என்னை தொட்டுவிட்டு தொட்டுவிட்டு - Ennai Thottuvittu Thottuvittu Lyrics

என்னை தொட்டுவிட்டு.......

என்னை தொட்டுவிட்டு தொட்டுவிட்டு ஓடுது 
ஒரு சிட்டுக்குருவி
அது பக்கம் வந்து பக்கம் வந்து ஆடுது 
என் நெஞ்சத்தழுவி

ஒன்ன தொட்டுவிட்டு தொட்டுவிட்டு 
ஓடுது இந்த சிட்டுக்குருவி
அது பக்கம் வந்து பக்கம் வந்து
ஆடுது உன் நெஞ்சத்தழுவி

அடி ஏன் ஏன் நீ என்னையே
அப்படி பாக்குற
உன் பார்வையிலே நான்
கொஞ்சம் கெரங்கி ஓடுறேன்
என்னை தொட்டுவிட்டு....


ஒன்ன தொட்டுவிட்டு தொட்டுவிட்டு ஓடுது 
இந்த சிட்டுக்குருவி
அது பக்கம் வந்து பக்கம் வந்து ஆடுது 
என் நெஞ்சத்தழுவி

நெஞ்சுக்குள்ளே பூட்டி வச்சேன் தொறக்கல
ஒன்ன மறக்கல விட்டு பறக்கல
மஞ்ச பூசி நான் குளிச்சேன் மணக்கல
ஒன்ன அணைக்கல மடி கனக்கல

கண்ணால தான் தூண்டி தான்
சொல்லாம போட்டு இழுத்தா
பெண்ணான நான் கேக்குறேன்
எப்போதும் அந்த நெனப்பா

உன் பாவாட பட்டாலும் 
நூலாட பட்டாலும் சிலுக்குதே..ஏ..


ஒன்ன தொட்டுவிட்டு தொட்டுவிட்டு ஓடுது 
ஒரு சிட்டுக்குருவி
அது பக்கம் வந்து பக்கம் வந்து ஆடுது 
என் நெஞ்சத்தழுவி

புத்தம் புது பூ மனசுக்காரரு
நல்ல வீரரு படு சூரரு
பச்சபுள்ள பூ மனச ரசிக்குறே
அள்ளி ருசிக்குறே சொல்லி சிரிக்குறே

கல்யாணம் தான் ஆனதும்
என்னான்னு நான் பாக்குறேன்
அப்போ வரும் தேவைக்கு
இப்போது நான் சேக்குறேன்

அட ராசாதி ராசாவே
நான் என்ன லேசாவா பாக்கலாம்

என்னை தொட்டுவிட்டு தொட்டுவிட்டு 
ஓடுது ஒரு சிட்டுக்குருவி
அது பக்கம் வந்து பக்கம் வந்து
ஆடுது என் நெஞ்சத்தழுவி


ஆ.. ஒன்ன தொட்டுவிட்டு தொட்டுவிட்டு 
ஓடுது இந்த சிட்டுக்குருவி
அது பக்கம் வந்து பக்கம் வந்து
ஆடுது உன் நெஞ்சத்தழுவி

அடி ஏன் ஏன் நீ என்னையே
அப்படி பாக்குற
உன் பார்வையிலே நான்
கொஞ்சம் கெரங்கி ஓடுறேன்
என்னை தொட்டுவிட்டு.....

பூவே பூச்சுடவா எந்தன் நெஞ்சில் - Poove Poochoodava Enthan Lyrics

பூவே பூச்சுடவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா
பூவே பூச்சுடவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா

வாசல் பார்த்து கண்கள் பூத்து
காத்து நின்றேன் வா

பூவே பூச்சுடவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா


அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும்
ஓடி நான் வந்து பார்ப்பேன்
தென்றல் என் வாசல் சீண்டவே இல்லை
கண்ணில் வெந்நீரை வார்ப்பேன்

கண்களும் ஓய்ந்தது
ஜீவனும் தேய்ந்தது
ஜீவ தீபங்கள் ஓயும் நேரம்
நீயும் நெய்யாக வந்தாய்
இந்த கண்ணீரில் சோகம் இல்லை
இன்று ஆனந்தம் தந்தாய்
பேத்தி என்றாலும் நீயும் என் தாய்

பூவே பூச்சுடவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா


காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும்
பாசம் வெளுக்காது மானே
நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும்
தங்கம் கருக்காது தாயே

பொன் முகம் பார்க்கிறேன்
அதில் என் முகம் பார்க்கிறேன்
இந்த பொன்மானை பார்த்துக்கொண்டே
சென்று நான் சேர வெண்டும்
மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும்
நீ(நான்) என்(உன்) மகளாக வேண்டும்
பாச ராகங்கள் பாட வேண்டும்

பூவே பூச்சுடவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா

வாசல் பார்த்து கண்கள் பூத்து
காத்து நின்றேன் வா

பூவே பூச்சுடவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா 

நானாக நான் இல்லை தாயே - Naanaaga Naan Illai Lyrics

நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே
நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே

பாசம் ஒரு நேசம்
பாசம் ஒரு நேசம்
கண்ணாற கண்டான் உன் சேய்

நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே


கீழ்வானிலே ஒளி வந்தது
கூண்டை விட்டு கிளி வந்தது
நான் பார்க்கும் ஆகாயம்
எங்கும் நீ பாடும் பூபாளம்
நான் பார்க்கும் ஆகாயம்
எங்கும் நீ பாடும் பூபாளம்
வாடும் பயிர் வாழ
நீ தானே நீர் வார்த்த கார்மேகம்

நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே

பாசம் ஒரு நேசம்
பாசம் ஒரு நேசம்
கண்ணாற கண்டான் உன் சேய்

நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே


மணிமாளிகை மாடங்களும்
மலர்தூவிய மஞ்சங்களும்
தாய் வீடு போலில்லை
அங்கு தாலாட்ட ஆளில்லை
தாய் வீடு போலில்லை
அங்கு தாலாட்ட ஆளில்லை
கோயில் தொழும் தெய்வம்
நீயின்றி நான் காண வேறில்லை

நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே

பாசம் ஒரு நேசம்
பாசம் ஒரு நேசம்
கண்ணாற கண்டான் உன் சேய்

நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே

கடவுள் நினைத்தான் மணநாள் கொடுத்தான் - Kadavul Ninaithan Mananaal Koduthan Lyrics

கடவுள் நினைத்தான் மணநாள் கொடுத்தான்
வாழ்க்கை உண்டானதே
கலைமகளே நீ வாழ்கவே

அவனே இணைத்தான் உறவை வளர்த்தான்
இரண்டும் ஒன்றானதே
திருமகனே நீ வாழ்கவே

ஆயிரம் காலமே வாழவே திருமணம்
ஆயிரம் காலமே வாழவே திருமணம்

கடவுள் நினைத்தான் மணநாள் கொடுத்தான்
வாழ்க்கை உண்டானதே
கலைமகளே நீ வாழ்கவே

அவனே இணைத்தான் உறவை வளர்த்தான்
இரண்டும் ஒன்றானதே
திருமகனே நீ வாழ்கவே


எழில் வானம் எங்கும்
பல வண்ண மேகம்
அழகான வீணை
ஆனந்த ராகம்

எழில் வானம் எங்கும்
பல வண்ண மேகம்
அழகான வீணை
ஆனந்த ராகம்

எதிர்கால காற்று
எது செய்யும் என்று
அறியாத உள்ளம்
அது தெய்வ வெள்ளம்

மாலை நீ கட்டிவைத்து கொண்டுவந்த வேளை
நல் பொட்டு வைத்து இங்கு வந்த காலை
நீ எண்ணியதும் இல்லையம்மா நாளை

கடவுள் நினைத்தான் மணநாள் கொடுத்தான்
வாழ்க்கை உண்டானதே
கலைமகளே நீ வாழ்கவே

அவனே இணைத்தான் உறவை வளர்த்தான்
இரண்டும் ஒன்றானதே
திருமகனே நீ வாழ்கவே


மணமேடை தந்த
மலர் போன்ற பெண்மை
மணவாளன் கையில்
விளையாட்டு பொம்மை

மணமேடை தந்த
மலர் போன்ற பெண்மை
மணவாளன் கையில்
விளையாட்டு பொம்மை

விளையாட்டு காண
வருகின்ற தெய்வம்
விளையாடுமானால்
எது வாழ்வில் உண்மை

காலம் நீ கைகள் தந்து இங்கு வந்த நேரம்
உன் காதில் அன்று சொல்லி வைத்த வேதம்
உன் கட்டழகும் மங்கலமும் வாழ்க

கடவுள் நினைத்தான் மணநாள் கொடுத்தான்
வாழ்க்கை உண்டானதே
கலைமகளே நீ வாழ்கவே

அவனே இணைத்தான் உறவை வளர்த்தான்
இரண்டும் ஒன்றானதே
திருமகனே நீ வாழ்கவே

ஆயிரம் காலமே வாழவே திருமணம்
ஆயிரம் காலமே வாழவே திருமணம்

சின்ன கண்ணம்மா சின்ன கண்ணம்மா - Chinna Kannamma Chinna Kannamma Lyrics

சின்ன கண்ணம்மா சின்ன கண்ணம்மா
அம்மாவுக்கு வீடெங்கே அக்கம் பக்கமா
எங்க கிட்டே மாட்டிக்கிட்டே எக்கச் சக்கமா

சின்ன கண்ணம்மா சின்ன கண்ணம்மா
ரோந்து சுத்தி வாரியே ரோட்டுப்பக்கமா
கூட்டம் போட்டு கேக்குறோம் ஓட்டு என்னம்மா

கொள்ளை அழகே நீ அள்ளிக் கொடம்மா
உன் வெள்ளைச் சிரிப்பு அது வெள்ளிக்காசம்மா
தங்க நகைய நாங்க கொள்ள அடிச்சோம்
எங்க மனச நீீ கொள்ளை அடிச்ச

கன்னம் இரண்டில் கன்னம் வைக்க
சம்மதம் சொல்லம்மா
நீ சம்மதம் சொல்லம்மா
உன் சங்கதி என்னம்மா


ஆத்தாடி நான் அன்னக்கிளி தான்
ஆத்தாடி நான் அன்னக்கிளி தான்
பாத்தாலே நான் பச்சக்கிளி தான்
அன்னை அவள் பிறந்தது கங்கைக்கரையில்
எந்தன் தந்தை வளர்ந்தது காவிரியில்
என் வீடு தானே பாரதம்
எல்லோரும் இங்கே ஓர் குலம்
தன்மானம் தானே சீதனம்
பெண் மானம் இன்று கேவலம்
காந்தி மகன் தேசம் இது
புத்தன் வந்த பூமி இது

சின்ன கண்ணம்மா சின்ன கண்ணம்மா
தப்பி செல்ல பாக்குறே ரொம்ப தப்பம்மா
கற்பு கொண்ட பெண் கிளி கையில் சிக்குமா
வெக்கக் கேடம்மா வெக்கக் கேடம்மா
வீதி வந்த பெண்ணுக்கு வேலி என்னம்மா
கண்ணிமைச்சா மின்னல் என்ன கையில் சிக்குமா
சுட்டு விரல நீ தொட்டு செல்லம்மா
எட்டு மணிக்கு பசி விட்டு போகுமா
புத்தன் காந்திக்கு நாம மாலை போடலாம்
பொன்னே ஒன்னத்தான் வா ஏலம் போடலாம்
கோழிக்குஞ்சே ஒன்ன நாங்க கொள்ளை அடிப்போமே
பல பங்கு பிரிப்போமே
ஒரு பந்தி விரிப்போமே


தாய் நாடா என் தாய் நாடா
தாய் நாடா என் தாய் நாடா
பெண்ணைப் பார்த்தால் இது பேய் வீடா
பெண்ணுடம்பில் இருப்பது சதை மட்டுமா
உடம்புக்குள் மனசுண்டு ஒப்புக்கொள்ளுமா
வேதாந்தம் இங்கே வேண்டுமா
வெந்நீரில் மீன்கள் வாழுமா
மண்ணோடு வானம் மாறலாம்
பெண்ணென்ற தன்மை மாறுமா
இன்று மட்டும் வாழ்ந்து விடு
இல்லை இல்லை ஆளை விடு

சின்ன கண்ணம்மா நீ எந்த ஊரம்மா
வேளை கெட்ட வேளையில் வேலை என்னம்மா
போலீஸ் பொன்னைய்யா நான் உள்ளூர் தானய்யா
பொம்பளைக்கு ஊருக்குள் காவல் இல்லையா
கன்னி மயிலே துணை யாரும் வர்லயா.. ஆ...
காவல்துறையில் ஓர் ஆணும் இல்லையா
ஐயா யாருன்னு நீ கேட்டதில்லையா
உண்மைய சொல்லய்யா வீண் ஜம்பம் ஏனய்யா
காக்கி சட்ட போட்டவருக்கு சக்தியும் இல்லையா
உன் லத்தியும் எங்கய்யா
அட சக்தியும் இல்லையா


சுதந்திரம் தான் இருக்கின்றதா
நடுத்தெருவில் அது கெடக்கின்றதா
பெண்கள் நிலை இன்று என்ன கடைச்சரக்கா
கண்ணகியும் வந்த மண்ணில் இந்த கிறுக்கா
பெண் பேரில் இங்கே ஆலயம்
பெண் பாடு ஏனோ கேவலம்
என் உள்ளம் என்ன தாங்குமா
என் துப்பாக்கி என்ன தூங்குமா
காக்கி சட்டை மன்னவரே
கை கொடுங்கள் காவலரே

போனாளே நம் பொட்டக்குருவி
பறந்தாளே நம் சிட்டுக்குருவி
கையில் வந்த கனி அது விழுந்திருச்சே
பையில் வந்த சில்லைரையும் தொலஞ்சிருச்சே

யாரோடு யார் தான் என்பது
உண்டாகும்போதே உள்ளது
வானோடு நீலம் சேர்ந்தது
வாழ்வோடு இன்பம் சேர்ந்தது
கங்கை நதி வந்ததென்ன
காவிரியில் சேர்ந்ததென்ன

காதல் பிரியாமல் கவிதை தோன்றாது - Kathal Piriyaamal Kavithai Thondraathu Lyrics

காதல் பிரியாமல் கவிதை தோன்றாது
கவியின் திரு ஏட்டிலே
பூக்கள் அழியாமல் கனிகள் தோன்றாது
கொடியின் வரலாற்றிலே
என்னை கவியாய் செய்வாயா
இல்லை கனியாய் செய்வாயா
பழி போடும் பாவையே


நாயகி என்னை நீங்கியதாலே
வீடு வெறிச்சோடிப் போச்சு
நாற்புறம் கண்ணீர் சூழ்ந்ததனாலே
கட்டில் தீவாக ஆச்சு

மணமாகும் முன்பு கண்ணன் நானே
மணமான பின்பு ராமன் தானே
அடி சீதை நீ சொன்னால்
இந்த ராமன் தீ குளிப்பேன்
இல்லை காற்றில் உயிர் கலப்பேன்


காண்பவை எல்லாம் பிழை என்று கொண்டால்
வாழ முடியாது பெண்ணே
கயிறுகள் எல்லாம் பாம்பென கண்டால்
கண்கள் உறங்காது கண்ணே

என் போர்வையோடு உந்தன் வெப்பம்
என் கண்களோடு கண்ணீர் தெப்பம்
வலையோடு தண்ணீர் நிற்குமா
உயிர் நீங்கி உடல் நிற்குமா
உந்தன் ஊடல் தீருமா.....

