கருவாப் பையா கருவாப் பையா - Karuvaa Payyaa Karuvaa Payyaa Lyrics

கருவாப் பையா கருவாப் பையா
கருவாப் பையா கருவாப் பையா
கருவாச்சி கவுந்துபுட்டா
மனசாட்ச தொலைச்சுப் புட்டா

கருவாப் பையா கருவாப் பையா
கருவாப் பையா கருவாப் பையா
ஆ.. குண்டூசி மீசைக் குத்தி
மேலுதடு காயமாச்சு
கிறுக்குப் பய பல்லு பட்டு
கீழுதடு சாயம் போச்சு
கிச்சு கிச்சு தாம்பலத்தில்
உசுர வச்சு விளையாடுறேன்
நீ தான் வந்து கண்டு புடிக்கணும் டா

கருவாப் பையா கருவாப் பையா
கருவாப் பையா கருவாப் பையா



வீச்சருவா புடிக்கிற வித்தை தெரிஞ்சவன்
புத்தகத்த சுமக்கிற பூவ ரசிக்கிறேன்
ஆத்திச்சூடி பாடத்த நித்தம் சொன்னவ
வள்ளுவனின் மூன்றாம் பால் தேடி படிக்கிறேன்
ஏ.. சோளக்காட்டு பொம்மையப் போல்
ஒத்தையிலே நின்னேனே
சோடி வரம் கேட்டு உந்தன் 
துணைக்கு நானும் வந்தேனே
ஆ.. ஒடுக்கப்பட்ட கல்லு இவ
மூலக்கல்லா ஆகிடத்தான் 
காதல் என்னும் உளி வச்சு ஒடச்சேன்

கருவாப் பையா கருவாப் பையா
கருவாப் பையா கருவாப் பையா



கட்டப்புலி மாடனுக்கு பொங்க வச்சுத்தான்
கட்டபொம்மன் உன்னோட கைய புடிக்கிறேன்
தேவதைய சேரத்தான் தெற்கே உதிச்சவன்
தேனெடுக்கும் நெனப்புல ஓடா இளைக்கிறேன்
ஏ.. கொப்பர தேங்காப் பூவ உனக்கு தந்தேனே
திருவலா மாறி உன்ன திருவிப்புட்டேனே
ஆ.. சின்னப் புள்ள ராசாத்தி
செம்புலிங்கத்த நேர்ந்துகிட்டேன்
ரெட்டப்புள்ள பெத்துக் கொடுக்கிறேன் டா

கருவாப் பையா கருவாப் பையா
கருவாப் பையா கருவாப் பையா
ஏ..கருவாச்ச கவுத்துப் புட்டேன்
மனசாட்ச புடிச்சிப் புட்டேன்

கருவாப் பையா கருவாப் பையா
கருவாப் பையா கருவாப் பையா
குண்டூசி மீசைக் குத்தி
மேலுதடு காயமாச்சு
கிறுக்குப் பய பல்லு பட்டு
கீழுதடு சாயம் போச்சு
கிச்சு கிச்சு தாம்பலத்தில்
உசுர வச்சு விளையாடுறேன்
நீ தான் வந்து கண்டு புடிக்கணும் டா

கருவாப் பையா கருவாப் பையா
கருவாப் பையா கருவாப் பையா

1 comment: