தாமரை பூவுக்கும் தண்ணிக்கும் - Thamarai poovukkum thannikkum lyrics

தாமரை பூவுக்கும் தண்ணிக்கும்
என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
மாமன அள்ளி நீ தாவணி போட்டுக்க
மச்சினி யாருமில்ல
கம்பங்கூழில் போட்ட உப்பு
கஞ்சியெல்லாம் சேர்தல் போல
கண்டபோதே இந்த மூஞ்சி
நெறஞ்சு போச்சி நெஞ்சுக்குள்ள
நாக்குல மூக்கைய ஏஹே
தொட்டவன் நானடி
பார்வையால் உசுரயே ஓஹோ
தொட்டவ நீயடி

தாமரை பூவுக்கும் தண்ணிக்கும்
என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
மாமன அள்ளி நீ தாவணி போட்டுக்க
மச்சினி யாருமில்ல



ஐயாரெட்டு நெல்லப்போல
அவசரமா சமஞ்ச
அயித்தமக பஞ்சத்துக்கு
ஆதாரமா அமஞ்ச
குட்டிப் போட்ட பூனை போல
காலச் சுத்தி கொலஞ்ச
பாவமின்னு நீவி விட்டா
பல்லு போட துணிஞ்ச
சொந்தக்காரன் நான் தானே
தொட்டுப் பாக்கக் கூடாதா
கன்னம் தொடும் கை ரெண்டும்
கீழே கொஞ்சம் நீளாதா
இந்த நாட்டில் தீண்டாமை தான்
இன்னும் உள்ளதா
வயசுக்கு வந்த பூ ஓஹோ
ஆசைய பேசுமா
வண்டுக்கும் பூவுக்கும் ஓஹோ
சண்டையா சத்தமா

தாமரை பூவுக்கும் தண்ணிக்கும்
என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
மாமன அள்ளி நான் தாவணி போட்டுக்க
மாலையும் சூடவில்ல



கம்மாக்குள்ள ஒத்த மரம்
அங்கே போவோம் மாமா
கம்மாத் தண்ணி வத்தும்போது
திரும்பிருவோம் மாமா
நீச்சல் எல்லாம் சொல்லித் தாறேன்
நீயும் கொஞ்சம் வாம்மா
அங்கே இங்கே கையி படும்
சொல்லிப் புட்டேன் ஆமா
நிலாக் கறைய அழிச்சாலும்
ஒன்ன திருத்த முடியாது
பொரட்டி போட்டு அடிக்காம
ஆமை ஓடு ஒடையாது
போகப் போக மாமனுக்கு
புத்தி மாறுது
கிள்ளவா அள்ளவா ஓஹோ
சொல்லடி செய்யலாம்
வேட்டியா சேலையா ஓஹோ
பட்டிமன்றம் வைக்கலாம்

தாமரை பூவுக்கும் தண்ணிக்கும்
என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
மாமன அள்ளி நீ தாவணி போட்டுக்க
மச்சினி யாருமில்ல

ஒளியிலே தெரிவது தேவதையா - Oliyile therivathu thevathayaa lyrics

ஒளியிலே தெரிவது தேவதையா
உயிரிலே கலந்தது நீயில்லையா
இது நெசமா நெசமில்லையா
நெனவுக்கு தெரியலையா
கனவிலே நடக்குதா
கண்களும் காண்கிறதா காண்கிறதா
ஒளியிலே தெரிவது தேவதையா 
தேவதையா தேவதையா



சின்ன மனசுக்கு வெளங்கவில்லையே
நடப்பது என்னன்னு
என்ன எண்ணியும் புரியவில்லையே
நடந்தது என்னன்னு
கோயில் மணிய யாரு அடிக்கிறா
தூண்டா வெளக்க யாரு ஏத்துறா
ஒரு போதும் அணையாம
என்றும் ஒளிரணும்
ஒளியிலே தெரிவது நீயில்லையா
நீயில்லையா நீயில்லையா



புத்தம்புதியதோர் பொன்னு சிலையொன்னு
குளிக்குது மஞ்சளிலே
பூவப்போல ஓர் சின்ன மேனியும்
கலந்தது பூவுக்குள்ளே
அறியா வயசு கேள்வி எழுப்புது
நடந்தா தெரியும் எழுதி வச்சது
எழுதியத படிச்சாலும் எதுவும் புரியல
ஒளியிலே தெரிவது நீயில்லையா
உயிரிலே கலந்தது நீயில்லையா

