எட்டடி கோயிலிலே நீ வசிக்க - Ettadi Koyilile Nee Vasikka Lyrics

மாயா உலகத்திலே
மதி மயங்கி நில்லாமல்
உன் மங்காத ஜோதியிலே
மகிழ்வது தான் எக்காலம்
மகிழ்வது தான் எக்காலம்

எட்டடி கோயிலிலே
நீ வசிக்க இடமும் இருக்குதய்யா
எட்டடி கோயிலிலே
நீ வசிக்க இடமும் இருக்குதய்யா
அங்கு நிஷ்டையில் நீ இருந்தால்
மாயா நித்திரை மறையுமய்யா
அங்கு நிஷ்டையில் நீ இருந்தால் 
மாயா நித்திரை மறையுமய்யா
மாயா நித்திரை மறையுமய்யா
மாயா நித்திரை மறையுமய்யா
எட்டடி கோயிலிலே
நீ வசிக்க இடமும் இருக்குதய்யா


தேயாத நிலவு என்றே
தேகத்தை எண்ணாமல்
திகட்டாத ஜோதியிலே
திகழ்வது நான் எக்காலம்
ஆசையின் கயிற்றினிலே
பம்பரம் அகந்தையால் ஆடுதய்யா
ஆசையின் கயிற்றினிலே
பம்பரம் அகந்தையால் ஆடுதய்யா
ஐம்புலச் சிறைதனிலே
ஐம்புலச் சிறைதனிலே
நீ அமர்ந்தால் அமைதியும் நாடுமய்யா
ஐம்புலச் சிறைதனிலே
நீ அமர்ந்தால் அமைதியும் நாடுமய்யா
எட்டடி கோயிலிலே
நீ வசிக்க இடமும் இருக்குதய்யா


காயாகி கனியாகி
கனிந்திடும் நிலையாகி
கண்ணான ஜோதியிலே
கலப்பது நான் எக்காலம்
கலப்பது நான் எக்காலம்
பாதத்தின் சதங்கையிலே
ஓங்கார நாதமும் தொனிக்குதய்யா
பாதத்தின் சதங்கையிலே
ஓங்கார நாதமும் தொனிக்குதய்யா
பக்குவ நிலை அடைந்தால்
பக்குவ நிலை அடைந்தால்
என் வாழ்வும் பண்புடன் இனிக்குமய்யா
பக்குவ நிலை அடைந்தால்
என் வாழ்வும் பண்புடன் இனிக்குமய்யா
எட்டடி கோயிலிலே
நீ வசிக்க இடமும் இருக்குதய்யா

யார் போய் சொல்லுவார் - Yaar Poi Solluvaar Lyrics

பிறந்தது மண் மேல் 
இறப்பதற்கென்றே பேசிடும் ஊன்
பிறந்தது மண் மேல்
இறப்பதற்கென்றே பேசிடும் ஊன்
துறந்தனர் சுகமும்
துக்கத்திற்கு ஈடெனும் 
சொல்லும் கண்டேன்

கரம்தனைக் கூப்பி
சுடலையைக் காக்க
கனிவு கொண்டேன்
வரம் தந்து வாழ்த்திட
சிவனே நின்பாதமே
சரண் புகுந்தேன்
நின்பாதமே
சரண் புகுந்தேன்

யார் போய் சொல்லுவார்
இந்த ஏழை வருந்தும் வேளை
அரணிடம் யார் போய் சொல்லுவார்
இந்த ஏழை வருந்தும் வேளை
அரணிடம் யார் போய் சொல்லுவார்


பார்தனிலே தன் பத்தினியை இழந்து
பார்தனிலே தன் பத்தினியை இழந்து
பரதவிக்கும் நிலையை
யார் போய் சொல்லுவார்
இந்த ஏழை வருந்தும் வேளை
அரணிடம் யார் போய் சொல்லுவார்

விதியே உனக்கொரு முடிவில்லையா
விதியே உனக்கொரு முடிவில்லையா
உன் லீலைக்குமே ஓர் அளவில்லையா
விதியே உனக்கொரு முடிவில்லையா
உன் லீலைக்குமே ஓர் அளவில்லையா
எதிரேதும் இல்லாத
செங்கோலை இழந்தேன்
எதிரேதும் இல்லாத
செங்கோலை இழந்தேன்
விதியேதும் இல்லாமல்
சுடுகோலை அடைந்தேன்
யார் போய் சொல்லுவார்
இந்த ஏழை வருந்தும் வேளை
அரணிடம் யார் போய் சொல்லுவார்

