ஒன்னவிட இந்த ஒலகத்தில் - Onnavida Intha Ulagathil Lyrics

ஒன்னவிட இந்த ஒலகத்தில் ஒசந்தது ஒன்னுமில்ல ஒன்னுமில்ல
ஒன்னவிட இந்த ஒலகத்தில் ஒசந்தது ஒன்னுமில்ல ஒன்னுமில்ல
ஒன்னவிட ஒரு உறவுன்னு சொல்லிக்கிட யாருமில்ல யாருமில்ல

வாக்குப்பட கிடைச்சான் விருமாண்டி
சாட்சி சொல்ல சந்திரன் வருவான்டி
சாதிசனம் எல்லாம் அவன் தான்டி
கேட்டவரம் ஒடனே தந்தான்டி
என்னவிட ஒன்ன சரிவர புரிஞ்சிக்க ஆருமில்ல எவளுமில்ல
ஒன்னவிட....  என்னவிட....

அல்லிக்கொடிய காத்து அசைக்குது
அசைங்கொலக்க ஒடம்பு கூசுது
புல்லரிச்சு பாவம் என்னப்போலவே அலைபாயுது
நிலவில் காயும் வேட்டி சேலயும்
நம்ம பாத்து சோடி சேருது
சேத்துவச்ச காத்த துதி பாடுது சுதி சேருது
என்ன புது தாகம் அனலாகுதே என் தேகம்
யாரு சொல்லி தந்து வந்தது
காணா கனா வந்து கொல்லுது
இதுக்கு பேரு தான் மோட்சமா மோட்சமா மோட்சமா

ஒன்னவிட.. 


காட்டு வழி காளைங்க கழுத்து மணி
கேக்கயில நமக்கது கோயில் மணி
ராத்திரியில் புல்வெளி நனைக்கும் பனி
போத்திக்கிற நமக்கது மூடுதுணி

ஒன்னவிட... 

ஒன்கூட நான் கூடி இருந்திட
எனக்கு சென்மம் ஒன்னு போதுமா
நூறு சென்மம் வேணும்
அத கேக்குறேன் சாமிய

என்ன கேக்குற சாமிய?
நூறு சென்மம் ஒன்கூட
போதுமா?

நூறு சென்மம் நமக்கு போதுமா
வேற வரம் ஏதும் கேப்பமா
சாகா வரம் கேப்போம் அந்த சாமிய
உங்க சாமிய


காத்தா அலைஞ்சாலும் 
கடலாக நீ இருந்தாலும்
ஆகாசமா ஆன போதிலும்
என்ன உரு எடுத்த போதிலும்
சேர்ந்தே தான் பொறக்கணும்
இருக்கணும் கலக்கணும்

ஒன்னவிட இந்த ஒலகத்தில் ஒசந்தது ஒன்னுமில்ல ஒன்னுமில்ல
ஒன்னவிட ஒரு உறவுன்னு சொல்லிக்கிட யாருமில்ல எவளுமில்ல

வாழ்க்கை தர வந்தான் விருமாண்டி
வாழ்த்து சொல்ல சந்திரன் வருவான்டி
சாதிசனம் எல்லாம் அவன் தான்டி
கேட்டவரம் ஒடனே தந்தான்டி

ஒன்னவிட ஒரு உறவுன்னு சொல்லிக்கிட யாருமில்ல யாருமில்ல
என்னவிட..... ஒன்னவிட.....

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே - Itho enthan theivam munnaale Lyrics

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே


அவன் பூவிரியும் சோலையிலே மணப்பான்
இசை பூங்குயிலின் தேன்குரலில் இருப்பான்
அவன் பூவிரியும் சோலையிலே மணப்பான்
இசை பூங்குயிலின் தேன்குரலில் இருப்பான்

குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்
தளிர் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்
குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்
தளிர் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே


பல நூல் படித்து நீ அறியும் கல்வி
பொதுநலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வைக்
கண்டு தொழில் புரிந்து உயிர் வளர்க்கும் ஏழை
அவன் இதழ் மலரும் சிரிப்பொலியை கேட்டேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

ஆ..ஆ...ஆ....ஆ.... ஓ.. ஓ.. ஓ...ஓ..