இது நெசமா நெசமில்லையா
நெனவுக்கு தெரியலையா
கனவிலே நடக்குதா
கண்களும் காண்கிறதா காண்கிறதா
ஒளியிலே தெரிவது தேவதையா
தேவதையா தேவதையா

பார்வை கற்பூர தீபமா ஶ்ரீவள்ளி - Paarva karpoora deepamaa lyrics

நான் பாக்குறேன் பாக்குறேன்
பாக்காம நீ எங்க போற
நீ பாக்குற பாக்குற
எல்லாம் பாக்குற என்னத் தவிர
காணாத தெய்வத்த
கண் மூடாம பாக்குறியே
கண் முன்னே நான் இருந்தும்
கடந்து போகுறியே

ஏ.. பார்வை கற்பூர தீபமா ஶ்ரீவள்ளி
பேச்சே கல்யாணி ராகமா.. ஆ...
பார்வை கற்பூர தீபமா ஶ்ரீவள்ளி
வாசம் கஸ்தூரி வாசமா.. ஆ...



கூட்டத்துல போனா 
நான் நடப்பேன் முன்ன
நீ நடந்தா மட்டும்
வருவேன் உன் பின்னே
எவனயுமே பாத்து 
தல குனிஞ்சது இல்ல
உன் கொலுச பாக்க தான்
தல குனிஞ்சேன்டி புள்ள
பாதகத்தி உன்ன நான்
பாக்க சுத்தி வந்தாலும்
பாத்திடாம போறியே
பாவம் பாக்காம

பார்வை கற்பூர தீபமா ஶ்ரீவள்ளி
பேச்சே கல்யாணி ராகமா.. ஆ..
பார்வை கற்பூர தீபமா ஶ்ரீவள்ளி
வாசம் கஸ்தூரி வாசமா.. ஆ...



நீ ஒன்னும் பெரிய
பேரழகி இல்ல
தேராத கூட்டத்தில்
அழகா தெரியுறடி புள்ள
பதினெட்டு வயச
தொட்டாலே போதும்
நீ இல்ல எல்லாப் பொண்ணும்
தினுசா தான் தோணும்
குத்து கல்லுக்கு சேல கட்டி
விட்டா கூட சிட்டா தெரியும்
கொத்துப் பூவ கூந்தலில் வச்சா
எந்த பொண்ணும் போதை ஏத்தும்

ஆனா.. பார்வை கற்பூர தீபமா ஶ்ரீவள்ளி
பேச்சே கல்யாணி ராகமா ஆ...
பார்வை கற்பூர தீபமா ஶ்ரீவள்ளி
வாசம் கஸ்தூரி வாசமா.. ஆ...

அடிக்குது குளிரு துடிக்குது தளிரு - Adikuthu kuliru thudikuthu thaliru lyrics

அடிக்குது குளிரு... ஆ... துடிக்குது தளிரு
ஆ... அடிக்குது குளிரு... துடிக்குது தளிரு
முல்லைப் பூங்கொடி கொம்பைத் தேடுது
கொம்பைப் போல உன் அன்பைத் தேடுது
வா கட்டபொம்மன் பேரா
கட்டழகு வீரா
கிட்ட வந்து நேரா
கட்டிக் கொள்ளு ஜோரா

அடிக்குது குளிரு... ஆ... அது சரி அது சரி
துடிக்குது தளிரு.. இத பாரு டா
முல்லைப் பூங்கொடி கொம்பைத் தேடுது
அப்டியா..
கொம்பைப் போல உன் அன்பைத் தேடுது
ஓஹோ...
வா கட்டபொம்மன் பேரா
கட்டழகு வீரா.. எப்டி எப்டி
கிட்ட வந்து நேரா
கட்டிக் கொள்ளு ஜோரா 



அள்ளிச் சேர்க்க ஆசை இல்லையோ
ஆடி ரதம் அழைக்குது.. ஆய்
கிள்ளிப் பார்க்க எண்ணம் இல்லையோ
ஆலிலை தவிக்குது... ஓஹோ
முத்தம் நூறு கேட்டு வாங்கவே
நாணம் எனை தடுக்குது.. அட்ரா சக்க
பித்தம் ஏறி தூண்டில் மீனென
நூலிடைத் துடிக்குது... இதெப்டி இருக்கு

