பார்த்தேனே உயிரின் வழியே - Paarthene Uyirin Valiye Song Lyrics

பார்த்தேனே உயிரின் வழியே
யார் கண்ணும் காணா முகமே
கல் என்று நினைத்தேன் உனையே
நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயா

எதில் நீ இருந்தாய்
எங்கோ மறைந்தாய்
உனைத்தேடி அலைந்தேன் எனக்குள்ளே தெரிந்தாய்
இதுபோதும் எனக்கு வேறு வரங்கள் நூறு வேண்டுமா
இறைவா இது தான் நிறைவா
உணர்ந்தேன் உனையே உனையே
மறந்தேன் எனையே எனையே

பார்த்தேனே உயிரின் வழியே
யார் கண்ணும் காணா முகமே
ஓ... கல் என்று நினைத்தேன் உனையே
நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயா


வேதங்கள் மொத்தம் ஓதி
யாகங்கள் நித்தம் செய்து
பூஜிக்கும் பக்தி அதிலும் உன்னைக் காணலாம்
பசியென்று தன்முன் வந்து 
கையேந்தி கேட்கும்போது
தன் உணவை தந்தால் கூட உன்னைக் காணலாம்
உனைக் காண பல கோடி இங்கு வாரி இறைக்கிறார்கள்
எளிதாக உனைச் சேர இங்கு யாரு நினைக்கிறார்கள்

அலங்காரம் அதில் நீ இல்லை
அகங்காரம் மனதில் இல்லை
துளி கள்ளம் கபடம் கலந்திடாத அன்பில் இருக்கிறாய்
உணர்ந்தேன் உனையே உனையே
மறந்தேன் எனையே எனையே


அகம் நீ ஜகம் நீ
அணுவான உலகின் அகலம் நீ
எறும்பின் இதய ஒலி நீ
களிரின் துதிக்கை கனமும் நீ

ஆயிரம் கை உண்டென்றால் நீ
ஒரு கை தரக்கூடாதா
ஈராயிரம் கண் கொண்டாய்
உன் ஒரு கண் எனைப் பாராதா
உன்னில் சரண் அடைந்தேன் இனி நீ கதியே

பார்த்தேனே உயிரின் வழியே
யார் கண்ணும் காணா முகமே
கல் என்று நினைத்தேன் உனையே
நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயா

No comments:

Post a Comment