காசியில் வாழும் கருணைக் கடலே - Kaasiyil Vaalum Karunai Kadale Lyrics

காசியில் வாழும் கருணைக் கடலே
காசியில் வாழும் கருணைக் கடலே
கடைக்கண் பாராய்
அடைக்கலம் நீயே
காசியில் வாழும் கருணைக் கடலே
கருணைக் கடலே
கடைக்கண் பாராய்
அடைக்கலம் நீயே
காசியில் வாழும் கருணைக் கடலே


பேசிடில் உன்னைப்போல்
தெய்வம் உண்டோ
பேசிடில் உன்னைப்போல்
தெய்வம் உண்டோ
பேரருள் புரிந்தே
என் துயர் தீராய்
பேரருள் புரிந்தே
என் துயர் தீராய்
காசியில் வாழும் கருணைக் கடலே
கருணைக் கடலே


தஞ்சம் என்றே உன்னை
நம்பி வந்தேன்
நெஞ்சம் புண்ணாகி
மிக நொந்தேன்
தஞ்சம் என்றே உன்னை
நம்பி வந்தேன்
நெஞ்சம் புண்ணாகி
மிக நொந்தேன்
சஞ்சலம் தீர விஸ்வநாதா.. ஆ...ஆ...
சஞ்சலம் தீர சத்தியம் நிலை பெற
அஞ்சேல் என அபயம்
அருள்வாய் தேவா
அஞ்சேல் என அபயம்
அருள்வாய் தேவா
காசியில் வாழும் கருணைக் கடலே
கடைக்கண் பாராய்
அடைக்கலம் நீயே
காசியில் வாழும் கருணைக் கடலே
கருணைக் கடலே
கருணைக் கடலே
கருணைக் கடலே

கண் இழந்த பிள்ளைக்கு - Kan Ilantha Pillaiku Deivam Lyrics

கண் இழந்த பிள்ளைக்கு
தெய்வம் தந்த தரிசனம்
அன்புமிக்க ஒரு மனம்
நல்லவர்க்கு ஒரு குணம்

கண் இழந்த பிள்ளைக்கு
தெய்வம் தந்த தரிசனம்
அன்புமிக்க ஒரு மனம்
நல்லவர்க்கு ஒரு குணம்

கண் இழந்த பிள்ளைக்கு
தெய்வம் தந்த தரிசனம்


தாயின் குரல் கேட்டதுண்டு
தந்தை முகம் பார்த்ததுண்டு
ஜீவனற்ற கண்களுக்கு
தேவன் முகம் தெரிகிறது

தாயின் குரல் கேட்டதுண்டு
தந்தை முகம் பார்த்ததுண்டு
ஜீவனற்ற கண்களுக்கு
தேவன் முகம் தெரிகிறது
அந்த மரக்கிளைதனிலே
வந்தமர்ந்த பறவை ஒன்று
அந்த மரக்கிளைதனிலே
வந்தமர்ந்த பறவை ஒன்று
தந்ததொரு அன்பு கண்டு
தந்தை தன்னை மறந்ததுண்டு

கண் இழந்த பிள்ளைக்கு
தெய்வம் தந்த தரிசனம்
அன்புமிக்க ஒரு மனம்
நல்லவர்க்கு ஒரு குணம்

கண் இழந்த பிள்ளைக்கு
தெய்வம் தந்த தரிசனம்


ஏற்றிவிட்ட ஏணி ஒன்று
நின்றபடி நிற்கிறது
ஏறிவிட்ட ஒரு மனமோ
வேறு வழி நடக்கிறது

ஏற்றிவிட்ட ஏணி ஒன்று
நின்றபடி நிற்கிறது
ஏறிவிட்ட ஒரு மனமோ
வேறு வழி நடக்கிறது
ஏற்றியதும் குற்றமில்லை
ஏணியிலும் பாவமில்லை
ஏற்றியதும் குற்றமில்லை
ஏணியிலும் பாவமில்லை
மாற்றியது காலம் என்னும்
மாயக்காரன் லீலை அம்மா

