நட்டநடு கடல்மீது நான் பாடும் - Natta Nadu Kadal Meethu

கடலிலே தனிமையில் போனாலும்
கண்மணி உன் நினைவில் களைப்பாறுவேன்
அலைகளில் தத்தளித்தாலும்
அவள் நினைவில் முக்குளிப்பேனே
அடியே அமுதே இதுவே போதும்

நட்டநடு கடல்மீது நான் பாடும் பாட்டு
சிட்டு அவள் காதோரம் சேர்க்காதோ காத்து
நித்தம் உனைக் காணாது நித்திரையும் தோணாது
சித்திரமே முத்து ரதமே...
எட்டி எட்டி போனாலும் கெட்டு மனம் போகாது
அற்புதமே அன்னக்கிளியே...

பிரிந்தது உயிரல்ல உடல்தான்
விட்டுவிலகாது உயிர்க்காதலே
கரையிலே கன்னி துடித்தாளே
கட்டுமரம் மீதில் காளை தவித்தானே
இதுதான் காதலில் இடைவேளை


வந்தவர்கள் போவார்கள் போகாது காதல்
வங்கக்கடல் மீதாணை தேயாது காதல்
சுத்திவரும் புயலென்ன
கொட்டுகின்ற இடியென்ன
அன்பு விளக்கென்றும் எரியும்..
தெய்வத்துக்கு திரையென்ன
காதலுக்கு மறைவென்ன
உங்களுக்கு என்று புரியும்...

ஆற்றிலே இக்கரையில் நின்று
அக்கரைக்குத் தூதுவிட கூடலாம்
எண்ணத்தைச் சொல்ல நடு ஆழியில்
அன்னப்பறவையை நான் எங்கு தேடுவேன்
அடியே அமுதே வருந்தாதே


விட்டு இனிப்போகாது விடிவெள்ளி தூரம்
கட்டுமரம் கடலாடி கரையேறும் நேரம்
உப்பெடுக்கும் நேரம் ஒன்று
முத்தெடுக்கும் நேரம் இன்று
சித்திரமே செப்பு குடமே
கட்டும் உண்டு காவலும் உண்டு
நம்மை என்ன செய்யும் இன்று
நித்திலமே முத்துரதமே

நட்டநடு கடல்மீது நான் பாடும் பாட்டு
சிட்டு அவள் காதோரம் சேர்க்காதோ காத்து
நித்தம் உனைக் காணாது நித்திரையும் தோணாது
சித்திரமே முத்து ரதமே...
எட்டி எட்டி போனாலும் கெட்டு மனம் போகாது
அற்புதமே அன்னக்கிளியே...

என்னடி மீனாட்சி சொன்னது - Ennadi Meenakshi Sonnathu Lyrics

வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா
மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப் போல்
பாவை தெரியுதடி

என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை
காற்றோடு போயாச்சு
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை
காற்றோடு போயாச்சு


உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம்
அந்த மனத்தில் மறைந்திருக்கும் துளி விஷம்
உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம்
அந்த மனத்தில் மறைந்திருக்கும் துளி விஷம்
நெஞ்சம் துடித்திடும் நாழி
நீயோ அடுத்தவன் தோழி
என்னை மறந்துபோவதும் நியாயமோ
இந்த காதல் ஓவியத்தின் பாதை மாறியது
காலம் செய்து விட்ட மாயமோ
ஒரு மனம் உருகுது ஒரு மனம் விலகுது ஏய்...

என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை
காற்றோடு போயாச்சு


அன்பில் விளைந்த உறவு ஒரு தொடர்கதை
அந்த உறவு உனக்கு ஒரு சிறுகதை
அன்பில் விளைந்த உறவு ஒரு தொடர்கதை
அந்த உறவு உனக்கு ஒரு சிறுகதை
கண்ணன் தனிமையிலே பாட
ராதை தன் வழியே ஓட
இந்த பிரிவைத் தாங்குமோ என் மனம்
ஒரு நூலில் ஆடுகின்ற ஊஞ்சல் போன்றதடி
நாளும் மாறுகின்ற உன் மனம்
எனக்கின்று புரிந்தது எவளென்று தெரிந்தது ஏய்..

என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை
காற்றோடு போயாச்சு

வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா
மார்பு துடிக்குதடி

சங்கத்தில் பாடாத கவிதை - Sangathil Paadaatha Kavithai Lyrics

சங்கத்தில் பாடாத கவிதை 
அங்கத்தில் யார் தந்தது
தார ரரரர ரரரர ரரரர ரார ரரரர ரரரர ரா..

சந்தத்தில் மாறாத நடையொடு 
என் முன்னே யார் வந்தது
தரரர ரரரர ரரரர ரரரர ரரரர ரரரர ரரரர ரா...

தமிழ்ச்சங்கத்தில் பாடாத கவிதை 
அங்கத்தில் யார் தந்தது
தார ரரரர ரரரர ரரரர ரார ரரரர ரரரர ரா..

தானான ன..னானா... ஆ.. னானான ஆன..ஆ..ஆ..


கையென்றே செங்காந்தள் மலரை
நீ சொன்னால் நான் நம்பவோ

ஆ...ஆ...ஆ..ஆ...ஆ..

கால் என்றே செவ்வாழை இலைகளை 
நீ சொன்னால் நான் நம்பிவிடவோ

மை கொஞ்சம் ஆ...பொய் கொஞ்சம்.. ஆ....
கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய்..
காலத்தால் மூவாத உயர்தமிழ் சங்கத்தில்

ரார ரரரர ரரரர ரரரர ரார ரரரர ரரரர ரா..

அந்திப்போர் காணாத இளமை
ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்
சிந்தித்தேன் பாய்கின்ற உறவை
கொஞ்சம் தா ஆ.. கொஞ்சத் தா ஆ...
கண்ணுக்குள் என்னென்ன நளினம்
காலத்தால் மூவாத உயர்தமிழ் சங்கத்தில்

தார ரரரர ரரரர ரரரர ரார ரரரர ரரரர ரா..


ஆடை ஏன் உன்மேனி அழகை
ஆதிக்கம் செய்கின்றது.. ஆ...ஆ...ஆ..ஆ...
நாளைக்கே ஆனந்த விடுதலை
காணட்டும் காணாத உறவில்
கை தொட்டும் ஆ.. மெய் தொட்டும் ஆ...
காமத்தில் தூங்காத விழியின் 
சந்திப்பில் என்னென்ன நயம் 

தமிழ்ச்சங்கத்தில் பாடாத கவிதை 
அங்கத்தில் யார் தந்தது
தார ரரரர ரரரர ரரரர ரார ரரரர ரரரர ரா..

சந்தத்தில் மாறாத நடையொடு 
என் முன்னே யார் வந்தது
தரரர ரரரர ரரரர ரரரர ரரரர ரரரர ரரரர ரா...

தமிழ்ச்சங்கத்தில் பாடாத கவிதை 
அங்கத்தில் யார் தந்தது
தார ரரரர ரரரர ரரரர ரார ரரரர ரரரர ரா..

மல்லிகை என் மன்னன் மயங்கும் - Malligai En Mannan Mayangum Lyrics

மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ

எந்நேரமும் உன் ஆசைபோல் 
பெண்பாவை நான் பூச்சூடிக்கொள்ளவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ


வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
திங்கள் மேனியைத் தொட்டுத் தாலாட்டுது
குளிர் காற்றிலே தளிர்ப் பூங்கொடி
கொஞ்சிப் பேசியே அன்பைப் பாராட்டுது
என் கண்ணன் துஞ்சத்தான்
என் நெஞ்சம் மஞ்சம் தான்
கையோடு நான் அள்ளவோ
என் தேவனே உன் தேவி நான்
இவ்வேளையில் உன் தேவை என்னவோ

மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ


பொன்மாங்கல்யம் வண்ணப்பூச்சரம்
பொன்மாங்கல்யம் வண்ணப்பூச்சரம்
மஞ்சள் குங்குமம் என்றும் நீ தந்தது
ஓராயிரம் இன்பக்காவியம் 
உந்தன் கண்களில் அள்ளி நான் தந்தது
நம் இல்லம் சொர்க்கம் தான்
நம் உள்ளம் வெள்ளம் தான்
ஒன்றோடு ஒன்றானது
என் சொந்தமும் இந்த பந்தமும்
உன்னோடுதான் நான் தேடிக்கொண்டது

மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ

எந்நேரமும் உன் ஆசைபோல் 
பெண்பாவை நான் பூச்சூடிக்கொள்ளவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ

சம்சாரம் என்பது வீணை - Samsaram Enbathu Veenai Lyrics

சம்சாரம் என்பது வீணை
சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மனம் குணம் ஒன்றான முல்லை

சம்சாரம் என்பது வீணை
சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மனம் குணம் ஒன்றான முல்லை

என் வாழ்க்கை திறந்த ஏடு
அது ஆசைக்கிளியின் கூடு
என் வாழ்க்கை திறந்த ஏடு
அது ஆசைக்கிளியின் கூடு
பல காதல் கவிதைகள் பாடி
பரிமாறும் உண்மைகள் கோடி
இது போன்ற ஜோடி இல்லை
இது போன்ற ஜோடி இல்லை
மனம் குணம் ஒன்றான முல்லை

சம்சாரம் என்பது வீணை
சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மனம் குணம் ஒன்றான முல்லை


என் மாடம் முழுதும் விளக்கு
ஒரு நாளும் இல்லை இருட்டு
என் மாடம் முழுதும் விளக்கு
ஒரு நாளும் இல்லை இருட்டு
என் உள்ளம் போட்ட கணக்கு
ஒருபோதும் இல்லை வழக்கு
இது போன்ற ஜோடி இல்லை
இது போன்ற ஜோடி இல்லை
மனம் குணம் ஒன்றான முல்லை

சம்சாரம் என்பது வீணை
சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மனம் குணம் ஒன்றான முல்லை


தைமாத மேக நடனம்
என் தேவி காதல் நளினம்
தைமாத மேக நடனம்
என் தேவி காதல் நளினம்
இந்த காதல் ராணி மனது
அது காலம்தோறும் எனது
இதில் மூடும் திரைகள் இல்லை
இதில் மூடும் திரைகள் இல்லை
மனம் குணம் ஒன்றான முல்லை

சம்சாரம் என்பது வீணை
சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மனம் குணம் ஒன்றான முல்லை

அம்மா நீ சுமந்த பிள்ளை - Amma Nee Sumantha Pillai Lyrics

அம்மா நீ சுமந்த பிள்ளை சிறகொடிந்த கிள்ளை
என் கண்களும் என் நெஞ்சமும் கொண்டாடும் தெய்வம் தாயே
அன்னை ஓர் ஆலயம் அன்னை ஓர் ஆலயம்

அம்மா நீ சுமந்த பிள்ளை சிறகொடிந்த கிள்ளை


மண்ணில் என்ன தோன்றக்கூடும் மழையில்லாத போது
மனிதனோ மிருகமோ தாயில்லாமல் ஏது
மண்ணில் என்ன தோன்றக்கூடும் மழையில்லாத போது
மனிதனோ மிருகமோ தாயில்லாமல் ஏது
அன்னை சொன்ன வார்த்தை இன்று நினைவில் வந்தது
அன்பு என்ற சொல்லே தாயின் வடிவில் வந்தது
எங்கே எங்கே

அம்மா நீ சுமந்த பிள்ளை சிறகொடிந்த கிள்ளை


வாழவைத்த தெய்வம் இன்று வானம் சென்றதேனோ
உலகிலே உன் மகன் நீரில்லாத மீனோ
வாழவைத்த தெய்வம் இன்று வானம் சென்றதேனோ
உலகிலே உன் மகன் நீரில்லாத மீனோ
மீண்டும் இந்த மண்ணில் வந்து தோன்றவேண்டுமே
வாழ்க வாழ்க மகனே என்று வாழ்த்தவேண்டுமே
எங்கே எங்கே

அம்மா நீ சுமந்த பிள்ளை சிறகொடிந்த கிள்ளை
என் கண்களும் என் நெஞ்சமும் கொண்டாடும் தெய்வம் தாயே
அன்னை ஓர் ஆலயம் அன்னை ஓர் ஆலயம்