சுகமான கட்டில் நாடகம்
நீயும் நானும் ஆடலாம்.. ஆம்அ..
வெள்ளி வானில் தோன்றும் மட்டிலும்
வெட்கம் இன்றி கூடலாம்.. அப்டி போடு
உன்னைப் பார்த்து நான்
சொக்கிப் போகிறேன்

வா கட்டபொம்மன் பேரா
கட்டிக் கொள்ளு ஜோரா 
அடிக்குது குளிரு... ஆ... அது சரி அது சரி
துடிக்குது தளிரு.. அது ரொம்ப சரி ரொம்ப சரி



சொன்னால் போதும் நூறு மாப்பிள்ளை
மாலையிட கிடைக்கலாம்
இங்கே வந்து காலை மாலை தான்
சேலையை துவைக்கலாம்
என்னைப் போல நல்ல மாப்பிள்ளை
வாய்ப்பதொரு அதிசயம்
என்னை நீயும் ஏற்றுக் கொண்டது
பாவை என் பாக்கியம்

நெடு நாட்கள் ஏங்கும் ஏக்கம் தான்
இந்நாள் இங்கு தீர்ந்தது
இல்லையா பின்ன..
மங்கை செய்த பூர்வ புண்ணியம்
மன்னன் வந்து சேர்ந்தது
போச்சுடா...
உன்னைப் பார்த்து நான்
சொக்கிப் போகிறேன்

வா கட்டபொம்மன் பேரா
கட்டிக் கொள்ளு ஜோரா 

அடிக்குது குளிரு... ஆ... 
என்ன மடக்குது தளிரு.. ஆஆஆ...
முல்லைப் பூங்கொடி... ம்...
கொம்பைத் தேடுது.. ஆ..
கொம்பைப் போல என்..
அன்பைத் தேடுது.. வாரே வாரே வா..
கட்டித் தங்க மேனி
கட்டழகு ராணி..
கொட்டிப் பார்த்த தேனி
கட்டில் பக்கம் வா நீ..
அடிக்குது குளிரு... 

கண்டாரே காணாதத கண்டாரே - Kandaare kaanaathatha kandaare lyrics - Siddhar song lyrics

கண்டாரே காணாதத கண்டாரே
ஹே கண்டாரே காணாதத கண்டாரே
ஒரு வீடு ஒரு கூடு அட எதுவும் கிடையாதே
சாக்காடு பிடிமூப்பு அத எல்லாம் கடந்தாரே
கண்டாரே கைலாசம் கண்டாரே
கூத்தாடும் சடையாண்டி அத குறியா கொண்டாரே
காத்தோடு கதை பேசி சிவஞானம் கண்டாரே

பத்தோட ஓர் எட்டு... ஓ...
பத்தோட பதினெட்டு சித்தர்கள் விளையாட்டு
எத்தனை பேருக்கு வந்தாலும் தெரியாது
சித்தங்க போக்கு சிவம் போக்கு என சொன்னாரே
பித்தங்க போக மருந்தாக தினம் வந்தாரே
வட காசி தென் காசி வழிதோறும் சித்தரடி
அடி ஆத்தி முடிஞ்சாக்கா அடையாளம் கண்டுபிடி



கண்டாரே காணாதத கண்டாரே
ஹே கண்டாரே காணாதத கண்டாரே
ஒரு வீடு ஒரு கூடு அட எதுவும் கிடையாதே
சாக்காடு பிடிமூப்பு அத எல்லாம் கடந்தாரே
கண்டாரே கைலாசம் கண்டாரே
கூத்தாடும் சடையாண்டி அத குறியா கொண்டாரே
காத்தோடு கதை பேசி சிவஞானம் கண்டாரே

அவனுக்கென்ன தூங்கி விட்டான் - Avanukenna thoongi vittaan lrics

அவனுக்கென்ன தூங்கி விட்டான்
அகப்பட்டவன் நானல்லவா
ஐயிரண்டு மாதத்திலே
கைகளிலே போட்டு விட்டான்
அவனுக்கென்ன தூங்கி விட்டான்
அகப்பட்டவன் நானல்லவா
ஐயிரண்டு மாதத்திலே
கைகளிலே போட்டு விட்டான்
கைகளிலே போட்டு விட்டான்

