நீ பொட்டு வச்ச தங்கக்கொடம் - Nee Pottu Vacha Thanga Lyrics

நீ பொட்டு வச்ச தங்கக்கொடம்
ஊருக்கு நீ மகுடம்
நாங்க தொட்டு தொட்டு இழுத்துவரும்
ஜோரான தங்கரதம்

அட நீ தங்கக்கட்டி சிங்கக்குட்டி
தனத்தான் தனத்தான் தனத்தான் தனத்தான்

இனி உன் பேரச்சொல்லும் பட்டிதொட்டி
தனத்தான் தனத்தான் தனத்தான் தனத்தான்

நீ பொட்டு வச்ச தங்கக்கொடம்
ஊருக்கு நீ மகுடம்
நாங்க தொட்டு தொட்டு இழுத்துவரும்
ஜோரான தங்கரதம்


பெத்தவங்க செஞ்ச புண்ணியந்தான்
பிள்ளைகள வந்து சேருமய்யா
உத்தமரு ரொம்ப ஒசந்தவரு
என்ன பெத்தவரு இந்த பெரியவரு
அவரப்போல இங்காருமில்ல
அலசிப்பாரு நீ ஒலகத்துல

அண்ணனுன்னா அண்ணனய்யா
அன்பு உள்ள மன்னனய்யா
அண்ணனுன்னா அண்ணனய்யா
அன்பு உள்ள மன்னனய்யா
ஊரெல்லாம் கொண்டாடும் உன் பேரய்யா

அட நீ தங்கக்கட்டி சிங்கக்குட்டி
தனத்தான் தனத்தான் தனத்தான் தனத்தான்

நீ பொட்டு வச்ச தங்கக்கொடம்
ஊருக்கு நீ மகுடம்
நாங்க தொட்டு தொட்டு இழுத்துவரும்
ஜோரான தங்கரதம்


வெற்றியெல்லாம் உங்க கூட வரும்
நீங்க போற எடம் நல்ல பெருமை பெறும்
சத்தியத்த தெனம் காத்து வரும்
அந்த சாமி தரும் பல நூறு வரம்
மனசு எல்லாமே கோவிலய்யா
அதுல நீதானே சாமியய்யா

நல்லவன் தான் இவன் வல்லவன் தான்
நல்லதெல்லாம் இங்கே சொல்ல வந்தான்
நல்லவன் தான் இவன் வல்லவன் தான்
நல்லதெல்லாம் இங்கே சொல்ல வந்தான்
நாடெல்லாம் நாடெல்லாம் வெல்ல வந்தான்

அட நீ தங்கக்கட்டி சிங்கக்குட்டி
தனத்தான் தனத்தான் தனத்தான் தனத்தான்

நீ பொட்டு வச்ச தங்கக்கொடம்
ஊருக்கு நீ மகுடம்
நாங்க தொட்டு தொட்டு இழுத்துவரும்
ஜோரான தங்கரதம்

அட நீ தங்கக்கட்டி சிங்கக்குட்டி
தனத்தான் தனத்தான் தனத்தான் தனத்தான்

இனி உன் பேரச்சொல்லும் பட்டிதொட்டி
தனத்தான் தனத்தான் தனத்தான் தனத்தான்

தந்தானனா தந்தானனா தந்தான தானனனா
தந்தானனா தந்தானனா தந்தான தானனனா

No comments:

Post a Comment