அங்கே கண்ணன் வந்தான்
ஏழைக் கண்ணீரைக்
கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான்
அங்கே கண்ணன் வந்தான்
ஏழைக் கண்ணீரைக்
கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான்.. ஆ..
தேடி நின்ற கண்களிலே
கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு
கண்ணன் வந்தான்
தேடி நின்ற கண்களிலே
கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு
கண்ணன் வந்தான்
கேட்டவர்க்கு கேட்டபடி
கண்ணன் வந்தான்
கேள்வியிலே பதிலாக
கண்ணன் வந்தான்
தர்மம் என்னும் தேரில் ஏறி
கண்ணன் வந்தான்
தாளாத துயர் தீர்க்க
கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான்
மாயக் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான்
அங்கே கண்ணன் வந்தான்
ஏழைக் கண்ணீரைக்
கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான்..ஆ..
முடவர்களை நடக்க வைக்கும்
பிருந்தாவனம்
மூடர்களை அறிய வைக்கும்
பிருந்தாவனம்
முடவர்களை நடக்க வைக்கும்
பிருந்தாவனம்
மூடர்களை அறிய வைக்கும்
பிருந்தாவனம்
குருடர்களை காண வைக்கும்
பிருந்தாவனம்
ஊமைகளை பேச வைக்கும்
பிருந்தாவனம்
குருடர்களை காண வைக்கும்
பிருந்தாவனம்
ஊமைகளை பேச வைக்கும்
பிருந்தாவனம்
அடையாத கதவிருக்கும்
சன்னிதானம்
அஞ்சாத சொல்லிருக்கும்
சன்னிதானம்
சன்னிதானம் கண்ணன் சன்னிதானம்
சன்னிதானம்
கண்ணன் வந்தான்
அங்கே கண்ணன் வந்தான்
ஏழைக் கண்ணீரைக்
கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான்...
கண்ணா... கண்ணா.. கண்ணா...
கருணை என்னும் கண் திறந்து
காட்ட வேண்டும்
காவல் என்னும் கை நீட்டி
காக்க வேண்டும்
கருணை என்னும் கண் திறந்து
காட்ட வேண்டும்
காவல் என்னும் கை நீட்டி
காக்க வேண்டும்
கனி மழலை குரல் கொடுத்து
பாட வேண்டும்
கண் மறைந்த தாயும்
அதை கேட்க வேண்டும்
கனி மழலை குரல் கொடுத்து
பாட வேண்டும்
கண் மறைந்த தாயும்
அதை கேட்க வேண்டும்
கவலைகளை உன்னிடத்தில்
தந்தேன் கண்ணா
கருணையே அருள் செய்ய
வருவாய் கண்ணா
கவலைகளை உன்னிடத்தில்
தந்தேன் கண்ணா
கருணையே அருள் செய்ய
வருவாய் கண்ணா
கண்ணா..கண்ணா..கண்ணா..கண்ணா..
கண்ணன் வந்தான்
அங்கே கண்ணன் வந்தான்
ஏழைக் கண்ணீரைக்
கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான்...
கண்ணன் வந்தான்...
No comments:
Post a Comment