இவனுக்கென்று எதை கொடுத்தான்
எலும்புடனே சதை கொடுத்தான்
இவனுக்கென்று எதை கொடுத்தான்
எலும்புடனே சதை கொடுத்தான்
இதயத்தையும் கொடுத்துவிட்டு
இறக்கும் வரை துடிக்க விட்டான்
இறக்கும் வரை துடிக்க விட்டான்

அவனுக்கென்ன தூங்கி விட்டான்
அகப்பட்டவன் நானல்லவா
ஐயிரண்டு மாதத்திலே
கைகளிலே போட்டு விட்டான்



யானையிடம் நன்றி வைத்தான்
காக்கையிடம் உறவு வைத்தான்
மான்களுக்கும் மானம் வைத்தான்
மனிதனுக்கு என்ன வைத்தான்
மனிதனுக்கு என்ன வைத்தான்

அவனுக்கென்ன தூங்கி விட்டான்
அகப்பட்டவன் நானல்லவா
ஐயிரண்டு மாதத்திலே
கைகளிலே போட்டு விட்டான்
கைகளிலே போட்டு விட்டான்

வானிலுள்ள தேவர்களை 
வாழ வைக்க விஷம் குடித்தான்
வானிலுள்ள தேவர்களை 
வாழ வைக்க விஷம் குடித்தான்
நாட்டிலுள்ள விஷத்தையெல்லாம்
நான் குடிக்க விட்டுவிட்டான்
நான் குடிக்க விட்டுவிட்டான்

அவனுக்கென்ன தூங்கி விட்டான்
அகப்பட்டவன் நானல்லவா
ஐயிரண்டு மாதத்திலே
கைகளிலே போட்டு விட்டான்
கைகளிலே போட்டு விட்டான்

சாதி மல்லி பூச்சரமே - Saathi malli poocharame lyrics

சாதி மல்லி பூச்சரமே
சாதி மல்லி பூச்சரமே
சங்கத் தமிழ் பாச்சரமே
சாதி மல்லி பூச்சரமே
சங்கத் தமிழ் பாச்சரமே
ஆசையின்னா ஆசையடி
அவ்வளவு ஆசையடி

என்னன்னு முன்னே வந்து
கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ
காதலில் உண்டாகும் சுகம் 
இப்போது மறப்போம்
கன்னித் தமிழ் தொண்டாற்று
அதை முன்னேற்று 
பின்பு கட்டிலில் தாலாட்டு

சாதி மல்லி பூச்சரமே
சங்கத் தமிழ் பாச்சரமே
ஆசையின்னா ஆசையடி
அவ்வளவு ஆசையடி



எனது வீடு எனது வாழ்வு
என்று வாழ்வது வாழ்க்கையா
இருக்கும் நாலு சுவருக்குள்ளே
வாழ நீ ஒரு கைதியா
தேசம் வேறல்ல தாயும் வேறல்ல
ஒன்று தான்
தாயைக் காப்பதும் நாட்டைக் காப்பதும் 
ஒன்று தான்
கடுகு போல் உன் மனம் இருக்க கூடாது
கடலை போல் விரிந்ததாய் இருக்கட்டும்
உன்னைப் போல் எல்லோரும் என எண்ணோனும்
அதில் இன்பத்தைத் தேடோனும்

சாதி மல்லி பூச்சரமே
சங்கத் தமிழ் பாச்சரமே
ஆசையின்னா ஆசையடி
அவ்வளவு ஆசையடி



உலகமெல்லாம் உண்ணும் போது
நாமும் சாப்பிட எண்ணுவோம்
உலகமெல்லாம் சிரிக்கும் போது
நாமும் புன்னகை சிந்துவோம்
யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி
பாடும் நம் தமிழ் பாட்டன் சொன்னது கண்மணி
யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி
பாடும் நம் தமிழ் பாட்டன் சொன்னது கண்மணி
படிக்க தான் பாடலா நெனச்சு பாத்தோமா
படிச்சத நெனச்சு நாம் நடக்க தான்
கேட்டுக்கோ ராசாத்தி தமிழ் நாடாச்சு
இந்த நாட்டுக்கு நாமாச்சு

