ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் - Oruthi Oruvanai Ninaithu Vittaal Lyrics

ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்
அந்த உறவுக்கு பெயரென்ன
காதல்...
அந்த ஒருவன் ஒருத்தியை
மணந்து கொண்டால்
அந்த உரிமைக்கு பெயரென்ன
குடும்பம்...
நினைத்தவன் அவளை
மறந்துவிட்டால்
அந்த நிலைமையின் முடிவென்ன
துயரம்...
பிரிந்தவர் மீண்டும்
சேர்ந்து விட்டால்
அந்த பெண்மையின் நிலையென்ன
மௌனம்....

ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்
அந்த உறவுக்கு பெயரென்ன
காதல்...

இரவும் பகலும் உண்ணுருவம்
அதில் இங்கும் அங்கும்
உன் உருவம்
இரவும் பகலும் உண்ணுருவம்
அதில் இங்கும் அங்கும்
உன் உருவம்
அடக்கம் என்பது பெண்ணுருவம்
அதை அறிந்தால் மறையும்
என் உருவம்
அடக்கம் என்பது பெண்ணுருவம்
அதை அறிந்தால் மறையும்
என் உருவம்
மறைக்க முயன்றேன் முடியவில்லை
உன்னை மறக்க முயன்றேன்
நடக்கவில்லை
மறைக்க முயன்றேன் முடியவில்லை
உன்னை மறக்க முயன்றேன்
நடக்கவில்லை
நினைக்கும் நிலையிலும்
நான் இல்லை
உனை நெருங்கும் தகுதியும்
எனக்கில்லை

ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்
அந்த உறவுக்கு பெயரென்ன
காதல்...

கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை
எனை கேலி செய்தால்
மனம் பொறுக்கவில்லை
கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை
எனை கேலி செய்தால்
மனம் பொறுக்கவில்லை
வாதம் செய்வது 
என் கடமை
அதில் வழியை காண்பது
உன் திறமை
வாதம் செய்வது 
என் கடமை
அதில் வழியை காண்பது
உன் திறமை
கண்டேன் கண்டது
நல்ல வழி
அது காதலனுடனே
செல்லும் வழி
கண்டேன் கண்டது
நல்ல வழி
அது காதலனுடனே
செல்லும் வழி
சொன்னேன் பல முறை
யாசிக்கிறாய்
நீ சொன்னதை நானும்
யோசிக்கிறேன்

ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்
அந்த உறவுக்கு பெயரென்ன
காதல்...

No comments:

Post a Comment