கண் இழந்த பிள்ளைக்கு
தெய்வம் தந்த தரிசனம்


தேவன் அவன் கோயிலிலே
கோடை வெயில் சுடுகிறது
தேவி அவள் வாசலிலோ
செல்வ மழை பொழிகிறது

தேவன் அவன் கோயிலிலே
கோடை வெயில் சுடுகிறது
தேவி அவள் வாசலிலோ
செல்வ மழை பொழிகிறது
நல்லவர்க்கு பொருள் எதற்கு
நாடி வரும் புகழ் எதற்கு
நல்லவர்க்கு பொருள் எதற்கு
நாடி வரும் புகழ் எதற்கு
உன்னுடைய வசந்தத்திலே
ஒன்றுமில்லை ருசிப்பதற்கு

கண் இழந்த பிள்ளைக்கு
தெய்வம் தந்த தரிசனம்
அன்புமிக்க ஒரு மனம்
நல்லவர்க்கு ஒரு குணம்

கண் இழந்த பிள்ளைக்கு
தெய்வம் தந்த தரிசனம்

சித்திரத்தில் பெண் எழுதி - Chithirathil Pen Eluthi Lyrics

சித்திரத்தில் பெண் எழுதி
சீர்படுத்தும் மாநிலமே
ஜீவனுள்ள பெண்ணினத்தை
வாழவிட மாட்டாயோ

சித்திரத்தில் பெண் எழுதி
சீர்படுத்தும் மாநிலமே
ஜீவனுள்ள பெண்ணினத்தை
வாழவிட மாட்டாயோ

சித்திரத்தில் பெண் எழுதி
சீர்படுத்தும் மாநிலமே


காவியத்தில் காதல் என்றால்
கரைந்துருகும் கற்பனையே
காவியத்தில் காதல் என்றால்
கரைந்துருகும் கற்பனையே
கண் நிறைந்த காதலுக்கே
கண்ணீர் தான் உன் வழியோ
கண் நிறைந்த காதலுக்கே
கண்ணீர் தான் உன் வழியோ
கண்ணீர் தான் உன் வழியோ

சித்திரத்தில் பெண் எழுதி
சீர்படுத்தும் மாநிலமே
ஜீவனுள்ள பெண்ணினத்தை
வாழவிட மாட்டாயோ

சித்திரத்தில் பெண் எழுதி
சீர்படுத்தும் மாநிலமே


அன்னையென்றும் தெய்வமென்றும்
ஆர்ப்பரிக்கும் பெரியோரே
அன்னையென்றும் தெய்வமென்றும்
ஆர்ப்பரிக்கும் பெரியோரே
இன்னமுத தெய்வமெல்லாம்
ஏட்டில் வரும் தேன் தானோ
இன்னமுத தெய்வமெல்லாம்
ஏட்டில் வரும் தேன் தானோ

மன்னர் குல கன்னியரும்
கண்கலங்க நேருமென்றால்
மன்னர் குல கன்னியரும்
கண்கலங்க நேருமென்றால்
மண்டலத்தில் பெண்களுக்கே
வாய்த்த விதி இது தானோ
வாய்த்த விதி இது தானோ

சித்திரத்தில் பெண் எழுதி
சீர்படுத்தும் மாநிலமே
ஜீவனுள்ள பெண்ணினத்தை
வாழவிட மாட்டாயோ

சித்திரத்தில் பெண் எழுதி
சீர்படுத்தும் மாநிலமே

ஒரு காலத்திலே என்னைக் கட்டிப் போட - Oru Kaalathile Ennai Katti Poda Lyrics

ஒரு காலத்திலே என்னைக் கட்டிப் போட
ஒரு ராஜ்ஜியம் இருந்தது

ஒரு காலத்திலே என்னைக் கட்டிப் போட
ஒரு ராஜ்ஜியம் இருந்தது
அன்பு ராஜ்ஜியம் இருந்தது

அந்த ராஜ்ஜியத்தை ஆண்ட
ராஜாவின் பின்னால் பூஜ்ஜியம் இருந்தது
ஒரு பூஜ்ஜியம் இருந்தது

அந்த ராஜ்ஜியத்தை ஆண்ட
ராஜாவின் பின்னால் பூஜ்ஜியம் இருந்தது
ஒரு பூஜ்ஜியம் இருந்தது


