ஒரு வஞ்சிக்கொடி இங்கே வருவா
கண்ணிரெண்டில் போர் தொடுப்பா
அந்த வெண்ணிலவ தோற்கடிப்பா
ஹே... ஆ...
கொஞ்ச நாள் பொறு தலைவா
ஒரு வஞ்சிக்கொடி இங்கே வருவா
கண்ணிரெண்டில் போர் தொடுப்பா
அந்த வெண்ணிலவ தோற்கடிப்பா
காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நான் அறியேன்
தென்னாடோ எந்நாடோ எந்த ஊரோ நான் அறியேன்
ராசாத்தி ராசாத்தி அட்ரெஸ் என்ன கண்டுபிடி
ராவோடு ராவாக அள்ளிவர நாங்க ரெடி
ஓ...ஓ...ஓ...
ஓ.. நேத்துக்கூட தூக்கத்தில
பாத்தேன் அந்த பூங்குயில
தூத்துக்குடி முத்தெடுத்து
கோர்த்துவச்ச மாலை போல
வேர்த்துக் கொட்டி கண்முழிச்சு பார்த்தா
அவ ஓடிப்போனா உச்சிமல காத்தா
சொப்பனத்தில் இப்படித்தான் எப்பவுமே வந்துநிப்பா
சொல்லப்போனா பேரழகி சொக்கத்தங்கம் போலிருப்பா
வத்திக்குச்சி இல்லாமலே காதல் தீய பத்தவப்பா
தேனாறு பாலாறு போல வந்தா கண்ணுக்குள்ள
தேசியக் கொடி போல குத்திவச்சேன் நெஞ்சுக்குள்ள
ராசாத்தி ராசாத்தி அட்ரெஸ் என்ன கண்டுபிடி
ராவோடு ராவாக அள்ளிவர நாங்க ரெடி
ம்..ம்..ம்..ம்..
பச்சைதாவணி பறக்க அங்கு தன்னையே அவன் மறக்க
வச்ச கண்ணு வாங்கலயே என் மாமன் கண்ணு தூங்கலயே
என்னோடுதான் கண்ணாமூச்சி
ஹை ஹை.. என்றும் ஆடும் பட்டாம்பூச்சி
கட்டாயம் என் காதல் ஆட்சி
கைகூடும் பார் தென்றல் சாட்சி
சிந்நனையில் வந்து வந்து போறா
அவ சந்தனத்தில் செஞ்சுவச்ச தேரா
என்னுடைய காதலிய ரொம்ப ரொம்ப பத்திரமா
எண்ணம் எங்கும் ஒட்டிவச்ச வண்ண வண்ண சித்திரமா
வேறொருத்தி வந்து தங்க என் மனசு சத்திரமா
ஆத்தாடி அம்மாடி என்ன சொல்ல கட்டழக
ஆவாரம்பூவாக வாய் வெடிச்ச மொட்டழக
ராசாத்தி ராசாத்தி அட்ரெஸ் என்ன கண்டுபிடி
ராவோடு ராவாக அள்ளிவர நாங்க ரெடி
கொஞ்ச நாள் பொறு தலைவா
ஒரு வஞ்சிக்கொடி இங்கே வருவா
கண்ணிரெண்டில் போர் தொடுப்பா
அந்த வெண்ணிலவ தோற்கடிப்பா
அட காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நான் அறியேன்
தென்னாடோ எந்நாடோ எந்த ஊரோ நான் அறியேன்
ராசாத்தி ராசாத்தி அட்ரெஸ் என்ன கண்டுபிடி
ராவோடு ராவாக அள்ளிவர நாங்க ரெடி
ஊத்துக்குளி அல்ல தூத்துக்குடி
ReplyDeleteநன்றி.. திருத்தப்பட்டது
DeleteVery nice song
ReplyDeleteகாமாட்டி அல்ல காமாச்சி
ReplyDeleteநன்றி திருத்தப்பட்டது
Deleteமிகவும் அழகானது
ReplyDeleteகண்ணுக்குள ஒட்டி வசசேன் நெஞ்சுக்குள்ள பொத்தி வசசேன் தித்திக் குற தேனபோல திகட்ட திகட்ட காதலிச்சேன் ராசாத்தி
ReplyDeleteAmazing lines
DeleteSuper
ReplyDeletesuper
ReplyDelete👍❤️
ReplyDelete