எளியோரை தாழ்த்தி வலியோரை - Eliyorai Thalthi Valiyorai Lyrics

எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்
உலகே உன் செயல் தான் மாறாதா

எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்
உலகே உன் செயல் தான் மாறாதா
எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்
உலகே உன் செயல் தான் மாறாதா

பரிதாபம் நெஞ்சில் சிறிதேனும் இல்லா
படுபாவியால் வாழ்வு பறிபோவதா
பரிதாபம் நெஞ்சில் சிறிதேனும் இல்லா
படுபாவியால் வாழ்வு பறிபோவதா


அறியாத நங்கை எனதாசை தங்கை
கதியேதும் காணாமல் மனம் நோவதோ
அறியாத நங்கை எனதாசை தங்கை
கதியேதும் காணாமல் மனம் நோவதோ

ஓ...எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்
உலகே உன் செயல் தான் மாறாதா


சிறகே இல்லாத கிளி போல ஏங்கி
உனைக் காணவே என் உளம் நாடுதே
சிறகே இல்லாத கிளி போல ஏங்கி
உனைக் காணவே என் உளம் நாடுதே

பறந்தோடி வந்துன் குறைதீர்க்க என்னை
சிறைக்காவல் இங்கே தடை போடுதே
பறந்தோடி வந்துன் குறைதீர்க்க என்னை
சிறைக்காவல் இங்கே தடை போடுதே

ஏ..எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்
உலகே உன் செயல் தான் மாறாதா
எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்
உலகே உன் செயல் தான் மாறாதா

1 comment:

  1. எந்த ஒரு பிழையும் இல்லை மிக அற்புதமான முறையில் நீங்கள் பதிவு செய்து இருக்கிறீர்களநன்றி மிக நல்ல முறையில் பாடியிருக்கிறார்கள் டி எம் சௌந்தரராஜன் பி லீலா

    ReplyDelete