சாதி மல்லி பூச்சரமே
சங்கத் தமிழ் பாச்சரமே
ஆசையின்னா ஆசையடி
அவ்வளவு ஆசையடி

என்னன்னு முன்னே வந்து
கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ
காதலில் உண்டாகும் சுகம் 
இப்போது மறப்போம்
கன்னித் தமிழ் தொண்டாற்று
அதை முன்னேற்று 
பின்பு கட்டிலில் தாலாட்டு

ஶ்ரீ ரங்க ரங்க நாதனின் பாதம் - Sri ranga ranga naathanin lyrics

ஶ்ரீ ரங்க ரங்க நாதனின் பாதம்
வந்தனம் செய்யடி
ஶ்ரீ தேவி ரங்க நாயகி நாமம்
சந்ததம் சொல்லடி
ஶ்ரீ ரங்க ரங்க நாதனின் பாதம்
வந்தனம் செய்யடி
ஶ்ரீ தேவி ரங்க நாயகி நாமம்
சந்ததம் சொல்லடி

இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி
தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி
தெய்வ பாசுரம் பாடடி

ஶ்ரீ ரங்க ரங்க நாதனின் பாதம்
வந்தனம் செய்யடி
ஶ்ரீ தேவி ரங்க நாயகி நாமம்
சந்ததம் சொல்லடி



கன்னடம் தாய் வீடு என்றிருந்தாலும்
கன்னி உன் மறுவீடு தென்னகம் ஆகும்
கங்கையில் மேலான காவிரி தீர்த்தம்
மங்கல நீராட முன் வினை தீர்க்கும்
நீர் வண்ணம் எங்கும் மேவிட
நஞ்சை புஞ்சைகள் பாரடி
ஊர் வண்ணம் என்ன கூறுவேன்
தெய்வலோகமே தானடி
வேறெங்கு சென்ற போதிலும்
இந்த இன்பங்கள் ஏதடி

ஶ்ரீ ரங்க ரங்க நாதனின் பாதம்
வந்தனம் செய்யடி
ஶ்ரீ ரங்க ரங்க நாதனின் பாதம்
வந்தனம் செய்யடி
ஶ்ரீ தேவி ரங்க நாயகி நாமம்
சந்ததம் சொல்லடி

பாட்டாலே புத்தி சொன்னார் - Paataale buthi sonnaar lyrics

பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடு பட்டேன்
அந்த பாட்டுக்கள் பல விதம் தான்
பாட்டுக்கு நான் பாடு பட்டேன்
அந்த பாட்டுக்கள் பல விதம் தான்

பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடு பட்டேன்
அந்த பாட்டுக்கள் பல விதம் தான்



காளையர்கள் காதல் கன்னியரை
கவர்ந்திட பாடல் கேட்டார்கள்
ஏழைகளும் ஏவல் அடிமைகளாய்
இருப்பதை பாடச் சொன்னார்கள்
கதவோரம் கேட்டிடும் கட்டில் பாடலின்
மெட்டு போடச் சொன்னார்கள்
தெருவோரம் சேர்ந்திட திருவாசகம்
தேவாரம் கேட்டார்கள்
நான் படும் பாடுகள் அந்த ஏடுகள்
அதில் எழுதினாலும் முடிந்திடாது

பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடு பட்டேன்
அந்த பாட்டுக்கள் பல விதம் தான்



பூஜையில் குத்து விளக்கை ஏற்ற வைத்து
அது தான் நல்லதென்றார்கள்
படத்தில் முதல் பாடலை பாட வைத்து
அது நல்ல ராசி என்றார்கள்
எத்தனையோ பாடுகளை அதை பாடல்களாய் 
நான் வித்தேன் இது வரையில்
அத்தனையும் நல்லவையா அவை கெட்டவையா
என அறியேன் உண்மையிலே
எனக்கு தான் தலைவர்கள் என் ரசிகர்கள்
அவர் விரும்பும் வரையில் விருந்து படைப்பேன்

பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடு பட்டேன்
அந்த பாட்டுக்கள் பல விதம் தான்

பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடு பட்டேன்
அந்த பாட்டுக்கள் பல விதம் தான்

