வரச்சொல்லி இந்நேரம் - புதுச்சேரி கச்சேரி - Puduchery Kacheri Sad Lyrics

வரச்சொல்லி இந்நேரம் 
வனக்குயில் அழைத்தது வந்தேன்
குறை சொல்லி இப்போது 
விரட்டிட தெருவினில் நின்றேன்
அழுகையை கண்ணோடு
அடக்கிட நினைக்கையில் நானும்
எனக்கென கண்ணீரை 
வடிக்குது வடிக்குது வானம்

உனை நினைத்து உயிர் துடித்து
தினம் தினம் நான் இசை படித்தேன்
உனதழகை விழியிரண்டால்
அழகழகாய் சிலை வடித்தேன்


கலங்கம் இல்லாத காதல்
பிழைகள் இல்லாத பாடல்
இடையில் உண்டான ஊடல்
நிஜங்கள் ஆகாது கானல்

வார்த்தை பொய்யாகும் வாழ்க்கை பொய்யாகும்
காதல் பொய்யாவதேது

புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒன்னு புடிச்சேன்
புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன்
புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒன்னு புடிச்சேன்
புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன்
பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்பம்பம்
பம்சிக்கு பம்சிக்கு பம்சபம்

No comments:

Post a Comment