என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு - En Jannal Nilavuku Ennaachu Lyrics

என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு
என் கண்ணில் பட்டு 
ரொம்ப நாளாச்சு
என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு
என் கண்ணில் பட்டு 
ரொம்ப நாளாச்சு
கண்கள் ரெண்டை உருட்டி மிரட்டி
கொஞ்சுகின்ற அழகே
குங்குமத்தில் புரட்டி எடுத்த
குண்டு மல்லி சரமே
மந்த மாருதம் உந்தன் மேனியில்
பூத்திருக்கோ

உன் ஜன்னல் நிலவிங்க வந்தாச்சு
உன் கண்ணில் பட்டு
விட்டு நின்னாச்சு
கண்கள் ரெண்டை உருட்டி மிரட்டி
கொஞ்சுகின்ற அழகா
குங்குமத்தில் புரட்டி எடுத்த
குண்டு மல்லி சரமா
மந்த மாருதம் எந்தன் மேனியில்
பூத்திருக்கு

என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு
உன் கண்ணில் பட்டு 
விட்டு நின்னாச்சு



எத்தனை மச்சம் உன்னிடம் உண்டு
காத்துக்கும் எனக்கும் தான்
அது தெரியும்
எத்தனை வேகம் உன்னிடம் உண்டு
இருட்டுக்கும் எனக்கும் தான்
அது புரியும்
கச்சை கட்டி பூ பூத்த 
பூந்தோட்டமே
உச்சி வரை நான் மூழ்க
தேன் பாய்ச்சுமே
பத்து விரல் போதாது
உன் மோகமே
லட்சம் விரல் நீ கொண்டு
வா வானமே
என் முத்து மணிச்சுடர்
முல்லை மலர்த்திடல்
நானும் வரேன்

என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு
என் கண்ணில் பட்டு 
ரொம்ப நாளாச்சு
உன் ஜன்னல் நிலவிங்க வந்தாச்சு
உன் கண்ணில் பட்டு
விட்டு நின்னாச்சு



முக்கனி அதில் முக்கியம் கொண்ட
முதல் கனி முதல் கனி
பார்த்துவிட்டேன்
பத்தினி பெண்ணின் பத்தியம் தேட
ஓரிடம் ஓரிடம் 
வேர்த்துவிட்டேன்
பூர்வ ஜென்ம ஓர் பந்தம்
நீ வந்தது
என்றும் இனி நீங்காது
நான் சேர்வது
தன்னந்தனித்தீவாக நான் வாழ்ந்தது
என்னை சுற்றி உன் கைகள்
பூ போட்டது
உன் வெள்ளை மனசிலும்
வெட்க சிரிப்பிலும்
வாழ்ந்திருப்பேன்

என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு
என் கண்ணில் பட்டு 
ரொம்ப நாளாச்சு
கண்கள் ரெண்டை உருட்டி மிரட்டி
கொஞ்சுகின்ற அழகா
குங்குமத்தில் புரட்டி எடுத்த
குண்டு மல்லி சரமா
மந்த மாருதம் உந்தன் மேனியில்
பூத்திருக்கோ

என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு
என் கண்ணில் பட்டு 
ரொம்ப நாளாச்சு
உன் ஜன்னல் நிலவிங்க வந்தாச்சு
உன் கண்ணில் பட்டு
விட்டு நின்னாச்சு

கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு - Karuppu Than Enakku Pidicha Kalaru Lyrics

கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு
அவன் கண்ணு ரெண்டும்
என்ன மயக்கும் 
தவ்ஸண்ட் வாட்சு பவரு
கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு

கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு
கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு
அவன் கண்ணு ரெண்டும்
என்ன மயக்கும் 
தவ்ஸண்ட் வாட்சு பவரு
கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு

சாமி கருப்பு தான்
சாமி சிலையும் கருப்பு தான்
யானை கருப்பு தான்
கூவும் குயிலும் கருப்பு தான்
என்ன ஆசப்பட்டு கொஞ்சும் போது
குத்துற மீசை கருப்பு தான்
அசத்தும் கருப்பு தான்

கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு
அவன் கண்ணு ரெண்டும்
என்ன மயக்கும் 
தவ்ஸண்ட் வாட்சு பவரு
கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு



விண்ணிலவ உலகம் பாக்க
வச்ச இரவும் கருப்பு தான்
வியர்வை சிந்தி உழைக்கும் எங்க
விவசாயி கருப்பு தான்
மண்ணுக்குள்ள இருக்குறப்போ
வைரம் கூட கருப்பு தான்
மதுரை வீரன் கையில் இருக்கும்
வீச்சருவா கருப்பு தான்
பூமியில மொத மொதலா
பொறந்த மனசன் கருப்பு தான்
மக்கட் பஞ்சம் தீர்க்கும்
அந்த மழை மேகம் கருப்பு தான்
ஒன்ன என்ன ரசிக்க வச்ச...
ஒன்ன என்ன ரசிக்க வச்ச
கண்ணு முழி கருப்பு தான்
கற்ப சொல்லி தந்தா
அந்த கண்ணகியும் கருப்பு தான்
தாய் வயிற்றில் நாம் இருந்த
தாய் வயிற்றில் நாம் இருந்த
கருவறையும் கருப்பு தான்
மனமும் கருப்பு தான்

கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு
அவன் கண்ணு ரெண்டும்
என்ன மயக்கும் 
தவ்ஸண்ட் வாட்சு பவரு
கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு



ஒன்ன கண்ட நாள் மொதலா
வச்ச பொட்டும் கருப்பு தான்
ரெட்ட ஜடை பின்னலிலே
கட்டும் ரிப்பன் கருப்பு தான்
பூக்கடையில் தேடினேன்
பூவில் இல்லை கருப்பு தான்
அன்று முதல் எனக்கு தான்
பூக்கள் மீது வெறுப்பு தான்
பாவாடை கட்டி கட்டி
படிஞ்ச தடம் கருப்பு தான்
முத்தம் கேட்டு காத்திருக்கும்
அந்த இடம் ஒனக்கு தான்
ஒன்ன பொத்தி வச்சிருக்கும்
ஒன்ன பொத்தி வச்சிருக்கும்
நெஞ்சுக்குழி கருப்பு தான் 
ஊரறிய பெத்துக்கணும்
புள்ள பத்து கருப்பு தான்
நம்ம ஊரு சூப்பர் ஸ்டாரு
ஆ.. நம்ம ஊரு சூப்பர் ஸ்டாரு
ரஜினிகாந்தும் கருப்பு தான்
அழகும் கருப்பு தான்

கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு
அவன் கண்ணு ரெண்டும்
என்ன மயக்கும் 
தவ்ஸண்ட் வாட்சு பவரு
கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு

சாமி கருப்பு தான்
சாமி சிலையும் கருப்பு தான்
யானை கருப்பு தான்
கூவும் குயிலும் கருப்பு தான்
என்ன ஆசப்பட்டு கொஞ்சும் போது
குத்துற மீசை கருப்பு தான்
அசத்தும் கருப்பு தான்

ஏ.. சம்ப நாத்து சாரக் காத்து - Ye Samba Naathu Saara Kaathu Lyrics

தன்னே னானே தானே னானே யம்மா
தன்னே னன்னே தானே னன்னே 
தன்னே னானே யம்மா
தன்னே னன்னே தானே னன்னே 
தன்னே னானே

தானே னானே தன்னே னானே யம்மா
தானே னன்னே தன்னே னன்னே
தானே னானே யம்மா
தானே னன்னே தன்னே னன்னே
தானே னானே

ஏ.. சம்ப நாத்து சாரக் காத்து 
மச்சான்
சல்லுன்னு தான் வீசுதுங்க
அங்கம் பூர
மச்சான்
சல்லுன்னு தான் வீசுதுங்க
அங்கம் பூர
ஏ.. பொன்னு வாசம் பூவு வாசம்
செண்டு 
பூசிக்கலாம் கட்டிக்கிங்க
காலம் பூர
என்ன பூசிக்கலாம் கட்டிக்கிங்க
காலம் பூர

தனனானே தனனானே
தனனானே தனனானே



தெருவெல்லாம் கோலமிட்டு
கோலமிட்டு
திரியேத்தி குத்து விளக்கு வச்சு
விளக்கு வச்சு
தெருவெல்லாம் கோலமிட்டு
கோலமிட்டு
திரியேத்தி குத்து விளக்கு வச்சு
விளக்கு வச்சு
உனக்காக மச்சான் காத்திருப்பேன்
உறங்காம கண்ணு முழுச்சிருப்பேன்
உனக்காக மச்சான் காத்திருப்பேன்
உறங்காம கண்ணு முழுச்சிருப்பேன்

ஏ.. சம்ப நாத்து சாரக் காத்து 
மச்சான்
சல்லுன்னு தான் வீசுதுங்க
அங்கம் பூர
மச்சான்
சல்லுன்னு தான் வீசுதுங்க
அங்கம் பூர

தனனானே தனனானே
தனனானே தனனானே



கண் பாத்து மயங்கிவிடும்
மயங்கிவிடும்
கரு நெல்லும் கரைஞ்சுவிடும்
கரைஞ்சுவிடும்
கண் பாத்து மயங்கிவிடும்
மயங்கிவிடும்
கரு நெல்லும் கரைஞ்சுவிடும்
கரைஞ்சுவிடும்
மகராசன் அழகால
மனசெல்லாம் குளிர்ந்துவிடும்
மகராசன் அழகால
மனசெல்லாம் குளிர்ந்துவிடும்

ஏ.. சம்ப நாத்து சாரக் காத்து 
மச்சான்
சல்லுன்னு தான் வீசுதுங்க
அங்கம் பூர
மச்சான்
சல்லுன்னு தான் வீசுதுங்க
அங்கம் பூர
ஏ.. பொன்னு வாசம் பூவு வாசம்
செண்டு 
பூசிக்கலாம் கட்டிக்கிங்க
காலம் பூர
என்ன பூசிக்கலாம் கட்டிக்கிங்க
காலம் பூர

செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி - Senthoora Paandikoru Sodikili Lyrics

செந்தூரப் பாண்டிக்கொரு
சோடிக்கிளி சோடிக்கிளி கூட
சோளக்கருது போல 
தோளத்தொட்டு தோளத்தொட்டு ஆட
செந்தூரப் பாண்டிக்கொரு
சோடிக்கிளி சோடிக்கிளி கூட
சோளக்கருது போல 
தோளத்தொட்டு தோளத்தொட்டு ஆட
காதல் பாட்டெடுக்கும் வயசு இது
கேட்டு கிறுகிறுக்கும் மனசு இது
பொறுத்திரு மானே பசுமரத்தேனே
நெனச்சது நெறவேறும்...

