நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட
பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்
எல்லோரும் நலம் வாழ
நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட
பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்
பூப்போன்ற என் உள்ளம்
யார் கண்டது
பொல்லாத மனம் என்று
பேர் வந்தது
பூப்போன்ற என் உள்ளம்
யார் கண்டது
பொல்லாத மனம் என்று
பேர் வந்தது
வழியில்லாத ஏழை
எது சொன்னாலும் பாவம்
என் நெஞ்சும் என்னோடு
பகை ஆனது
எல்லோரும் நலம் வாழ
நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட
பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்
கண்ணீரை நான் எங்கு
கடன் வாங்குவேன்
அது கடனாக வந்தாலும்
தடை போடுவேன்
கண்ணீரை நான் எங்கு
கடன் வாங்குவேன்
அது கடனாக வந்தாலும்
தடை போடுவேன்
நியாயங்கள் தெளிவாக
நாள் ஆகலாம்
நான் யாரென்று
அப்போது நீ காணலாம்
எல்லோரும் நலம் வாழ
நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட
பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்
உன் பார்வை
என் நெஞ்சில் விழுகின்றது
உன் எண்ணம்
எதுவென்று தெரிகின்றது
உன் பார்வை
என் நெஞ்சில் விழுகின்றது
உன் எண்ணம்
எதுவென்று தெரிகின்றது
நான் இப்போது ஊமை
மொழியில்லாத பிள்ளை
என்றேனும் ஓர் நாளில்
நான் பேசலாம்
உன் பாதை நீ கண்டு
நீ வாழலாம்
இனி என் பாதை நான் கண்டு
நான் போகலாம்
உன் பாதை நீ கண்டு
நீ வாழலாம்
இனி என் பாதை நான் கண்டு
நான் போகலாம்
எங்கே நீ சென்றாலும்
சுகம் ஆகலாம்
நான் எப்போதும் நீ வாழ
இசை பாடலாம்
எல்லோரும் நலம் வாழ
நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட
பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்
No comments:
Post a Comment