காற்றின் மொழி ஒலியா இசையா - Katrin Mozhi Oliya Isaiyaa Lyrics

காற்றின் மொழி ஒலியா இசையா
பூவின் மொழி நிறமா மணமா
கடலின் மொழி அலையா நுரையா
காதல் மொழி விழியா இதழா

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை

காற்றின் மொழி ஒலியா இசையா
பூவின் மொழி நிறமா மணமா


காற்று வீசும்போது திசைகள் கிடையாது
காதல் பேசும்போது மொழிகள் கிடையாது
பேசும் வார்த்தை போல மௌனம் புரியாது
கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது
உலவித் திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது
காதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை

காற்றின் மொழி.....


வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்
வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும்
உண்மை உண்மையானால் கண்ணீர் மொழியாகும்
பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்
ஓசை தூங்கும் ஜாமத்தில் உச்சி மீன்கள் மொழியாகும்
ஆசை தூங்கும் இதயத்தில் அசைவு கூட மொழியாகும்

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை

காற்றின் மொழி ஒலியா இசையா
பூவின் மொழி நிறமா மணமா
கடலின் மொழி அலையா நுரையா
காதல் மொழி விழியா இதழா

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை

காற்றின் மொழி......

பார்த்தேனே உயிரின் வழியே - Paarthene Uyirin Valiye Song Lyrics

பார்த்தேனே உயிரின் வழியே
யார் கண்ணும் காணா முகமே
கல் என்று நினைத்தேன் உனையே
நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயா

எதில் நீ இருந்தாய்
எங்கோ மறைந்தாய்
உனைத்தேடி அலைந்தேன் எனக்குள்ளே தெரிந்தாய்
இதுபோதும் எனக்கு வேறு வரங்கள் நூறு வேண்டுமா
இறைவா இது தான் நிறைவா
உணர்ந்தேன் உனையே உனையே
மறந்தேன் எனையே எனையே

பார்த்தேனே உயிரின் வழியே
யார் கண்ணும் காணா முகமே
ஓ... கல் என்று நினைத்தேன் உனையே
நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயா


வேதங்கள் மொத்தம் ஓதி
யாகங்கள் நித்தம் செய்து
பூஜிக்கும் பக்தி அதிலும் உன்னைக் காணலாம்
பசியென்று தன்முன் வந்து 
கையேந்தி கேட்கும்போது
தன் உணவை தந்தால் கூட உன்னைக் காணலாம்
உனைக் காண பல கோடி இங்கு வாரி இறைக்கிறார்கள்
எளிதாக உனைச் சேர இங்கு யாரு நினைக்கிறார்கள்

அலங்காரம் அதில் நீ இல்லை
அகங்காரம் மனதில் இல்லை
துளி கள்ளம் கபடம் கலந்திடாத அன்பில் இருக்கிறாய்
உணர்ந்தேன் உனையே உனையே
மறந்தேன் எனையே எனையே


அகம் நீ ஜகம் நீ
அணுவான உலகின் அகலம் நீ
எறும்பின் இதய ஒலி நீ
களிரின் துதிக்கை கனமும் நீ

ஆயிரம் கை உண்டென்றால் நீ
ஒரு கை தரக்கூடாதா
ஈராயிரம் கண் கொண்டாய்
உன் ஒரு கண் எனைப் பாராதா
உன்னில் சரண் அடைந்தேன் இனி நீ கதியே

பார்த்தேனே உயிரின் வழியே
யார் கண்ணும் காணா முகமே
கல் என்று நினைத்தேன் உனையே
நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயா

வந்தாளப்பா வந்தாளப்பா - Vanthalappa Vanthalappa Lyrics

வந்தாளப்பா வந்தாளப்பா
வந்து ஜன்னலில நின்னாளப்பா
சொன்னாளப்பா சொன்னாளப்பா
சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா

ம்..ம்.. ம்..ம்...

வந்தாளப்பா வந்தாளப்பா
வந்து ஜன்னலில நின்னாளப்பா
சொன்னாளப்பா சொன்னாளப்பா
சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா
ஊரு மெச்சுற குணம் மட்டும் தான்
சொத்து சொகமுன்னு சொன்னாளப்பா

வந்தாளப்பா வந்தாளப்பா
வந்து ஜன்னலில நின்னாளப்பா
சொன்னாளப்பா சொன்னாளப்பா
சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா

ம்..ம்.. ம்..ம்...


