கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம் - Kadavul Vaalum Kovilile Karpoora Deepam Lyrics

கடவுள் வாழும் கோவிலிலே
கற்பூர தீபம்
கலையிழந்த மாடத்திலே
புகாரி ராகம்
புகாரி ராகம்... புகாரி ராகம்...

கடவுள் வாழும் கோவிலிலே
கற்பூர தீபம்
கலையிழந்த மாடத்திலே
புகாரி ராகம்
புகாரி ராகம்... 

கடவுள் வாழும் கோவிலிலே
கற்பூர தீபம்



முந்தானை பார்த்து
முந்நூறு கவிதை
எந்நாளும் எழுதும்
கவிஞர்கள் கோடி
முந்தானை பார்த்து
முந்நூறு கவிதை
எந்நாளும் எழுதும்
கவிஞர்கள் கோடி
முன்னாடி அறியா
பெண் மனதை கேட்டு
அன்புண்டு வாழும் 
காளையர் கோடி
ஒரு தலை ராகம்
எந்த வகையினில் சாரும்
அவள் இரக்கத்தை தேடும்
என் மனம் பாடும்

கடவுள் வாழும் கோவிலிலே
கற்பூர தீபம்
கலையிழந்த மாடத்திலே
புகாரி ராகம்
புகாரி ராகம்... 
கடவுள் வாழும் கோவிலிலே
கற்பூர தீபம்



கிணற்றுக்குள் வாழும் 
தவளையைப் போல
மனசுக்குள் ஆடும் 
ஆசைகள் கோடி
கிணற்றுக்குள் வாழும் 
தவளையைப் போல
மனசுக்குள் ஆடும் 
ஆசைகள் கோடி
கண்கெட்ட பின்னே
சூரிய உதயம்
எந்தப் பக்கம் ஆனால்
எனக்கென்ன போடி
ஒரு தலை ராகம்
எந்த வகையினில் சாரும்
அவள் இரக்கத்தை தேடும்
என் மனம் பாடும்

கடவுள் வாழும் கோவிலிலே
கற்பூர தீபம்
கலையிழந்த மாடத்திலே
புகாரி ராகம்
புகாரி ராகம்... 
புகாரி ராகம்... 
புகாரி ராகம்... 

No comments:

Post a Comment