நாள..
செந்தூரப் பாண்டிக்கொரு
சோடிக்கிளி சோடிக்கிளி கூட
சோளக்கருது போல 
தோளத்தொட்டு தோளத்தொட்டு ஆட



உச்சி மேல முடிஞ்சி வச்ச
மரிக்கொழுந்து வாசம்
ஒன்னுடைய பேரச்சொல்லி
தெச முழுக்க வீசும்
கல்லு மேல செதுக்கி வச்ச
கவிதை இந்த நேசம்
இப்பிறப்பும் எப்பிறப்பும்
தொடரும் இந்த பாசம்
சோறும் குடி நீரும் வேணாம்
மாமா ஒன்னப் பாத்தாலே
ஆறும் பசி ஆறும் தானா
ஆசை மொழி கேட்டாலே
ஒன்ன பிரிஞ்சிரிக்க
தன்னந் தனிச்சிரிக்க
அம்மம்மாடி அப்பப்பாடி
என் மனசு ஒத்துக்காது

செந்தூரப் பாண்டிக்கொரு
சோடிக்கிளி சோடிக்கிளி கூட
சோளக்கருது போல 
தோளத்தொட்டு தோளத்தொட்டு ஆட



ஒன்னச் சேர பொறப்பெடுத்து
உருகும் இந்த மாது
தெக்கு தெச தென்றலிடம்
தெனமும் விடு தூது
அம்மன் கோயில் சிலை எழுந்து
அசைஞ்சு வரும் போது
உள் மனசு தத்தளிக்கும்
உறக்கம் என்பதேது
நீதான் என்ன தீண்ட தீண்ட
ஏதோ ஒரு நோயாச்சு
நான் ஒன்ன சீண்டி சீண்டி
பாத்து ரொம்ப நாளாச்சு
கொஞ்சம் இடம் குடுத்தா
பச்ச கொடி புடிச்சா
எத்தனையோ வித்தைகள
இப்பவே நீ காட்டிருவே

செந்தூரப் பாண்டிக்கொரு
சோடிக்கிளி சோடிக்கிளி கூட
சோளக்கருது போல 
தோளத்தொட்டு தோளத்தொட்டு ஆட
காதல் பாட்டெடுக்கும் வயசு இது
கேட்டு கிறுகிறுக்கும் மனசு இது
பொறுத்திரு மானே பசுமரத்தேனே
நெனச்சது நெறவேறும்...

நாள..
செந்தூரப் பாண்டிக்கொரு
சோடிக்கிளி சோடிக்கிளி கூட
சோளக்கருது போல 
தோளத்தொட்டு தோளத்தொட்டு ஆட

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் - Sorgathathin Vaasarpadi Enna Kanavugalil Lyrics

சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்
பெண்ணல்ல நீ எனக்கு
வண்ணக் களஞ்சியமே
சின்ன மலர்க்கொடியே
நெஞ்சில் சிந்தும் பனித்துளியே

சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்



உன்னாலே உண்டாகும் ஞாபகங்கள்
ஒன்றிரண்டு அல்லவே
ஒன்றுக்குள் ஒன்றான நீரலைகள்
என்றும் இரண்டல்லவே
சித்தன்ன வாசலின் ஓவியமே
சிந்தைக்குள் ஊறிய காவியமே
எங்கே நீ அங்கே தான் நானிருப்பேன்
எப்போதும் நீ ஆட தோள் கொடுப்பேன்
மோகத்தில் நான் படிக்கும்
மாணிக்கவாசகமே
நான் சொல்லும் பாடலெல்லாம்
நீ தந்த யாசகமே

சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்
பெண்ணல்ல நான் உனக்கு
வண்ணக் களஞ்சியமே
சிந்தும் பனித்துளியே
என்னைச் சேரும் இளங்கிளியே
சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்



உன்னாலே நான் கொண்ட காயங்களை 
முன்னும் பின்னும் அறிவேன்
கண்ணாலே நீ செய்யும் மாயங்களை
இன்றும் என்றும் அறிவேன்
மின்சாரம் போல் எனை தாக்குகிறாய்
மஞ்சத்தை போர்க்களம் ஆக்குகிறாய்
கண்ணே உன் கண்ணென்ன வேலினமோ
கை தொட்டால் மெய் தொட்டால் மீட்டிடுமோ
கோட்டைக்குள் நீ புகுந்து 
வேட்டைகள் ஆடுகிறாய்
நான் இங்கு தோற்றுவிட்டேன்
நீ என்னை ஆளுகிறாய்

சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்
பெண்ணல்ல நீ எனக்கு
வண்ணக் களஞ்சியமே
சிந்தும் பனித்துளியே
என்னைச் சேரும் இளங்கிளியே
சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி

ராஜா கைய வச்சா அது ராங்கா - Raja Kaiya Vacha Athu Raanga Lyrics

ராஜா கைய வச்சா 
அது ராங்கா போனதில்ல
நான் தாஜா பண்ணி வச்சா
வண்டி பேஜார் பண்ணதில்ல
பெருசு என்றாலும்
சிறுசு என்றாலும்
சொகுசு என் வேலை தான்
தரபப்பம்...
இந்த ராஜா கைய வச்சா 
அது ராங்கா போனதில்ல
ராஜா கைய வச்சா.... 



கட்ட வண்டி என்கிட்டே
தானா மாறும்டா
ஓட்ட வண்டி கைபட்டா
ஜோரா ஓடும்டா
என்ன பத்தி யாருன்னு
ஊரக்கேளு பா
இல்லையின்னா 
ஒன் வீட்டு கார கேளு பா
சரக்கிருக்கு.. பப பப்பப்பா
முறுக்கிருக்கு..பப பப்பப்பா
தல கிறுக்கு.. பப பப்பப்பா
அடி எனக்கெதுக்கு,. பப பப்பப்பா
வாழ்த்திடத்தான் பொறந்தாச்சு
வாசல்கள் தான் தொறந்தாச்சு
பாடுங்கடா இசை பாட்டு
ஆடுங்கடா நடை போட்டு

பெருசு என்றாலும்
சிறுசு என்றாலும்
சொகுசு என் வேலை தான்
பரபப்பம்...
இந்த ராஜா கைய வச்சா 
ராஜா கைய வச்சா 
ராங்கா போனதில்ல
ராஜா கைய வச்சா
அது ராங்கா போனதில்ல

