முன் பனியா முதல் மழையா - Mun Paniyaa Muthal Mazhaiya Lyrics

முன் பனியா முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே
புரியாத உறவில் நின்றேன்
அறியாத சுகங்கள் கண்டேன்
மாற்றம் தந்தவள் நீதானே

முன் பனியா முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே.. ஹோய்..

மனசில் எதையோ மறைக்கும் கிளியே
மனச தெறந்து சொல்லடி வெளியே
கரைய கடந்து நீ வந்தது எதுக்கு
கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு
மனச தெறந்து சொல்லடி வெளிய...


என் இதயத்தை
என் இதயத்தை
வழியில் எங்கேயோ
மறந்து தொலைத்துவிட்டேன்
உன் விழியினில்
உன் விழியினில்
அதனை இப்போது
கண்டு பிடித்துவிட்டேன்
இதுவரை எனக்கில்லை முகவரிகள்
அதை நான் கண்டேன் உன் புன்னகையில்
வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே

முன் பனியா முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே..ஓ...
முன் பனியா முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே.. 

சலங்க குலுங்க ஓடும் அலையே
சங்கதி என்ன சொல்லடி வெளியே
கரையில் வந்து துள்ளுவதெதுக்கு
நெலவ புடிச்சிக்க நெனப்பது எதுக்கு
ஏலோ ஏலோ ஏலே ஏலோ.. ஓ...


என் பாதைகள்
என் பாதைகள்
உனது வழி பார்த்து
வந்து முடியுதடி
என் இரவுகள்
என் இரவுகள்
உனது முகம் பார்த்து
விடிய ஏங்குதடி
இரவையும் பகலையும்
மாற்றிவிட்டாய்
எனக்குள் உன்னை
நீ ஊற்றிவிட்டாய்
மூழ்கினேன் நான் கண்ணிலே

முன் பனியா முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே..ஏ...

எனை காணவில்லையே நேற்றோடு - Enai Kaanavillaye Netrodu Lyrics

அன்பே.. அன்பே.. அன்பே.. அன்பே.. 
எனை காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப்போனதோ உன்னோடு
அன்பே.. 
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயெனப் புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா
அன்பே.. அன்பே.. 
நடை போடும் பூங்காற்றே.. பூங்காற்றே..
வா வா என் வாசல் தான்
வந்தால் வாழ்வேனே நான்

எனை காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப்போனதோ உன்னோடு
அன்பே.. 


ஆகாரம் இல்லாமல்
நான் வாழக்கூடும்
அன்பே உன் பேரைச் சிந்தித்தால்
தீக்குச்சி இல்லாமல்
தீ மூட்டக் கூடும்
கண்ணே நம் கண்கள் சந்தித்தால்
நானென்று சொன்னாலே
நானல்ல நீ தான்
நீயின்றி வாழ்ந்தாலே
நீர் கூட தீ தான்
உன் சுவாசக் காற்றில்
வாழ்வேன் நான்

எனை காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப்போனதோ உன்னோடு
அன்பே.. 
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயெனப் புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா
அன்பே.. அன்பே.. 


நிமிஷங்கள் ஒவ்வொன்றும்
வருஷங்கள் ஆகும்
நீ என்னை நீங்கிச் சென்றாலே
வருஷங்கள் ஒவ்வொன்றும்
நிமிஷங்கள் ஆகும்
நீ எந்தன் பக்கம் நின்றாலே
மெய்யாக நீ என்னை
விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே
என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதல் என்றால்

எனை காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப்போனதோ உன்னோடு
அன்பே.. 
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயெனப் புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா
அன்பே.. அன்பே.. 
நடை போடும் பூங்காற்றே.. பூங்காற்றே..
வா வா என் வாசல் தான்
வந்தால் வாழ்வேனே நான்
எனை காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப்போனதோ உன்னோடு
அன்பே.. 

