சொல்லாவிட்டால் துக்கமடா
சொன்னாலும் வெட்கமடா
சொல்லாவிட்டால் துக்கமடா
துக்கமில்லாமல் வெட்கமில்லாமல்
வாழுகிறேன் ஒரு பக்கமடா...
சொன்னாலும் வெட்கமடா
சொல்லாவிட்டால் துக்கமடா
துக்கமில்லாமல் வெட்கமில்லாமல்
வாழுகிறேன் ஒரு பக்கமடா...
சொன்னாலும் வெட்கமடா
பொன்னோடு பொருள் படைத்தேன்
பூவைக்கு நான் பூ முடித்தேன்
பொன்னோடு பொருள் படைத்தேன்
பூவைக்கு நான் பூ முடித்தேன்
மன்னாதி மன்னனைப் போல்
மாளிகையில் வாழுகிறேன்
சொன்னாலும் வெட்கமடா
பாய் விரித்து படுப்பவரும்
வாய் திறந்து தூங்குகிறார்
பாய் விரித்து படுப்பவரும்
வாய் திறந்து தூங்குகிறார்
பஞ்சணையில் நான் படுத்தும்
நெஞ்சில் ஓர் அமைதியில்லை
பஞ்சணையில் நான் படுத்தும்
நெஞ்சில் ஓர் அமைதியில்லை
கொஞ்சி வரும் கிளிகளெல்லாம்
கொடும் பாம்பாய் மாறுதடா
கொஞ்சி வரும் கிளிகளெல்லாம்
கொடும் பாம்பாய் மாறுதடா
கொத்திவிட்டு புத்தனைப் போல்
சத்தியமாய் வாழுதடா
இல்லாத மனிதருக்கு
இல்லை எனும் தொல்லையடா
உள்ளவர்க்கு வாழ்க்கையிலே
உள்ளதெல்லாம் தொல்லையடா
சொன்னாலும் வெட்கமடா
அன்னம் இல்லை என்றாலும்
அமைதி கொண்ட மானிடனே
அன்னம் இல்லை என்றாலும்
அமைதி கொண்ட மானிடனே
உன் வாழ்வை நினைக்கையிலே
என் மனது தவிக்குதடா
உன் வாழ்வை நினைக்கையிலே
என் மனது தவிக்குதடா
வண்ண முத்து மண்டபமும்
வைர நகை பஞ்சணையும்
வண்ண முத்து மண்டபமும்
வைர நகை பஞ்சணையும்
உன்னிடத்து நான் தருவேன்
நிம்மதியை நீ தருவாய்
சொன்னாலும் வெட்கமடா
சொல்லாவிட்டால் துக்கமடா
துக்கமில்லாமல் வெட்கமில்லாமல்
வாழுகிறேன் ஒரு பக்கமடா...
சொன்னாலும் வெட்கமடா
சொன்னாலும் வெட்கமடா
சொல்லாவிட்டால் துக்கமடா
துக்கமில்லாமல் வெட்கமில்லாமல்
வாழுகிறேன் ஒரு பக்கமடா...
சொன்னாலும் வெட்கமடா
No comments:
Post a Comment