பெருசு என்றாலும்
சிறுசு என்றாலும்
சொகுசு என் வேலை தான்
பரபப்பம்...
இந்த ராஜா கைய வச்சா 
அது ராங்கா போனதில்ல
ராஜா கைய வச்சா



கன்னிப் பொண்ணா 
நெனச்சு காரத்தொடணும்
கட்டினவன் விரல் தான்
மேல படணும்
கண்டவங்க எடுத்தா
கெட்டுப் போயிடும்
அக்கு அக்கா அழகு
விட்டுப் போயிடும்
தெரிஞ்சவந்தான்.. பப பப்பப்பா
ஓட்டிடணும்.. பப பப்பப்பா
திறமையெல்லாம்.. பப பப்பப்பா
அவன் காட்டிடணும்.. பப பப்பப்பா
ஓரிடத்தில் உருவாகி
வேறிடத்தில் விலை போகும்
கார்களைப் போல் பெண் இனமும்
கொண்டவனைப் போய் சேரும்
வேகம் கொண்டாட 
காரும் பெண் போல
தேகம் சூடேறுமே

பரபப்பம்...
இந்த ராஜா கைய வச்சா 
ராஜா கைய வச்சா 
ராங்கா போனதில்ல

ராஜா கைய வச்சா
அது ராங்கா போனதில்ல
பெருசு என்றாலும்
சிறுசு என்றாலும்
சொகுசு என் வேலை தான்
பரபப்பம்...
இந்த ராஜா கைய வச்சா 
அது ராங்கா போனதில்ல
ராஜா கைய வச்சா

அடியே அடி சின்னப்புள்ள ஆவி துடிக்குது - Adiye Adi Chinnapulla Aavi Thudikuthu Lyrics

அடியே அடி சின்னப்புள்ள
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ள
மலர்ந்த மலர 
மறைச்சா நல்லால்ல
அடடா அட சின்னக் கண்ணா
இன்னைக்கி அது ரெண்டில் ஒன்னா
தனியா கேட்டா தருவேன் ஒவ்வொன்னா

அடியே அடி சின்னப்புள்ள
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ள



கன்னத்தை மெல்லமாய் தட்டுவேன்
உன் காதிலே தேன்துளி சொட்டுவேன்
உன்னை நான் செல்லமாய் திட்டுவேன்
என் ஊடலை தீர்த்து வை ஒட்டுவேன்
கட்டிலில் ரெண்டு ஜீவன்கள் துடித்தாலென்ன
கடலே உனை சூரியன் குடித்தாலென்ன
வாலிபம் கண்டு நீ உருகினாய்
என் வாய்வழி ஜீவனை பருகினாய்

அடியே அடி சின்னப்புள்ள
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ள
அடியே அடி சின்னப்புள்ள
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ள
மலர்ந்த மலர 
மறைச்சா நல்லால்ல
அடடா அட சின்னக் கண்ணா
இன்னைக்கி அது ரெண்டில் ஒன்னா
தனியா கேட்டா தருவேன் ஒவ்வொன்னா
அடியே அடி சின்னப்புள்ள
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ள



கதவினை மெல்லவே மூடினாய்
நீ கஞ்சன் போல் புதையலை தேடினாய்
புதயலை புடவையில் மூடினாய்
நான் பூனை போல் தோன்றினேன் ஓடினாய்
மன்மதா உன் மேகங்கள் பொழிந்தாலென்ன
உன் மழையில் பூமியை நனைந்தாலென்ன
தேவைகள் தினம் தினம் நீளட்டும்
என் தேவதை என்னையும் ஆளட்டும்

அடியே அடி சின்னப்புள்ள
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ள
அடியே அடி சின்னப்புள்ள
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ள
மலர்ந்த மலர 
மறைச்சா நல்லால்ல
அடடா அட சின்னக் கண்ணா
இன்னைக்கி அது ரெண்டில் ஒன்னா
தனியா கேட்டா தருவேன் ஒவ்வொன்னா
அடியே அடி சின்னப்புள்ள
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ள

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் - Ore Jeevan Ondre Ullam Lyrics

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணா
ஓ.. ஓ.. ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணா
ஒரே பூவில் ஒன்றே தென்றல்
வாராய் கண்ணா.. ஆ...

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே
ஓ.. ஓ.. ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே
ஒரே பூவில் ஒன்றே தென்றல்
வாராய் கண்ணே.. ஏ..
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே
ஓ.. ஓ.. ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே.. 



அன்று நதி மீது 
ஒரு கண்ணன் நடமாடினான்
இன்று நடமாட 
நீ வேண்டும் கண்ணே
அன்று நதி மீது 
ஒரு கண்ணன் நடமாடினான்
இன்று நடமாட 
நீ வேண்டும் கண்ணே
அன்று கடல் மீது
ஒரு கண்ணன் துயில் மேவினான்
இன்று துயில் மேவ
நீ வேண்டும் கண்ணே
என் மன்னனே..
ஒரே கண்ணன் ஒன்றே ராதை
வாராய் கண்ணா
ஒரே ஜீவன் ஓன்றே உள்ளம்
வாராய் கண்ணே



இங்கே விண்மீன்கள்
கண்ணாகி பார்க்கின்றன
நான் வெறும் கோயில்
ஆகாமல் காக்க
உந்தன் கண்மீன்கள்
என் மீது விளையாடட்டும்
அந்த விண்மீன்கள்
சுவையாக பார்க்க
தேர் கொண்டு வா
கண்ணன் வந்து கீதம் சொன்னால்
நான் ஆடுவேன்

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே
ஓ.. ஓ.. ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே



அந்த மணிச்சங்கின்
ஒலி கேட்டு நான் ஆடுவேன்
இந்த மழை மேகம் 
உன் மீது ஆடும்
அந்த மணிச்சங்கின்
ஒலி கேட்டு நான் ஆடுவேன்
இந்த மழை மேகம் 
உன் மீது ஆடும்
வண்ண பழத்தோடும்
முகத்தோடும் நீ கூடலாம்
இந்த பழத்தோட்டம்
ஒன்றாக கூடும்
புது வெள்ளமே
ஒரே சொர்க்கம் எந்தன் பக்கம்
வேறில்லையே.. ஏ..

