாது ஓயாது
உன் ஞாபகம்
நாளும் உன் பார்வை தானே
என் சூர்யோதயம்
அன்பே நீயில்லையேல்
இங்கு நான் இல்லையே
நெஞ்சம் உன் ஆலயம்
நீ என் உயிரோவியம்
சொர்க்கமே வா செல்வமே வா
ஜீவனே நீ வா வா

பூங்குயில் ராகமே
புதுமலர் வாசமே
நாளை நம் வானிலே
நாளும் புது ஊர்வலம்
நாளை நம் வானிலே
நாளும் புது ஊர்வலம்



இன்று என் பாதை
உன்னாலே பூப்பூத்தது
பூவே உன் கண்ணில்
என் கோயில் தெரிகின்றது
உந்தன் பேர் கூட
சங்கீதம் ஆகின்றது
பொழுது நமக்காக 
நமக்காக விடிகின்றது
ஓடும் கங்கை நதி
இல்லை என்றாகலாம்
வானம் நூறாகலாம்
யாவும் பொய்யாகலாம்
உன்னையே தினம் எண்ணிடும்
நம் காதலே என்றும் வாழும்

பூங்குயில் ராகமே
புதுமலர் வாசமே
நாளை நம் வானிலே
நாளும் புது ஊர்வலம்
நாளை நம் வானிலே
நாளும் புது ஊர்வலம்

கண்மணி கண்மணி
என்னுயிர் கண்மணி
என்றும் உன் மூச்சிலே
வாழும் என் ஜீவனே
என்றும் உன் மூச்சிலே
வாழும் என் ஜீவனே
கண்மணி கண்மணி

சலங்கையிட்டால் ஒரு மாது - Salangayittaal Oru Maathu Lyrics

ஒரு பொன் மானை நான் காண
தகதிமிதோம்
ஒரு அம்மானை நான் பாட
தகதிமிதோம்
சலங்கையிட்டால் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு
சலங்கையிட்டால் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு
அவள் விழிகளில் ஒரு பழரசம்
அதை காண்பதில் எந்தன் பரவசம்

ஒரு பொன் மானை நான் காண
தகதிமிதோம்
ஒரு அம்மானை நான் பாட
தகதிமிதோம்
சலங்கையிட்டால் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு

தக்கத்தகதிமி தக்கத்தகதிமி
தக்கத்தகதிமிதோம்.....



தடாகத்தில் மீன் ரெண்டு
காமத்தில் தடுமாறி
தாமரைப்பூ மீது விழுந்தனவோ
இதைக் கண்ட வேகத்தில்
பிரம்மனும் மோகத்தில்
படைத்திட்ட பாகம் தான் உன் கண்களோ
காற்றில் அசைந்து வரும்
நந்தவனத்துக்கிரு
கால்கள் முளைத்ததென்று நடை போட்டாள்
ஜதி என்னும் மழையினிலே
ரதி இவள் நனைந்திடவே
அதில் பரதம் தான் துளிர் விட்டு
பூப்போல பூத்தாட
மனம் எங்கும் மணம் வீசுது
எந்தன் மனம் எங்கும் மணம் வீசுது

சலங்கையிட்டால் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு



சந்தன கிண்ணத்தில்
குங்கும சங்கமம் 
அரங்கேற அது தானே உன் கன்னம்
மேகத்தை மணந்திட 
வானத்தில் சுயம்வரம்
நடத்திடும் வானவில் உன் வண்ணம்
இடையின் பின்னழகில் 
இரண்டு குடத்தைக் கொண்ட
புதிய தம்பூராவை மீட்டிச் சென்றாள்
கலை நிலா மேனியிலே
சுளை பலா சுவையைக் கண்டேன்
அந்தக் கட்டுடல் மொட்டுடல்
உதிராமல் சதிராடி
மதி தன்னில் கவி சேர்க்குது
எந்தன் மதி தன்னில் கவி சேர்க்குது

சலங்கையிட்டால் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு
அவள் விழிகளில் ஒரு பழரசம்
அதை காண்பதில் எந்தன் பரவசம்

ஒரு பொன் மானை நான் காண
தகதிமிதோம்
ஒரு அம்மானை நான் பாட
தகதிமிதோம்
சலங்கையிட்டால் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு

வைகைக் கரைக் காத்தே நில்லு - Vaigai Karai Kaathe Nillu Lyrics

வைகைக் கரைக் காத்தே நில்லு
வஞ்சி தனைப் பார்த்தா சொல்லு
வைகைக் கரைக் காத்தே நில்லு
வஞ்சி தனைப் பார்த்தா சொல்லு
மன்னம் மனம் வாடுதென்று
மங்கை தனை தேடுதென்று
காத்தே பூங்காத்தே என் கண்மணி அவளை 
கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு

வைகைக் கரைக் காத்தே நில்லு
வஞ்சி தனைப் பார்த்தா சொல்லு
வைகைக் கரைக் காத்தே நில்லு
வஞ்சி தனைப் பார்த்தா சொல்லு
மன்னம் மனம் வாடுதென்று
மங்கை தனை தேடுதென்று
காத்தே பூங்காத்தே என் கண்மணி அவளை 
கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு



திருக்கோவில் வாசலது திறக்கவில்லை
தெருக்கோடி பூஜையது நடக்கவில்லை
தேவதையைக் காண்பதற்கு வழியுமில்லை
தேன்மொழியைக் கேட்பதற்கு வகையுமில்லை
காதலில் வாழ்ந்த கன்னி மனம்
காவலில் வாடையில் கண்ணீர் விடும்
கூண்டுக்குள்ளே அலைமோதும் 
காதல் கிளி அவள் பாவம்
கூண்டுக்குள்ளே அலைமோதும் 
காதல் கிளி அவள் பாவம்
காதல் கிளி அவள் பாவம்

காத்தே பூங்காத்தே என் கண்மணி அவளை 
கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு



மாக்கோலம் போடுவதற்கு வரவில்லையே
அவள் கோலம் பார்ப்பதற்கு வழியில்லையே
ஜன்னலுக்குள் நிலவு அவள் தோன்றவில்லையே
ஜாடை ஒளி சிந்த அவள் இன்று இல்லையே
நிலவினை மேகம் வானில் மறைக்க
அவளினை யாரோ வீட்டில் தடுக்க
மேகமது விலகாதோ 
சோகமது நீங்காதோ
மேகமது விலகாதோ 
சோகமது நீங்காதோ
சோகமது நீங்காதோ

காத்தே பூங்காத்தே என் கண்மணி அவளை 
கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு

வைகைக் கரைக் காத்தே நில்லு
வஞ்சி தனைப் பார்த்தா சொல்லு
வைகைக் கரைக் காத்தே நில்லு
வஞ்சி தனைப் பார்த்தா சொல்லு
மன்னம் மனம் வாடுதென்று
மங்கை தனை தேடுதென்று
காத்தே பூங்காத்தே என் கண்மணி அவளை 
கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு
நீ காதோரம் போய் சொல்லு
நீ காதோரம் போய் சொல்லு

தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு - Thendral Kaatre Konjam Nillu Lyrics

தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
அங்கே சென்று அன்பைச் சொல்லு
தனிமை கொதிக்குது
நினைவினில் அனலும் அடிக்குது
இதயம் துடிக்குது துணை வரத்தான்

தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
அங்கே சென்று அன்பைச் சொல்லு



மேடை ஏறக்கூடுமோ
மீண்டும் நமது நாடகம்
நானும் நீயும் சேர்வதால்
யாருக்கென்ன பாதகம்
யாரைச் சொல்லி நோவது
காலம் செய்த கோலம்
உன்னை என்னை வாட்டுது
காதல் செய்த பாவம்
கண்ணும் நெஞ்சும் என் வசம் இல்லையே
என்ன செய்வது சொல்லடி முல்லையே
கனவில் மட்டுமே கைகள் சேரலாம் கண்ணா

தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
அங்கே சென்று அன்பைச் சொல்லு
தனிமை கொதிக்குது
நினைவினில் அனலும் அடிக்குது
இதயம் துடிக்குது துணை வரத்தான்
தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
அங்கே சென்று அன்பைச் சொல்லு



ஜீவன் ரெண்டும் சேர்ந்தது
தேவன் வகுத்த சாசனம்
காதல் எந்த நாளிலும் 
கவிதை போல சாஸ்வதம்
இன்று வந்த நேசமோ
பூர்வ ஜென்ம யோகம்
இன்னும் ஏழு ஜென்மமும்
வளரும் இந்த யாகம்
மீண்டும் மீண்டும் பூமியில் தோன்றலாம்
காதல் ஓவியம் பார்வையில் தீட்டலாம்
பிரிவு என்பதே உறவுக்காகத் தான் கண்ணே

தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
அங்கே சென்று அன்பைச் சொல்லு
தனிமை கொதிக்குது
நினைவினில் அனலும் அடிக்குது
இதயம் துடிக்குது துணை வரத்தான்
தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
அங்கே சென்று அன்பைச் சொல்லு