மலையோரம் வீசும் காத்து - Malayoram Veesum Kaathu Lyrics

மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா
மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா
ஆராரோ பாடினாலும்
ஆராரோ ஆகாதம்மா
சொந்தங்கள் தேடினாலும்
தந்தை தாய் ஆகாதம்மா
என்னோட தாய் தந்த
பாட்டு தானம்மா

மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா


வான் பறந்த தேன் சிட்டு
நான் புடிக்க வாராதா
கள்ளிருக்கும் ரோசாப்பூ
கை கலக்க கூடாதா
ராப்போது ஆனா
உன் ராகங்கள் தானா
அன்பே சொல் நானா
தொட ஆகாதா ஆணா
உள் மூச்சு வாங்கினேனே
முள் மீது தூங்கினேனே
இல்லாத பாரமெல்லாம்
நெஞ்சோடு தாங்கினேனே
நிலாவ நாளும் தேடும்
வானம் தான்

மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா


குத்தாலத்து தேனருவி
சித்தாட தான் கட்டாதா
சித்தாடைய கட்டியே
கையில் வந்து கிட்டாதா
ஆத்தோரம் நாணல்
பூங்காத்தோடு ஆட
ஆவாரம்பூவில் அது
தேவாரம் பாட
இங்கே நான் காத்திருக்க
என் பார்வை பூத்திருக்க
எங்கேயோ நீ இருந்து
என் மீது போர் தொடுக்க
கொல்லாதே பாவம் 
இந்த ஜீவன் தான்

மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா
மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா
ஆராரோ பாடினாலும்
ஆராரோ ஆகாதம்மா
சொந்தங்கள் தேடினாலும்
தந்தை தாய் ஆகாதம்மா
என்னோட தாய் தந்த
பாட்டு தானம்மா

மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா

வானுயர்ந்த சோலையிலே - Vaanuyarntha Solayile Lyrics

வானுயர்ந்த சோலையிலே
நீ நடந்த பாதையெல்லாம்
வானுயர்ந்த சோலையிலே
நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன்
நா வரண்டு பாடுகின்றேன்
நானிருந்து வாடுகின்றேன்
நா வரண்டு பாடுகின்றேன்

வானுயர்ந்த சோலையிலே...


வாழ்வான வாழ்வெனக்கு
வந்ததென்று நானிருந்தேன்
பாழாத நாள் இதென்று
பார்த்தவர்கள் கூறவில்லை
வாழ்வான வாழ்வெனக்கு
வந்ததென்று நானிருந்தேன்
பாழாத நாள் இதென்று
பார்த்தவர்கள் கூறவில்லை
தேனாக பேசியதும்
சிரித்து விளையாடியதும்
தேனாக பேசியதும்
சிரித்து விளையாடியதும்
வீணாகப் போகும் என்று
யாரேனும் நினைக்கவில்லை

வானுயர்ந்த சோலையிலே
நீ நடந்த பாதையெல்லாம்
வானுயர்ந்த சோலையிலே
நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன்
நா வரண்டு பாடுகின்றேன்
வானுயர்ந்த சோலையிலே...


ஆற்றங்கரை ஓரத்திலே
யாருமற்ற நேரத்திலே
வீற்றிருந்த மணற்பரப்பு
வேதனையைத் தூண்டுதடி
ஆற்றங்கரை ஓரத்திலே
யாருமற்ற நேரத்திலே
வீற்றிருந்த மணற்பரப்பு
வேதனையைத் தூண்டுதடி
பூத்திருந்த மலரெடுத்து
பூங்குழலில் சூடிவைத்து
பூத்திருந்த மலரெடுத்து
பூங்குழலில் சூடிவைத்து
பார்த்திருந்த கோலமெல்லாம்
பழங்கதை ஆனதடி

வானுயர்ந்த சோலையிலே
நீ நடந்த பாதையெல்லாம்
வானுயர்ந்த சோலையிலே
நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன்
நா வரண்டு பாடுகின்றேன்
நானிருந்து வாடுகின்றேன்
நா வரண்டு பாடுகின்றேன்
வானுயர்ந்த சோலையிலே...

தேவனே என்னைப் பாருங்கள் - Devane Ennai Paarungal Lyrics

தேவனே என்னைப் பாருங்கள்
என் பாவங்கள் தம்மை
வாங்கிக் கொள்ளுங்கள்
தேவனே என்னைப் பாருங்கள்
என் பாவங்கள் தம்மை
வாங்கிக் கொள்ளுங்கள்
ஆயிரம் நன்மை தீமைகள்
நாங்கள் செய்கின்றோம்
நீங்கள் அறிவீர்
மன்னித்தருள்வீர்

ஓ.. மை லார்ட்.. பார்டன் மி

உங்கள் மந்தையில் இருந்து
இரண்டு ஆடுகள்
வேறு வேறு பாதையில்
போய் விட்டன
இரண்டும் சந்தித்த போது
பேச முடியவில்லையே


தாய் மடியிலே
மழலைகள் ஊமையோ
கேள் உறவிலும் 
நினைவுகள் மௌனமோ
நோய் உடலிலா 
மனதிலா தேவனே
நான் அழுவதா
சிரிப்பதா கர்த்தரே.. ஓ..