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணா

கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம் - Kadavul Vaalum Kovilile Karpoora Deepam Lyrics

கடவுள் வாழும் கோவிலிலே
கற்பூர தீபம்
கலையிழந்த மாடத்திலே
புகாரி ராகம்
புகாரி ராகம்... புகாரி ராகம்...

கடவுள் வாழும் கோவிலிலே
கற்பூர தீபம்
கலையிழந்த மாடத்திலே
புகாரி ராகம்
புகாரி ராகம்... 

கடவுள் வாழும் கோவிலிலே
கற்பூர தீபம்



முந்தானை பார்த்து
முந்நூறு கவிதை
எந்நாளும் எழுதும்
கவிஞர்கள் கோடி
முந்தானை பார்த்து
முந்நூறு கவிதை
எந்நாளும் எழுதும்
கவிஞர்கள் கோடி
முன்னாடி அறியா
பெண் மனதை கேட்டு
அன்புண்டு வாழும் 
காளையர் கோடி
ஒரு தலை ராகம்
எந்த வகையினில் சாரும்
அவள் இரக்கத்தை தேடும்
என் மனம் பாடும்

கடவுள் வாழும் கோவிலிலே
கற்பூர தீபம்
கலையிழந்த மாடத்திலே
புகாரி ராகம்
புகாரி ராகம்... 
கடவுள் வாழும் கோவிலிலே
கற்பூர தீபம்



கிணற்றுக்குள் வாழும் 
தவளையைப் போல
மனசுக்குள் ஆடும் 
ஆசைகள் கோடி
கிணற்றுக்குள் வாழும் 
தவளையைப் போல
மனசுக்குள் ஆடும் 
ஆசைகள் கோடி
கண்கெட்ட பின்னே
சூரிய உதயம்
எந்தப் பக்கம் ஆனால்
எனக்கென்ன போடி
ஒரு தலை ராகம்
எந்த வகையினில் சாரும்
அவள் இரக்கத்தை தேடும்
என் மனம் பாடும்

கடவுள் வாழும் கோவிலிலே
கற்பூர தீபம்
கலையிழந்த மாடத்திலே
புகாரி ராகம்
புகாரி ராகம்... 
புகாரி ராகம்... 
புகாரி ராகம்... 

கலைவாணியோ ராணியோ அவள் தான் - Kalaivaaniyo Raaniyo Aval Than Yaaro Lyrics

கலைவாணியோ ராணியோ
அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ
எது தான் பேரோ
கலைவாணியோ ராணியோ
அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ
எது தான் பேரோ
அவ மேலழகும் தண்டக் காலழகும்
தெனம் பாத்திருந்தா
வில்லுப் பாட்டு வரும்

கலைவாணியோ ராணியோ
அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ
எது தான் பேரோ
கலைவாணியோ ராணியோ
அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ
எது தான் பேரோ



பாதம் தொடும் பூங்கொலுசு 
தானத்தந்தோம் பாட
வேதங்களும் நாதங்களும்
வேண்டி வந்தது கூட
பாதங்கள பாத்ததுமே
பார்வ வர்லியே மேல
வேதனைகள மாத்திடும்
அவ விரிஞ்ச செண்பக சோலை
பூத்ததய்யா பூவு
அது கையழகு
தூக்குதய்யா வாசம்
அது மெய்யழகு
நான் வந்தேன் வாழ்த்தி பாட
நல்லத சொன்னேன் ராகத்தோட
கண்டேன் சீத போல
கண்டதும் நின்னேன் சிலையைப் போல
இந்திர லோகம் சந்திர லோகம்
சுந்தர லோகம் போற்ற

கலைவாணியோ ராணியோ
அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ
எது தான் பேரோ
கலைவாணியோ ராணியோ
அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ
எது தான் பேரோ
அவ மேலழகும் தண்டக் காலழகும்
தெனம் பாத்திருந்தா
வில்லுப் பாட்டு வரும்
கலைவாணியோ ராணியோ
அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ
எது தான் பேரோ



கோட மழை கொண்டு வரும்
கூந்தல் என்கிற மேகம்
ஜாடையில ஏத்தி விடும்
தாகம் என்கிற மோகம்
கோடியில ஒருத்தியம்மா
கோலமயில் ராணி
ஆடி வரும் பூங்கலசம்
அழகிருக்கும் மேனி
தேர் நடந்து தெருவில் வரும் ஊர்வலமா
ஊர் உலகில் அவளப் போல பேர்வருமா
நல்ல பளிங்கு போல சிரிப்பு
மனச பறிக்கும் பவள விரிப்பு
வெளங்கிடாத இனிப்பு
வெவரம் புரிஞ்சிடாத துடிப்பு
சந்திர ஜோதி வந்தது போல
சுந்தர தேவி ஜொலிப்பு

கலைவாணியோ ராணியோ
அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ
எது தான் பேரோ
கலைவாணியோ ராணியோ
அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ
எது தான் பேரோ
அவ மேலழகும் தண்டக் காலழகும்
தெனம் பாத்திருந்தா
வில்லுப் பாட்டு வரும்
கலைவாணியோ ராணியோ
அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ
எது தான் பேரோ

தரை மேல் பிறக்க வைத்தான் - Tharai Mel Pirakka Vaithaan Lyrics

உலகத்தின் தூக்கம் கலையாதோ...
உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ...
உழைப்பவர் வாழ்க்கை மலராதோ..
ஒரு நாள் பொழுதும் புலராதோ...