எளியோரை தாழ்த்தி வலியோரை - Eliyorai Thalthi Valiyorai Lyrics

எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்
உலகே உன் செயல் தான் மாறாதா

எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்
உலகே உன் செயல் தான் மாறாதா
எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்
உலகே உன் செயல் தான் மாறாதா

பரிதாபம் நெஞ்சில் சிறிதேனும் இல்லா
படுபாவியால் வாழ்வு பறிபோவதா
பரிதாபம் நெஞ்சில் சிறிதேனும் இல்லா
படுபாவியால் வாழ்வு பறிபோவதா


அறியாத நங்கை எனதாசை தங்கை
கதியேதும் காணாமல் மனம் நோவதோ
அறியாத நங்கை எனதாசை தங்கை
கதியேதும் காணாமல் மனம் நோவதோ

ஓ...எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்
உலகே உன் செயல் தான் மாறாதா


சிறகே இல்லாத கிளி போல ஏங்கி
உனைக் காணவே என் உளம் நாடுதே
சிறகே இல்லாத கிளி போல ஏங்கி
உனைக் காணவே என் உளம் நாடுதே

பறந்தோடி வந்துன் குறைதீர்க்க என்னை
சிறைக்காவல் இங்கே தடை போடுதே
பறந்தோடி வந்துன் குறைதீர்க்க என்னை
சிறைக்காவல் இங்கே தடை போடுதே

ஏ..எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்
உலகே உன் செயல் தான் மாறாதா
எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்
உலகே உன் செயல் தான் மாறாதா

காட்டுக்குயில் போல இந்த - Kaatu Kuyil Pola Intha Lyrics

ஏ... காட்டுக்குயில் போல இந்த வீட்டுக்குயில் கூவும்
கேட்டுக்குங்க சாமி உங்க கோவமெல்லாம் போகும்
நான் பாட்டுக்குள்ள இலக்கணத்த படிச்சதில்ல ஏட்டில்
நாட்டுப்புற இலக்கியந்தான் நெறஞ்சிருக்கும் பாட்டில்
யார் இதயத்தையும் எளக வைக்கும் எந்தன் பாட்டு தான்

ஆ... ஆ.. ஆ...ஆ...ஆ...


பொட்டலுல செடி வளரும் மொட்டத்தல முடி வளரும்
பட்டிக்காட்டு பாட்டெடுத்தா பாறையில புல் மொளைக்கும்
கேப்பையில நெய் வடியும் காளையில பால் வடியும்
ஏழிசைய கேட்டிருந்தா எத்திக்காயில் தேன் வடியும்
சாமியென்ன பூமியென்ன சங்கீதம்னா சரண்டருதான்
எங்க ஊரு ஓட வாட எல்லாம் பாடுது
அந்த இயற்கையத்தான் என் ஞானம் வந்தது
என் கூடப்பொறந்த பொறப்பா இந்த கானம் வந்தது
ஊர் நெனப்புலதான் நெலச்சி நிக்கும் நம்ம பாட்டுதான்

ஆ... ஆ.. ஆ...ஆ...ஆ...

காட்டுக்குயில் போல இந்த வீட்டுக்குயில் கூவும்
கேட்டுக்குங்க சாமி உங்க கோவமெல்லாம் போகும்


ஆ.. கந்தனுக்கு வடிவேலு கண்ணனுக்கு வேய்குழலு
எந்தனுக்கு துணையாகும் தாய் குடுத்த தமிழ் பாலு
சிந்துகளில் பெயரெடுத்த சூரக்கோட்ட பொறப்பெடுத்த
சின்னதம்பி பரம்பர தான் சொக்கவைக்கும் பாடகன் நான்
கிட்டப்பாவ கேட்டதில்ல சின்னப்பாவ பாத்ததில்ல
ரத்தத்தில ஊறிப்போச்சு ராகம் தாளம் தான்
நான் டி எம் எஸ் பொறந்த தென்மதுரைக்காரன் தான்
என் மனசில் புகுந்து பாடும் அந்த மதுரை வீரம் தான்
நான் அடுத்தவங்க அகம் குளிர நாளும் பாடுவேன்

ஆ... ஆ.. ஆ...ஆ...ஆ...

