கலைவாணியோ ராணியோ அவள் தான் - Kalaivaaniyo Raaniyo Aval Than Yaaro Lyrics

கலைவாணியோ ராணியோ
அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ
எது தான் பேரோ
கலைவாணியோ ராணியோ
அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ
எது தான் பேரோ
அவ மேலழகும் தண்டக் காலழகும்
தெனம் பாத்திருந்தா
வில்லுப் பாட்டு வரும்

கலைவாணியோ ராணியோ
அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ
எது தான் பேரோ
கலைவாணியோ ராணியோ
அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ
எது தான் பேரோ



பாதம் தொடும் பூங்கொலுசு 
தானத்தந்தோம் பாட
வேதங்களும் நாதங்களும்
வேண்டி வந்தது கூட
பாதங்கள பாத்ததுமே
பார்வ வர்லியே மேல
வேதனைகள மாத்திடும்
அவ விரிஞ்ச செண்பக சோலை
பூத்ததய்யா பூவு
அது கையழகு
தூக்குதய்யா வாசம்
அது மெய்யழகு
நான் வந்தேன் வாழ்த்தி பாட
நல்லத சொன்னேன் ராகத்தோட
கண்டேன் சீத போல
கண்டதும் நின்னேன் சிலையைப் போல
இந்திர லோகம் சந்திர லோகம்
சுந்தர லோகம் போற்ற

கலைவாணியோ ராணியோ
அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ
எது தான் பேரோ
கலைவாணியோ ராணியோ
அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ
எது தான் பேரோ
அவ மேலழகும் தண்டக் காலழகும்
தெனம் பாத்திருந்தா
வில்லுப் பாட்டு வரும்
கலைவாணியோ ராணியோ
அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ
எது தான் பேரோ



கோட மழை கொண்டு வரும்
கூந்தல் என்கிற மேகம்
ஜாடையில ஏத்தி விடும்
தாகம் என்கிற மோகம்
கோடியில ஒருத்தியம்மா
கோலமயில் ராணி
ஆடி வரும் பூங்கலசம்
அழகிருக்கும் மேனி
தேர் நடந்து தெருவில் வரும் ஊர்வலமா
ஊர் உலகில் அவளப் போல பேர்வருமா
நல்ல பளிங்கு போல சிரிப்பு
மனச பறிக்கும் பவள விரிப்பு
வெளங்கிடாத இனிப்பு
வெவரம் புரிஞ்சிடாத துடிப்பு
சந்திர ஜோதி வந்தது போல
சுந்தர தேவி ஜொலிப்பு

கலைவாணியோ ராணியோ
அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ
எது தான் பேரோ
கலைவாணியோ ராணியோ
அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ
எது தான் பேரோ
அவ மேலழகும் தண்டக் காலழகும்
தெனம் பாத்திருந்தா
வில்லுப் பாட்டு வரும்
கலைவாணியோ ராணியோ
அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ
எது தான் பேரோ

No comments:

Post a Comment