நினைக்கத் தெரிந்த மனமே - Ninaika Therintha Maname Lyrics

நினைக்கத் தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே
உனக்கு விலகத் தெரியாதா
உயிரே விலகத் தெரியாதா

நினைக்கத் தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே
உனக்கு விலகத் தெரியாதா
உயிரே விலகத் தெரியாதா

மயங்கத் தெரிந்த கண்ணே
உனக்கு உறங்கத் தெரியாதா
மலரத் தெரிந்த அன்பே
உனக்கு மறையத் தெரியாதா
அன்பே மறையத் தெரியாதா

நினைக்கத் தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே
உனக்கு விலகத் தெரியாதா
உயிரே விலகத் தெரியாதா


எடுக்கத் தெரிந்த கரமே
உனக்கு கொடுக்கத் தெரியாதா
இனிக்கத் தெரிந்த கனியே
உனக்கு கசக்கத் தெரியாதா

படிக்கத் தெரிந்த இதழே
உனக்கு முடிக்கத் தெரியாதா
படரத் தெரிந்த பனியே
உனக்கு மறையத் தெரியாதா
பனியே மறையத் தெரியாதா

நினைக்கத் தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே
உனக்கு விலகத் தெரியாதா
உயிரே விலகத் தெரியாதா


கொதிக்கத் தெரிந்த நிலவே
உனக்கு குளிரத் தெரியாதா
குளிரும் தென்றல் காற்றே
உனக்கு பிரிக்கத் தெரியாதா

பிரிக்கத் தெரிந்த இறைவா
உனக்கு இணைக்கத் தெரியாதா
இணையத் தெரிந்த தலைவா
உனக்கு என்னைப் புரியாதா
தலைவா என்னைப் புரியாதா

நினைக்கத் தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே
உனக்கு விலகத் தெரியாதா
உயிரே விலகத் தெரியாதா

அவள் பறந்து போனாளே - Aval Paranthu Ponaale Lyrics

அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும்போது 
கண்கள் இரண்டை கவர்ந்து போனாளே

அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும்போது 
கண்கள் இரண்டை கவர்ந்து போனாளே

சந்திரா.........

என் காதுக்கு மொழியில்லை
என் நாவுக்கு சுவையில்லை
என் காதுக்கு மொழியில்லை
என் நாவுக்கு சுவையில்லை
என் நெஞ்சுக்கு நினைவில்லை
இனி நிழலுக்கும் உறக்கமில்லை
என் நிழலுக்கும் உறக்கமில்லை

அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும்போது 
கண்கள் இரண்டை கவர்ந்து போனாளே


இந்த வீட்டுக்கு விளக்கில்லை
சொந்த கூட்டுக்கு குயிலில்லை
இந்த வீட்டுக்கு விளக்கில்லை
சொந்த கூட்டுக்கு குயிலில்லை
என் அன்புக்கு மகளில்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை

அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும்போது 
கண்கள் இரண்டை கவர்ந்து போனாளே

என் இதயத்தில் பூட்டி வைத்தேன்
அதில் எனையே காவல் வைத்தேன்
அவள் கதவை உடைத்தாளே
தன் சிறகை விரித்தாளே
தன் சிறகை விரித்தாளே

அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும்போது 
கண்கள் இரண்டை கவர்ந்து போனாளே


அவள் எனக்கா மகளானாள்
நான் அவளுக்கு மகனானேன்
அவள் எனக்கா மகளானாள்
நான் அவளுக்கு மகனானேன்
என் உரிமைத் தாயல்லவா
என் உயிரை எடுத்துக் கொண்டாள்

அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும்போது 
கண்கள் இரண்டை கவர்ந்து போனாளே

உயிரும் நீயே உடலும் நீயே - Uyirum Neeye Udalum Neeye Lyrics

உயிரும் நீயே உடலும் நீயே
உறவும் நீயே தாயே
உயிரும் நீயே என் உடலும் நீயே
உறவும் நீயே தாயே

தன் உடலில் சுமந்து
உயிரை பகிர்ந்து
உருவம் தருவாய் நீயே
தன் உடலில் சுமந்து
உயிரை பகிர்ந்து
உருவம் தருவாய் நீயே

உன் கண்ணில் வழியும்
ஒரு துளி போதும்
கடலும் முழுகும் தாயே
உன் கண்ணில் வழியும்
ஒரு துளி போதும்
கடலும் முழுகும் தாயே

உன் காலடி மட்டும்
தருவாய் தாயே
சொர்க்கம் என்பது பொய்யே

உயிரும் நீயே உடலும் நீயே
உறவும் நீயே தாயே


விண்ணை படைத்தான்
மண்ணை படைத்தான்
காற்றும் மழையும் ஒளியும் படைத்தான்
விண்ணை படைத்தான்
மண்ணை படைத்தான்
காற்றும் மழையும் ஒளியும் படைத்தான்
பூமிக்கு அதனால் நிம்மதியில்லை
பூமிக்கு அதனால் நிம்மதியில்லை
சாமி தவித்தான்
சாமி தவித்தான்
தாயை படைத்தான்

உயிரும் நீயே உடலும் நீயே
உறவும் நீயே தாயே
உயிரும் நீயே உடலும் நீயே
உறவும் நீயே தாயே

தன் உடலில் சுமந்து
உயிரை பகிர்ந்து
உருவம் தருவாய் நீயே
தன் உடலில் சுமந்து
உயிரை பகிர்ந்து
உருவம் தருவாய் நீயே

உன் கண்ணில் வழியும்
ஒரு துளி போதும்
கடலும் முழுகும் தாயே
உன் கண்ணில் வழியும்
ஒரு துளி போதும்
கடலும் முழுகும் தாயே

