உன் கண்ணில் நீர் வழிந்தால் - Un Kannil Neer Valinthal Lyrics

உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவையன்றோ
கண்ணம்மா என் உயிர் நின்னதன்றோ

உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

உன்னை கரம் பிடித்தேன்
வாழ்க்கை ஒளிமயமானதடி
உன்னை கரம் பிடித்தேன்
வாழ்க்கை ஒளிமயமானதடி
பொன்னை மணந்ததனால்
சபையில் புகழும் வளர்ந்ததடி...

உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி


காலச் சுமைதாங்கி போலே
மார்பில் எனை தாங்கி
வீழும் கண்ணீர் துடைப்பாய்
அதில் என் விம்மல் தணியுமடி
ஆலம் விழுதுகள் போல்
உறவு ஆயிரம் வந்துமென்ன
ஆலம் விழுதுகள் போல்
உறவு ஆயிரம் வந்துமென்ன
வேரென நீ இருந்தாய்
அதில் நான் வீழ்ந்துவிடாதிருந்தேன்

உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி


முள்ளில் படுக்கையிட்டு
இமையை மூடவிடாதிருக்கும்
பிள்ளை குலமடியோ
என்னை பேதமை செய்ததடி
பேருக்கு பிள்ளை உண்டு
பேசும் பேச்சுக்கு சொந்தம் உண்டு
பேருக்கு பிள்ளை உண்டு
பேசும் பேச்சுக்கு சொந்தம் உண்டு
என் தேவையை யார் அறிவார்
என் தேவையை யார் அறிவார்
உன்னைப்போல் தெய்வம் ஒன்றே அறியும்

உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவையன்றோ
கண்ணம்மா என் உயிர் நின்னதன்றோ

உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில்.....

No comments:

Post a Comment