சம்சாரம் என்பது வீணை - Samsaram Enbathu Veenai Lyrics

சம்சாரம் என்பது வீணை
சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மனம் குணம் ஒன்றான முல்லை

சம்சாரம் என்பது வீணை
சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மனம் குணம் ஒன்றான முல்லை

என் வாழ்க்கை திறந்த ஏடு
அது ஆசைக்கிளியின் கூடு
என் வாழ்க்கை திறந்த ஏடு
அது ஆசைக்கிளியின் கூடு
பல காதல் கவிதைகள் பாடி
பரிமாறும் உண்மைகள் கோடி
இது போன்ற ஜோடி இல்லை
இது போன்ற ஜோடி இல்லை
மனம் குணம் ஒன்றான முல்லை

சம்சாரம் என்பது வீணை
சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மனம் குணம் ஒன்றான முல்லை


என் மாடம் முழுதும் விளக்கு
ஒரு நாளும் இல்லை இருட்டு
என் மாடம் முழுதும் விளக்கு
ஒரு நாளும் இல்லை இருட்டு
என் உள்ளம் போட்ட கணக்கு
ஒருபோதும் இல்லை வழக்கு
இது போன்ற ஜோடி இல்லை
இது போன்ற ஜோடி இல்லை
மனம் குணம் ஒன்றான முல்லை

சம்சாரம் என்பது வீணை
சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மனம் குணம் ஒன்றான முல்லை


தைமாத மேக நடனம்
என் தேவி காதல் நளினம்
தைமாத மேக நடனம்
என் தேவி காதல் நளினம்
இந்த காதல் ராணி மனது
அது காலம்தோறும் எனது
இதில் மூடும் திரைகள் இல்லை
இதில் மூடும் திரைகள் இல்லை
மனம் குணம் ஒன்றான முல்லை

சம்சாரம் என்பது வீணை
சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மனம் குணம் ஒன்றான முல்லை

No comments:

Post a Comment