அவள் பறந்து போனாளே - Aval Paranthu Ponaale Lyrics

அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும்போது 
கண்கள் இரண்டை கவர்ந்து போனாளே

அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும்போது 
கண்கள் இரண்டை கவர்ந்து போனாளே

சந்திரா.........

என் காதுக்கு மொழியில்லை
என் நாவுக்கு சுவையில்லை
என் காதுக்கு மொழியில்லை
என் நாவுக்கு சுவையில்லை
என் நெஞ்சுக்கு நினைவில்லை
இனி நிழலுக்கும் உறக்கமில்லை
என் நிழலுக்கும் உறக்கமில்லை

அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும்போது 
கண்கள் இரண்டை கவர்ந்து போனாளே


இந்த வீட்டுக்கு விளக்கில்லை
சொந்த கூட்டுக்கு குயிலில்லை
இந்த வீட்டுக்கு விளக்கில்லை
சொந்த கூட்டுக்கு குயிலில்லை
என் அன்புக்கு மகளில்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை

அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும்போது 
கண்கள் இரண்டை கவர்ந்து போனாளே

என் இதயத்தில் பூட்டி வைத்தேன்
அதில் எனையே காவல் வைத்தேன்
அவள் கதவை உடைத்தாளே
தன் சிறகை விரித்தாளே
தன் சிறகை விரித்தாளே

அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும்போது 
கண்கள் இரண்டை கவர்ந்து போனாளே


அவள் எனக்கா மகளானாள்
நான் அவளுக்கு மகனானேன்
அவள் எனக்கா மகளானாள்
நான் அவளுக்கு மகனானேன்
என் உரிமைத் தாயல்லவா
என் உயிரை எடுத்துக் கொண்டாள்

அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும்போது 
கண்கள் இரண்டை கவர்ந்து போனாளே

No comments:

Post a Comment