மான்களும் சொந்தம் தேடுமே 
இம்மானிடன் செய்த
பாவம் என்னவோ
காவலே சட்ட வேலியே
உன் பாதையில்
பிள்ளைப் பாசமில்லையோ

செல்வங்கள் குவிந்தது
மாளிகை வந்தது
சேவை புரிந்திட
சேவகர் ஆயிரம்
தேடிக் கொண்டாடிட
நண்பர்கள் வந்தனர்
ஆயிரம் இருந்தும்
வசதிகள் இருந்தும்
நோ.. பீஸ் ஆஃப் மைண்ட்

தேவனே என்னைப் பாருங்கள்
என் பாவங்கள் தம்மை
வாங்கிக் கொள்ளுங்கள்


கேள் தருகிறேன் என்றதே நீரன்றோ
நான் பலமுறை கேட்கிறேன் தரவில்லை
என் கருணையே திறக்குமா சன்னிதி
என் கர்த்தரே கிடைக்குமா நிம்மதி.. ஓ..
ஓ.. லார்ட்.. ப்ளீஸ் ஆன்ஸர் மை ப்ரேயர்..

கண்களில் கண்ணீர் இல்லையே
இந்த உள்ளமும் இதை தாங்கவில்லையே
கொண்டு வா இல்லை கொண்டு போ
உன் கோவிலில் வந்து சேவை செய்கின்றேன்

முள்ளை வளைத்தது மகுடம் அணிந்தது
ஆணி அடிப்பது சிலுவை அறைந்தது
அன்று நடந்தது ஆவி துடித்தது
இன்று நடப்பது நெஞ்சு துடிக்குது

தேவனே என்னைப் பாருங்கள்
என் பாவங்கள் தம்மை
வாங்கிக் கொள்ளுங்கள்
என் பாவங்கள் தம்மை
வாங்கிக் கொள்ளுங்கள்

கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் - Kannan Vanthaan Ange Kannan Vanthaan Lyrics

கண்ணன் வந்தான்
அங்கே கண்ணன் வந்தான்
ஏழைக் கண்ணீரைக்
கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான்
அங்கே கண்ணன் வந்தான்
ஏழைக் கண்ணீரைக்
கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான்.. ஆ.. 

தேடி நின்ற கண்களிலே
கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு
கண்ணன் வந்தான்
தேடி நின்ற கண்களிலே
கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு
கண்ணன் வந்தான்
கேட்டவர்க்கு கேட்டபடி
கண்ணன் வந்தான்
கேள்வியிலே பதிலாக
கண்ணன் வந்தான்
தர்மம் என்னும் தேரில் ஏறி
கண்ணன் வந்தான்
தாளாத துயர் தீர்க்க
கண்ணன் வந்தான்

கண்ணன் வந்தான்
மாயக் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான்

கண்ணன் வந்தான்
அங்கே கண்ணன் வந்தான்
ஏழைக் கண்ணீரைக்
கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான்..ஆ..


முடவர்களை நடக்க வைக்கும்
பிருந்தாவனம்
மூடர்களை அறிய வைக்கும்
பிருந்தாவனம்
முடவர்களை நடக்க வைக்கும்
பிருந்தாவனம்
மூடர்களை அறிய வைக்கும்
பிருந்தாவனம்
குருடர்களை காண வைக்கும்
பிருந்தாவனம்
ஊமைகளை பேச வைக்கும்
பிருந்தாவனம்
குருடர்களை காண வைக்கும்
பிருந்தாவனம்
ஊமைகளை பேச வைக்கும்
பிருந்தாவனம்
அடையாத கதவிருக்கும் 
சன்னிதானம்
அஞ்சாத சொல்லிருக்கும்
சன்னிதானம்
சன்னிதானம் கண்ணன் சன்னிதானம்
சன்னிதானம்

கண்ணன் வந்தான்
அங்கே கண்ணன் வந்தான்
ஏழைக் கண்ணீரைக்
கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான்...


