இதோ எந்தன் தெய்வம் முன்னாலே - Itho enthan theivam munnaale Lyrics

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே


அவன் பூவிரியும் சோலையிலே மணப்பான்
இசை பூங்குயிலின் தேன்குரலில் இருப்பான்
அவன் பூவிரியும் சோலையிலே மணப்பான்
இசை பூங்குயிலின் தேன்குரலில் இருப்பான்

குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்
தளிர் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்
குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்
தளிர் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே


பல நூல் படித்து நீ அறியும் கல்வி
பொதுநலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வைக்
கண்டு தொழில் புரிந்து உயிர் வளர்க்கும் ஏழை
அவன் இதழ் மலரும் சிரிப்பொலியை கேட்டேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

ஆ..ஆ...ஆ....ஆ.... ஓ.. ஓ.. ஓ...ஓ..

No comments:

Post a Comment