ஒன்னவிட இந்த ஒலகத்தில் - Onnavida Intha Ulagathil Lyrics

ஒன்னவிட இந்த ஒலகத்தில் ஒசந்தது ஒன்னுமில்ல ஒன்னுமில்ல
ஒன்னவிட இந்த ஒலகத்தில் ஒசந்தது ஒன்னுமில்ல ஒன்னுமில்ல
ஒன்னவிட ஒரு உறவுன்னு சொல்லிக்கிட யாருமில்ல யாருமில்ல

வாக்குப்பட கிடைச்சான் விருமாண்டி
சாட்சி சொல்ல சந்திரன் வருவான்டி
சாதிசனம் எல்லாம் அவன் தான்டி
கேட்டவரம் ஒடனே தந்தான்டி
என்னவிட ஒன்ன சரிவர புரிஞ்சிக்க ஆருமில்ல எவளுமில்ல
ஒன்னவிட....  என்னவிட....

அல்லிக்கொடிய காத்து அசைக்குது
அசைங்கொலக்க ஒடம்பு கூசுது
புல்லரிச்சு பாவம் என்னப்போலவே அலைபாயுது
நிலவில் காயும் வேட்டி சேலயும்
நம்ம பாத்து சோடி சேருது
சேத்துவச்ச காத்த துதி பாடுது சுதி சேருது
என்ன புது தாகம் அனலாகுதே என் தேகம்
யாரு சொல்லி தந்து வந்தது
காணா கனா வந்து கொல்லுது
இதுக்கு பேரு தான் மோட்சமா மோட்சமா மோட்சமா

ஒன்னவிட.. 


காட்டு வழி காளைங்க கழுத்து மணி
கேக்கயில நமக்கது கோயில் மணி
ராத்திரியில் புல்வெளி நனைக்கும் பனி
போத்திக்கிற நமக்கது மூடுதுணி

ஒன்னவிட... 

ஒன்கூட நான் கூடி இருந்திட
எனக்கு சென்மம் ஒன்னு போதுமா
நூறு சென்மம் வேணும்
அத கேக்குறேன் சாமிய

என்ன கேக்குற சாமிய?
நூறு சென்மம் ஒன்கூட
போதுமா?

நூறு சென்மம் நமக்கு போதுமா
வேற வரம் ஏதும் கேப்பமா
சாகா வரம் கேப்போம் அந்த சாமிய
உங்க சாமிய


காத்தா அலைஞ்சாலும் 
கடலாக நீ இருந்தாலும்
ஆகாசமா ஆன போதிலும்
என்ன உரு எடுத்த போதிலும்
சேர்ந்தே தான் பொறக்கணும்
இருக்கணும் கலக்கணும்

ஒன்னவிட இந்த ஒலகத்தில் ஒசந்தது ஒன்னுமில்ல ஒன்னுமில்ல
ஒன்னவிட ஒரு உறவுன்னு சொல்லிக்கிட யாருமில்ல எவளுமில்ல

வாழ்க்கை தர வந்தான் விருமாண்டி
வாழ்த்து சொல்ல சந்திரன் வருவான்டி
சாதிசனம் எல்லாம் அவன் தான்டி
கேட்டவரம் ஒடனே தந்தான்டி

ஒன்னவிட ஒரு உறவுன்னு சொல்லிக்கிட யாருமில்ல யாருமில்ல
என்னவிட..... ஒன்னவிட.....

No comments:

Post a Comment