கண்ணா... கண்ணா.. கண்ணா...
கருணை என்னும் கண் திறந்து
காட்ட வேண்டும்
காவல் என்னும் கை நீட்டி
காக்க வேண்டும்
கருணை என்னும் கண் திறந்து
காட்ட வேண்டும்
காவல் என்னும் கை நீட்டி
காக்க வேண்டும்
கனி மழலை குரல் கொடுத்து
பாட வேண்டும்
கண் மறைந்த தாயும்
அதை கேட்க வேண்டும்
கனி மழலை குரல் கொடுத்து
பாட வேண்டும்
கண் மறைந்த தாயும்
அதை கேட்க வேண்டும்
கவலைகளை உன்னிடத்தில்
தந்தேன் கண்ணா
கருணையே அருள் செய்ய
வருவாய் கண்ணா
கவலைகளை உன்னிடத்தில்
தந்தேன் கண்ணா
கருணையே அருள் செய்ய
வருவாய் கண்ணா
கண்ணா..கண்ணா..கண்ணா..கண்ணா..

கண்ணன் வந்தான்
அங்கே கண்ணன் வந்தான்
ஏழைக் கண்ணீரைக்
கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான்...
கண்ணன் வந்தான்...

கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா - Ketathum Kodupavane Krishna Krishna Lyrics

கேட்டதும் கொடுப்பவனே
கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே
கிருஷ்ணா கிருஷ்ணா
கேட்டதும் கொடுப்பவனே
கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே
கிருஷ்ணா கிருஷ்ணா

ஏற்றிய தீபத்திலே
கிருஷ்ணா கிருஷ்ணா
ஏற்றிய தீபத்திலே
கிருஷ்ணா கிருஷ்ணா
ஏழைகள் மனதை வைத்தோம்
கிருஷ்ணா கிருஷ்ணா
சாற்றிய மாலையிலே
கிருஷ்ணா கிருஷ்ணா
தர்மத்தை தேடி நின்றோம்
கிருஷ்ணா கிருஷ்ணா

கேட்டதும் கொடுப்பவனே
கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே


தாயிடம் வாழ்ந்ததில்லை
கிருஷ்ணா கிருஷ்ணா
தந்தையை அறிந்ததில்லை
கிருஷ்ணா கிருஷ்ணா
தாயிடம் வாழ்ந்ததில்லை
கிருஷ்ணா கிருஷ்ணா
தந்தையை அறிந்ததில்லை
ஓரிடம் நீ கொடுத்தாய்
கிருஷ்ணா கிருஷ்ணா
ஓரிடம் நீ கொடுத்தாய்
கிருஷ்ணா 
அதை உலகத்தில் வாழ விடு
கிருஷ்ணா கிருஷ்ணா
உலகத்தில் வாழ விடு

கேட்டதும் கொடுப்பவனே
கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே
கிருஷ்ணா கிருஷ்ணா


நீயுள்ள சந்நிதியே
கிருஷ்ணா கிருஷ்ணா
நெஞ்சுக்கு நிம்மதியே
கிருஷ்ணா கிருஷ்ணா
கோயிலில் குடி புகுந்தோம்
கிருஷ்ணா கிருஷ்ணா
குடை நிழல் தந்தருள்வாய்
கிருஷ்ணா கிருஷ்ணா
கோயிலில் குடி புகுந்தோம்
கிருஷ்ணா கிருஷ்ணா
குடை நிழல் தந்தருள்வாய்
கிருஷ்ணா கிருஷ்ணா

கிருஷ்ணா... ஆ...
கிருஷ்ணா... ஆ...
கிருஷ்ணா கிருஷ்ணா 
கிருஷ்ணா கிருஷ்ணா 


எண்ணை இல்லாதொரு
தீபம் எரிந்தது
கிருஷ்ணா கிருஷ்ணா
உன்னை நினைந்தது
உருகி இருந்தது
கிருஷ்ணா கிருஷ்ணா
கண்களைப் போல் எமை
காவல் புரிந்தது
கிருஷ்ணா கிருஷ்ணா
கண்ணன் திருவடி 
எண்ணி இருந்தது
கிருஷ்ணா கிருஷ்ணா

கிருஷ்ணா ஆ...
கிருஷ்ணா ஆ...

