ஜனவரி நிலவே நலம்தானா - Janavari Nilave Nalam Thana Lyrics

ஜனவரி நிலவே நலம்தானா
ஜனகனின் மகளே சுகம்தானா
உன்னிடத்தில் என்னை அள்ளிக் கொடுத்தேன்
உன் பெயரை என் மனதில் விதைத்தேன்
என் உயிரை உன் நிழலில் தொலைத்தேன்
என்னென்னமோ பேச எண்ணித் தவித்தேன்

பொய் சொல்லாதே பொய் சொல்லாதே
ஓ... பொய் சொல்லாதே

ஜனவரி நிலவே நலம்தானா
ஜனகனின் மகளே சுகம்தானா
உன்னிடத்தில் என்னை அள்ளிக் கொடுத்தேன்
உன் பெயரை என் மனதில் விதைத்தேன்
என் உயிரை உன் நிழலில் தொலைத்தேன்
என்னென்னமோ பேச எண்ணித் தவித்தேன்

பொய் சொல்லாதே பொய் சொல்லாதே
ஓ... பொய் சொல்லாதே


உன்னைவிட ரதியும் அழகில்லை....பொய் சொல்லாதே
உன்னைவிட நதியும் அழகில்லை... பொய் சொல்லாதே
உன்னைவிட மலரும் அழகில்லை... பொய் சொல்லாதே
உன்னைவிட மயிலும் அழகில்லை... பொய் சொல்லாதே

ரதியும் அழகில்லை நதியும் அழகில்லை
மலரும் அழகில்லை மயிலும் அழகில்லை
பொய் சொல்லாதே

விண்ணும் அழகில்லை மண்ணும் அழகில்லை
மானும் அழகில்லை நானும் அழகில்லை
பொய் சொல்லாதே

ஜன்னலோரம் மின்னல் வந்து சிரிக்கும்
கண்ணுக்குள்ளே காதல் மழை அடிக்கும்
மூச்சு நின்று போனபின்பும் எனக்கும்
நெஞ்சில் உந்தன் ஞாபகமே இருக்கும்

பொய் சொல்லாதே பொய் சொல்லாதே
ஓ... பொய் சொல்லாதே


நேற்று வரை நெஞ்சினில் யாருமில்லை.. பொய் சொல்லாதே
இன்று முதல் இதயம் துடிக்கவில்லை.. பொய் சொல்லாதே
உனைக்காணும் வரை காதல் தெரியவில்லை.. பொய் சொல்லாதே
கண்டபின்பு கண்ணில் தூக்கமில்லை...பொய் சொல்லாதே

நிலவு நீயின்றி இரவும் எனக்கில்லை
பாவை நீயின்றி பகலும் எனக்கில்லை
பொய் சொல்லாதே

இன்னும் ஒரு கோடி ஜென்மம் வரும்போதும்
வஞ்சி நீயின்றி வாழ்க்கை எனக்கில்லை
பொய் சொல்லாதே

உன் பாதம் பட்ட பூமி இன்னும் ஜொலிக்கும்
நீ சூடிக்கொண்ட காகிதப்பூ மணக்கும்
உன் புன்னகையில் என் மனது திறக்கும்
உன் கண்ணசைவில் காதல் கொடி பறக்கும்

பொய் சொல்லாதே பொய் சொல்லாதே
ஓ... பொய் சொல்லாதே

ஜனவரி நிலவே நலம்தானா
ஜனகனின் மகளே சுகம்தானா
உன்னிடத்தில் என்னை அள்ளிக் கொடுத்தேன்
உன் பெயரை என் மனதில் விதைத்தேன்
என் உயிரை உன் நிழலில் தொலைத்தேன்
என்னென்னமோ பேச எண்ணித் தவித்தேன்

பொய் சொல்லாதே பொய் சொல்லாதே
ஓ... பொய் சொல்லாதே

No comments:

Post a Comment