சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் - Sorgathathin Vaasarpadi Enna Kanavugalil Lyrics

சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்
பெண்ணல்ல நீ எனக்கு
வண்ணக் களஞ்சியமே
சின்ன மலர்க்கொடியே
நெஞ்சில் சிந்தும் பனித்துளியே

சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்



உன்னாலே உண்டாகும் ஞாபகங்கள்
ஒன்றிரண்டு அல்லவே
ஒன்றுக்குள் ஒன்றான நீரலைகள்
என்றும் இரண்டல்லவே
சித்தன்ன வாசலின் ஓவியமே
சிந்தைக்குள் ஊறிய காவியமே
எங்கே நீ அங்கே தான் நானிருப்பேன்
எப்போதும் நீ ஆட தோள் கொடுப்பேன்
மோகத்தில் நான் படிக்கும்
மாணிக்கவாசகமே
நான் சொல்லும் பாடலெல்லாம்
நீ தந்த யாசகமே

சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்
பெண்ணல்ல நான் உனக்கு
வண்ணக் களஞ்சியமே
சிந்தும் பனித்துளியே
என்னைச் சேரும் இளங்கிளியே
சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்



உன்னாலே நான் கொண்ட காயங்களை 
முன்னும் பின்னும் அறிவேன்
கண்ணாலே நீ செய்யும் மாயங்களை
இன்றும் என்றும் அறிவேன்
மின்சாரம் போல் எனை தாக்குகிறாய்
மஞ்சத்தை போர்க்களம் ஆக்குகிறாய்
கண்ணே உன் கண்ணென்ன வேலினமோ
கை தொட்டால் மெய் தொட்டால் மீட்டிடுமோ
கோட்டைக்குள் நீ புகுந்து 
வேட்டைகள் ஆடுகிறாய்
நான் இங்கு தோற்றுவிட்டேன்
நீ என்னை ஆளுகிறாய்

சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்
பெண்ணல்ல நீ எனக்கு
வண்ணக் களஞ்சியமே
சிந்தும் பனித்துளியே
என்னைச் சேரும் இளங்கிளியே
சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி

No comments:

Post a Comment