தென்றல் காத்தே தென்றல் காத்தே - Thendral Kaathe Thendra Kaathe Lyrics

தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒன்னு கேட்டியா
கன்னிப்பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா
மாமன் முகத்த பாத்துதான்
வந்து சேரச் சொல்ல மாட்டியா

தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒன்னு கேட்டியா
கன்னிப்பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா



முத்துமேனி தான் பட்டு ராணி தான்
முழுதும் ஆளும் யோகம் தான்
தொட்டு பாக்கவும்  கட்டி சேர்க்கவும்
தொடரும் எனது வேகம் தான்
நீயும் நானும் பாலும் தேனும்
நீயும் நானும் பாலும் தேனும்
போல ஒன்னா கூடணும்
வானம் போல பூமி போல
சேர்ந்து ஒன்னா வாழணும்

தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒன்னு கேட்டியா
கன்னிப்பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா



இந்த பூமியும் அந்த வானமும்
இருக்கும் கோலம் மாறலாம்
இந்த ஆசையும் செஞ்ச பூசையும்
என்றும் மாறக் கூடுமோ
காத்து வாழும் காலம் யாவும்
காத்து வாழும் காலம் யாவும்
காதல் கீதம் வாழுமே
கனவு கூட கவிதையாகி
உனது புகழ பாடுமே

தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒன்னு கேட்டியா
கன்னிப்பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா
மாமன் முகத்த பாத்துதான்
மணமாலை வந்து போடவா

தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒன்னு கேட்டியா
கன்னிப்பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா

ஒரே ஒரு ஊருக்குள்ளே ஒரே ஒரு அம்மா அப்பா - Ore Oru Oorukulle Ore Oru Amma Appa Lyrics

ஒரே ஒரு ஊருக்குள்ளே
ஒரே ஒரு அம்மா அப்பா
ஒத்தப் புள்ள பெத்தாங்களே
அது யாரு உங்க அப்பா

ஒரே ஒரு ஊருக்குள்ளே
ஒரே ஒரு அம்மா அப்பா
ஒத்தப் புள்ள பெத்தாங்களே
அது யாரு உங்க அப்பா

பொத்தி பொத்தி வளர்த்தாங்க
பாசத்த காட்டி
நிலா வாங்கி தாறேன்னாங்க
சாதத்த ஊட்டி
நடந்து பழக சொன்னாங்களே
நட வண்டி ஓட்டி
மவராசா நீதான்னாங்க
அம்பாரி ஆட்டி

ஒரே ஒரு ஊருக்குள்ளே
ஒரே ஒரு அம்மா அப்பா
ஒத்தப் புள்ள பெத்தாங்களே
அது யாரு உங்க அப்பா



பள்ளிக்கூடம் நான் போகையில
பம்பரமா தெனம் ஓடுவேன்டா
வாத்தியார நான் பாக்கையில
வணக்கம் சொல்லி நல்லா பாடுவேன்டா
அந்தக் கால படிப்ப எல்லாம்
படிக்க தான்டா பாத்தேன்
அந்த கணக்கு பாடம் தெரியாம
பரிட்சையில தோத்தேன்
அந்தக் கால படிப்ப எல்லாம்
படிக்க தான்டா பாத்தேன்
அந்த கணக்கு பாடம் தெரியாம
பரிட்சையில தோத்தேன்
நான் படிக்க நெனச்சதெல்லாம்
நீ படிக்கோனும்
என்னுடைய கவலை எல்லாம்
நீங்க போக்கோனும்

உங்கள பெத்ததே சந்தோஷம்
நான் உங்கள பெத்ததே சந்தோஷம்
சிங்கத்த பெத்ததே சந்தோஷம்
ரெண்டு சிங்கத்த பெத்ததே சந்தோஷம்

ஒரே ஒரு ஊருக்குள்ளே
ஒரே ஒரு அம்மா அப்பா
ஒரே ஒரு ஊருக்குள்ளே
ஒரே ஒரு அம்மா அப்பா
ஒத்தப் புள்ள பெத்தாங்களே
அது யாரு உங்க அப்பா



