என் பாவங்கள் தம்மை
வாங்கிக் கொள்ளுங்கள்
தேவனே என்னைப் பாருங்கள்
என் பாவங்கள் தம்மை
வாங்கிக் கொள்ளுங்கள்
ஆயிரம் நன்மை தீமைகள்
நாங்கள் செய்கின்றோம்
நீங்கள் அறிவீர்
மன்னித்தருள்வீர்
ஓ.. மை லார்ட்.. பார்டன் மி
உங்கள் மந்தையில் இருந்து
இரண்டு ஆடுகள்
வேறு வேறு பாதையில்
போய் விட்டன
இரண்டும் சந்தித்த போது
பேச முடியவில்லையே
தாய் மடியிலே
மழலைகள் ஊமையோ
கேள் உறவிலும்
நினைவுகள் மௌனமோ
நோய் உடலிலா
மனதிலா தேவனே
நான் அழுவதா
சிரிப்பதா கர்த்தரே.. ஓ..
மான்களும் சொந்தம் தேடுமே
இம்மானிடன் செய்த
பாவம் என்னவோ
காவலே சட்ட வேலியே
உன் பாதையில்
பிள்ளைப் பாசமில்லையோ
செல்வங்கள் குவிந்தது
மாளிகை வந்தது
சேவை புரிந்திட
சேவகர் ஆயிரம்
தேடிக் கொண்டாடிட
நண்பர்கள் வந்தனர்
ஆயிரம் இருந்தும்
வசதிகள் இருந்தும்
நோ.. பீஸ் ஆஃப் மைண்ட்
தேவனே என்னைப் பாருங்கள்
என் பாவங்கள் தம்மை
வாங்கிக் கொள்ளுங்கள்
கேள் தருகிறேன் என்றதே நீரன்றோ
நான் பலமுறை கேட்கிறேன் தரவில்லை
என் கருணையே திறக்குமா சன்னிதி
என் கர்த்தரே கிடைக்குமா நிம்மதி.. ஓ..
ஓ.. லார்ட்.. ப்ளீஸ் ஆன்ஸர் மை ப்ரேயர்..
கண்களில் கண்ணீர் இல்லையே
இந்த உள்ளமும் இதை தாங்கவில்லையே
கொண்டு வா இல்லை கொண்டு போ
உன் கோவிலில் வந்து சேவை செய்கின்றேன்
முள்ளை வளைத்தது மகுடம் அணிந்தது
ஆணி அடிப்பது சிலுவை அறைந்தது
அன்று நடந்தது ஆவி துடித்தது
இன்று நடப்பது நெஞ்சு துடிக்குது
தேவனே என்னைப் பாருங்கள்
என் பாவங்கள் தம்மை
வாங்கிக் கொள்ளுங்கள்
என் பாவங்கள் தம்மை
வாங்கிக் கொள்ளுங்கள்
No comments:
Post a Comment