காட்டுக்குயில் போல இந்த வீட்டுக்குயில் கூவும்
கேட்டுக்குங்க சாமி உங்க கோவமெல்லாம் போகும்
நான் பாட்டுக்குள்ள இலக்கணத்த படிச்சதில்ல ஏட்டில்
நாட்டுப்புற இலக்கியந்தான் நெறஞ்சிருக்கும் பாட்டில்
யார் இதயத்தையும் எளக வைக்கும் எந்தன் பாட்டு தான்

ஆ... ஆ.. ஆ...ஆ...ஆ...

காட்டுப்பயலே கொஞ்சிப் போடா - Kaatu Payale Konji Poda Lyrics

காட்டுப்பயலே கொஞ்சிப் போடா என்ன ஒருக்கா நீ
மொரட்டு முயல தூக்கிப் போக வந்த பயடா நீ
கரட்டுக் காட கெடந்த என்ன திருட்டு முழிக்காரா
தொரட்டி போட்டு இழுக்குறடா நீ

திருட்டு பூனை போல என்ன உருட்டி உருட்டி பாத்து
சுருட்ட பாம்பா ஆக்கிப்புட்ட நீ
என் முந்தியில சொருகி வச்ச சில்லரைய போல நீ
இடுப்பு மடிப்பில் என்னென்னமோ செஞ்சுப்புட்டு போற நீ
பாரங்கல்ல இருந்த என்ன பஞ்சு போல ஆக்கிப்புட்ட
என்ன வித்த வச்சுருக்க நீ 

யான பசி நான் உனக்கு யான பசி
சோள பொரி நீ எனக்கு சோள பொரி

லல்லாயி லாயிரே லாயிரே..ஏ.. 
லல்லாயி லாயிரே லாயிரே..ஏ.. 
லல்லாயி லாயிரே லாயிரே..ஏ.. 


பாசத்தால என்ன நீயும் பதற வைக்கிற
பத்திக்கிட்டு எரியும் என்ன பாத்து நிக்கிற
ஜிகருதண்டா பார்வையால குளிர வைக்கிற
தூரம் நின்னே என் மனச மேய வைக்கிற

நான் வெளஞ்சு நிக்கும் பொம்பள
வெட்கம் கெட்டு நிக்கிறேன்
உச்சு கொட்ட வைக்கிறியே வாடா
நீ எச்சி ஊற வைக்கிற என் ஒடம்ப தைக்கிற
எதுக்கு தள்ளி நிக்கிற வாடா

நான் சாமத்துல முழிக்கிறேன்
சாரப்பாம்பா நெளியிறேன்
என்ன செஞ்ச என்ன நீ கொஞ்சம் சொல்லுடா
உன் மொரட்டு ஆச எனக்கு தான்
அதுவும் தெரியும் உனக்கு தான்

என்ன செய்ய ஒன்ன 
தின்னு தீக்க போறேன்
கொஞ்சம் கொஞ்சமாக
கொஞ்சி கொல்லப் போறேன்

வீச்சருவா இல்லாமலே வெட்டி சாய்க்கிற
வேலுக்கம்பு வார்த்தயால குத்தி கிழிக்கிற
சூதனமா அங்க இங்க கிள்ளி வைக்கிற
சூசகமா ஆசையெல்லாம் சொல்லி வைக்கிற


நீ தொட்டு பேசு சீக்கிரம்
விட்டு போகும் என் ஜூரம்
வெட்டி கத பேசவேணா வாடா
நான் ஓலப்பாய விரிக்கிறேன்
ஒனக்கு விருந்து வைக்கிறேன்
முழுசா என்ன தின்னுபுட்டு போடா

நீ எதுக்கு தயங்கி நிக்கிற
என்ன ஒதுக்கி வைக்கிற
சும்மா மொரண்டு பிடிக்கிற கட்டி அள்ளுடா
உன் மொரட்டு திமிரு எனக்கு தான்
அதுவும் தெரியும் உனக்கு தான்

பொத்தி வச்ச ஆச பொங்குதடா உலையா
பொத்துகிட்டு ஊத்த போகுதடா மழையா

லல்லாயி லாயிரே லாயிரே..ஏ.. 
லல்லாயி லாயிரே லாயிரே..ஏ.. 
லல்லாயி லாயிரே லாயிரே..ஏ.. 

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு - Pallikattu Sabarimalaiku Lyrics

இருமுடி தாங்கி ஒரு மனதாகி குருவெனவே வந்தோம்
இருவினை தீர்க்கும் எமனையும் வெல்லும்
திருவடியைக் காண வந்தோம்

பள்ளிக்கட்டு... சபரிமலைக்கு
கல்லும் முள்ளும்.. காலுக்கு மெத்தை
ஸ்வாமியே.. ஐயப்போ..
ஸ்வாமி சரணம்.. ஐயப்ப சரணம்..

பள்ளிக்கட்டு... சபரிமலைக்கு
கல்லும் முள்ளும்.. காலுக்கு மெத்தை
ஸ்வாமியே.. ஐயப்போ..
ஸ்வாமி சரணம்.. ஐயப்ப சரணம்..

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே

நெய்யபிஷேகம் ஸ்வாமிக்கே
கற்பூரதீபம் ஸ்வாமிக்கே
ஐயப்பன்மார்களும் தூரிக்கொண்டு 
ஐயனை நாடிச் சென்றிடுவார்
சபரிமலைக்குச் சென்றிடுவார்

ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே


கார்த்திகை மாதம் மாலை அணிந்து
நேர்த்தியாகவே விரதம் இருந்து
பார்த்தசாரதியின் மைந்தனே
உனை பார்க்கவேண்டியே தவமிருந்து
பார்த்தசாரதியின் மைந்தனே
உனை பார்க்கவேண்டியே தவமிருந்து

இருமுடி எடுத்து எருமேனி வந்து
ஒரு மனதாகி பேட்டை துள்ளி
அருமை நண்பராம் பாபரைத் தொழுது
ஐயனின் அருள்மலை ஏறிடுவார்

ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே

அழுகை ஏற்றம் ஏறும்போது
ஹரிஹரன் மகனை துதித்துச் செல்வார்
வழிகாட்டிடவே வந்திடுவார் ஐயன் வன்புலி ஏறி வந்திடுவார்
கரிமலை ஏற்றம் கடினம் கடினம்
கருணைக்கடலும் துணை வருவார்
கரிமலை இறக்கம் வந்தவுடனே
பெருநரி பம்பையைக் கண்டிடுவார்

ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே


கங்கை நதி போல் புண்ணிய நதியாம் பம்பையில் நீராடி
சங்கரன் மகனை கும்பிடுவார் சஞ்சலம் இன்றி ஏறிடுவார்
பீலிமலை ஏற்றம் சிவபாலனும் ஏற்றிடுவார்
காலமெல்லாம் நமக்கே அருள் காவலனாய் இருப்பார்

தேக பலம் தா.. பாத பலம் தா..
தேக பலம் தா.. பாத பலம் தா..
தேக பலம் தா என்றால் அவரும் தேகத்தைத் தந்திடுவார்
பாத பலம் தா என்றால் அவரும் பாதத்தைத் தந்திடுவார்
நல்ல பாதையைக் காட்டிடுவார்

ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே


சபரி பீடமே வந்திடுவார் சபரி அன்னையைப் பணிந்திடுவார்
மரங்குத்தியானில் கன்னமார்களும் மரத்தினைப் போட்டு வணங்கிடுவார்
சபரிமலை தனை நெருங்கிடுவார்

பதினெட்டு படி மீது ஏறிடுவார்
கதி என்று அவனை சரணடைவார்
மதிமுகம் கண்டே மயங்கிடுவார்
ஐயனை துதிக்கயிலே தன்னையே மறந்திடுவார்

பள்ளிக்கட்டு... சபரிமலைக்கு
கல்லும் முள்ளும்.. காலுக்கு மெத்தை
ஸ்வாமியே.. ஐயப்போ..
ஸ்வாமி சரணம்.. ஐயப்ப சரணம்..

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே

ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே

சரணம் சரணம் ஐயப்பா.. 
ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா.. 
ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா.. 
ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா.. 
ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா.. 
ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா.. 
ஸ்வாமி சரணம் ஐயப்பா