மெட்டு தேடி தவிக்குது ஒரு பாட்டு - Mettu thedi thavikuthu oru paatu lyrics

மெட்டு தேடி தவிக்குது ஒரு பாட்டு
அந்த பாட்டுக்குள்ளே துடிக்குது ஒரு மெட்டு
மெட்டு தேடி தவிக்குது ஒரு பாட்டு
அந்த பாட்டுக்குள்ளே துடிக்குது ஒரு மெட்டு
அத கண்ணதாசன் கண்டு சொன்னா ரசிக்காதா
இல்ல விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா
மெஸ்ஸூ விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா

அத கண்ணதாசன் கண்டு சொன்னா ரசிக்காதா
மெஸ்ஸூ விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா
அத கண்ணதாசன் கண்டு சொன்னா ரசிக்காதா
மெஸ்ஸூ விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா



தங்கள் காதலை வெளியே சொல்ல
நெஞ்சில் தைரியம் இல்லை பலருக்கு
நீ இருட்டில் நின்று கண் அடித்தால் ஆஹா
நீ இருட்டில் நின்று கண் அடித்தால்
அது எப்படி தெரியும் அவளுக்கு
வண்டு வந்து சொல்லும் வரைக்கும்
தன் வயசு தெரியாது மலருக்கு
வண்டு வந்து சொல்லும் வரைக்கும்
தன் வயசு தெரியாது மலருக்கு
நீ உந்தன் நெஞ்சை தேங்காய் போல
உடைத்து காட்டப்பா அவளுக்கு
ஆஹா மெல்ல மெல்ல மிச்சம் எல்லாம்
சொல்லித் தாறேன் டா
நான் மெஸ்ஸூ கிஸ்ஸூ 
ரெண்டும் கண்ட விஸ்வநாதன் டா
நான் மெஸ்ஸூ கிஸ்ஸூ 
ரெண்டும் கண்ட விஸ்வநாதன் டா

அத கண்ணதாசன் கண்டு சொன்னா ரசிக்காதா
மெஸ்ஸூ விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா
அத கண்ணதாசன் கண்டு சொன்னா ரசிக்காதா
மெஸ்ஸூ விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா



கனவில் மட்டும் கட்டி அணைத்தால்
காதல் வருமா கன்னிக்கு
கவி கண்ணதாசன் போல் தண்ணி அடித்தால்
கவிதை வருமா கழுதைக்கு
கனவில் மட்டும் கட்டி அணைத்தால்
காதல் வருமா கன்னிக்கு
கவி கண்ணதாசன் போல் தண்ணி அடித்தால்
கவிதை வருமா கழுதைக்கு
விரும்பிய காதலி கிடைக்காவிட்டால் 
மீசை வளர்த்ததுக்கு என்னத்துக்கு
சம்பிரதாயம் குறுக்கே வந்தால்
சாய்த்து போடப்பா அடுப்புக்கு
ஆஹா மெல்ல மெல்ல மிச்சம் எல்லாம்
சொல்லித் தாறேன் டா
நான் மெஸ்ஸூ கிஸ்ஸூ 
ரெண்டும் கண்ட விஸ்வநாதன் டா
நான் மெஸ்ஸூ கிஸ்ஸூ 
ரெண்டும் கண்ட விஸ்வநாதன் டா

மெட்டு தேடி தவிக்குது ஒரு பாட்டு
அந்த பாட்டுக்குள்ளே துடிக்குது ஒரு மெட்டு
அத கண்ணதாசன் கண்டு சொன்னா ரசிக்காதா
இல்ல விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா
மெஸ்ஸூ விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா

அத கண்ணதாசன் கண்டு சொன்னா ரசிக்காதா
மெஸ்ஸூ விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா
அத கண்ணதாசன் கண்டு சொன்னா ரசிக்காதா
மெஸ்ஸூ விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா

என்றும் புதியது பாடலென்றும் புதியது - Endrum puthiyathu paadal endrum puthiyathu song lyrics

என்றும் புதியது 
பாடலென்றும் புதியது
பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது
முருகா உன்னைப் பாடும் 
பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது
முருகா உன்னைப் பாடும் 
பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது

அருள் நிறைந்த புலவர் நெஞ்சில்
அமுதம் என்னும் தமிழ் கொடுத்த
பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது
அருள் நிறைந்த புலவர் நெஞ்சில்
அமுதம் என்னும் தமிழ் கொடுத்த
பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது



முருகன் என்ற பெயரில் வந்த அழகே
என்றும் புதியது 
முருகன் என்ற பெயரில் வந்த அழகே
என்றும் புதியது 
முறுவல் காட்டும் குமரன் கொண்ட இளமை 
என்றும் புதியது 
முறுவல் காட்டும் குமரன் கொண்ட இளமை 
என்றும் புதியது 

உன்னைப் பெற்ற அன்னையர்க்கு
உனது லீலை புதியது
உன்னைப் பெற்ற அன்னையர்க்கு
உனது லீலை புதியது
உனது தந்தை இறைவனுக்கோ 
வேலும் மயிலும் 
உனது தந்தை இறைவனுக்கோ 
வேலும் மயிலும் புதியது
முருகா உன்னைப் பாடும் 
பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது



திங்களுக்கும் ஞாயிறுக்கும்
கந்தன் மேனி புதியது
திங்களுக்கும் ஞாயிறுக்கும்
கந்தன் மேனி புதியது
சேர்ந்தவர்க்கு வழங்கும்
கந்தன் கருணை புதியது
சேர்ந்தவர்க்கு வழங்கும்
கந்தன் கருணை புதியது
அறிவில் அரியது
அருளில் பெரியது
அறிவில் அரியது
அருளில் பெரியது
அள்ளி அள்ளி உண்ண உண்ண
உனது தமிழ் இனியது
அள்ளி அள்ளி உண்ண உண்ண
உனது தமிழ் இனியது

முதலில் முடிவது முடிவில் முதலது
முதலில் முடிவது முடிவில் முதலது
மூன்று காலம் பேர்க்கு
ஆறுமுகம் புதியது
முருகா உன்னைப் பாடும் 
பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது

என்னை விட்டு உயிர் போனாலும் உன்னை விட்டு - Ennai vittu uyir ponaalum unnai vittu lyrics

காதல் என்றால் அர்த்தம் என்ன
நீயும் நானும் தான்
யார் என்ன சொன்னால் கலங்காத
உன்ன நம்புறேன்டி நான்

என்னை விட்டு உயிர் போனாலும்
உன்னை விட்டு நான் போமாட்டேன்
சத்தியமா சொல்லுறேன்டி
உன்னை யாருக்கும் தர மாட்டேன்

நீ இல்லா நேரம் அது நிலவே இல்லா வானமே
இரண்டும் இருண்டு போகும்
சிறு வெளிச்சம் தேடி ஓடுமே
உன்னில் தொலைந்த என்னை
உடனே மீட்டுக் கொடு
இல்லை என்னுள் நீயும் அழகாய்
உடனே தொலைந்து விடு
ஓ..ஓ..ஓ...

என்னை விட்டு உயிர் போனாலும்
உன்னை விட்டு நான் போமாட்டேன்
ஜென்மம் பல எடுத்தாலும்
உன்னை யாருக்கும் தர மாட்டேன் 

என்னை விட்டு உயிர் போனாலும்
உன்னை விட்டு நான் போமாட்டேன்
சத்தியமா சொல்லுறேன்டி
உன்னை யாருக்கும் தர மாட்டேன்



கடல் மண் போல் நீ
என்னை உதறி சென்றாலுமே வருவேன்
அலைகள் போலே
நான் திரும்ப திரும்ப உன் பின்னே வருவேன்
உன்னை தேடி அலைகின்றேனே
எங்கே சென்றாயோ
சிறு பிள்ளை போலே அழுகின்றேனே
திருப்பி வருவாயோ
விழியோரம் வழியும் கண்ணீருக்கு
வலிகள் ஆயிரம்
அந்த வலிகளை துடைக்கப் பிறந்தவன் நான்டி
நம்புடி நீயும்
உன்னை நம்புறேன் நானும்

என்னை விட்டு உயிர் போனாலும்
உன்னை விட்டு நான் போமாட்டேன்
ஜென்மம் பல எடுத்தாலும்
உன்னை யாருக்கும் தர மாட்டேன் 