அட நாலு செவத்துல பிஞ்சு கரங்கள்
கோடு கிழிச்சதய்யா
அட நாலு செவத்துல பிஞ்சு கரங்கள்
கோடு கிழிச்சதய்யா
அந்த கோடு கிழிச்சவன் கூட இருக்கையில்
வீடு சிரிச்சதய்யா
இந்த வீடு சிரிச்சதய்யா

நல்ல புத்தி இருந்தது சக்தி இருந்தது
பிள்ளை இருக்கையிலே
இப்ப பித்து பிடிச்சது
ரத்தம் கொதிச்சது தன்னந்தனிமையிலே
இன்று தன்னந்தனிமையிலே

ஒரு காலத்திலே ....
ஒரு காலத்திலே என்னைக் கட்டிப் போட
ஒரு ராஜ்ஜியம் இருந்தது
அன்பு ராஜ்ஜியம் இருந்தது


அவன் கள்ளச்சிரிப்பிலே என்னை மயக்கிய
கண்ண பரமாத்மா
அவன் கள்ளச்சிரிப்பிலே என்னை மயக்கிய
கண்ண பரமாத்மா
அவன் போட்ட விலங்கினில் மாட்டி தவிக்குது
சின்னஞ்சிறு ஆத்மா
சின்னஞ்சிறு ஆத்மா

அவன் பேசும் மழலைகள்
ஊதும் குழலென காதில் இனிச்சதய்யா
இந்த மீசைக் கிழவனின் ஆசைக் குழந்தையை
காலம் பிரிச்சதய்யா
கலி காலம் பிரிச்சதய்யா

ஒரு காலத்திலே ....
ஒரு காலத்திலே என்னைக் கட்டிப் போட
ஒரு ராஜ்ஜியம் இருந்தது
அன்பு ராஜ்ஜியம் இருந்தது


இந்த பாட்டன் படுகிற பாட்ட நெனச்சா
பாசம் புரியலயா
இந்த பாட்டன் படுகிற பாட்ட நெனச்சா
பாசம் புரியலயா
அது பாட்டி மனசயும் வாட்டி எடுப்பது
பார்த்தா தெரியலயா
பார்த்தா தெரியலயா

அட ஊரார் குழந்தைய ரெண்டு கிழங்களும்
ஊட்டி வளர்த்ததய்யா
இப்ப ஓட்ட படகென பாசச் சுழலிலே
மாட்டி முழிக்குதய்யா
பாவம் மாட்டி முழிக்குதய்யா

ஒரு காலத்திலே ....
ஒரு காலத்திலே என்னைக் கட்டிப் போட
ஒரு ராஜ்ஜியம் இருந்தது
அன்பு ராஜ்ஜியம் இருந்தது

அந்த ராஜ்ஜியத்தை ஆண்ட
ராஜாவின் பின்னால் பூஜ்ஜியம் இருந்தது
ஒரு பூஜ்ஜியம் இருந்தது

மலையோரம் மயிலே விளையாடும் - Malayoram Mayile Vilayaadum Lyrics

மலையோரம்..... 
விளையாடும்..... 

மலையோரம் மயிலே
விளையாடும் குயிலே
ம்.. அப்பறம்..
விளையாட்ட சொல்லித்தந்த
ம்....
விளையாட்ட சொல்லித்தந்ததாரு
ம்... விளையாட்ட சொல்லித்தந்ததாரு

மலையோரம் மயிலே
விளையாடும் குயிலே
மலையோரம் மயிலே
விளையாடும் குயிலே
விளையாட்ட சொல்லித்தந்ததாரு
ம்... விளையாட்ட சொல்லித்தந்ததாரு

மலையோரம் மயிலே
விளையாடும் குயிலே
மலையோரம் மயிலே
விளையாடும் குயிலே

பூமரக்காத்து சாமரந்தான்
வீசுது இங்கே வாசனை தான்

பூமரக்காத்து சாமரந்தான்
வீசுது இங்கே வாசனை தான்
மாநிறப் பூவே
யோசனை ஏனோ
மாமனத்தானே சேரணும் நீயே
ஆ.. ஆ... ஆ....


மலையோரம் மயிலே
விளையாடும் குயிலே
மலையோரம் மயிலே
விளையாடும் குயிலே
விளையாட்ட சொல்லித்தந்ததாரு
ம்... விளையாட்ட சொல்லித்தந்ததாரு

மலையோரம் மயிலே
விளையாடும் குயிலே
மலையோரம் மயிலே
விளையாடும் குயிலே

தந்தனனத்தன தந்தத்தந்த தானா தானா....
தகிட தக்கத்தக்கிட....


