இங்கு வந்தது செந்தமிழ்பாட்டு
வாசமுள்ள மல்லிகைப்போல் மனம்
தந்தது செந்தமிழ்பாட்டு
வண்ண வண்ண சொல்லெடுத்து
இங்கு வந்தது செந்தமிழ்பாட்டு
வாசமுள்ள மல்லிகைப்போல் மனம்
தந்தது செந்தமிழ்பாட்டு
ஊருசனம் எல்லாரும் விரும்பும் இசைதான் என்றும் வாழும்
மனிதஜாதி பாட்டொன்றினால்தான் கவலை மறக்கும் நாளும்
வண்ண வண்ண சொல்லெடுத்து
இங்கு வந்தது செந்தமிழ்பாட்டு
வாசமுள்ள மல்லிகைப்போல் மனம்
தந்தது செந்தமிழ்பாட்டு
மொழிகள் வெவ்வேறு பாடல் கொண்டாலும்
இனிமை ஒன்றானது
தமிழர் பண்பாட்டை கூறும் பாட்டுக்கு
தமிழே கண்போன்றது
மொழிகள் வெவ்வேறு பாடல் கொண்டாலும்
இனிமை ஒன்றானது
தமிழர் பண்பாட்டை கூறும் பாட்டுக்கு
தமிழே கண்போன்றது
மூங்கிலினை மோதிவரும் காற்றும் இசைதான் தராதோ..ஓ..
மூன்று தமிழ் வாசமும் நாட்டுப்புறப்பாடலில்
பொதுப்புனல் போலே வராதோ
வண்ண வண்ண சொல்லெடுத்து
இங்கு வந்தது செந்தமிழ்பாட்டு
வாசமுள்ள மல்லிகைப்போல் மனம்
தந்தது செந்தமிழ்பாட்டு
No comments:
Post a Comment