தோளு மேல என்ன தூக்கி கிட்டு
ஊர்வலமா எங்கய்யா போவாரய்யா
எண்ணத் தேச்சி என்ன குளிக்க வைக்க
ஒரு நாட்டியமே எங்கம்மா ஆடுமப்பா
செல்லம் ரொம்ப கொடுத்ததால
வறுமை தெரியவில்ல
ஒலகத்த நான் புரிஞ்சிக்கிட
வழியும் தெரியவில்ல
செல்லம் ரொம்ப கொடுத்ததால
வறுமை தெரியவில்ல
ஒலகத்த நான் புரிஞ்சிக்கிட
வழியும் தெரியவில்ல
பெத்தவங்க போனபின் தான்
வாழ்க்க புரிஞ்சிச்சு
உங்க அம்மா வந்த பின் தான்
பொறுப்பு வந்துச்சு

உங்கள பெத்ததே சந்தோஷம்
நான் உங்கள பெத்ததே சந்தோஷம்
மக்கள பெத்ததே சந்தோஷம்
என் மக்கள பெத்ததே சந்தோஷம்

ஒரே ஒரு ஊருக்குள்ளே
ஒரே ஒரு அம்மா அப்பா
ஒத்தப் புள்ள பெத்தாங்களே
அது யாரு உங்க அப்பா

பொத்தி பொத்தி வளர்த்தாங்க
பாசத்த காட்டி
நிலா வாங்கி தாறேன்னாங்க
சாதத்த ஊட்டி
நடந்து பழக சொன்னாங்களே
நட வண்டி ஓட்டி
மவராசா நீதான்னாங்க
அம்பாரி ஆட்டி

கருவாப் பையா கருவாப் பையா - Karuvaa Payyaa Karuvaa Payyaa Lyrics

கருவாப் பையா கருவாப் பையா
கருவாப் பையா கருவாப் பையா
கருவாச்சி கவுந்துபுட்டா
மனசாட்ச தொலைச்சுப் புட்டா

கருவாப் பையா கருவாப் பையா
கருவாப் பையா கருவாப் பையா
ஆ.. குண்டூசி மீசைக் குத்தி
மேலுதடு காயமாச்சு
கிறுக்குப் பய பல்லு பட்டு
கீழுதடு சாயம் போச்சு
கிச்சு கிச்சு தாம்பலத்தில்
உசுர வச்சு விளையாடுறேன்
நீ தான் வந்து கண்டு புடிக்கணும் டா

கருவாப் பையா கருவாப் பையா
கருவாப் பையா கருவாப் பையா



வீச்சருவா புடிக்கிற வித்தை தெரிஞ்சவன்
புத்தகத்த சுமக்கிற பூவ ரசிக்கிறேன்
ஆத்திச்சூடி பாடத்த நித்தம் சொன்னவ
வள்ளுவனின் மூன்றாம் பால் தேடி படிக்கிறேன்
ஏ.. சோளக்காட்டு பொம்மையப் போல்
ஒத்தையிலே நின்னேனே
சோடி வரம் கேட்டு உந்தன் 
துணைக்கு நானும் வந்தேனே
ஆ.. ஒடுக்கப்பட்ட கல்லு இவ
மூலக்கல்லா ஆகிடத்தான் 
காதல் என்னும் உளி வச்சு ஒடச்சேன்

கருவாப் பையா கருவாப் பையா
கருவாப் பையா கருவாப் பையா



கட்டப்புலி மாடனுக்கு பொங்க வச்சுத்தான்
கட்டபொம்மன் உன்னோட கைய புடிக்கிறேன்
தேவதைய சேரத்தான் தெற்கே உதிச்சவன்
தேனெடுக்கும் நெனப்புல ஓடா இளைக்கிறேன்
ஏ.. கொப்பர தேங்காப் பூவ உனக்கு தந்தேனே
திருவலா மாறி உன்ன திருவிப்புட்டேனே
ஆ.. சின்னப் புள்ள ராசாத்தி
செம்புலிங்கத்த நேர்ந்துகிட்டேன்
ரெட்டப்புள்ள பெத்துக் கொடுக்கிறேன் டா

கருவாப் பையா கருவாப் பையா
கருவாப் பையா கருவாப் பையா
ஏ..கருவாச்ச கவுத்துப் புட்டேன்
மனசாட்ச புடிச்சிப் புட்டேன்

கருவாப் பையா கருவாப் பையா
கருவாப் பையா கருவாப் பையா
குண்டூசி மீசைக் குத்தி
மேலுதடு காயமாச்சு
கிறுக்குப் பய பல்லு பட்டு
கீழுதடு சாயம் போச்சு
கிச்சு கிச்சு தாம்பலத்தில்
உசுர வச்சு விளையாடுறேன்
நீ தான் வந்து கண்டு புடிக்கணும் டா