காவிரி ஆற்றங்கரையினிலே
காற்றினில் ஆடும் பூங்கொடியே
காவிரி ஆற்றங்கரையினிலே
காற்றினில் ஆடும் பூங்கொடியே
ஆடிடும் பூவும்
ஆசையைத்தானே
கூறுது இங்கே
மாமலைத்தேனே

ஆ.. ஆ... ஆ....

மலையோரம் மயிலே
விளையாடும் குயிலே
மலையோரம் மயிலே
விளையாடும் குயிலே
விளையாட்ட சொல்லித்தந்ததாரு
ம்... விளையாட்ட சொல்லித்தந்ததாரு

மலையோரம் மயிலே
விளையாடும் குயிலே
மலையோரம் மயிலே
விளையாடும் குயிலே

ஆசையிலே பாத்தி கட்டி - Aasaiyile Paathi Katti Lyrics

தென்பாண்டி சீம தெம்மாங்கு பாட்டு
பாட்டோட வாழும் என் சாமியே
ஒன் பேர போட்டு
நான் பாடும் பாட்டு
கேட்டாக்கா வாழும் ஒன் பூமியே
என் மூச்சு என் பேச்சு
நீதானய்யா
என் வாக்கு நீ கேட்டு
காப்பாத்தய்யா

ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒன்னு நட்டுவச்சேன்
நான் பூவாயி
ஆதரவ தேடி ஒரு
பாட்டு ஒன்னு கட்டிவச்சேன்
நான் பூவாயி
நானா பாடலியே
நீதான் பாடவச்ச
நானா பாடலியே
நீதான் பாடவச்ச

ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒன்னு நட்டுவச்சேன்
நான் பூவாயி


வைகையிலே வந்த வெள்ளம்
நெஞ்சிலே வந்ததென்ன
வஞ்சி நான் கேட்ட வரம்
வந்து நீ தந்ததென்ன
சின்னப் பூ பாத்து
சேர்ந்ததே காத்து
சிந்து தான் பாடுது

பொன்னு மணித்தேரு
நான் பூட்டி வச்சேன் பாரு
கன்னி  என்னத்தேடி
நீ அங்க வந்து சேரு
வெதை போட்டேன் அது வெளஞ்சாச்சு
நீ வா என் வழி பாத்து

ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒன்னு நட்டுவச்சேன்
நான் பூவாயி
ஆதரவ தேடி ஒரு
பாட்டு ஒன்னு கட்டிவச்சேன்
நான் பூவாயி


கண்ணு தான் தூங்கவில்ல
காரணம் தோணவில்ல
பொன்னு நான் ஜாதி முல்ல
பூமால ஆகவில்ல
கன்னி தான் நாத்து
கண்ணன் நீ காத்து
வந்து தான் கூடவில்ல

கூரப்பட்டுச் சேல
நீ வாங்கி வரும் வேள
போடு ஒரு மால
நீ சொல்லு அந்த நாள
ஏன் சாமி நான் காத்திருக்கேன்
என்ன ஏந்து நீதானே

ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒன்னு நட்டுவச்சேன்
நான் பூவாயி
ஆதரவ தேடி ஒரு
பாட்டு ஒன்னு கட்டிவச்சேன்
நான் பூவாயி
நானா பாடலியே
நீதான் பாடவச்ச
நானா பாடலியே
நீதான் பாடவச்ச

ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒன்னு நட்டுவச்சேன்
நான் பூவாயி

கருத்த மச்சான் கஞ்சத்தனம் - Karutha Machan Kanjathanam Lyrics

கருத்த மச்சான்
கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே
பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்
அப்பப்போ  எப்பப்பா
பிப்பீ டும்டும்டும் டும்டும்டும்

கருத்த மச்சான்
கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே
பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்
அப்பப்போ  எப்பப்பா
பிப்பீ டும்டும்டும் டும்டும்டும்

கருத்த மச்சான்
கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்

பூட்டிவச்ச குதிரை ஒன்னு
புட்டுக்கிச்சு மாமா
இப்ப புடிச்சு அத அடக்கிவைக்க
கிட்ட வரலாமா
தோட்டக்கிளி கூட்டுக்குள்ள
மாட்டிக்கிச்சு மாமா
அந்த பூட்ட ஒரு சாவி வச்சு
பூட்டத் தொற மாமா