கேட்டதும் கொடுப்பவனே
கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே
கிருஷ்ணா கிருஷ்ணா

ஓர் ஆயிரம் பார்வையிலே - Or Ayiram Paarvaiyile Lyrics

நூறு முறை பிறந்தாலும்
நூறு முறை இறந்தாலும்
உனை பிரிந்து வெகு தூரம் நான் 
ஒரு நாளும் போவதில்லை
உலகத்தின் கண்களிலே
உருவங்கள் மறைந்தாலும்
ஒன்றான உள்ளங்கள்
ஒரு நாளும் மறைவதில்லை

ஓர் ஆயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்
ஓர் ஆயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்


இந்த மானிடர் காதலெல்லாம்
ஒரு மரணத்தில் மாறி விடும்
அந்த மலர்களின் வாசமெல்லாம்
ஒரு மாலைக்குள் வாடி விடும்
நம் காதலின் தீபம் மட்டும்
எந்த நாளிலும் கூட வரும்

ஓர் ஆயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்
ஓர் ஆயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்


இந்த காற்றினில் நான் கலந்தேன்
உன் கண்களை தழுவுகின்றேன்
இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்
உன் ஆடையில் ஆடுகின்றேன்
நான் போகின்ற பாதையெல்லாம்
உன் பூமுகம் காணுகின்றேன்

ஓர் ஆயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்
ஓர் ஆயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்

எல்லோரும் நலம் வாழ நான் - Ellorum Nalam Vaala Naan Lyrics

எல்லோரும் நலம் வாழ
நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட
பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்

எல்லோரும் நலம் வாழ
நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட
பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்


பூப்போன்ற என் உள்ளம்
யார் கண்டது
பொல்லாத மனம் என்று
பேர் வந்தது
பூப்போன்ற என் உள்ளம்
யார் கண்டது
பொல்லாத மனம் என்று
பேர் வந்தது
வழியில்லாத ஏழை
எது சொன்னாலும் பாவம்
என் நெஞ்சும் என்னோடு
பகை ஆனது

எல்லோரும் நலம் வாழ
நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட
பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்


கண்ணீரை நான் எங்கு
கடன் வாங்குவேன்
அது கடனாக வந்தாலும்
தடை போடுவேன்
கண்ணீரை நான் எங்கு
கடன் வாங்குவேன்
அது கடனாக வந்தாலும்
தடை போடுவேன்
நியாயங்கள் தெளிவாக
நாள் ஆகலாம்
நான் யாரென்று
அப்போது நீ காணலாம்

எல்லோரும் நலம் வாழ
நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட
பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்


உன் பார்வை
என் நெஞ்சில் விழுகின்றது
உன் எண்ணம்
எதுவென்று தெரிகின்றது
உன் பார்வை
என் நெஞ்சில் விழுகின்றது
உன் எண்ணம்
எதுவென்று தெரிகின்றது
நான் இப்போது ஊமை
மொழியில்லாத பிள்ளை
என்றேனும் ஓர் நாளில்
நான் பேசலாம்
உன் பாதை நீ கண்டு
நீ வாழலாம்
இனி என் பாதை நான் கண்டு
நான் போகலாம்
உன் பாதை நீ கண்டு
நீ வாழலாம்
இனி என் பாதை நான் கண்டு
நான் போகலாம்
எங்கே நீ சென்றாலும்
சுகம் ஆகலாம்
நான் எப்போதும் நீ வாழ
இசை பாடலாம்

எல்லோரும் நலம் வாழ
நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட
பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்

வானம் தொட்டு போனான் - Vaanam Thottu Ponaan Lyrics

வானம் தொட்டு போனான்... ஆ..ஆ...
மானமுள்ள சாமி.. ஹோய்..
வானம் தொட்டு போனான்
மானமுள்ள சாமி
தேம்புதய்யா பாவம்
தேவர்களின் பூமி
பட்டத்துக்கு வேறு
சிற்றரசன் யாரு
தங்கத்துக்கு வேறு
மாற்று உண்டா கூறு
திருந்தாம போச்சே
ஊருசனம் தான்
தத்தளிச்சு வாடுதய்யா
ஏழை இனம் தான்

போற்றிப் பாடடி பொன்னே
தேவர் காலடி மண்ணே


வெட்டருவா தாங்கி...ஓ..ஓ...
வீசுகிற ஊரில்...ஓ..ஓ...
வெட்டருவா தாங்கி
வீசுகிற ஊரில்...
வெள்ளக் கொடி தூக்கி
வந்தவனும் நீயே
நல்ல வழி நீதான்
சொல்லி என்ன லாபம்
சொன்னவனத் தானே
சூழந்ததின்று பாவம்
கலங்காதே ராசா
காலம் வரட்டும்
நள்ளிரவு போன பின்னே
வெள்ளி முளைக்கும்

போற்றிப் பாடடி பொன்னே
தேவர் காலடி மண்ணே
தெற்கு திசை ஆண்ட
மன்னரினம் தான்
முக்குலத்த சேர்ந்த
தேவர் மகன் தான்..ஓ..
போற்றிப் பாடடி பொன்னே
தேவர் காலடி மண்ணே