என்னடி மீனாட்சி சொன்னது - Ennadi Meenakshi Sonnathu Lyrics

வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா
மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப் போல்
பாவை தெரியுதடி

என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை
காற்றோடு போயாச்சு
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை
காற்றோடு போயாச்சு


உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம்
அந்த மனத்தில் மறைந்திருக்கும் துளி விஷம்
உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம்
அந்த மனத்தில் மறைந்திருக்கும் துளி விஷம்
நெஞ்சம் துடித்திடும் நாழி
நீயோ அடுத்தவன் தோழி
என்னை மறந்துபோவதும் நியாயமோ
இந்த காதல் ஓவியத்தின் பாதை மாறியது
காலம் செய்து விட்ட மாயமோ
ஒரு மனம் உருகுது ஒரு மனம் விலகுது ஏய்...

என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை
காற்றோடு போயாச்சு


அன்பில் விளைந்த உறவு ஒரு தொடர்கதை
அந்த உறவு உனக்கு ஒரு சிறுகதை
அன்பில் விளைந்த உறவு ஒரு தொடர்கதை
அந்த உறவு உனக்கு ஒரு சிறுகதை
கண்ணன் தனிமையிலே பாட
ராதை தன் வழியே ஓட
இந்த பிரிவைத் தாங்குமோ என் மனம்
ஒரு நூலில் ஆடுகின்ற ஊஞ்சல் போன்றதடி
நாளும் மாறுகின்ற உன் மனம்
எனக்கின்று புரிந்தது எவளென்று தெரிந்தது ஏய்..

என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை
காற்றோடு போயாச்சு

வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா
மார்பு துடிக்குதடி

No comments:

Post a Comment