வாராரு வாராரு அழகர் வாராரு - Vaaraaru Vaaraaru Alagar Vaaraaru Lyrics

வாராரு வாராரு அழகர் வாராரு
வாராரு வாராரு அழகர் வாராரு
சப்பரம் ஏறி வாராரு
நம்ம சங்கடம் தீர்க்க போறாரு
ஒலகம் காக்க வாறாரு
உள்ள கிரகம் தீர்க்க போறாரு
வெட்ட வெளி பொட்டலிலே
சாதி சனம் கூட்டியே
பொட்டழகும் கண்ணழகும் 
கட்டழகும் காட்டியே

வாராரு வாராரு அழகர் வாராரு



ஆகாயம் பூமியெல்லாம்
ஆட்டி வச்சவர் அழகரு
ஐம்பூதம் பிரிஞ்சிரிந்தத
கூட்டி வச்சவர் அழகரு
சமயங்களில் வேற்றுமையை
பூட்டி வச்சவர் அழகரு
சமயம் வந்தா சக்கரத்த
தீட்டி வச்சவர் அழகரு
முந்துது முந்துது சாதி சனம்
அட அழகர் கண்ணுல சிக்கலயே
வந்தது வந்தது கோடி சனம்
நம்ம வைகை நதிக்கரை பத்தலயே

வாராரு வாராரு அழகர் வாராரு
வாராரு வாராரு அழகர் வாராரு



சாமி கண்டதும் பாதி சனங்க
சாமி ஏறி ஆடுதே
சாதி சனங்க கோடி சனங்க
சாதி மறந்து கூடுதே
உச்சி அழக பாத்த பிறகு
உச்சந்தலையில் ஏறுதே
ஆமா.. சண்ட மறந்து
சத்தம் மறந்து சச்சரவுக தீறுதே
நெஞ்சில் எறங்குன சாமியடி
இது ஏழைங்க பக்கமே நிக்குமடி
நன்மையடி பின்ன நன்மையடி
இனி நாடு முழுக்க நன்மையடி
கொட்டா போடட்டும் தாளமடி
நம்ம வெற்றிக்கு 
என்னைக்கும் வெற்றியடி
கொட்டா கொட்டுன்னு
கொட்டுமடி செல்வம்
கூரையைப் பிரிச்சு கொட்டுமடி

வந்தோம் திரண்டு
வந்தோம் மதுரை
வந்தோம் அழகர் வாழியவே
கண்டோம் அழகர்
கண்டோம் மகிழ்வு
கொண்டோம் மதுரை வாழியவே
கொண்டோம் உணர்ச்சி
கொண்டோம் எழுச்சி
கொண்டோம் இதயம் வாழியவே
தத்தோம் தகிட தத்தோம் தகிட
தத்தோம் பாடி ஆடுகவே
தத்தோம் தகிட தத்தோம் தகிட
தத்தோம் பாடி ஆடுகவே

No comments:

Post a Comment