ஒரே ஒரு ஊருக்குள்ளே ஒரே ஒரு அம்மா அப்பா - Ore Oru Oorukulle Ore Oru Amma Appa Lyrics

ஒரே ஒரு ஊருக்குள்ளே
ஒரே ஒரு அம்மா அப்பா
ஒத்தப் புள்ள பெத்தாங்களே
அது யாரு உங்க அப்பா

ஒரே ஒரு ஊருக்குள்ளே
ஒரே ஒரு அம்மா அப்பா
ஒத்தப் புள்ள பெத்தாங்களே
அது யாரு உங்க அப்பா

பொத்தி பொத்தி வளர்த்தாங்க
பாசத்த காட்டி
நிலா வாங்கி தாறேன்னாங்க
சாதத்த ஊட்டி
நடந்து பழக சொன்னாங்களே
நட வண்டி ஓட்டி
மவராசா நீதான்னாங்க
அம்பாரி ஆட்டி

ஒரே ஒரு ஊருக்குள்ளே
ஒரே ஒரு அம்மா அப்பா
ஒத்தப் புள்ள பெத்தாங்களே
அது யாரு உங்க அப்பா



பள்ளிக்கூடம் நான் போகையில
பம்பரமா தெனம் ஓடுவேன்டா
வாத்தியார நான் பாக்கையில
வணக்கம் சொல்லி நல்லா பாடுவேன்டா
அந்தக் கால படிப்ப எல்லாம்
படிக்க தான்டா பாத்தேன்
அந்த கணக்கு பாடம் தெரியாம
பரிட்சையில தோத்தேன்
அந்தக் கால படிப்ப எல்லாம்
படிக்க தான்டா பாத்தேன்
அந்த கணக்கு பாடம் தெரியாம
பரிட்சையில தோத்தேன்
நான் படிக்க நெனச்சதெல்லாம்
நீ படிக்கோனும்
என்னுடைய கவலை எல்லாம்
நீங்க போக்கோனும்

உங்கள பெத்ததே சந்தோஷம்
நான் உங்கள பெத்ததே சந்தோஷம்
சிங்கத்த பெத்ததே சந்தோஷம்
ரெண்டு சிங்கத்த பெத்ததே சந்தோஷம்

ஒரே ஒரு ஊருக்குள்ளே
ஒரே ஒரு அம்மா அப்பா
ஒரே ஒரு ஊருக்குள்ளே
ஒரே ஒரு அம்மா அப்பா
ஒத்தப் புள்ள பெத்தாங்களே
அது யாரு உங்க அப்பா



தோளு மேல என்ன தூக்கி கிட்டு
ஊர்வலமா எங்கய்யா போவாரய்யா
எண்ணத் தேச்சி என்ன குளிக்க வைக்க
ஒரு நாட்டியமே எங்கம்மா ஆடுமப்பா
செல்லம் ரொம்ப கொடுத்ததால
வறுமை தெரியவில்ல
ஒலகத்த நான் புரிஞ்சிக்கிட
வழியும் தெரியவில்ல
செல்லம் ரொம்ப கொடுத்ததால
வறுமை தெரியவில்ல
ஒலகத்த நான் புரிஞ்சிக்கிட
வழியும் தெரியவில்ல
பெத்தவங்க போனபின் தான்
வாழ்க்க புரிஞ்சிச்சு
உங்க அம்மா வந்த பின் தான்
பொறுப்பு வந்துச்சு

உங்கள பெத்ததே சந்தோஷம்
நான் உங்கள பெத்ததே சந்தோஷம்
மக்கள பெத்ததே சந்தோஷம்
என் மக்கள பெத்ததே சந்தோஷம்

ஒரே ஒரு ஊருக்குள்ளே
ஒரே ஒரு அம்மா அப்பா
ஒத்தப் புள்ள பெத்தாங்களே
அது யாரு உங்க அப்பா

பொத்தி பொத்தி வளர்த்தாங்க
பாசத்த காட்டி
நிலா வாங்கி தாறேன்னாங்க
சாதத்த ஊட்டி
நடந்து பழக சொன்னாங்களே
நட வண்டி ஓட்டி
மவராசா நீதான்னாங்க
அம்பாரி ஆட்டி

No comments:

Post a Comment