சக்கரக்கட்டி ராஜாத்தி - Chakkarakatti Rajaathi Lyrics

சக்கரக்கட்டி ராஜாத்தி
என் மனச வச்சுக்கோ காப்பாத்தி
சந்தனக்கட்டி மேனியிலே
நான் சாஞ்சுக்கவா
சொல்லு மகராசி

சக்கரக்கட்டி ராஜாத்தி
என் மனச வச்சுக்கோ காப்பாத்தி
சந்தனக்கட்டி மேனியிலே
நான் சாஞ்சுக்கவா
சொல்லு மகராசி

பட்டுப்போன்ற உடல் தளிரோ
எனை பார்க்கையிலே
வந்த குளிரோ
பட்டுப்போன்ற உடல் தளிரோ
எனைப் பார்க்கையிலே
வந்த குளிரோ
தோகை மயிலின்
தோளை அணைத்து
தோகை மயிலின்
தோளை அணைத்து
பழகிக் கொள்வது சுகமோ



தொட்டுக் கொள்ள 
விரல் துடிக்கும்
விழி தூரப்போகச் 
சொல்லி நடிக்கும்
தொட்டுக் கொள்ள 
விரல் துடிக்கும்
விழி தூரப்போகச் 
சொல்லி நடிக்கும்
ஆளை மயக்கும்
பாலை சிரிப்பில்
ஆளை மயக்கும்
பாலை சிரிப்பில்
ஆசை பிறந்தது எனக்கும்

கொடுத்த மனசுக்கும்
எடுத்த மனசுக்கும்
கொடுத்த மனசுக்கும்
எடுத்த மனசுக்கும்
கேள்வி என்ன
ஜாடை என்ன
கேள்வி என்ன
ஜாடை என்ன
தேவை இல்லை வெட்கம்

அத்தை மகனே அத்தானே
உன் அழகைக் கண்டு 
நான் பித்தானேன்
தென்றல் அடிக்கும் தோட்டத்திலே
நான் பூத்திருக்கும் 
முல்லை கொத்தானேன்

உறவைச் சொல்லி 
நான் வரவோ
என் உயிரை
உன்னிடம் தரவோ
உறவைச் சொல்லி 
நான் வரவோ
என் உயிரை
உன்னிடம் தரவோ
மாலை மயக்கும்
தீரும் வரைக்கும்
மாலை மயக்கும்
தீரும் வரைக்கும்
வாரி கொடுப்பேன் வா வா



மடியைத் தேடி வந்து விழவோ
இந்த மாப்பிள்ளை அழகுக்கு அழகோ
மடியைத் தேடி வந்து விழவோ
இந்த மாப்பிள்ளை அழகுக்கு அழகோ
காலை வரையில்
சோலை நிழலில்
காலை வரையில்
சோலை நிழலில்
கண்கள் உறங்கிட வா வா

கொடுத்த மனசுக்கும்
எடுத்த மனசுக்கும்
கொடுத்த மனசுக்கும்
எடுத்த மனசுக்கும்
கேள்வி என்ன
ஜாடை என்ன
கேள்வி என்ன
ஜாடை என்ன
தேவை இல்லை வெட்கம்

அத்தை மகனே அத்தானே
உன் அழகைக் கண்டு 
நான் பித்தானேன்
தென்றல் அடிக்கும் தோட்டத்திலே
நான் பூத்திருக்கும் 
முல்லை கொத்தானேன்

ஆஹா.. சக்கரக்கட்டி ராசாத்தி
என் மனச வச்சுக்கோ காப்பாத்தி
சந்தனக்கட்டி மேனியிலே
நான் சாஞ்சுக்கவா
சொல்லு மகராசி

No comments:

Post a Comment