காதல் பிரியாமல் கவிதை தோன்றாது
கவியின் திரு ஏட்டிலே
பூக்கள் அழியாமல் கனிகள் தோன்றாது
கொடியின் வரலாற்றிலே
என்னை கவியாய் செய்வாயா
இல்லை கனியாய் செய்வாயா
பழி போடும் பாவையே

அத்திக்காய் காய் காய் - Athikai Kaai Kaai Lyrics

அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னைப்போல் பெண்ணல்லவோ
நீ என்னைப்போல் பெண்ணல்லவோ

அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னுயிரும் நீயல்லவோ
என்னுயிரும் நீயல்லவோ

அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே....


ஓ ஓ ஓ.. ஓ ஓ ஓ...

கன்னிக்காய் ஆசைக்காய்
காதல் கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரை காய்
மங்கை எந்தன் கோவை காய்

கன்னிக்காய் ஆசைக்காய்
காதல் கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரை காய்
மங்கை எந்தன் கோவை காய்

மாதுளங்காய் ஆனாலும்
என் உளங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ

இத்திக்காய் காயாதே
என்னைப்போல் பெண்ணல்லவோ


ஓ ஓ ஓ.. ஆ ஆ ஆ ஆ...

இரவுக்காய் உறவுக்காய்
ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய்
நேரில் நிற்கும் இவளை காய்

இரவுக்காய் உறவுக்காய்
ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய்
நேரில் நிற்கும் இவளை காய்

உருவங்காய் ஆனாலும்
பருவங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ

அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னுயிரும் நீயல்லவோ
என்னுயிரும் நீயல்லவோ

ஆ ஆ ஆ ஆ...


ஏலக்காய் வாசனைப்போல்
எங்கள் உள்ளம் வாழக் காய்
சாதிக்காய் பெட்டகம் போல்
தனிமை இன்பம் கனியக்காய்

ஏலக்காய் வாசனைப்போல்
எங்கள் உள்ளம் வாழக் காய்
சாதிக்காய் பெட்டகம் போல்
தனிமை இன்பம் கனியக்காய்

சொன்னதெல்லாம் விளங்காயோ
தூதுவளங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ

அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னுயிரும் நீயல்லவோ
என்னுயிரும் நீயல்லவோ

ஆ ஆ ஆ ஆ...


உள்ளமெலாம் மிளகாயோ
ஒவ்வொரு பேர் சுரைக்காயோ
வெள்ளரிக்காய் பிளந்தது போல்
வெண்ணிலவே சிரித்தாயோ

உள்ளமெலாம் மிளகாயோ
ஒவ்வொரு பேர் சுரைக்காயோ
வெள்ளரிக்காய் பிளந்தது போல்
வெண்ணிலவே சிரித்தாயோ

கோதையை நீ காயாதே
கொற்றவரை காய் வெண்ணிலா
இருவரையும் காயாதே
தனிமையில் ஏங்காய் வெண்ணிலா

அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னுயிரும் நீயல்லவோ
ஆ ஆ ஆ ஆ...

காதலாகினேன் - Kaathalaaginen Lyrics

காதலாகினேன்
எவர் ஏது சொன்னபோதும் நானும்
காதலாகினேன்

காதலாகினேன்
எவர் ஏது சொன்னபோதும் நானும்
காதலாகினேன்

யாது சொல்வரோ
என்னை ஏற்றுக்கொள்வரோ
யாது சொல்வரோ
என்னை ஏற்றுக்கொள்வரோ
காதலாகினேன்

கண்டபோது என்
கண்ணும் கருத்தும்
பின் தொடர்ந்து போனதே
கண்டபோது
கண்ணும் கருத்தும்
பின் தொடர்ந்து போனதே
கண்டபோது என்
கண்ணும் கருத்தும்
பின் தொடர்ந்து போனதே


எண்ணமேறி எங்கும் இல்லை
எண்ணமேறி எங்கும் இல்லை
யாரிடம் எடுத்தே சொல்வேன்
காதலாகினேன்

பூரின்மல்ல பார்வை கொண்டு
ஆசையோடு கேட்கவே
பூரின்மல்ல பார்வை கொண்டு
ஆசையோடு கேட்கவே