பஞ்சாங்கம் நீ பாரு
பந்தக்காலும் நீ போடு
ஒன் மார்பில் சாயாம
தூங்காது கண்ணு
என்னத்தான் புடிச்சு
மெல்லத்தான் அணைச்சு
முத்தந்தான் நித்தந்தான்
வச்சுத்தான் கொஞ்சணும் கொஞ்சணும்

கருத்த மச்சான்
கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே
பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்
அப்பப்போ  எப்பப்பா
பிப்பீ டும்டும்டும் டும்டும்டும்

கருத்த மச்சான்
கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே
பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்


முளைச்சு இங்கு மூணு இலை
விட்டவளும் நானே
என்ன கருகவச்சு பாக்குறியே
காஞ்ச நிலம் போல
நேத்து இங்கு சமஞ்சதெல்லாம்
புள்ளக்குட்டியோட
அந்த நெனப்பு என்ன வாட்டுதய்யா
சுட்ட சட்டி போல

எப்போதும் ஒன் நேசம்
மாறாது என் பாசம்
என் சேல மாராப்பு
நீதானே ராசா
என்னத்தான் புடிச்சு
மெல்லத்தான் அணைச்சு
முத்தந்தான் நித்தந்தான்
வச்சுத்தான் கொஞ்சணும் கொஞ்சணும்

கருத்த மச்சான்
கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே
பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்
அப்பப்போ  எப்பப்பா
பிப்பீ டும்டும்டும் டும்டும்டும்

கருத்த மச்சான்
கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே
பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்

தல கோதும் எளங்காத்து - Thalakothum Elangaathu Lyrics

தல கோதும் எளங்காத்து
சேதி கொண்டு வரும்
மரமாகும் வெதையெல்லாம்
வாழ சொல்லித் தரும்

ம் ம் ம் ம்.......

கலங்காத கலங்காத
நீயும் நெஞ்சுக்குள்ள
இருளாத விடியாத
நாளும் இங்கு இல்ல

ம் ம் ம் ம்.......

தல கோதும் எளங்காத்து
சேதி கொண்டு வரும்
மரமாகும் வெதையெல்லாம்
வாழ சொல்லித் தரும்

கலங்காத கலங்காத
நீயும் நெஞ்சுக்குள்ள
இருளாத விடியாத
நாளும் இங்கு இல்ல

ரொம்ப பக்கந்தான் பக்கந்தான்
நிழல் நிக்குதே நிக்குதே
ரொம்ப பக்கந்தான் பக்கந்தான்
நிழல் நிக்குதே நிக்குதே
ஒன்ன நம்பி நீ முன்னப் போகையிலே
பாத உண்டாகும்

நிக்காம முன்னேறு
கண்ணோரம் ஏன் கண்ணீரு
நிக்காம முன்னேறு
அன்பால நீ கைசேரு 
கைசேரு.....


நீல வண்ணக் கூர இல்லாத
நிலம் இங்கு ஏது
காலம் என்னும் தோழன் உன்னோடு
தடைகள மீறு
மாறுமோ தானா நிலை எல்லாமே தன்னாலே
போராடு நீயே அறம் உண்டாகும் மண்மேலே
மீதி இருள் நீ கடந்தால்
காலை ஒளி வாசல் வரும்
தோழில் நம்மை ஏந்திக் கொள்ளும்
நமக்கான நாள் வரும்

தல கோதும் எளங்காத்து
சேதி கொண்டு வரும்
மரமாகும் வெதையெல்லாம்
வாழ சொல்லித் தரும்

கலங்காத கலங்காத
நீயும் நெஞ்சுக்குள்ள
இருளாத விடியாத
நாளும் இங்கு இல்ல

ரொம்ப பக்கந்தான் பக்கந்தான்
நிழல் நிக்குதே நிக்குதே
ஒன்ன நம்பி நீ முன்னப் போகையிலே
பாத உண்டாகும்

நிக்காம முன்னேறு
கண்ணோரம் ஏன் கண்ணீரு
நிக்காம முன்னேறு
அன்பால நீ கைசேரு 

நிக்காம முன்னேறு
கண்ணோரம் ஏன் கண்ணீரு
நிக்காம முன்னேறு
அன்பால நீ கைசேரு