மாசத்துல மார்கழி மாசம்
வருஷத்துல ஒரு தரம் தான்
மனசுக்குள்ள கேட்டுக்கிட்டாலே
மறுபடியும் ஒரு வரம் தான்

மாசத்துல மார்கழி மாசம்
வருஷத்துல ஒரு தரம் தான்
மனசுக்குள்ள கேட்டுக்கிட்டாலே
மறுபடியும் ஒரு வரம் தான்

வானவில் வளைஞ்சது போல
தலை குனிஞ்சு நின்னாளப்பா
வாழைமர தோரணத்தோட 
நாலு வைக்க சொன்னாளப்பா

அட ஊரோட ஒன்னாக சேர்ந்து
இப்போ ஊர்கோலம் போனாத்தான் ஆச்சு
பட்டு சேல கட்டி கெட்டி மேளம் கொட்டி
தங்க தாலி கட்ட வேணுமுன்னு சொன்னாளப்பா

வந்தாளப்பா வந்தாளப்பா
வந்து பக்கத்துல நின்னாளப்பா
சொன்னாளப்பா சொன்னாளப்பா
சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா


கூட்டுக்குள்ள குடியிருந்தாலும் கூடவே நானிருப்பேன்
கூடுகட்ட போறவ தானே வாழ்க்கையில துணையிருப்பேன்
கூட்டுக்குள்ள குடியிருந்தாலும் கூடவே நானிருப்பேன்
கூடுகட்ட போறவ தானே வாழ்க்கையில துணையிருப்பேன்

தூக்கணாங்குருவிக் கூடு காத்தடிச்சு சாயாதப்பா
தூக்கணாங்குருவிக் கூடு காத்தடிச்சு சாயாதப்பா

நான் சொல்லுறத சொல்லி முடிச்சாச்சு
நான் கேட்டதெல்லாம் என்னங்க ஆச்சு
தினம் காலை வரும் மாலை வரும்
ஆனா என்னப்போல பக்கத்துல நிக்காதப்பா

வந்தாளப்பா வந்தாளப்பா
வந்து ஜன்னலில நின்னாளப்பா
சொன்னாளப்பா சொன்னாளப்பா
சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா

ஊரு மெச்சுற குணம் மட்டும் தான்
சொத்து சொகமுன்னு சொன்னாளப்பா

வந்தாளப்பா வந்தாளப்பா
வந்து ஜன்னலில நின்னாளப்பா
சொன்னாளப்பா சொன்னாளப்பா
சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா

குக்கு கூ கூ குயில் பாட்டு - Kucku Koo Koo Kuyil Pattu Lyrics

குக்கு கூ கூ... குக்கு கூ கூ...
குயில் பாட்டு கேக்குது
குயில் பாட்டை குளிர் காற்று
செவியோரம் சேர்க்குது

அடி சின்ன மணிக்குயிலே
எந்தன் சிந்தை மயங்குது பார்
இன்ப சிந்து படித்திடத்தான்
இங்கு சொல்லிக் கொடுத்தது யார்
இசைத் தேன் வந்து தேன் வந்து பாயுது பாயுது

தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர தீம் 
திர
தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர தீம் 

தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர தீம் 


விண்ணை விட்டு நிலத்தில் இறங்கிடும்
மண்ணை தொட்டு நடனம் புரிந்திடும்
தூரல் மழை துளியை தெளித்திடும் ஈர முகிலே
பச்சைப் பயிர் உலகில் தழைப்பதும்
பட்டமரம் திரும்ப கிளைப்பதும்
தாகங்களை நொடியில் தணிப்பதும் உங்கள் செயலே

எந்த வேருக்கும் நீர் விடும் மனது
இங்கு யாருக்கும் வாய்ப்பது அரிது
அம்மம்மா... மக்கள் தாகங்கள் தீர்ந்திட பாடடி பாடடி குயிலே

தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர தீம் 


தென் பொதிகை மடியில் பிறந்தவள்
தென்மதுரை நகரில் புகுந்தவள்
தென் தமிழர் உணர்வில் கலந்தவள் தென்றல் மகளே
உன்னை இங்கு தடுக்க முடியுமா
ஆணையிட்டு ஒடுக்க முடியுமா
கூட்டுக்குள்ளே அடைக்க முடியுமா சொல்லு மகளே

