உன்னை தினம் தேடும் தலைவன் - Unnai Dinam Thedum Thalaivan Lyrics

மாலை கருக்கலிலே மையிருட்டு வேளையிலே
சோலை மலர்களுக்கு சோர்வு என்ன கால்களுக்கு
சோர்வு என்ன கால்களுக்கு...

உன்னை தினம் தேடும் தலைவன்
இன்று கவிபாடும் கலைஞன்
உன்னை தினம் தேடும் தலைவன்
கவிபாடும் கலைஞன்
காவல் வரும்போது கையில் விலங்கேது
கால்கள் நடமாடட்டும்

லலல லல லல்ல லால்லா

பூந்தோட்டம் தாங்காதம்மா
பூப்பறிக்க நாளாகுமா
பூவாடுது தோள் சேருது
கண்ணே கலக்கமா
கண்ணில் மயக்கமா

உன்னை தினம் தேடும் தலைவன்
இன்று கவிபாடும் கலைஞன்
உன்னை தினம் தேடும் தலைவன்
கவிபாடும் கலைஞன்
காவல் வரும்போது கையில் விலங்கேது
கால்கள் நடமாடட்டும்

லலல லல லல்ல லால்லா

ல..ல.. ல.. ல.. ல...


துணிவிருந்தால் பாட முடியும்
துணையிருந்தால் ஆட முடியும்
பாடும் மயிலானது
அரங்கில் துணை தேடுது
தோகை விரித்தாடம்மா
தோளில் சாய்ந்தாடம்மா
தோல்வி எனக்கேதம்மா
கேள்வி இனியேதம்மா

பூந்தோட்டம் தாங்காதம்மா
பூப்பறிக்க நாளாகுமா
பூவாடுது தோள் சேருது
கண்ணே கலக்கமா
கண்ணில் மயக்கமா


அன்றொரு நாள் பிறந்த நிலவு
முழுமதியாய் வளர்ந்த அழகு
இன்று பெண்ணானது
எதிரில் நின்றாடுது
மேகம் பகையானது
நிலவு சிறையானது
மன்னன் துணை வந்ததும்
சிறையும் சுகமானது

பூந்தோட்டம் தாங்காதம்மா
பூப்பறிக்க நாளாகுமா
பூவாடுது தோள் சேருது
கண்ணே கலக்கமா
கண்ணில் மயக்கமா

உன்னை தினம் தேடும் தலைவன்
இன்று கவிபாடும் கலைஞன்
உன்னை தினம் தேடும் தலைவன்
கவிபாடும் கலைஞன்
காவல் வரும்போது கையில் விலங்கேது
கால்கள் நடமாடட்டும்

லலல லல லல்ல லால்லா

பூந்தோட்டம் தாங்காதம்மா
பூப்பறிக்க நாளாகுமா
பூவாடுது தோள் சேருது
கண்ணே கலக்கமா
கண்ணில் மயக்கமா

ல.. ல.. லாலல்லா..
ல.. ல.. லாலல்லா..

2 comments:

  1. மிக அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. உங்கள் சேவைக்கு நன்றி

    ReplyDelete