நான் மறந்தேன் வசமிழந்தேன்
நான் மறந்தேன் வசமிழந்தேன்
காமனாய் அவர் மீது நான்
காதலாகினேன்

எவர் ஏது சொன்னபோதும் நானும்
காதலாகினேன்

உறவுகள் தொடர்கதை - Uravugal Thodarkadai Lyrics

உறவுகள் தொடர்கதை 
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே

உன் நெஞ்சிலே பாரம்
உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம்
எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம்
வெறும்பனி விலகலாம்
வெண்மேகமே
புது அழகிலே நானும் இணையலாம்

உறவுகள் தொடர்கதை 
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே


வாழ்வென்பதோ கீதம்
வளர்கின்றதோ நாதம்
நாளொன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துன்பம்
இனி வாழ்வெலாம் இன்பம்
சுகராகமே ஆரம்பம்
நதியிலே புதுப்புனல்
கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது
இன்பம் பிறந்தது

உறவுகள் தொடர்கதை 
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே
இனியெல்லாம் சுகமே

அமைதிக்கு பெயர்தான் சாந்தி - Amaithiku Peyarthan Shanthi Lyrics

அமைதிக்கு பெயர்தான் சாந்தி சாந்தி சாந்தி
அந்த அலையினில் ஏதடி சாந்தி சாந்தி சாந்தி
உன் பிரிவினில் ஏதடி சாந்தி சாந்தி சாந்தி
உன் உறவினில் தானடி சாந்தி சாந்தி சாந்தி...

அமைதிக்கு பெயர்தான் சாந்தி
அந்த அலையினில் ஏதடி சாந்தி
உன் பிரிவினில் ஏதடி சாந்தி
உன் உறவினில் தானடி சாந்தி...

சாந்தி என் சாந்தி...


நீ கொண்ட பெயரை நான் உரைத்துக் கண்டேன் சாந்தி
நீ காட்டும் அன்பில் நான் கண்டு கொண்டேன் சாந்தி
நீ பெற்ற துயரை நான் கேட்டுத் துடித்தேன் சாந்தி
நீ பெற்ற துயரை நான் கேட்டுத் துடித்தேன் சாந்தி
நீ பிரிந்த பின்னே நான் இழந்து நின்றேன் சாந்தி
நீ பிரிந்த பின்னே நான் இழந்து நின்றேன் சாந்தி

அமைதிக்கு பெயர்தான் சாந்தி
அந்த அலையினில் ஏதடி சாந்தி


எல்லோரும் வாழ்வில் தேடிடும் பாக்கியம் சாந்தி
என் உயிரோடு கலந்து எழுதிடும் வாக்கியம் சாந்தி
எது வந்தபோதும் மறவாத செல்வம் சாந்தி
எது வந்தபோதும் மறவாத செல்வம் சாந்தி
எனை இன்று வாட்டும் தனிமையில் இல்லையே சாந்தி
எனை இன்று வாட்டும் தனிமையில் இல்லையே சாந்தி

அமைதிக்கு பெயர்தான் சாந்தி
அந்த அலையினில் ஏதடி சாந்தி


உன்னோடு வாழ்ந்த சில காலம் போதும் சாந்தி
மண்ணோடு மறையும் நாள் வரை நிலைக்கும் சாந்தி
கண்ணோடு வழியும் நீரென்று மாறும் சாந்தி
கண்ணோடு வழியும் நீரென்று மாறும் சாந்தி
பொன்னேடு எழுதும் என் உறவு வாழ்த்தும் சாந்தி
பொன்னேடு எழுதும் என் உறவு வாழ்த்தும் சாந்தி

அமைதிக்கு பெயர்தான் சாந்தி
அந்த அலையினில் ஏதடி சாந்தி
உன் பிரிவினில் ஏதடி சாந்தி
உன் உறவினில் தானடி சாந்தி...

சாந்தி என் சாந்தி...
சாந்தி என் சாந்தி...