இந்த பெண்ணினம் அப்படி இருக்கும்
இது உன்னிலும் என்பதை நினைக்கும்
அம்மம்மா...  பெண்மை வாழ்கென்று வாழ்கென்று பாடடி பாடடி குயிலே

தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர தீம் 

குக்கு கூ கூ... குக்கு கூ கூ...
குயில் பாட்டு கேக்குது
குயில் பாட்டை குளிர் காற்று
செவியோரம் சேர்க்குது

அடி சின்ன மணிக்குயிலே
எந்தன் சிந்தை மயங்குது பார்
இன்ப சிந்து படித்திடத்தான்
இங்கு சொல்லிக் கொடுத்தது யார்
இசைத் தேன் வந்து தேன் வந்து பாயுது பாயுது

தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர தீம் 

தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர தீம்

யார் பெற்ற மகனோ நீ - Yaar Petra Magano Nee Lyrics

யார் பெற்ற மகனோ நீ
யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும் குலசாமி இவன்

ஊர் செய்த தவமோ இந்த
ஊர் செய்த தவமோ
மண்ணை காப்பாற்றிடும் இவன் ஆதி சிவன்

அடி வேர் தந்த வேர்வைக்கு ஈடில்லையே
இந்த ஊர் பூக்கும் நேரத்தில் நீ இல்லையே
யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ
யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ

யார் பெற்ற மகனோ நீ
யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும் குலசாமி இவன்


கைவீசும் பூங்காத்தே நீ எங்கு போனாயோ
யார் என்று சொல்லாமல் நிழல் போல நடந்தாயோ
முறை தான் ஒரு முறை தான் உனைப் பார்த்தால் அது வரமே
நினைத்தால் உனை நினைத்தால் கண்ணில் கண்ணீர் மழை வருமே

யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ
யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ

யார் பெற்ற மகனோ நீ
யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும் குலசாமி இவன்


அடி வேர் தந்த வேர்வைக்கு ஈடில்லையே
இந்த ஊர் பூக்கும் நேரத்தில் நீ இல்லையே
யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ
யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ

யார் பெற்ற மகனோ நீ
யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும் குலசாமி இவன்

என்னை தொட்டுவிட்டு தொட்டுவிட்டு - Ennai Thottuvittu Thottuvittu Lyrics

என்னை தொட்டுவிட்டு.......

என்னை தொட்டுவிட்டு தொட்டுவிட்டு ஓடுது 
ஒரு சிட்டுக்குருவி
அது பக்கம் வந்து பக்கம் வந்து ஆடுது 
என் நெஞ்சத்தழுவி

ஒன்ன தொட்டுவிட்டு தொட்டுவிட்டு 
ஓடுது இந்த சிட்டுக்குருவி
அது பக்கம் வந்து பக்கம் வந்து
ஆடுது உன் நெஞ்சத்தழுவி

அடி ஏன் ஏன் நீ என்னையே
அப்படி பாக்குற
உன் பார்வையிலே நான்
கொஞ்சம் கெரங்கி ஓடுறேன்
என்னை தொட்டுவிட்டு....


ஒன்ன தொட்டுவிட்டு தொட்டுவிட்டு ஓடுது 
இந்த சிட்டுக்குருவி
அது பக்கம் வந்து பக்கம் வந்து ஆடுது 
என் நெஞ்சத்தழுவி

நெஞ்சுக்குள்ளே பூட்டி வச்சேன் தொறக்கல
ஒன்ன மறக்கல விட்டு பறக்கல
மஞ்ச பூசி நான் குளிச்சேன் மணக்கல
ஒன்ன அணைக்கல மடி கனக்கல

கண்ணால தான் தூண்டி தான்
சொல்லாம போட்டு இழுத்தா
பெண்ணான நான் கேக்குறேன்
எப்போதும் அந்த நெனப்பா

உன் பாவாட பட்டாலும் 
நூலாட பட்டாலும் சிலுக்குதே..ஏ..