கருவாப் பையா கருவாப் பையா
கருவாப் பையா கருவாப் பையா

காதல் வைபோகமே காணும் நன்னாளிதே - Kaathal Vaibogame Kaanum Nannaalithe Lyrics

காதல் வைபோகமே
காணும் நன்னாளிதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடிக் கிளிகள் கூடி இணைந்து
ஆனந்த பண்பாடுமே

காதல் வைபோகமே
காணும் நன்னாளிதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடிக் கிளிகள் கூடி இணைந்து
ஆனந்த பண்பாடுமே

காதல் வைபோகமே
காணும் நன்னாளிதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடிக் கிளிகள் கூடி இணைந்து
ஆனந்த பண்பாடுமே



கோடைக் காலத்து தென்றல்
குளிரும் பௌர்ணமி திங்கள்
வாடை காலத்து கூடல்
விளையாடல் ஊடல்
வானம் தாலாட்டுப் பாட
மலைகள் பொன் ஊஞ்சல் போட
நீயும் என் கையில் ஆட
சுகம் தேட கூட
பூவில் மேடை அமைத்து
பூவை உன்னை அணைத்தால்
கதகதப்பு துடிதுடிப்பு
இது கல்யாண பரபரப்பு

காதல் வைபோகமே
காணும் நன்னாளிதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடிக் கிளிகள் கூடி இணைந்து
ஆனந்த பண்பாடுமே



எண்ணம் என்னென்ன வண்ணம்
இளமை பொன்னென்று மின்னும்
எங்கும் ஆனந்த ராகம்
புது பாவம் தாபம்
மேகலை பாடிடும் ராகம்
ராகங்கள் பாடிடும் தேகம்
தேகத்தில் ஊறிய மோகம்
அனுபோகம் யோகம்
வாழ்ந்தால் உந்தன் மடியில்
வளர்ந்தால் உந்தன் அருகில்
அனுபவிப்பேன் தொடர்ந்திருப்பேன்
ஏழேழு ஜென்மம் எடுப்பேன்

காதல் வைபோகமே
காணும் நன்னாளிதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடிக் கிளிகள் கூடி இணைந்து
ஆனந்த பண்பாடுமே

பூந்தேனில் கலந்து பொன் வண்டு எழுந்து - Poonthenil Kalanthu Pon Vandu Elunthu Lyrics

பூந்தேனில் கலந்து
பொன் வண்டு எழுந்து
சங்கீதம் படிப்பதென்ன
தள்ளாடி நடப்பதென்ன

பூந்தேனில் கலந்து
பொன் வண்டு எழுந்து
சங்கீதம் படிப்பதென்ன
தள்ளாடி நடப்பதென்ன

ஏறாத ஏணிதனில் ஏறி நடப்பாள்
நல்ல நேரம் வரும்
என்றென்றும் நல்ல புகழ் தன்னை வளர்ப்பாள்
அந்த காலம் வரும்
அவள் ஆரம்ப நிலையிலும்
மீனாக ஜொலிப்பாள்
கலை வண்ணத்தாரகை என வருவாள்
அது நடக்கும் என நினைக்கும்
மனம் நாள் பார்த்து தொடங்கி விடும்

பூந்தேனில் கலந்து
பொன் வண்டு எழுந்து
சங்கீதம் படிப்பதென்ன
தள்ளாடி நடப்பதென்ன



கட்டான மேனி உண்டு ஆடல் நடத்த
வண்ணத் தோகை அவள்
சங்கீத ஞானம் உண்டு பாடல் நடத்த
வானம்பாடி அவள்
அவள் பூவிழிச் சிரிப்பினில்
பூலோகம் மயங்கும்
பொல்லாத புன்னகை கலங்க வைக்கும்
நல்ல புகழும் பெரும் பொருளும்
அவள் அடைகின்ற காலம் வரும்

பூந்தேனில் கலந்து
பொன் வண்டு எழுந்து
சங்கீதம் படிப்பதென்ன
தள்ளாடி நடப்பதென்ன



என்னை தன் நாதன் என்று சொல்லி மகிழ்வாள்
அதில் தயக்கமில்லை
எப்போதும் என் மடியில் துள்ளி விழுவாள்
மறு விளக்கமில்லை
அவள் தான் கொண்ட புகழ் 
என்றும் நான் கொண்ட புகழ் தான்
என் நெஞ்சில் வேறெந்த நினைவுமில்லை
இதில் எனக்கும் ஒரு மயக்கம்
இது எந்நாளும் குறைவதில்லை

பூந்தேனில் கலந்து
பொன் வண்டு எழுந்து
சங்கீதம் படிப்பதென்ன
தள்ளாடி நடப்பதென்ன