என் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே
புரியாத உறவில் நின்றேன்
அறியாத சுகங்கள் கண்டேன்
மாற்றம் தந்தவள் நீதானே
முன் பனியா முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே.. ஹோய்..
மனசில் எதையோ மறைக்கும் கிளியே
மனச தெறந்து சொல்லடி வெளியே
கரைய கடந்து நீ வந்தது எதுக்கு
கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு
மனச தெறந்து சொல்லடி வெளிய...
என் இதயத்தை
என் இதயத்தை
வழியில் எங்கேயோ
மறந்து தொலைத்துவிட்டேன்
உன் விழியினில்
உன் விழியினில்
அதனை இப்போது
கண்டு பிடித்துவிட்டேன்
இதுவரை எனக்கில்லை முகவரிகள்
அதை நான் கண்டேன் உன் புன்னகையில்
வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே
முன் பனியா முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே..ஓ...
முன் பனியா முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே..
சலங்க குலுங்க ஓடும் அலையே
சங்கதி என்ன சொல்லடி வெளியே
கரையில் வந்து துள்ளுவதெதுக்கு
நெலவ புடிச்சிக்க நெனப்பது எதுக்கு
ஏலோ ஏலோ ஏலே ஏலோ.. ஓ...
என் பாதைகள்
என் பாதைகள்
உனது வழி பார்த்து
வந்து முடியுதடி
என் இரவுகள்
என் இரவுகள்
உனது முகம் பார்த்து
விடிய ஏங்குதடி
இரவையும் பகலையும்
மாற்றிவிட்டாய்
எனக்குள் உன்னை
நீ ஊற்றிவிட்டாய்
மூழ்கினேன் நான் கண்ணிலே
முன் பனியா முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே..ஏ...
No comments:
Post a Comment