உன் காலடி மட்டும்
தருவாய் தாயே
சொர்க்கம் என்பது பொய்யே

உயிரும் நீயே உடலும் நீயே
உறவும் நீயே தாயே

கண்டா வரச் சொல்லுங்க - Kandaa Vara Sollunga Lyrics

சூரியனும் பெக்கவில்ல
சந்திரனும் சாட்சியில்ல
சூரியனும் பெக்கவில்ல
சந்திரனும் சாட்சியில்ல

பாதகத்தி பெத்த புள்ள
பஞ்சம் தின்னு வளர்ந்த புள்ள

கண்டா வரச் சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க
அவன கண்டா வரச் சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க

கண்டா வரச் சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க


அம்மாடி ஆலமரம்
மரத்து மேல உச்சி கெள
அம்மாடி ஆலமரம்
மரத்து மேல உச்சி கெள
ஒத்த கிளி நின்னா கூட
கத்தும் பாரு அவன் பேர

கண்டா வரச் சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க
அவன கண்டா வரச் சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க

கண்டா வரச் சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க
கண்டா வரச் சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க


ஊரெல்லாம் கோயிலப்பா
கோயிலெல்லாம் சாமியப்பா
ஊரெல்லாம் கோயிலப்பா
கோயிலெல்லாம் சாமியப்பா
ஒத்த பூடம் கூட இல்லையப்பா
எங்க குடும்பத்துல ஒருத்தனப்பா

கண்டா வரச் சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க
அவன கண்டா வரச் சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க

கண்டா வரச் சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க


கவசத்தையும் கண்டதில்ல
எந்த குண்டலமும் கூட இல்ல
வாள் தூக்கி நின்னான் பாரு
வந்து சண்ட போட்ட எவனும் இல்ல
வாள் தூக்கி நின்னான் பாரு
வந்து சண்ட போட்ட எவனும் இல்ல

கண்டா வரச் சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க
அவன கண்டா வரச் சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க

கண்டா வரச் சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க
கண்டா வரச் சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க

இதுவும் கடந்து போகும் - Ithuvum Kadanthu Pogum Lyrics

இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்

சுடரி இருளில் ஏங்காதே
வெளிதான் கதவை மூடாதே
அட ஆறு காலங்களும்
மாறி மாறி வரும்
இயற்கையின் விதி இதுவே
அழியாத காயங்களை
ஆற்றும் மாயங்களை
அனுபவம் கொடுத்திடுமே

மழை காற்றோடு போகும் வரை
போனால் என்ன
அது ஏதோ ஓர் பூவின் துணை
ஆனால் என்ன

சுடரி சுடரி உடைந்து போகாதே
உடனே வலிகள் மறைந்து போகாதே
சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே
அதுவாய் மறக்கும் பின் தோன்றாதே

இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்
எதுவும் கடந்து போகும்


அதுவே படைக்கும்
அதுவே உடைக்கும்
மனம் தான் ஒரு குழந்தையே
அதுவாய் மலரும்
அதுவாய் உதிரும்
அதுபோல் இந்த கவலையே

நாள்தோறும் ஏதோ மாறுதல்
வானும் மண்ணும் வாழும் ஆறுதல்
பேசாமல் வா வாழ்வை வாழ்ந்திருப்போம்

மழை காற்றோடு போகும் வரை
போனால் என்ன
அது ஏதோ ஓர் பூவின் துணை
ஆனால் என்ன

சுடரி சுடரி உடைந்து போகாதே
உடனே வலிகள் மறைந்து போகாதே
சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே
அதுவாய் மறக்கும் பின் தோன்றாதே

இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்

அதுவாய் விழுந்தே 
அதுவாய் எழுந்தே
குழந்தை நடை பழகுதே
மனதால் உணர்ந்தே
உடலே விரிந்தே
பறவை திசை அமைக்குதே

வாசம் தான் பூவின் பார்வைகள்
காற்றில் ஏறி காணும் காட்சிகள்
காணாமல் வெளியாக பார்த்திடுமே

சிறு ஊற்றாக நேசம் எங்கோ உருவாகுமே
பெரும் காற்றாக மாறிச் சென்று உறவாடுமே

சுடரி சுடரி 
வெளிச்சம் தீராதே
அதை நீ உணர்ந்தால்
பயணம் தீராதே

அழகே சுடரி
அட ஏங்காதே
மலரின் நினைவில்
மனம் வாழாதே

இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்
கடந்து போகும்
கடந்து போகும்

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் - Kuruku Valiyil Valvu Thedidum Lyrics

குறுக்கு வழியில்
வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா
இது கொள்ளையடிப்பதில்
வல்லமை காட்டும்
திருட்டு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா

இருக்கும் அறிவை
மடமை மூடிய இருட்டு உலகமடா
வாழ்வில் எந்த நேரமும்
சண்டை ஓயாத
முரட்டு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா

குறுக்கு வழியில்
வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா
இது கொள்ளையடிப்பதில்
வல்லமை காட்டும்
திருட்டு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா


விளையும் பயிரை
வளரும் கொடியை
வேருடன் அறுத்து விளையாடும்
விளையும் பயிரை
வளரும் கொடியை
வேருடன் அறுத்து விளையாடும்
மனம் வெந்திடும் தோட்டக்காரனிடம்
மிரட்டல் வார்த்தைகள் ஆடும்
பல வரட்டு கீதமும் பாடும்
விதவிதமான பொய்களை வைத்து
புரட்டும் உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா

அன்பு படர்ந்த கொம்பினிலே
ஒரு அகந்தை குரங்கு தாவும்
அதன் அழகை குலைக்க மேவும்
கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும்
கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும்
சிலர் குணமும் இதுபோல்
குறுகிப் போகும்
கிறுக்கு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா

குறுக்கு வழியில்
வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா
இது கொள்ளையடிப்பதில்
வல்லமை காட்டும்
திருட்டு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா

நிலை மாறும் உலகில் - Nilai Maarum Ulagil Lyrics

நிலை மாறும் உலகில்
நிலைக்கும் என்ற கனவில்

நிலை மாறும் உலகில்
நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி
அதில் வாழ்வதில்லை நீதி
வாழும் மனித ஜாதி
அதில் வாழ்வதில்லை நீதி

நிலை மாறும் உலகில்
நிலைக்கும் என்ற கனவில்
நிலை மாறும் உலகில்
நிலைக்கும் என்ற கனவில்


தினந்தோறும் உணவு
அது பகலில் தோன்றும் கனவு
தினந்தோறும் உணவு
அது பகலில் தோன்றும் கனவு
கனவான நிலையில்
புது வாழ்வுக்கிங்கே நினைவு

நிலை மாறும் உலகில்
நிலைக்கும் என்ற கனவில்
நிலை மாறும் உலகில்
நிலைக்கும் என்ற கனவில்

வாழும் மனித ஜாதி
அதில் வாழ்வதில்லை நீதி
வாழும் மனித ஜாதி
அதில் வாழ்வதில்லை நீதி

நிலை மாறும் உலகில்
நிலைக்கும் என்ற கனவில்
நிலை மாறும் உலகில்
நிலைக்கும் என்ற கனவில்

பிறக்கின்ற போதே
இறக்காத மனிதன்
பிறக்கின்ற போதே
இறக்காத மனிதன்
வாழ்கின்ற சாபம்
அவன் முன்னோர் செய்த பாவம்

நிலை மாறும் உலகில்
நிலைக்கும் என்ற கனவில்
நிலை மாறும் உலகில்
நிலைக்கும் என்ற கனவில்

வாழும் மனித ஜாதி
அதில் வாழ்வதில்லை நீதி
வாழும் மனித ஜாதி
அதில் வாழ்வதில்லை நீதி

நிலை மாறும் உலகில்
நிலைக்கும் என்ற கனவில்

லலலால லலலா.. ம்..ம்..ம்..

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு - Nallavarkellam Satchigal Rendu Lyrics

நல்லவர்க்கெல்லாம்
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு
ஒன்று மனச் சாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா

நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால்
தெய்வத்தின் காட்சியம்மா
அது தான் உள்ளத்தின் காட்சியம்மா
அது தான் உண்மைக்கு சாட்சியம்மா

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு
ஒன்று மனச் சாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
தெய்வத்தின் சாட்சியம்மா


நதி வெள்ளம் காய்ந்து விட்டால்
நதி செய்த குற்றமில்லை
விதி செய்த குற்றம் அன்றி
வேறு யாரம்மா

நதி வெள்ளம் காய்ந்து விட்டால்
நதி செய்த குற்றமில்லை
விதி செய்த குற்றம் அன்றி
வேறு யாரம்மா

பறவைகளே பதில் சொல்லுங்கள்
மனிதர்கள் மயங்கும் போது
நீங்கள் பேசுங்கள்
மனதுக்கு மனது கொஞ்சம்
தூது செல்லுங்கள்

நல்லவர்க்கெல்லாம் 
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு
ஒன்று மனச் சாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
தெய்வத்தின் சாட்சியம்மா


ஆண்டவன் அரிய நெஞ்சில்
ஒரு துளி வஞ்சம் இல்லை
அவனன்றி எனக்கு வேறு 
ஆறுதல் இல்லை

ஆண்டவன் அரிய நெஞ்சில்
ஒரு துளி வஞ்சம் இல்லை
அவனன்றி எனக்கு வேறு 
ஆறுதல் இல்லை

மனிதனம்மா மயங்குகிறேன்
தவறுக்கு துணிந்த மனிதன் 
அழுவதில்லையே
தவறியும் வானம் மண்ணில் 
விழுவதில்லையே

நல்லவர்க்கெல்லாம் 
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு
ஒன்று மனச் சாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
தெய்வத்தின் சாட்சியம்மா

நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால்
தெய்வத்தின் காட்சியம்மா
அது தான் உள்ளத்தின் காட்சியம்மா
அது தான் உண்மைக்கு சாட்சியம்மா

அடி பெண்ணே ஒரு முறை - Adi Penne Oru Murai Lyrics

அடி பெண்ணே
ஒரு முறை நீ சிரித்தால்
என் நெஞ்சுக்குள்ளே
மழையடிக்கும்

அடி பெண்ணே
ஒரு முறை நீ சிரித்தால்
என் நெஞ்சுக்குள்ளே
மழையடிக்கும்

ஏன் எனது இதயம்
துடிக்கும் இசையில்
கவிதை ஒன்றை
எழுதினாய்

அதை விழியில் கோர்த்து
உயிரின் உள்ளே
பார்வையாக்கி சொல்கிறாய்


உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா
உன் மடி சாயவா

உன் பார்வை என்னைக் கொல்ல
சாய்ந்தேனே நானும் மெல்ல
நீ தான் என் மன்னவா
நீ தான் என் மன்னவா

உனது சிரிப்பினில்
சிதறும் அழகினை
பூக்கள் ரசித்தே
வாசம் பிறந்ததோ

வேர்வைத் துளிகளும்
தீர்த்தம் போலே என்
மேலே படுகையில்
பாவம் அழியுதோ

இருவர் வாழும் உலகிலே
உன்னை அணைத்துக் கொள்வேன்
உயிரிலே
இரவில் தேயும் நிலவிலே
நாம் சேர்ந்து வாழ்வோம்
அருகிலே


அடி உன்னோடு வாழும்
ஒவ்வொரு நாளும்
இறகை போல பறக்கிறேன்
நான் உன்னோடு வாழும்
நொடியில் ஏனோ
மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்

உன் பார்வை என்னைக் கொல்ல
சாய்ந்தேனே நானும் மெல்ல
நீ தான் என் மன்னவா
நீ தான் என் மன்னவா

உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா
உன் மடி சாயவா

என் அன்பே ஒருமுறை
நீ ரசித்தால் என்
உள்ளே ஏதோ புது மயக்கம்
என் அன்பே ஒருமுறை
நீ ரசித்தால் என்
உள்ளே ஏதோ புது மயக்கம்

