மானமுள்ள சாமி.. ஹோய்..
வானம் தொட்டு போனான்
மானமுள்ள சாமி
தேம்புதய்யா பாவம்
தேவர்களின் பூமி
பட்டத்துக்கு வேறு
சிற்றரசன் யாரு
தங்கத்துக்கு வேறு
மாற்று உண்டா கூறு
திருந்தாம போச்சே
ஊருசனம் தான்
தத்தளிச்சு வாடுதய்யா
ஏழை இனம் தான்
போற்றிப் பாடடி பொன்னே
தேவர் காலடி மண்ணே
வெட்டருவா தாங்கி...ஓ..ஓ...
வீசுகிற ஊரில்...ஓ..ஓ...
வெட்டருவா தாங்கி
வீசுகிற ஊரில்...
வெள்ளக் கொடி தூக்கி
வந்தவனும் நீயே
நல்ல வழி நீதான்
சொல்லி என்ன லாபம்
சொன்னவனத் தானே
சூழந்ததின்று பாவம்
கலங்காதே ராசா
காலம் வரட்டும்
நள்ளிரவு போன பின்னே
வெள்ளி முளைக்கும்
போற்றிப் பாடடி பொன்னே
தேவர் காலடி மண்ணே
தெற்கு திசை ஆண்ட
மன்னரினம் தான்
முக்குலத்த சேர்ந்த
தேவர் மகன் தான்..ஓ..
போற்றிப் பாடடி பொன்னே
தேவர் காலடி மண்ணே
No comments:
Post a Comment