என்னை விட்டு உயிர் போனாலும்
உன்னை விட்டு நான் போமாட்டேன்
சத்தியமா சொல்லுறேன்டி
உன்னை யாருக்கும் தர மாட்டேன்

அன்பே வா அருகிலே என் வாசல் வழியிலே - Anbe vaa arugile en vaasal valiyile lyrics

அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே
உல்லாச மாளிகை மாளிகை
எங்கே என் தேவதை தேவதை
நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன்
நாள்தோறும் முள்ளின் மீது தூங்கினேன்

அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே



இத்தனை நாள் வாய் மொழிந்த
சித்திரமே இப்பொழுது
மௌனம் ஏன் தானோ
மின்னலென மின்னிவிட்டு
கண்மறைவாய் சென்றுவிட்ட
மாயம் நீ தானோ
உன்னால் வந்த காதல்
உன்னால் தானே வாழும்
என்னை நீங்கி போனால்
உன்னைச் சேரும் பாவம்
எனக்கொரு அடைக்கலம்
வழங்குமோ உன் இதயமே

அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே
உல்லாச மாளிகை மாளிகை
எங்கே என் தேவதை தேவதை
நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன்
அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே



உள்ளத்துக்குள் உள்ளிருந்து
மெல்ல மெல்ல கொல்லுவது
காதல் நோய் தானோ
வைகை என பொய்கை என
மையலிலே எண்ணியது
கானல் நீர் தானோ
என்னை நீயும் தூண்ட
எண்ணக் கோலம் போட்டேன்
மீண்டும் கோலம் போட
உன்னைத் தானே கேட்டேன்
எனக்கொரு அடைக்கலம்
வழங்குமோ உன் இதயமே

அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே
உல்லாச மாளிகை மாளிகை
எங்கே என் தேவதை தேவதை
நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன்
நாள்தோறும் முள்ளின் மீது தூங்கினேன்
அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே

ஓ சிதம்பர வாசனே தில்லை நடராஜனே - O Chidambara nathane thillai nadarajane Lyrics

ஓ சிதம்பர வாசனே...
ஓ சிதம்பர வாசனே
தில்லை நடராஜனே
சிவகாமி நேசனே வா..
உன் நடனத்தைக் காணவே
நாடி வந்தேன் சிவனே
நலம் பெற அருள்வாயே..

ஓ சிதம்பர வாசனே...
ஓ சிதம்பர வாசனே
தில்லை நடராஜனே
சிவகாமி நேசனே வா..
உன் நடனத்தைக் காணவே
நாடி வந்தேன் சிவனே
நலம் பெற அருள்வாயே..



பிட்டுக்கு மண் சுமந்த நேசனே
கையால் பிரம்படி பட்ட பரமேசனே
பிட்டுக்கு மண் சுமந்த நேசனே
கையால் பிரம்படி பட்ட பரமேசனே
கட்டுக்கட்டாய் விறகினை
கடைத்தெருவில் விற்று வந்த 
கயிலைகிரி நாதனே வா
உன் நடனத்தைக் காணவே
நாடி வந்தேன் சிவனே
நலம் பெற அருள்வாயே..

ஓ சிதம்பர வாசனே...
ஓ சிதம்பர வாசனே
தில்லை நடராஜனே
சிவகாமி நேசனே வா..
உன் நடனத்தைக் காணவே
நாடி வந்தேன் சிவனே
நலம் பெற அருள்வாயே..



சாம்பல் நிறம் பூசிக் கொண்டு வந்து
தலை ஆண்டி வேடம் போட்டுக் கொண்டு வந்து 
சாம்பல் நிறம் பூசிக் கொண்டு வந்து
தலை ஆண்டி வேடம் போட்டுக் கொண்டு வந்து 
சாம்பசிவ சங்கரா சாம்பசிவ சங்கரா
சாம்பசிவ சங்கரா வா..
உன் நடனத்தைக் காணவே
நாடி வந்தேன் சிவனே
நலம் பெற அருள்வாயே..

ஓ சிதம்பர வாசனே...
ஓ சிதம்பர வாசனே
தில்லை நடராஜனே
சிவகாமி நேசனே வா..
உன் நடனத்தைக் காணவே
நாடி வந்தேன் சிவனே
நலம் பெற அருள்வாயே..