எனது பிறவியின் அர்த்தம் உணரவே
உன்னை எனது வாழ்வில் தந்ததோ
தேகம் தீண்டும் தூரம் இருந்துமே
உனது விழியிலே ஜீவன் தொலையுதோ


மழையில் காதலன் மடியிலே
நித்தம் நனைந்து கொள் இவள் உயிரிலே
கிளிகள் பேசும் மொழியிலே
இனி மௌனம் கூட பிழையில்லை

அன்பே உன்னோடு வாழும்
ஒவ்வொரு நாளும்
இறகை போல பறக்கிறேன்
நான் உன்னோடு வாழும்
நொடியில் ஏனோ
மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்

அடி பெண்ணே
ஒரு முறை நீ சிரித்தால்
என் நெஞ்சுக்குள்ளே
மழையடிக்கும்

என் அன்பே ஒருமுறை
நீ ரசித்தால் என்
உள்ளே ஏதோ புது மயக்கம்


நீ இரவல் உயிரா
இரவின் வெயிலா
மழையின் வாசம் நீயடி
நீ கவிதை மொழியா
கவிஞன் வழியா
உயிரின் சுவாசம் நீயடி

உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா
உன் மடி சாயவா

உன் பார்வை என்னைக் கொல்ல
சாய்ந்தேனே நானும் மெல்ல
நீ தான் என் மன்னவா
நீ தான் என் மன்னவா

எந்தன் நண்பியே நண்பியே - Enthan Nanbiye Nanbiye Lyrics

எந்தன் நண்பியே நண்பியே
எனை திறக்கும் அன்பியே
எந்தன் நண்பியே நண்பியே
எனை இழுக்கும் இன்பியே

பப்பா.. பபபா... பா....

எந்தன் முகம் காட்டும்
புன்னகைகள் தீட்டும்
மனதின் கண்ணாடி நீயே
என்னை என்னைப் போலே
ஏற்றுக் கொண்டதாலே
எதிரொலி ஆகிடுவாயே

கண்டதை பாடவும்
கண்மூடி ஆடவும்
என் துணை ஆகிட வந்தாயே
சண்டைகள் போடவும்
பின்வந்து கூடவும்
ஆயிரம் காரணம் தந்தாயே
வண்ணங்கள் நானே
நீ தூரிகையே


எந்தன் நண்பியே நண்பியே
எனை திறக்கும் அன்பியே
எந்தன் நண்பியே நண்பியே
எனை இழுக்கும் இன்பியே

எந்தன் மனம் பார்க்க
சொல்வதெல்லாம் கேட்க
கிடைத்த ஒரு உயிர்த் துணை நீயே
என் சிரிப்பில் பாதி
என் துயரில் பாதி
பகிர்ந்து நீ அருந்துகிறாயே

எல்லாமே பொய்யென
நீ மட்டும் மெய்யென
என் அச்சம் யாவையும் கொன்றாயே
நான் இங்கு உண்மையா
உன் கையில் பொம்மையா
யாரிந்த நானென சொன்னாயே
செவ்வானம் நானே
நீ அவந்திகையே

எந்தன் நண்பியே நண்பியே
எனை திறக்கும் அன்பியே

எந்தன் நண்பியே நண்பியே
எனை இழுக்கும் இன்பியே

மெய் நிகராட்டங்கள் ஆடிடும் போது
ஆயிரம் எதிரிகள் போர்க்களம் மீது
எந்தன் படை ஒன்றில் நீயும் இருந்தால்
அந்த வெற்றி எந்தன் காலடியில்

இணைய தொடரை 
இணைந்தே இனி காண்போமே
அழுதால் உடனே நீ துடைப்பாய்

மனதில் நினைத்து
ஒரு சொல் சொல்லும்போதே
தொடங்கும் எதையும் நீ முடிப்பாய்


நீயும் எந்தன் தனிமையே
அதை விட இனிமையே
இதயச் சுவரில் 
இறைவன் வரையும்
குறுநகையே

எந்தன் நண்பியே நண்பியே
எனை திறக்கும் அன்பியே
எந்தன் நண்பியே நண்பியே
எனை இழுக்கும் இன்பியே

நீ பாதி நான் பாதி கண்ணே - Nee Paathi Naan Paathi Lyrics

நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே
நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே

நீ இல்லையே இனி நான் இல்லையே
உயிர் நீயே
நீ பாதி நான் பாதி கண்ணா
அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே


வானப் பறவை வாழ நினைத்தால்
வாசல் திறக்கும் வேடந்தாங்கல்
கானப் பறவை பாட நினைத்தால்
கையில் விழுந்த பருவப் பாடல்

மஞ்சள் மணக்கும்
என் நெற்றி வைத்த பொட்டுக்கொரு
அர்த்தம் இருக்கும் உன்னாலே

மெல்லச் சிரிக்கும்
உன் முத்துநகை ரத்தினத்தை
அள்ளித் தெளிக்கும் முன்னாலே

மெய்யானது உயிர் மெய்யாகவே
தடை ஏது

நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே
நீ பாதி நான் பாதி கண்ணா
அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே


இடது விழியில் தூசி விழுந்தால்
வலது விழியும் கலங்கி விடுமே
இருட்டில் கூட இருக்கும் நிழல் நான்
இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன்

சொர்க்கம் எதற்கு
என் பொன்னுலகம் பெண்ணுருவில்
பக்கம் இருக்கு கண்ணே வா
இந்த மனம் தான்
என் மன்னவனும் வந்துலவும் நந்தவனம் தான்
அன்பே வா

சுமையானது ஒரு சுகமானது
சுவை நீ தான்

நீ பாதி நான் பாதி கண்ணா
அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே
நீ இல்லையே இனி நான் இல்லையே
உயிர் நீயே
நீ பாதி நான் பாதி கண்ணா
அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே

குக்கூ குக்கூ தாத்தா தாத்தா - Kukoo Kukoo Thatha Lyrics

குக்கூ குக்கூ
தாத்தா தாத்தா களவெட்டி
குக்கூ குக்கூ
பொந்துல யாரு மீன்கொத்தி
குக்கூ குக்கூ
தண்ணியில் ஓடும் தவளைக்கி
குக்கூ குக்கூ
கம்பளி பூச்சி தங்கச்சி

அல்லி மலர் கொடி அங்கதமே
ஒட்டார ஒட்டார சந்தனமே
முல்ல மலர் கொடி முத்தாரமே
எங்கூரு எங்கூரு குத்தாலமே

சுருக்கு பையம்மா
வெத்தல மடையம்மா
சுமந்த கையம்மா
மத்தளம் கொட்டுயம்மா
தாயம்மா தாயம்மா
என்ன பண்ண மாயம்மா
வள்ளியம்மா பேராண்டி
சங்கதிய கூறேன்டி
கண்ணாடிய காணான்டி
இந்தார்ரா பேராண்டி


அன்னக்கிளி அன்னக்கிளி
அடி ஆலமரக்கெள வண்ணக்கிளி
நல்லபடி வாழச் சொல்லி 
இந்த மண்ண கொடுத்தானே பூர்வக்குடி

கம்மாங்கர காணியெல்லாம்
பாடித் திரிஞ்சானே ஆதிக்குடி
நாய் நரி பூனைக்குந்தான்
இந்த ஏரிக்குளம் கூட சொந்தமடி

என்ஜாயி எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்பாயி அம்பாரி
இந்தா இந்தா மும்மாரி

என்ஜாயி எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்பாயி அம்பாரி
இந்தா இந்தா மும்மாரி

குக்கூ குக்கூ
முட்டைய போடும் கோழிக்கு
குக்கூ குக்கூ
ஒப்பன யாரு மயிலுக்கு
குக்கூ குக்கூ
பச்சைய பூசும் பாசிக்கு
குக்கூ குக்கூ
குச்சிய அடுக்குன கூட்டுக்கு


பாடு பட்ட மக்கா
வரப்பு மேட்டுக்காரா
வேர்வ தண்ணி சொக்கா
மினுக்கும் நாட்டுக்காரா
ஆதாட்டி கருப்பட்டி 
ஊதாங்கோலு மண்ணுச்சட்டி
ஆத்தாரோம் கூடு கட்டி
ஆரம்பிச்ச நாகரீகம்
ஜஞ்ஜன ஜனக்கு ஜன
மக்களே ஏய் ஏய்
உப்புக்கு சப்பு கொட்டு
முட்டைக்குள்ள சட்டு கொட்டு
அடங்கி ரத்தம் கொட்டு
கிட்டிப் புல்லு விட்டு வெட்டு

நான் அஞ்சு மரம் வளர்த்தேன்
அழகான தோட்டம் வச்சேன்
தோட்டம் செழிச்சாலும்
என் தொண்ட அடையலயே

கடலே கரையே
வனமே சனமே
நெலமே கொலமே
எடமே தடமே

என்ஜாயி எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்பாயி அம்பாரி
இந்தா இந்தா மும்மாரி

என்ஜாயி எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்பாயி அம்பாரி
இந்தா இந்தா மும்மாரி


பாட்டன் பூட்டேன் காத்த பூமி
ஆட்டம் போட்டு காட்டும் சாமி
ராட்டினந்தான் சுத்தி வந்தா
சேவக்கூவிச்சு
அது போட்டு வச்ச
எச்சந்தானே காடா மாறிச்சு
நம்ம நாடா மாறிச்சு
இந்த வீடா மாறிச்சு

என்ன கொற என்ன கொற
என் ஈலிக்கரும்புக்கு என்ன கொற
என்ன கொற என்ன கொற
என் செல்லப் பேராண்டிக்கு என்ன கொற

பந்தலுல  பாவக்கா
பந்தலுல பாவக்கா
வெதக்கல்லு விட்டுருக்கு
அது வெதக்கல்லு விட்டுருக்கு

அப்பன் ஆத்தா விட்டதுங்க
அப்பன் ஆத்தா விட்டதுங்க
 
ஆ.... ஆ... ஆ... ஆ...

என்ஜாயி எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்பாயி அம்பாரி
இந்தா இந்தா மும்மாரி

என்ஜாயி எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்பாயி அம்பாரி
இந்தா இந்தா மும்மாரி

என்ஜாயி எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்பாயி அம்பாரி
இந்தா இந்தா மும்மாரி


என்ஜாயி எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்பாயி அம்பாரி
இந்தா இந்தா மும்மாரி

கடலே கரையே
வனமே சனமே
நெலமே கொலமே
எடமே தடமே

குக்கூ குக்கூ...

முழுசா ஒனக்கென நான் வாழுறேன் - Mulusa Onakena Naan Vaaluren Lyrics

முழுசா ஒனக்கென
நான் வாழுறேன்
புதுசா தெனம் தெனம்
எனை பாக்குறேன்

அழுதா தோளுல
நான் சாஞ்சிப்பேன்
அளவில்லாம
ஆசை வைக்குறேன்

ஏனோ தானோ
என்று போல நாளும்
எல்லாம் நீயே
என்று மாறுதே

யாரும் இல்லா
நேரம் வந்த பின்னும்
ஒனதருகில்
காதல் ஒன்று 
கண்டேன் பெண்ணே


லேசா அழகுல
தானா விழுகுறேன்
நீ பேசி சிரிக்கையில்
ஒன் ஒதட்டுல ஒறையுறேன்

வாழ்க்கை வாழதான்
உன்னோடு இருக்கிறேன்
உன்கூட நடக்கும் போது
மழையில்லாம நனைஞ்சு போகுறேன்

கண்ண வீசி
கண்ண வீசி
கட்டி போடும் காதலி
கன்னம் ரெண்டும் 
முத்தம் கேக்குதே 

மலர்களே மலர்களே இது என்ன - Malargale Malargale Ithu Enna Lyrics

மலர்களே மலர்களே
இது என்ன கனவா
மலைகளே மலைகளே
இது என்ன நினைவா...

உருகியதே எனதுள்ளம்
பெருகியதே விழி வெள்ளம்
விண்ணோடும் நீ தான்
மண்ணோடும் நீ தான்
கண்ணோடும் நீ தான் வா... 


மேகம் திறந்து கொண்டு
மண்ணில் இறங்கி வந்து
மார்பில் ஒளிந்து கொள்ள வா வா
மார்பில் ஒளிந்து கொண்டால்
மாறன் அம்பு வரும்
கூந்தலில் ஒளிந்து கொள்ள வரவா

என் கூந்தல் தேவன் தூங்கும்
பள்ளி அறையா அறையா
மலர் சூடும் வயது என்னை
மறந்து போவது தான் முறையா

நினைக்காத நேரம் இல்லை
காதல் ரதியே ரதியே
உன் பேரைச் சொன்னால் போதும்
நின்று வழிவிடும் காதல் நதியே

என் சுவாசம் உன் மூச்சில்
உன் வார்த்தை என் பேச்சில்
ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம் 
என் வாழ்வே வா..

மலர்களே மலர்களே
இது என்ன கனவா
மலைகளே மலைகளே
இது என்ன நினைவா

உருகியதே எனது உள்ளம்
பெருகியதே விழி வெள்ளம்
விண்ணோடும் நீ தான்
மண்ணோடும் நீ தான்
கண்ணோடும் நீ தான் வா... 


பூவில் நாவிருந்தால்
காற்று வாய் திறந்தால்
காதல் காதல் என்று பேசும்
நிலா தமிழ் அறிந்தால்
அலை மொழி அறிந்தால்
நம் மேல் கவி எழுதி வீசும்

வாழ்வோடு வளர்பிறை தானே
வண்ண நிலவே நிலவே
வானோடு நீலம் போலே
இழைந்து கொண்டது இந்த உறவே

உறங்காத நேரம் கூட
உந்தன் கனவே கனவே
ஊனோடு உயிரை போலே
உறைந்து போனது தான் உறவே

மறக்காது உன் தாகம்
மரிக்காது உன் தேகம்
உனக்காக உயிர் வாழ்வேன்
வா என் வாழ்வே வா..

மலர்களே மலர்களே
இது என்ன கனவா
மலைகளே மலைகளே
இது என்ன நினைவா

உருகியதே எனது உள்ளம்
பெருகியதே விழி வெள்ளம்
விண்ணோடும் நீ தான்
மண்ணோடும் நீ தான்
கண்ணோடும் நீ தான் வா... 

ஒன்னவிட இந்த ஒலகத்தில் - Onnavida Intha Ulagathil Lyrics

ஒன்னவிட இந்த ஒலகத்தில் ஒசந்தது ஒன்னுமில்ல ஒன்னுமில்ல
ஒன்னவிட இந்த ஒலகத்தில் ஒசந்தது ஒன்னுமில்ல ஒன்னுமில்ல
ஒன்னவிட ஒரு உறவுன்னு சொல்லிக்கிட யாருமில்ல யாருமில்ல

வாக்குப்பட கிடைச்சான் விருமாண்டி
சாட்சி சொல்ல சந்திரன் வருவான்டி
சாதிசனம் எல்லாம் அவன் தான்டி
கேட்டவரம் ஒடனே தந்தான்டி
என்னவிட ஒன்ன சரிவர புரிஞ்சிக்க ஆருமில்ல எவளுமில்ல
ஒன்னவிட....  என்னவிட....

அல்லிக்கொடிய காத்து அசைக்குது
அசைங்கொலக்க ஒடம்பு கூசுது
புல்லரிச்சு பாவம் என்னப்போலவே அலைபாயுது
நிலவில் காயும் வேட்டி சேலயும்
நம்ம பாத்து சோடி சேருது
சேத்துவச்ச காத்த துதி பாடுது சுதி சேருது
என்ன புது தாகம் அனலாகுதே என் தேகம்
யாரு சொல்லி தந்து வந்தது
காணா கனா வந்து கொல்லுது
இதுக்கு பேரு தான் மோட்சமா மோட்சமா மோட்சமா

ஒன்னவிட.. 


காட்டு வழி காளைங்க கழுத்து மணி
கேக்கயில நமக்கது கோயில் மணி
ராத்திரியில் புல்வெளி நனைக்கும் பனி
போத்திக்கிற நமக்கது மூடுதுணி

ஒன்னவிட... 

ஒன்கூட நான் கூடி இருந்திட
எனக்கு சென்மம் ஒன்னு போதுமா
நூறு சென்மம் வேணும்
அத கேக்குறேன் சாமிய

என்ன கேக்குற சாமிய?
நூறு சென்மம் ஒன்கூட
போதுமா?

நூறு சென்மம் நமக்கு போதுமா
வேற வரம் ஏதும் கேப்பமா
சாகா வரம் கேப்போம் அந்த சாமிய
உங்க சாமிய


காத்தா அலைஞ்சாலும் 
கடலாக நீ இருந்தாலும்
ஆகாசமா ஆன போதிலும்
என்ன உரு எடுத்த போதிலும்
சேர்ந்தே தான் பொறக்கணும்
இருக்கணும் கலக்கணும்

ஒன்னவிட இந்த ஒலகத்தில் ஒசந்தது ஒன்னுமில்ல ஒன்னுமில்ல
ஒன்னவிட ஒரு உறவுன்னு சொல்லிக்கிட யாருமில்ல எவளுமில்ல

வாழ்க்கை தர வந்தான் விருமாண்டி
வாழ்த்து சொல்ல சந்திரன் வருவான்டி
சாதிசனம் எல்லாம் அவன் தான்டி
கேட்டவரம் ஒடனே தந்தான்டி

ஒன்னவிட ஒரு உறவுன்னு சொல்லிக்கிட யாருமில்ல யாருமில்ல
என்னவிட..... ஒன்னவிட.....

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே - Itho enthan theivam munnaale Lyrics

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே


அவன் பூவிரியும் சோலையிலே மணப்பான்
இசை பூங்குயிலின் தேன்குரலில் இருப்பான்
அவன் பூவிரியும் சோலையிலே மணப்பான்
இசை பூங்குயிலின் தேன்குரலில் இருப்பான்

குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்
தளிர் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்
குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்
தளிர் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே


பல நூல் படித்து நீ அறியும் கல்வி
பொதுநலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வைக்
கண்டு தொழில் புரிந்து உயிர் வளர்க்கும் ஏழை
அவன் இதழ் மலரும் சிரிப்பொலியை கேட்டேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

ஆ..ஆ...ஆ....ஆ.... ஓ.. ஓ.. ஓ...ஓ..

காற்றின் மொழி ஒலியா இசையா - Katrin Mozhi Oliya Isaiyaa Lyrics

காற்றின் மொழி ஒலியா இசையா
பூவின் மொழி நிறமா மணமா
கடலின் மொழி அலையா நுரையா
காதல் மொழி விழியா இதழா

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை

காற்றின் மொழி ஒலியா இசையா
பூவின் மொழி நிறமா மணமா


காற்று வீசும்போது திசைகள் கிடையாது
காதல் பேசும்போது மொழிகள் கிடையாது
பேசும் வார்த்தை போல மௌனம் புரியாது
கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது
உலவித் திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது
காதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை

காற்றின் மொழி.....


வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்
வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும்
உண்மை உண்மையானால் கண்ணீர் மொழியாகும்
பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்
ஓசை தூங்கும் ஜாமத்தில் உச்சி மீன்கள் மொழியாகும்
ஆசை தூங்கும் இதயத்தில் அசைவு கூட மொழியாகும்

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை

காற்றின் மொழி ஒலியா இசையா
பூவின் மொழி நிறமா மணமா
கடலின் மொழி அலையா நுரையா
காதல் மொழி விழியா இதழா

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை

காற்றின் மொழி......

பார்த்தேனே உயிரின் வழியே - Paarthene Uyirin Valiye Song Lyrics

பார்த்தேனே உயிரின் வழியே
யார் கண்ணும் காணா முகமே
கல் என்று நினைத்தேன் உனையே
நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயா

எதில் நீ இருந்தாய்
எங்கோ மறைந்தாய்
உனைத்தேடி அலைந்தேன் எனக்குள்ளே தெரிந்தாய்
இதுபோதும் எனக்கு வேறு வரங்கள் நூறு வேண்டுமா
இறைவா இது தான் நிறைவா
உணர்ந்தேன் உனையே உனையே
மறந்தேன் எனையே எனையே

பார்த்தேனே உயிரின் வழியே
யார் கண்ணும் காணா முகமே
ஓ... கல் என்று நினைத்தேன் உனையே
நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயா


வேதங்கள் மொத்தம் ஓதி
யாகங்கள் நித்தம் செய்து
பூஜிக்கும் பக்தி அதிலும் உன்னைக் காணலாம்
பசியென்று தன்முன் வந்து 
கையேந்தி கேட்கும்போது
தன் உணவை தந்தால் கூட உன்னைக் காணலாம்
உனைக் காண பல கோடி இங்கு வாரி இறைக்கிறார்கள்
எளிதாக உனைச் சேர இங்கு யாரு நினைக்கிறார்கள்

அலங்காரம் அதில் நீ இல்லை
அகங்காரம் மனதில் இல்லை
துளி கள்ளம் கபடம் கலந்திடாத அன்பில் இருக்கிறாய்
உணர்ந்தேன் உனையே உனையே
மறந்தேன் எனையே எனையே


அகம் நீ ஜகம் நீ
அணுவான உலகின் அகலம் நீ
எறும்பின் இதய ஒலி நீ
களிரின் துதிக்கை கனமும் நீ

ஆயிரம் கை உண்டென்றால் நீ
ஒரு கை தரக்கூடாதா
ஈராயிரம் கண் கொண்டாய்
உன் ஒரு கண் எனைப் பாராதா
உன்னில் சரண் அடைந்தேன் இனி நீ கதியே

பார்த்தேனே உயிரின் வழியே
யார் கண்ணும் காணா முகமே
கல் என்று நினைத்தேன் உனையே
நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயா

வந்தாளப்பா வந்தாளப்பா - Vanthalappa Vanthalappa Lyrics

வந்தாளப்பா வந்தாளப்பா
வந்து ஜன்னலில நின்னாளப்பா
சொன்னாளப்பா சொன்னாளப்பா
சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா

ம்..ம்.. ம்..ம்...

வந்தாளப்பா வந்தாளப்பா
வந்து ஜன்னலில நின்னாளப்பா
சொன்னாளப்பா சொன்னாளப்பா
சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா
ஊரு மெச்சுற குணம் மட்டும் தான்
சொத்து சொகமுன்னு சொன்னாளப்பா

வந்தாளப்பா வந்தாளப்பா
வந்து ஜன்னலில நின்னாளப்பா
சொன்னாளப்பா சொன்னாளப்பா
சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா

ம்..ம்.. ம்..ம்...


