போயும் போயும் மனிதனுக்கிந்த - Poyum Poyum Manithanukinda Lyrics

போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே
இறைவன் புத்தியைக் கொடுத்தானே

அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
பூமியைக் கெடுத்தானே
மனிதன் பூமியைக் கெடுத்தானே

போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே


கண்கள் இரண்டில் அருள் இருக்கும்
சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும்
கண்கள் இரண்டில் அருள் இருக்கும்
சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும்
உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும்
அது உடன்பிறந்தோரையும் கருவறுக்கும்

பாயும் புலியின் கொடுமையை இறைவன்
பார்வையில் வைத்தானே
புலியின் பார்வையில் வைத்தானே

இந்த பாழும் மனிதன் குணங்களை மட்டும்
போர்வையில் மறைத்தானே
இதயப் போர்வையில் மறைத்தானே

போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே


கைகளைத் தோளில் போடுகிறான்
அதைக் கருணை என்றவன் கூறுகிறான்
கைகளைத் தோளில் போடுகிறான்
அதைக் கருணை என்றவன் கூறுகிறான்
பைகளில் எதையோ தேடுகிறான்
கையில் பட்டதை எடுத்து ஓடுகிறான்

போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே
இறைவன் புத்தியைக் கொடுத்தானே

அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
பூமியைக் கெடுத்தானே
மனிதன் பூமியைக் கெடுத்தானே

போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே

No comments:

Post a Comment