தரை மேல் 
பிறக்க வைத்தான்
எங்களை தண்ணீரில் 
பிழைக்க வைத்தான்
தரை மேல் 
இருக்க வைத்தான்
பெண்களை கண்ணீரில்
குளிக்க வைத்தான்

தரை மேல் 
பிறக்க வைத்தான்
எங்களை தண்ணீரில் 
பிழைக்க வைத்தான்
தரை மேல் 
இருக்க வைத்தான்
பெண்களை கண்ணீரில்
குளிக்க வைத்தான்
தரை மேல் 
பிறக்க வைத்தான்........



கட்டிய மனைவி
தொட்டில் பிள்ளை
உறவை கொடுத்தவர் அங்கே
அலை கடல் மேலே
அலையாய் அலைந்து
உயிரை கொடுப்பவர் இங்கே
வெள்ளி நிலாவே
விளக்காய் எரியும்
கடல் தான் எங்கள் வீடு
வெள்ளி நிலாவே
விளக்காய் எரியும்
கடல் தான் எங்கள் வீடு
முடிந்தால் முடியும்
தொடர்ந்தால் தொடரும்
இது தான் எங்கள் வாழ்க்கை
இது தான் எங்கள் வாழ்க்கை

தரை மேல் 
பிறக்க வைத்தான்
எங்களை தண்ணீரில் 
பிழைக்க வைத்தான்
தரை மேல் 
இருக்க வைத்தான்
பெண்களை கண்ணீரில்
குளிக்க வைத்தான்



கடல் நீர் நடுவே
பயணம் போனால்
குடிநீர் தருபவர் யாரோ
தனியாய் வந்தோர்
துணிவைத் தவிர
துணையாய் வருபவர் யாரோ
ஒரு நாள் போவார்
ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு நாள் போவார்
ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு ஜான் வயிரை
வளர்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்
ஊரார் நினைப்பது சுலபம்

தரை மேல் 
பிறக்க வைத்தான்
எங்களை தண்ணீரில் 
பிழைக்க வைத்தான்
தரை மேல் 
இருக்க வைத்தான்
பெண்களை கண்ணீரில்
குளிக்க வைத்தான்
தரை மேல் 
பிறக்க வைத்தான்

கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் - Koduthathellaam Koduthaan Avan Lyrics

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காக கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காக கொடுத்தான்
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காக கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காக கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காக கொடுத்தான்



மண் குடிசை வாசல் என்றால்
தென்றல் வர வெறுத்திடுமா
மண் குடிசை வாசல் என்றால்
தென்றல் வர வெறுத்திடுமா
மாலை நிலா ஏழை என்றால்
வெளிச்சம் தர மறுத்திடுமா
உனக்காக ஒன்று
எனக்காக ஒன்று
ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காக கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காக கொடுத்தான்



படைத்தவன் மேல் பழியும் இல்லை
பசித்தவன் மேல் பாவம் இல்லை
கிடைத்தவர்கள் பிரித்துக் கொண்டார்
உழைத்தவர்கள் தெருவில் நின்றார்
பலர் வாட வாட 
சிலர் வாழ வாழ
ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காக கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காக கொடுத்தான்



இல்லை என்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லையென்பார்
இல்லை என்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லையென்பார்
மடி நிறைய பொருளிருக்கும்
மனம் நிறைய இருளிருக்கும்
எது வந்த போதும்
பொதுவென்று வைத்து
வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காக கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காக கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காக கொடுத்தான்

உள்ளம் என்றொரு கோயிலிலே - Ullam Endroru Koyilile Lyrics

அன்பே வா.. அன்பே வா 
அன்பே வா.. அன்பே வா.. வா.. வா...

உள்ளம் என்றொரு கோயிலிலே
தெய்வம் வேண்டும் அன்பே வா..
உள்ளம் என்றொரு கோயிலிலே
தெய்வம் வேண்டும் அன்பே வா..
கண்கள் என்றொரு சோலையிலே
தென்றல் வேண்டும் அன்பே வா.. 
கண்கள் என்றொரு சோலையிலே
தென்றல் வேண்டும் அன்பே வா.. 
அன்பே வா... அன்பே வா.. வா.. வா...



நீ இருந்தால் 
என் மாளிகை விளக்கெறியும்
நிழல் கொடுத்தால்
என் நினைவுகள் விழித்துக்கொள்ளும்
பார்வையிலே வெளிச்சம் இல்லை
பகல் இரவு புரியவில்லை
பாதையும் தெரியவில்லை
ஆயிரம் தான் வாழ்வில் வரும்
நிம்மதி வருவதில்லை

உள்ளம் என்றொரு கோயிலிலே
தெய்வம் வேண்டும் அன்பே வா..
கண்கள் என்றொரு சோலையிலே
தென்றல் வேண்டும் அன்பே வா.. 
அன்பே வா... அன்பே வா.. வா.. வா...



வான் பறவை தன் சிறகை
எனக்கு தந்தால்
பூங்காற்றே உன் உதவியும்
எனக்கிருந்தால்
வானத்திலே பறந்து சென்றே
போனவளை அழைத்து வந்தே
காதலை வாழவைப்பேன்
அழுத முகம் சிரித்திருக்க
ஆசைக்கு உயிர் கொடுப்பேன்
அன்பே வா... அன்பே வா.. வா..

சக்கரக்கட்டி ராஜாத்தி - Chakkarakatti Rajaathi Lyrics

சக்கரக்கட்டி ராஜாத்தி
என் மனச வச்சுக்கோ காப்பாத்தி
சந்தனக்கட்டி மேனியிலே
நான் சாஞ்சுக்கவா
சொல்லு மகராசி

சக்கரக்கட்டி ராஜாத்தி
என் மனச வச்சுக்கோ காப்பாத்தி
சந்தனக்கட்டி மேனியிலே
நான் சாஞ்சுக்கவா
சொல்லு மகராசி

பட்டுப்போன்ற உடல் தளிரோ
எனை பார்க்கையிலே
வந்த குளிரோ
பட்டுப்போன்ற உடல் தளிரோ
எனைப் பார்க்கையிலே
வந்த குளிரோ
தோகை மயிலின்
தோளை அணைத்து
தோகை மயிலின்
தோளை அணைத்து
பழகிக் கொள்வது சுகமோ



தொட்டுக் கொள்ள 
விரல் துடிக்கும்
விழி தூரப்போகச் 
சொல்லி நடிக்கும்
தொட்டுக் கொள்ள 
விரல் துடிக்கும்
விழி தூரப்போகச் 
சொல்லி நடிக்கும்
ஆளை மயக்கும்
பாலை சிரிப்பில்
ஆளை மயக்கும்
பாலை சிரிப்பில்
ஆசை பிறந்தது எனக்கும்

கொடுத்த மனசுக்கும்
எடுத்த மனசுக்கும்
கொடுத்த மனசுக்கும்
எடுத்த மனசுக்கும்
கேள்வி என்ன
ஜாடை என்ன
கேள்வி என்ன
ஜாடை என்ன
தேவை இல்லை வெட்கம்

அத்தை மகனே அத்தானே
உன் அழகைக் கண்டு 
நான் பித்தானேன்
தென்றல் அடிக்கும் தோட்டத்திலே
நான் பூத்திருக்கும் 
முல்லை கொத்தானேன்

உறவைச் சொல்லி 
நான் வரவோ
என் உயிரை
உன்னிடம் தரவோ
உறவைச் சொல்லி 
நான் வரவோ
என் உயிரை
உன்னிடம் தரவோ
மாலை மயக்கும்
தீரும் வரைக்கும்
மாலை மயக்கும்
தீரும் வரைக்கும்
வாரி கொடுப்பேன் வா வா



மடியைத் தேடி வந்து விழவோ
இந்த மாப்பிள்ளை அழகுக்கு அழகோ
மடியைத் தேடி வந்து விழவோ
இந்த மாப்பிள்ளை அழகுக்கு அழகோ
காலை வரையில்
சோலை நிழலில்
காலை வரையில்
சோலை நிழலில்
கண்கள் உறங்கிட வா வா

கொடுத்த மனசுக்கும்
எடுத்த மனசுக்கும்
கொடுத்த மனசுக்கும்
எடுத்த மனசுக்கும்
கேள்வி என்ன
ஜாடை என்ன
கேள்வி என்ன
ஜாடை என்ன
தேவை இல்லை வெட்கம்

அத்தை மகனே அத்தானே
உன் அழகைக் கண்டு 
நான் பித்தானேன்
தென்றல் அடிக்கும் தோட்டத்திலே
நான் பூத்திருக்கும் 
முல்லை கொத்தானேன்

ஆஹா.. சக்கரக்கட்டி ராசாத்தி
என் மனச வச்சுக்கோ காப்பாத்தி
சந்தனக்கட்டி மேனியிலே
நான் சாஞ்சுக்கவா
சொல்லு மகராசி

வசீகரா என் நெஞ்சினிக்க - Vaseegara En Nenjinika Lyrics

வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில்
தூங்கினால் போதும்
அதே கணம்
என் கண்ணுறங்க 
முன் ஜென்மங்களின்
ஏக்கங்கள் தீரும்

வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில்
தூங்கினால் போதும்
அதே கணம்
என் கண்ணுறங்க 
முன் ஜென்மங்களின்
ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும் 
சுவாசிப்பதும்
உன் தயவால் தானே
ஏங்குகிறேன் தேங்குகிறேன்
உன் நினைவால் நானே தான்



அடைமழை வரும்
அதில் நனைவோமே
குளிர்காய்ச்சலோடு ஸ்நேகம்
ஒரு போர்வைக்குள்
இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி
என்னை வெல்வாய் 
அது தெரிந்தும் கூட அன்பே
மனம் அதையே தான்
எதிர்ப்பார்க்கும்
எங்கேயும் போகாமல் 
தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய்
உன் ஆடைக்குள்ளே
நான் வேண்டும்

வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில்
தூங்கினால் போதும்
அதே கணம்
என் கண்ணுறங்க 
முன் ஜென்மங்களின்
ஏக்கங்கள் தீரும்

தேரோ..தேரோ... 


தினமும் நீ குளித்ததும்
என்னைத் தேடி
என் சேலை நுனியால் உந்தன்
தலை துடைப்பாயே
அது கவிதை
திருடன் போல் பதுங்கியே
திடீரென்று பின்னாலிருந்து
என்னை நீ அணைப்பாயே
அது கவிதை
யாரேனும் மணி கேட்டால்
அதை சொல்லக் கூட
தெரியாதே
காதல் எனும் முடிவிலியில்
கடிகார நேரம் கிடையாதே

வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில்
தூங்கினால் போதும்
அதே கணம்
என் கண்ணுறங்க 
முன் ஜென்மங்களின் 
ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும் 
சுவாசிப்பதும்
உன் தயவால் தானே
ஏங்குகிறேன் தேங்குகிறேன்
உன் நினைவால் நானே தான்

அழகிய அசுரா அழகிய அசுரா - Alagiya Alagiya Asura Lyrics

அழகிய அசுரா
அழகிய அசுரா
அத்துமீற ஆசையில்லையா
கனவில் வந்து
எந்தன் விரல்கள்
கிச்சு கிச்சு மூட்டவில்லையா

அழகிய அசுரா
அழகிய அசுரா
அத்துமீற ஆசையில்லையா
கனவில் வந்து
எந்தன் விரல்கள்
கிச்சு கிச்சு மூட்டவில்லையா

வட்ட வட்டமாக
வானவில்லை வெட்டி
குட்டி குட்டி மாலை ஆக்குவேன்
புரவி ஏறி நீயும்
என்னை அள்ளிக்கொண்டால்
மூச்சு முட்ட முட்ட சூட்டுவேன்
கூடு விட்டு கூடு பாயும்
வித்தை கற்று உன்னை அடைவேன்

அழகிய அசுரா
அழகிய அசுரா
அத்துமீற ஆசையில்லையா
கனவில் வந்து
எந்தன் விரல்கள்
கிச்சு கிச்சு மூட்டவில்லையா



கடல் நீலத்தில் கண்கள்
கொண்ட பெண்ணிடம்
செல்வம் சேரும்
கருங்கூந்தலின் பெண்கள்
தொட்ட காரியம் 
வெற்றி ஆகும்
உச்சந்தலையில் உள்ள
என் அர்ஜூன மச்சம் சொல்லும்
என்னை சேர்பவன் யாரோ
அவன் சகலமும் பெற்று
வாழ்வான் என்று

அழகிய அசுரா
அழகிய அசுரா
அத்துமீற ஆசையில்லையா
கனவில் வந்து
எந்தன் விரல்கள்
கிச்சு கிச்சு மூட்டவில்லையா



கனா ஒன்றிலே நேற்று
ரெண்டு பாம்புகள்
பின்ன கண்டேன்
நகம் பத்திலும் பூக்கள்
மாறி மாறியே பூக்க கண்டேன்
விழுகும் போதே வானில்
எரி நட்சத்திரத்தை கண்டேன்
நிகழும் யாவும் நன்றாய்
தினம் நிகழ்ந்திட தானே
நானும் கண்டேன்

அழகிய அசுரா
அழகிய அசுரா
அத்துமீற ஆசையில்லையா
கனவில் வந்து
எந்தன் விரல்கள்
கிச்சு கிச்சு மூட்டவில்லையா
அழகிய அசுரா
அழகிய அசுரா
அத்துமீற ஆசையில்லையா
கனவில் வந்து
எந்தன் விரல்கள்
கிச்சு கிச்சு டார ரர்ரரா

சாணக்யா சாணக்யா ஏதோ - Chanakya Chanakya Yetho Lyrics

சாணக்யா சாணக்யா
ஏதோ தந்திரம் செய்தாய்
உன் மதியால் என் மனதை
நீ தான் வசியம் செய்தாய்
அடம் பிடித்தே நீ எந்தன் நெஞ்சில்
இடம் பிடிப்பாய் ஐ லவ் யு டா
காதலுக்காக உந்தன் நெஞ்சை
கடன் கொடுப்பாய் ஐ லவ் யு டா
தீராத உன் அன்பினால்
போராடி எனை வென்றதால்
என் அழகெல்லாம்
உனக்காக சமர்ப்பிக்கிறேன்

சாணக்யா சாணக்யா
ஏதோ தந்திரம் செய்தாய்
உன் மதியால் என் மனதை
நீ தான் வசியம் செய்தாய்



உன்னை நானும் நினைப்பதை
யாரும் தடுக்கின்ற வேளை
துடிக்கும் இதயம்
வேலை நிறுத்தம் செய்கின்றதே
உயிர் வலிக்கின்றதே
நீ தந்த ஒற்றை கடிதம்
ஆயிரம் முறை நான் படிப்பேனே
உனக்காக ஆயிரம் கடிதம்
ஒற்றை நொடியில் எழுதிடுவேனே
தினம் காலையில்
எந்தன் நாட்காட்டியில்
உன் பிம்பம் நான் கண்டு
கண் விழிக்கின்றேன்

சாணக்யா சாணக்யா
ஏதோ தந்திரம் செய்தாய்
உன் மதியால் என் மனதை
நீ தான் வசியம் செய்தாய்

சத்யா.. சொல்லுடி
எதுக்கு இப்டி பாக்குற
நல்லா இருக்கியே
வெட்கமா இருக்கு
எனக்கு ஒரு மாதிரி இருக்கு
கிட்ட வராதே.. வருவேன்
வேண்டாம்.. எனக்கு வேணும்
ப்ளீஸ் சத்யா..



ஜன்னலின் வழியே
வெண்ணில ஒளியே
கசிகின்ற நேரம்
கட்டிலின் மேலே
கவிதைகள் போலே
நாம் வாழலாம்
இனி நாம் வாழலாம்
என் மீது காலை போட்டு
தூங்கும் உன்னை ரசிப்பேனே
நான் உந்தன் காதை கடித்து
தூக்கம் கலைத்து சிரித்திடுவேனே
இது போலவே பல ஆசைகள்
உள் நெஞ்சில் ஓயாமல் உருண்டோடுதே

சாணக்யா சாணக்யா
ஏதோ தந்திரம் செய்தாய்
உன் மதியால் என் மனதை
நீ தான் வசியம் செய்தாய்
அடம் பிடித்தே நீ எந்தன் நெஞ்சில்
இடம் பிடிப்பாய் ஐ லவ் யு டா...லவ் யு டா..லவ் யு டா
காதலுக்காக உந்தன் நெஞ்சை
கடன் கொடுப்பாய் ஐ லவ் யு டா
தீராத உன் அன்பினால்
போராடி எனை வென்றதால்
என் அழகெல்லாம்
உனக்காக சமர்ப்பிக்கிறேன்

சாணக்யா சாணக்யா
ஏதோ தந்திரம் செய்தாய்.. சத்யா
உன் மதியால் ... ப்ளீஸ்,, என் மனதை
நீ தான் வசியம் செய்தாய்.. சீ..