கண்மணி உன் நினைவில் களைப்பாறுவேன்
அலைகளில் தத்தளித்தாலும்
அவள் நினைவில் முக்குளிப்பேனே
அடியே அமுதே இதுவே போதும்
நட்டநடு கடல்மீது நான் பாடும் பாட்டு
சிட்டு அவள் காதோரம் சேர்க்காதோ காத்து
நித்தம் உனைக் காணாது நித்திரையும் தோணாது
சித்திரமே முத்து ரதமே...
எட்டி எட்டி போனாலும் கெட்டு மனம் போகாது
அற்புதமே அன்னக்கிளியே...
பிரிந்தது உயிரல்ல உடல்தான்
விட்டுவிலகாது உயிர்க்காதலே
கரையிலே கன்னி துடித்தாளே
கட்டுமரம் மீதில் காளை தவித்தானே
இதுதான் காதலில் இடைவேளை
வந்தவர்கள் போவார்கள் போகாது காதல்
வங்கக்கடல் மீதாணை தேயாது காதல்
சுத்திவரும் புயலென்ன
கொட்டுகின்ற இடியென்ன
அன்பு விளக்கென்றும் எரியும்..
தெய்வத்துக்கு திரையென்ன
காதலுக்கு மறைவென்ன
உங்களுக்கு என்று புரியும்...
ஆற்றிலே இக்கரையில் நின்று
அக்கரைக்குத் தூதுவிட கூடலாம்
எண்ணத்தைச் சொல்ல நடு ஆழியில்
அன்னப்பறவையை நான் எங்கு தேடுவேன்
அடியே அமுதே வருந்தாதே
விட்டு இனிப்போகாது விடிவெள்ளி தூரம்
கட்டுமரம் கடலாடி கரையேறும் நேரம்
உப்பெடுக்கும் நேரம் ஒன்று
முத்தெடுக்கும் நேரம் இன்று
சித்திரமே செப்பு குடமே
கட்டும் உண்டு காவலும் உண்டு
நம்மை என்ன செய்யும் இன்று
நித்திலமே முத்துரதமே
நட்டநடு கடல்மீது நான் பாடும் பாட்டு
சிட்டு அவள் காதோரம் சேர்க்காதோ காத்து
நித்தம் உனைக் காணாது நித்திரையும் தோணாது
சித்திரமே முத்து ரதமே...
எட்டி எட்டி போனாலும் கெட்டு மனம் போகாது
அற்புதமே அன்னக்கிளியே...
No comments:
Post a Comment