மாசத்துல மார்கழி மாசம்
வருஷத்துல ஒரு தரம் தான்
மனசுக்குள்ள கேட்டுக்கிட்டாலே
மறுபடியும் ஒரு வரம் தான்

மாசத்துல மார்கழி மாசம்
வருஷத்துல ஒரு தரம் தான்
மனசுக்குள்ள கேட்டுக்கிட்டாலே
மறுபடியும் ஒரு வரம் தான்

வானவில் வளைஞ்சது போல
தலை குனிஞ்சு நின்னாளப்பா
வாழைமர தோரணத்தோட 
நாலு வைக்க சொன்னாளப்பா

அட ஊரோட ஒன்னாக சேர்ந்து
இப்போ ஊர்கோலம் போனாத்தான் ஆச்சு
பட்டு சேல கட்டி கெட்டி மேளம் கொட்டி
தங்க தாலி கட்ட வேணுமுன்னு சொன்னாளப்பா

வந்தாளப்பா வந்தாளப்பா
வந்து பக்கத்துல நின்னாளப்பா
சொன்னாளப்பா சொன்னாளப்பா
சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா


கூட்டுக்குள்ள குடியிருந்தாலும் கூடவே நானிருப்பேன்
கூடுகட்ட போறவ தானே வாழ்க்கையில துணையிருப்பேன்
கூட்டுக்குள்ள குடியிருந்தாலும் கூடவே நானிருப்பேன்
கூடுகட்ட போறவ தானே வாழ்க்கையில துணையிருப்பேன்

தூக்கணாங்குருவிக் கூடு காத்தடிச்சு சாயாதப்பா
தூக்கணாங்குருவிக் கூடு காத்தடிச்சு சாயாதப்பா

நான் சொல்லுறத சொல்லி முடிச்சாச்சு
நான் கேட்டதெல்லாம் என்னங்க ஆச்சு
தினம் காலை வரும் மாலை வரும்
ஆனா என்னப்போல பக்கத்துல நிக்காதப்பா

வந்தாளப்பா வந்தாளப்பா
வந்து ஜன்னலில நின்னாளப்பா
சொன்னாளப்பா சொன்னாளப்பா
சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா

ஊரு மெச்சுற குணம் மட்டும் தான்
சொத்து சொகமுன்னு சொன்னாளப்பா

வந்தாளப்பா வந்தாளப்பா
வந்து ஜன்னலில நின்னாளப்பா
சொன்னாளப்பா சொன்னாளப்பா
சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா

குக்கு கூ கூ குயில் பாட்டு - Kucku Koo Koo Kuyil Pattu Lyrics

குக்கு கூ கூ... குக்கு கூ கூ...
குயில் பாட்டு கேக்குது
குயில் பாட்டை குளிர் காற்று
செவியோரம் சேர்க்குது

அடி சின்ன மணிக்குயிலே
எந்தன் சிந்தை மயங்குது பார்
இன்ப சிந்து படித்திடத்தான்
இங்கு சொல்லிக் கொடுத்தது யார்
இசைத் தேன் வந்து தேன் வந்து பாயுது பாயுது

தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர தீம் 
திர
தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர தீம் 

தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர தீம் 


விண்ணை விட்டு நிலத்தில் இறங்கிடும்
மண்ணை தொட்டு நடனம் புரிந்திடும்
தூரல் மழை துளியை தெளித்திடும் ஈர முகிலே
பச்சைப் பயிர் உலகில் தழைப்பதும்
பட்டமரம் திரும்ப கிளைப்பதும்
தாகங்களை நொடியில் தணிப்பதும் உங்கள் செயலே

எந்த வேருக்கும் நீர் விடும் மனது
இங்கு யாருக்கும் வாய்ப்பது அரிது
அம்மம்மா... மக்கள் தாகங்கள் தீர்ந்திட பாடடி பாடடி குயிலே

தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர தீம் 


தென் பொதிகை மடியில் பிறந்தவள்
தென்மதுரை நகரில் புகுந்தவள்
தென் தமிழர் உணர்வில் கலந்தவள் தென்றல் மகளே
உன்னை இங்கு தடுக்க முடியுமா
ஆணையிட்டு ஒடுக்க முடியுமா
கூட்டுக்குள்ளே அடைக்க முடியுமா சொல்லு மகளே

இந்த பெண்ணினம் அப்படி இருக்கும்
இது உன்னிலும் என்பதை நினைக்கும்
அம்மம்மா...  பெண்மை வாழ்கென்று வாழ்கென்று பாடடி பாடடி குயிலே

தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர தீம் 

குக்கு கூ கூ... குக்கு கூ கூ...
குயில் பாட்டு கேக்குது
குயில் பாட்டை குளிர் காற்று
செவியோரம் சேர்க்குது

அடி சின்ன மணிக்குயிலே
எந்தன் சிந்தை மயங்குது பார்
இன்ப சிந்து படித்திடத்தான்
இங்கு சொல்லிக் கொடுத்தது யார்
இசைத் தேன் வந்து தேன் வந்து பாயுது பாயுது

தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர தீம் 

தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர தீம்

யார் பெற்ற மகனோ நீ - Yaar Petra Magano Nee Lyrics

யார் பெற்ற மகனோ நீ
யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும் குலசாமி இவன்

ஊர் செய்த தவமோ இந்த
ஊர் செய்த தவமோ
மண்ணை காப்பாற்றிடும் இவன் ஆதி சிவன்

அடி வேர் தந்த வேர்வைக்கு ஈடில்லையே
இந்த ஊர் பூக்கும் நேரத்தில் நீ இல்லையே
யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ
யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ

யார் பெற்ற மகனோ நீ
யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும் குலசாமி இவன்


கைவீசும் பூங்காத்தே நீ எங்கு போனாயோ
யார் என்று சொல்லாமல் நிழல் போல நடந்தாயோ
முறை தான் ஒரு முறை தான் உனைப் பார்த்தால் அது வரமே
நினைத்தால் உனை நினைத்தால் கண்ணில் கண்ணீர் மழை வருமே

யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ
யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ

யார் பெற்ற மகனோ நீ
யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும் குலசாமி இவன்


அடி வேர் தந்த வேர்வைக்கு ஈடில்லையே
இந்த ஊர் பூக்கும் நேரத்தில் நீ இல்லையே
யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ
யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ

யார் பெற்ற மகனோ நீ
யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும் குலசாமி இவன்