இது என்ன கனவா
மலைகளே மலைகளே
இது என்ன நினைவா...
உருகியதே எனதுள்ளம்
பெருகியதே விழி வெள்ளம்
விண்ணோடும் நீ தான்
மண்ணோடும் நீ தான்
கண்ணோடும் நீ தான் வா...
மேகம் திறந்து கொண்டு
மண்ணில் இறங்கி வந்து
மார்பில் ஒளிந்து கொள்ள வா வா
மார்பில் ஒளிந்து கொண்டால்
மாறன் அம்பு வரும்
கூந்தலில் ஒளிந்து கொள்ள வரவா
என் கூந்தல் தேவன் தூங்கும்
பள்ளி அறையா அறையா
மலர் சூடும் வயது என்னை
மறந்து போவது தான் முறையா
நினைக்காத நேரம் இல்லை
காதல் ரதியே ரதியே
உன் பேரைச் சொன்னால் போதும்
நின்று வழிவிடும் காதல் நதியே
என் சுவாசம் உன் மூச்சில்
உன் வார்த்தை என் பேச்சில்
ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம்
என் வாழ்வே வா..
மலர்களே மலர்களே
இது என்ன கனவா
மலைகளே மலைகளே
இது என்ன நினைவா
உருகியதே எனது உள்ளம்
பெருகியதே விழி வெள்ளம்
விண்ணோடும் நீ தான்
மண்ணோடும் நீ தான்
கண்ணோடும் நீ தான் வா...
பூவில் நாவிருந்தால்
காற்று வாய் திறந்தால்
காதல் காதல் என்று பேசும்
நிலா தமிழ் அறிந்தால்
அலை மொழி அறிந்தால்
நம் மேல் கவி எழுதி வீசும்
வாழ்வோடு வளர்பிறை தானே
வண்ண நிலவே நிலவே
வானோடு நீலம் போலே
இழைந்து கொண்டது இந்த உறவே
உறங்காத நேரம் கூட
உந்தன் கனவே கனவே
ஊனோடு உயிரை போலே
உறைந்து போனது தான் உறவே
மறக்காது உன் தாகம்
மரிக்காது உன் தேகம்
உனக்காக உயிர் வாழ்வேன்
வா என் வாழ்வே வா..
மலர்களே மலர்களே
இது என்ன கனவா
மலைகளே மலைகளே
இது என்ன நினைவா
உருகியதே எனது உள்ளம்
பெருகியதே விழி வெள்ளம்
விண்ணோடும் நீ தான்
மண்ணோடும் நீ தான்
கண்ணோடும் நீ தான் வா...
No comments:
Post a Comment