பொன் வண்டு எழுந்து
சங்கீதம் படிப்பதென்ன
தள்ளாடி நடப்பதென்ன
பூந்தேனில் கலந்து
பொன் வண்டு எழுந்து
சங்கீதம் படிப்பதென்ன
தள்ளாடி நடப்பதென்ன
ஏறாத ஏணிதனில் ஏறி நடப்பாள்
நல்ல நேரம் வரும்
என்றென்றும் நல்ல புகழ் தன்னை வளர்ப்பாள்
அந்த காலம் வரும்
அவள் ஆரம்ப நிலையிலும்
மீனாக ஜொலிப்பாள்
கலை வண்ணத்தாரகை என வருவாள்
அது நடக்கும் என நினைக்கும்
மனம் நாள் பார்த்து தொடங்கி விடும்
பூந்தேனில் கலந்து
பொன் வண்டு எழுந்து
சங்கீதம் படிப்பதென்ன
தள்ளாடி நடப்பதென்ன
கட்டான மேனி உண்டு ஆடல் நடத்த
வண்ணத் தோகை அவள்
சங்கீத ஞானம் உண்டு பாடல் நடத்த
வானம்பாடி அவள்
அவள் பூவிழிச் சிரிப்பினில்
பூலோகம் மயங்கும்
பொல்லாத புன்னகை கலங்க வைக்கும்
நல்ல புகழும் பெரும் பொருளும்
அவள் அடைகின்ற காலம் வரும்
பூந்தேனில் கலந்து
பொன் வண்டு எழுந்து
சங்கீதம் படிப்பதென்ன
தள்ளாடி நடப்பதென்ன
என்னை தன் நாதன் என்று சொல்லி மகிழ்வாள்
அதில் தயக்கமில்லை
எப்போதும் என் மடியில் துள்ளி விழுவாள்
மறு விளக்கமில்லை
அவள் தான் கொண்ட புகழ்
என்றும் நான் கொண்ட புகழ் தான்
என் நெஞ்சில் வேறெந்த நினைவுமில்லை
இதில் எனக்கும் ஒரு மயக்கம்
இது எந்நாளும் குறைவதில்லை
பூந்தேனில் கலந்து
பொன் வண்டு எழுந்து
சங்கீதம் படிப்பதென்ன
தள்ளாடி நடப்பதென்ன
No comments:
Post a Comment