ஒன்ன தொட்டுவிட்டு தொட்டுவிட்டு ஓடுது 
ஒரு சிட்டுக்குருவி
அது பக்கம் வந்து பக்கம் வந்து ஆடுது 
என் நெஞ்சத்தழுவி

புத்தம் புது பூ மனசுக்காரரு
நல்ல வீரரு படு சூரரு
பச்சபுள்ள பூ மனச ரசிக்குறே
அள்ளி ருசிக்குறே சொல்லி சிரிக்குறே

கல்யாணம் தான் ஆனதும்
என்னான்னு நான் பாக்குறேன்
அப்போ வரும் தேவைக்கு
இப்போது நான் சேக்குறேன்

அட ராசாதி ராசாவே
நான் என்ன லேசாவா பாக்கலாம்

என்னை தொட்டுவிட்டு தொட்டுவிட்டு 
ஓடுது ஒரு சிட்டுக்குருவி
அது பக்கம் வந்து பக்கம் வந்து
ஆடுது என் நெஞ்சத்தழுவி


ஆ.. ஒன்ன தொட்டுவிட்டு தொட்டுவிட்டு 
ஓடுது இந்த சிட்டுக்குருவி
அது பக்கம் வந்து பக்கம் வந்து
ஆடுது உன் நெஞ்சத்தழுவி

அடி ஏன் ஏன் நீ என்னையே
அப்படி பாக்குற
உன் பார்வையிலே நான்
கொஞ்சம் கெரங்கி ஓடுறேன்
என்னை தொட்டுவிட்டு.....

பூவே பூச்சுடவா எந்தன் நெஞ்சில் - Poove Poochoodava Enthan Lyrics

பூவே பூச்சுடவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா
பூவே பூச்சுடவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா

வாசல் பார்த்து கண்கள் பூத்து
காத்து நின்றேன் வா

பூவே பூச்சுடவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா


அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும்
ஓடி நான் வந்து பார்ப்பேன்
தென்றல் என் வாசல் சீண்டவே இல்லை
கண்ணில் வெந்நீரை வார்ப்பேன்

கண்களும் ஓய்ந்தது
ஜீவனும் தேய்ந்தது
ஜீவ தீபங்கள் ஓயும் நேரம்
நீயும் நெய்யாக வந்தாய்
இந்த கண்ணீரில் சோகம் இல்லை
இன்று ஆனந்தம் தந்தாய்
பேத்தி என்றாலும் நீயும் என் தாய்

பூவே பூச்சுடவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா


காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும்
பாசம் வெளுக்காது மானே
நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும்
தங்கம் கருக்காது தாயே

பொன் முகம் பார்க்கிறேன்
அதில் என் முகம் பார்க்கிறேன்
இந்த பொன்மானை பார்த்துக்கொண்டே
சென்று நான் சேர வெண்டும்
மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும்
நீ(நான்) என்(உன்) மகளாக வேண்டும்
பாச ராகங்கள் பாட வேண்டும்

பூவே பூச்சுடவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா

வாசல் பார்த்து கண்கள் பூத்து
காத்து நின்றேன் வா

பூவே பூச்சுடவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா 

நானாக நான் இல்லை தாயே - Naanaaga Naan Illai Lyrics

நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே
நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே

பாசம் ஒரு நேசம்
பாசம் ஒரு நேசம்
கண்ணாற கண்டான் உன் சேய்

நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே


கீழ்வானிலே ஒளி வந்தது
கூண்டை விட்டு கிளி வந்தது
நான் பார்க்கும் ஆகாயம்
எங்கும் நீ பாடும் பூபாளம்
நான் பார்க்கும் ஆகாயம்
எங்கும் நீ பாடும் பூபாளம்
வாடும் பயிர் வாழ
நீ தானே நீர் வார்த்த கார்மேகம்

நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே

பாசம் ஒரு நேசம்
பாசம் ஒரு நேசம்
கண்ணாற கண்டான் உன் சேய்

நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே


மணிமாளிகை மாடங்களும்
மலர்தூவிய மஞ்சங்களும்
தாய் வீடு போலில்லை
அங்கு தாலாட்ட ஆளில்லை
தாய் வீடு போலில்லை
அங்கு தாலாட்ட ஆளில்லை
கோயில் தொழும் தெய்வம்
நீயின்றி நான் காண வேறில்லை

நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே

பாசம் ஒரு நேசம்
பாசம் ஒரு நேசம்
கண்ணாற கண்டான் உன் சேய்

நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே