பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன் - Paarthu Paarthu Kangal Poothirupen Song Lyrics

பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாய் என
பூத்து பூத்து புன்னகை சேர்த்து வைப்பேன்
நீ வருவாய் என
தென்றலாக நீ வருவாயா ஜன்னலாகிறேன்
தீர்த்தமாக நீ வருவாயா மேகமாகிறேன்
வண்ணமாக நீ வருவாயா பூக்களாகிறேன்
வார்த்தையாக நீ வருவாயா கவிதையாகிறேன்

நீ வருவாய் என.... நீ வருவாய் என....

பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாய் என
பூத்து பூத்து புன்னகை சேர்த்து வைப்பேன்
நீ வருவாய் என


கரைகளில் ஒதுங்கிய கிளிஞ்சல்கள் உனக்கென
தினம் தினம் சேகரித்தேன்
குமுதமும் விகடனும் நீ படிப்பாய் என
வாசகன் ஆகிவிட்டேன்
கவிதை நூலோடு கோல புத்தகம்
உனக்காய் சேமிக்கிறேன்
கனவில் உன்னோடு என்ன பேசலாம்
தினமும் யோசிக்கிறேன்
ஒரு காகம் காவென கரைந்தாலும்
என் வாசல் பார்க்கிறேன்

நீ வருவாய் என... நீ வருவாய் என..

பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாய் என
பூத்து பூத்து புன்னகை சேர்த்து வைப்பேன்
நீ வருவாய் என


எனக்குள்ள வேதனை நிலவுக்கு தெரிந்திடும்
நிலவுக்கும் ஜோடியில்லை
எழுதிய கவிதைகள் உனை வந்து சேர்ந்திட
கவிதைக்கும் கால்கள் இல்லை
உலகில் பெண் வர்க்கம் நூறு கோடியாம்
அதிலே நீ யாரடி
சருகாய் அன்பே நான் காத்திருக்கிறேன்
எங்கே உன் காலடி
மணி சரி பார்த்து தினம் வழி பார்த்து
இரு விழிகள் தேய்கிறேன்

நீ வருவாய் என... நீ வருவாய் என...

பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாய் என
பூத்து பூத்து புன்னகை சேர்த்து வைப்பேன்
நீ வருவாய் என
தென்றலாக நீ வருவாயா ஜன்னலாகிறேன்
தீர்த்தமாக நீ வருவாயா மேகமாகிறேன்
வண்ணமாக நீ வருவாயா பூக்களாகிறேன்
வார்த்தையாக நீ வருவாயா கவிதையாகிறேன்

நீ வருவாய் என... நீ வருவாய் என...
நீ வருவாய் என... நீ வருவாய் என...

எந்தன் உயிரே எந்தன் உயிரே - Enthan Uyire Enthan Uyire Lyrics

எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே

எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே
என்னை மறந்தேன் என்னை மறந்தேன்
நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே

சொல்லாமல் என்னை எடுத்தாய்
பதிலாக உன்னை கொடுத்தாய்
உலகத்தின் பூக்களே
உயிரிலே பூத்ததே
உன்னருகே நானிருந்தால்
தினம் உன்னருகே நானிருந்தால்

எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே


என்னை வெல்ல இங்கு யாரும் இல்லை என்ற
எண்ணத்தில் நானிருந்தேன்
இன்று உன்னைப் பார்த்தவுடன் என்னை தோற்றுவிட்டு
வெட்கத்தில் தலை குனிந்தேன்

அன்பே ஓர் நிமிடம் உன்னை மறந்திருக்க
என்னாலே முடியவில்லை
இங்கு எந்தன் நாள் முழுக்க உன்னை நினைத்திருக்க
ஒரு போதும் அலுக்கவில்லை

சின்னச் சின்ன கூத்து நீ செய்யுறத பாத்து
உள்ளுக்குள்ளே நான் சிரித்தேன்
வண்ண வண்ண பாதம் நீ வச்சு வச்சு போகும்
அந்த தரையாய் நான் இருப்பேன்

கவலைகள் மறக்குதே கவிதைகள் பிறக்குதே
உன்னருகே நானிருந்தால்
தினம் உன்னருகே நானிருந்தால்

எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே


உன்னைச் சேர்வதற்கு யுத்தம் செய்யவில்லை
ஆனாலும் நீ கிடைத்தாய்
எங்கு எங்கோ சுற்றி வந்த என்னை நிற்க வைத்து
அடையாளம் நீ கொடுத்தாய்

உன்னைச் சேரும் அந்த நாளை எண்ணி எண்ணி
பத்து விரல் நான் மடித்தேன்
புது மஞ்சத் தாலி மின்ன மெட்டி கேலி பண்ண
பக்கத்தில் நான் கிடப்பேன்

கண்ணில் மீனை வச்சு புத்தம் புது தூண்டில்
போட்டது நீயல்லவா
கள்ளத்தனம் இல்லா உன் வெள்ளை உள்ளம் கண்டு
விழுந்தது நானல்லவா

உலகமே காலடியில் கரைந்ததே ஓர் நொடியில்
உன்னருகே நானிருந்தால்
தினம் உன்னருகே நானிருந்தால்

எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே
என்னை மறந்தேன் என்னை மறந்தேன்
நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே


சொல்லாமல் என்னை எடுத்தாய்
பதிலாக உன்னை கொடுத்தாய்
உலகத்தின் பூக்களே
உயிரிலே பூத்ததே
உன்னருகே நானிருந்தால்
தினம் உன்னருகே நானிருந்தால்

எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே

அன்புக்கதை வம்புக்கதை - Anbukathai Vambukathai Lyrics

அன்புக்கதை வம்புக்கதை
எந்தன் கதை காதல் கதையே
சின்னக்கதை வண்ணக்கதை
அந்தக் கதை மோதல் கதையே

அன்புக்கதை வம்புக்கதை
எந்தன் கதை காதல் கதையே
சின்னக்கதை வண்ணக்கதை
அந்தக் கதை மோதல் கதையே

அன்புக்கதை வம்புக்கதை
எந்தன் கதை காதல் கதையே
சின்னக்கதை வண்ணக்கதை
அந்தக் கதை மோதல் கதையே

கண்பட்டதனால் புண்பட்டது நான்
கண்பட்டதனாலே மனம் புண்பட்டது நானே
அந்தக்கதை துன்பக்கதையே
அன்புக்கதை வம்புக்கதை
எந்தன் கதை காதல் கதையே
சின்னக்கதை வண்ணக்கதை
அந்தக் கதை மோதல் கதையே


பூவொன்று மணம்வீசி புதுராகம் பாட
புரியாத புதிராகி திசை மாறிப்போக
பூவொன்று மணம்வீசி புதுராகம் பாட
புரியாத புதிராகி திசை மாறிப்போக
காதல் ஒரு ஓடம் அது ஓடும்பொழுது
நாளும் தடுமாறும் அலைமோதும் பொழுது
காதல் ஒரு ஓடம் அது ஓடும்பொழுது
நாளும் தடுமாறும் அலைமோதும் பொழுது
கருவில் உருவாகும் ஒரு உயிரின் கதையே
உயிரில் உறவாகும் அது காதல் கதையே
பழிபாவம் அறியாது அது எந்தன் கதையே

அன்புக்கதை வம்புக்கதை
எந்தன் கதை காதல் கதையே
சின்னக்கதை வண்ணக்கதை
அந்தக் கதை மோதல் கதையே


நீரோடும் நதியோரம் நானும் ஒரு தோணி
கரைசேர முடியாமல் வாழும் ஒரு ஞானி
நீரோடும் நதியோரம் நானும் ஒரு தோணி
கரைசேர முடியாமல் வாழும் ஒரு ஞானி
காணும் விழியோரம் புது காதல் வரவு
காதல் வழிமாற தினம் கண்ணீர் செலவு
காணும் விழியோரம் புது காதல் வரவு
காதல் வழிமாற தினம் கண்ணீர் செலவு
வாழும் வரைதானே வரும் வரவும் செலவும்
போகும் வரைதானே வரும் உறவும் பிரிவும்
ஒரு பாசம் அதில் நேசம் அது யாவும் கனவு

அன்புக்கதை வம்புக்கதை
எந்தன் கதை காதல் கதையே
சின்னக்கதை வண்ணக்கதை
அந்தக் கதை மோதல் கதையே

கண்பட்டதனால் புண்பட்டது நான்
கண்பட்டதனாலே மனம் புண்பட்டது நானே
அந்தக்கதை துன்பக்கதையே
அன்புக்கதை வம்புக்கதை
எந்தன் கதை காதல் கதையே
சின்னக்கதை வண்ணக்கதை
அந்தக் கதை மோதல் கதையே

அன்புக்கதை வம்புக்கதை
எந்தன் கதை காதல் கதையே
சின்னக்கதை வண்ணக்கதை
அந்தக் கதை மோதல் கதையே

சின்ன சின்ன கண்ணனுக்கு - Chinna Chinna Kannanuku Lyrics

சின்ன சின்ன கண்ணனுக்கு
என்ன தான் புன்னகையோ
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்ன தான் புன்னகையோ
கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா

சின்ன சின்ன கண்ணனுக்கு
என்ன தான் புன்னகையோ
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்ன தான் புன்னகையோ


பால் மணக்கும் பருவத்திலே
உன்னைப்போல் நானிருந்தேன்
பட்டாடை தொட்டிலிலே
சிட்டு போல் படுத்திருந்தேன்
அந்நாளை நினைக்கையிலே
என் வயது மாறுதுடா
உன்னுடன் ஆடிவர உள்ளமே தாவுதடா
கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா

சின்ன சின்ன கண்ணனுக்கு
என்ன தான் புன்னகையோ


ஒருவரின் துடிப்பினிலே
விளைவது கவிதையடா
இருவரின் துடிப்பினிலே
விளைவது மழலையடா
ஒருவரின் துடிப்பினிலே
விளைவது கவிதையடா
இருவரின் துடிப்பினிலே
விளைவது மழலையடா
ஈரேழு மொழிகளிலே
என்ன மொழி பிள்ளை மொழி
கள்ளமற்ற வெள்ளை மொழி
தேவன் தந்த தெய்வ மொழி
கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா

சின்ன சின்ன கண்ணனுக்கு
என்ன தான் புன்னகையோ


பூப்போன்ற நெஞ்சினிலும்
முள்ளிருக்கும் பூமியடா
பொல்லாத கண்களடா
புன்னகையும் வேஷமடா
பூப்போன்ற நெஞ்சினிலும்
முள்ளிருக்கும் பூமியடா
பொல்லாத கண்களடா
புன்னகையும் வேஷமடா
நன்றி கெட்ட மாந்தரடா
நானறிந்த பாடமடா
நன்றி கெட்ட மாந்தரடா
நானறிந்த பாடமடா
பிள்ளையாய் இருந்துவிட்டால்
இல்லை ஒரு துன்பமடா
கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா

சின்ன சின்ன கண்ணனுக்கு
என்ன தான் புன்னகையோ
கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா

சின்ன சின்ன கண்ணனுக்கு
என்ன தான் புன்னகையோ

சொன்னது நீதானா - Sonnathu Neethana Lyrics

சொன்னது நீதானா 
சொன்னது நீதானா 
சொல் சொல் சொல் என் உயிரே
சொன்னது நீதானா 
சொல் சொல் சொல் என் உயிரே

சம்மதம் தானா
சம்மதம் தானா
ஏன் ஏன் ஏன் என் உயிரே
ஏன் ஏன் ஏன் என் உயிரே

சொன்னது நீதானா 
சொல் சொல் சொல் என் உயிரே

இன்னொரு கைகளிலே
யார் யார் நானா
எனை மறந்தாயா
ஏன் ஏன் ஏன் என் உயிரே

சொன்னது நீதானா 
சொல் சொல் சொல் என் உயிரே


மங்கள மாலை குங்குமம் யாவும்
தந்ததெல்லாம் நீதானே
மணமகளை திருமகளாய்
நினைத்ததெல்லாம் நீதானே
மங்கள மாலை குங்குமம் யாவும்
தந்ததெல்லாம் நீதானே
மணமகளை திருமகளாய்
நினைத்ததெல்லாம் நீதானே
என் மனதில் உன் மனதை
இணைத்ததும் நீதானே
இறுதிவரை துணையிருப்பேன்
என்றதும் நீதானே

இன்று சொன்னது நீதானா 
சொல் சொல் சொல் என் உயிரே


தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை
தெருவினிலே விழலாமா
தெருவினிலே விழுந்தாலும்
வேறோர் கைதொடலாமா
தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை
தெருவினிலே விழலாமா
தெருவினிலே விழுந்தாலும்
வேறோர் கைதொடலாமா
ஒரு கொடியில் ஒருமுறை தான்
மலரும் மலரல்லவா
ஒரு மனதில் ஒருமுறை தான்
வளரும் உறவல்லவா

இன்னொரு கைகளிலே....

பதினெட்டு வயது இளமொட்டு மனது - Pathinettu Vayathu Ilamottu Lyrics

லலலா லல லலலலலா லலலா லல லலலலலா
லலலலலா லாலலா லலலல லாலாலாலாலாலா

பதினெட்டு வயது இளமொட்டு மனது
ஏங்குது பாய் போட
பனிகொட்டும் இரவு பால் வண்ண நிலவு
வேண்டுது உறவாட
கங்கை போலே காவிரி போலே ஆசைகள் ஊறாதா
சின்னப்பொண்ணு செவ்வரிக்கண்ணு ஜாடையில் கூறாதா
பதினெட்டு வயது இளமொட்டு மனது
ஏங்குது பாய் போட


மாணிக்கத்தேரு மணிமுத்து ஆறு
மாணிக்கத்தேரு மணிமுத்து ஆறு
போதும் போதும் நீ ஒதுங்கு.. ஆஹாங்
அந்த பாயப்போட்டுத் தான் ஒறங்கு
நான் விடமாட்டேன் தூண்டில போட்டேன்
காலந்தோறும் நீ எனக்கு.. ஐயோ
இது காலதேவனின் கணக்கு
கூசுது ஒடம்பு குலுங்குது நரம்பு
நீ என்ன ஒரசாதே.. ஓ.. 
கூச்சங்கள் எதுக்கு ஆண்மகன் உனக்கு
நீ என்ன வெலகாதே...

ராத்திரி நமக்கு முதல் ராத்திரி
பால் பழம் கொண்ட பாத்திரம்
பக்கம் நெருங்கிட விருந்திட ஆசை விடுமா
சும்மா நின்னா மாமன கண்டு
தலையணை சிரிக்காதா
சூரியன் வந்து சுள்ளுனு சுட்டா
தாமரை வெடிக்காதா

ஆ.. ஆ...ஆ...ஆ..ஆ..


மாங்கனிச்சாறும் செவ்விளநீரும்
மாங்கனிச்சாறும் செவ்விளநீரும்
மேலும் கீழும் தான் இனிக்க
அவை மீண்டும் மீண்டும் நீ எடுக்க
மூக்குத்திப்பூவே மோக நிலாவே
தேன வாரி தெளிக்க
அதில் தாகம் தீர நான் குளிக்க
மன்மத பானம் காயுற நேரம்
வீரத்த நெலநாட்டு
மாலையில் தொடங்கி காலையில் அடங்கும்
வாலிப விளையாட்டு

பூவுடல் புரண்டு வரும் பாற்கடல்
தீண்டினாள் எனை தூண்டினாள்
அவள் வலைகளை விரித்ததும் நானும் விழுந்தேன்
மஞ்சத்தாலி முடிஞ்ச பின்னாலே
மாப்பிள்ள நீயாச்சு
வெட்கம் அச்சம் இவைகளுக்கின்று
விடுமுறை நாளாச்சு

பதினெட்டு வயது இளமொட்டு மனது
ஏங்குது பாய் போட
பனிகொட்டும் இரவு பால் வண்ண நிலவு
வேண்டுது உறவாட

வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர - Vandikaran Sontha Ooru Lyrics

வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர
வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர
சண்டித்தனம் செய்யலாமா குதிரை
சாட்டையுடன் நிக்கிறப்ப எதிர
சிந்திக்குது அச்சப்பட்டு குதிரை
ஓ.. பொன்னப்போலதான் பூவப்போலதான்
கட்டிப் பாப்பவன் நான்தான் நான்தான்
ஓ.. கட்டிப்பாக்கவும் தட்டிக்கேக்கவும்
நீயும் பாக்கணும் நாள் தான் நாள் தான்

வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர
சண்டித்தனம் செய்யலாமா குதிரை
சாட்டையுடன் நிக்கிறப்ப எதிர
சிந்திக்குது அச்சப்பட்டு குதிரை


முன்னால தான் மூடிவச்ச சேலை
ஹோஹோ ஹொய்
முத்தாடத்தான் தூண்டுதடி ஆள
ஹோஹோ ஹொய்
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
கண்ணால தான் டாவடிக்கும் வேளை
காட்டி இங்கு நிக்கிறியே வால
சும்மா நின்னா வேகம் தான் வருது
வெக்கப்போர பாத்துச்சே எருது
கண்ணாலந்தான் ஆகலே நகரு
கிட்டவந்தா ஆயிடும் தவறு
அம்மாடி ஆத்தாடி கேட்டுக்கிட்டேன் மல்லாடி

வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர
இந்த வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர
சண்டித்தனம் செய்யலாமா குதிரை
சாட்டையுடன் நிக்கிறப்ப எதிர
சிந்திக்குது அச்சப்பட்டு குதிரை


ஏத்தம் ஒன்னு ஓடுகிற போது
ஹோஹோ ஹொய்
ஏத்துக்காத நெல்லுவயல் ஏது
ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்.. ஆ.. ஆ...ஆ..
கேணித்தண்ணி எங்கே போகும் சொல்லு
காலம் வர காத்திருக்கும் நெல்லு
ஒத்துக்கடி ஏறுதடி ஆவல்
மத்ததுக்கு நான் தான் காவல்
துப்பறிய பாக்குறே லேசா
ஒன்னப்பத்தி தெரியும் ராசா
அட போட்டானே பூபானம் வேளக்கெட்ட மம்முதா..

வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர
இந்த வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர
சண்டித்தனம் செய்யலாமா குதிரை
சாட்டையுடன் நிக்கிறப்ப எதிர
சிந்திக்குது அச்சப்பட்டு குதிரை
ஓ.. பொன்னப்போலதான் பூவப்போலதான்
கட்டிப் பாப்பவன் நான்தான் நான்தான்
ஓ.. கட்டிப்பாக்கவும் தட்டிக்கேக்கவும்
நீயும் பாக்கணும் நாள் தான் நாள் தான்

வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர
சண்டித்தனம் செய்யலாமா குதிரை
சாட்டையுடன் நிக்கிறப்ப எதிர
சிந்திக்குது அச்சப்பட்டு குதிரை
மதுர குதிரை...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா - Super Staru Yaarunu Ketta Lyrics

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா
சின்னக் கொழந்தையும் சொல்லும் கண்ணா
ஒங்க பேர ஒரு தரம் சொன்னா
நிமிர்ந்து எழுந்திடும் புல்லும்
மேக்கப்ப ஏத்துங்க கெட்டப்ப மாத்துங்க
செட்டப்ப மாத்தாதீங்க

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா
சின்னக் கொழந்தையும் சொல்லும் கண்ணே
எனது பேர ஒரு தரம் சொன்னா
நிமிர்ந்து எழுந்திடும் புல்லும்
மேக்கப்பு ஏறலாம் கெட்டப்பு மாறலாம்
செட்டப்பு மாறாதம்மா.. ஹ ஹ ஹ...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா
சின்னக் கொழந்தையும் சொல்லும் கண்ணா
ஒங்க பேர ஒரு தரம் சொன்னா
நிமிர்ந்து எழுந்திடும் புல்லும்


உள்ளங்கை சும்மா அரிக்குது அம்மா
அதுக்கு வைத்தியம் உண்டா
போட்ட லவுக்க துடிக்குது ஐயா
இதுக்கு வைத்தியம் உண்டா
கைவசம் வைத்தியம் மெத்தை இருக்கு
காரியம் மீறினா மெத்தை இருக்கு
ஹோஹொய் ஹோஹொய் ஹோஹொய் ஹொய்
கண்ணனே உன்னிடம் வம்பு எதுக்கு
கட்டிலோ ரெண்டுக்கு சொல்லி இருக்கு
எங்கெங்கு சுகமென்று இலக்கணம் இருக்கு

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா
சின்னக் கொழந்தையும் சொல்லும் 
ஸ்யூர் ஸ்யூர்
ஒங்க பேர ஒரு தரம் சொன்னா
நிமிர்ந்து எழுந்திடும் புல்லும்
ஹ ஹ ஹ...
ஹ ஹ ஹ...


நெத்தியில் புரளும் கொத்தமுடி விலக்கி
முத்தங்கள் தர ஒரு ஆச
கண்மணி ஒனது கால் கொலுசெடுத்து
கைகளில் கட்டிக்கொள்ள ஆச
என்னமோ மாறுது புத்தி ஒனக்கு
என் குங்குமம் எங்கயோ ஒட்டி இருக்கு
ஆணுக்கும் பெண்ணுக்கும் பந்தம் இருக்கு
நான் அள்ளவோ கிள்ளவோ சொந்தம் இருக்கு
அப்பா.. என்றாலும் அதுக்கொரு இடம் பொருள் இருக்கு

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா
சின்னக் கொழந்தையும் சொல்லும் கண்ணே
எனது பேர ஒரு தரம் சொன்னா
நிமிர்ந்து எழுந்திடும் துள்ளும்
மேக்கப்பு ஏறலாம் கெட்டப்பு மாறலாம்
செட்டப்பு மாறாதம்மா.. ஹோய்

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா
சின்னக் கொழந்தையும் சொல்லும் கண்ணா கேளு
ஒங்க பேர ஒரு தரம் சொன்னா
நிமிர்ந்து எழுந்திடும் புல்லும்


விக்ரம் விக்ரம் - Vikram Vikram Lyrics

விக்ரம் விக்ரம்..
விக்ரம் விக்ரம்..
நான் வெற்றி பெற்றவன் 
இமயம் தொட்டுவிட்டவன்
பகையை முட்டிவிட்டவன்
தீயை சுட்டுவிட்டவன்
என் வீரமே வாகையை சூடும்

விக்ரம் விக்ரம்..
விக்ரம் விக்ரம்..

தரததா தரததா தரததா ..


பேர் செல்லட்டும் என் பேர் வெல்லட்டும்
பேர் செல்லட்டும் என் பேர் வெல்லட்டும்
ரதகஜபட எங்கும் செல்லும்
விண்ணை வெல்லும்
வானும் மண்ணும் ஹஹா..
என் பேர் சொல்லும்
ஓ.. உறவுகள் எனக்கென இருந்தது
ஆ.. கனவுகள் பாதியில் கலைந்தது
ஆம் பழி எனும் விதை நெஞ்சில் விழுந்தது
ஹா.. பயிரென தினம் அது வளர்ந்தது
யுத்தத்தால் அதோ அதோ விடியுது
சத்தத்தால் அராஜகம் அழியுது
ரத்தத்தால் அதோ தலை உருளுது
சொர்க்கங்கள் இதோ இதோ தெரியுது
துடிக்குது புஜம் ஜெயிப்பது நிஜம்

தகிட தகதிமிதா.. தீம்த 
தகிட தகதிமிதா.. தீம்த
தகிட தகதிமிதா.. தீம்த.. தகிட ஹூஹூஹா..

விக்ரம் விக்ரம்..
விக்ரம் விக்ரம்..

தததா தததா தததா..


யார் வட்டங்கள் இவை யார் சட்டங்கள்
யார் வட்டங்கள் இவை யார் சட்டங்கள்
இனி ஒரு விதி செய்வோம் இன்றே
ஜெகத்தை வென்றே
தீமை கொன்றே
செய்தோம் நன்றே
ஹே.. பகைவனுக்கருள்வது பிழையே
வா.. பகைவனை அழிப்பது முறையே
ம்.. பொறுப்பது புழுக்களின் இனமே
ஆம்.. அழிப்பது புலிகளின் குணமே
எட்டிப்போ இதோ புலி வருகுது
திட்டத்தால் அடாவடி ஒழியுது
சித்தத்தில் மனோபலம் வருகுது
மொத்தத்தில் அதோ பகை அழியுது
துடிக்குது புஜம் ஜெயிப்பது நிஜம்

தகிட தகதிமிதா.. தீம்த 
தகிட தகதிமிதா.. தீம்த
தகிட தகதிமிதா.. தீம்த.. தகிட ஹூஹூஹா..

விக்ரம் விக்ரம்..
விக்ரம் விக்ரம்..

நான் வெற்றி பெற்றவன் 
இமயம் தொட்டுவிட்டவன்
பகையை முட்டிவிட்டவன்
தீயை சுட்டுவிட்டவன்
என் வீரமே வாகையை சூடும்

விக்ரம் விக்ரம்..
விக்ரம் விக்ரம்..

வெள்ளிமலை மன்னவா வேதம் - Vellimalai Mannavaa Vedam Lyrics

வெள்ளிமலை மன்னவா வேதம் நீ அல்லவா
வெள்ளிமலை மன்னவா வேதம் நீ அல்லவா
முன்னோர்க்கு முன்னவா மூண்ட கதை சொல்லவா
முன்னோர்க்கு முன்னவா மூண்ட கதை சொல்லவா

வெள்ளிமலை மன்னவா... ஆ...

வானுலகம் விழுவதென்ன வானவர் தான் அழுவதென்ன
வானுலகம் விழுவதென்ன வானவர் தான் அழுவதென்ன
சேனை அசுரர் குலம் செயக்கொடி தான் கொள்வதென்ன
சேனை அசுரர் குலம் செயக்கொடி தான் கொள்வதென்ன

தேவர் குரல் கேட்டு உன் திருவடியைக் காட்டு
அபயக்கரம் நீட்டு உன் அருள் முகத்தைக் காட்டு
தேவர் குரல் கேட்டு உன் திருவடியைக் காட்டு
அபயக்கரம் நீட்டு உன் அருள் முகத்தைக் காட்டு

ஆ.. ஆ...ஆ...

வெள்ளிமலை மன்னவா வேதம் நீ அல்லவா
முன்னோர்க்கு முன்னவா மூண்ட கதை சொல்லவா
வெள்ளிமலை மன்னவா.. ஆ....

நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால் - Ninaivugal Nenjinil Puthainthinal Lyrics

நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்
உன் உருவம் கண்களிலே பதிந்ததினால்
கண்ணீர் விட்டு கண்ணீர் விட்டு அழிக்கின்றேன்

தாய் தந்தைக்காக எனை பிரிய
காதலைக் காகிதமாய் தூக்கி எறிய
பெண்ணே உன்னால் முடிகிறதே
என்னால் ஏனோ முடியவில்லை

எனக்கே எனக்கே என்னை பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை

நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்
உன் உருவம் கண்களிலே பதிந்ததினால்
கண்ணீர் விட்டு கண்ணீர் விட்டு அழிக்கின்றேன்


காத்திருந்து காத்திருந்து பழகியவன்
நீ என்னைக் கடக்கின்ற ஒரு நொடிக்காக
காத்திருந்து காத்திருந்து பழகியவன்

கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன்
நீ என்னைக் காதலிக்க உன் தாய்மொழியை
கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன்

நொடிகள் எல்லாம் நோய்ப்பட்டு
எனை சுமந்துபோக மறுக்கிறதே
மொழிகள் எல்லாம் முடமாகி
என் மௌனத்தைக் கூட எரிக்கிறதே
சுவாசிக்கக் கூட முடியவில்லை
எனை வாசிக்க மண்ணில் எவருமில்லை

என்னை எனக்கே பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை

நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்
உன் உருவம் கண்களிலே பதிந்ததினால்
கண்ணீர் விட்டு கண்ணீர் விட்டு அழிக்கின்றேன்

தாய் தந்தைக்காக எனை பிரிய
காதலைக் காகிதமாய் தூக்கி எறிய
பெண்ணே உன்னால் முடிகிறதே
என்னால் ஏனோ முடியவில்லை

எனக்கே எனக்கே என்னை பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை

சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே - Chandirane Sooriyane Natchathira Lyrics

சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே
சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே
கிழக்கு வெளுத்தடா மனசும் அங்கே சிவந்ததடா
சுட்டவடு ஆறல நெஞ்சில் பட்டபின்பு மாறல
சுட்டவடு ஆறல பட்டபின்பு மாறல

சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே
சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே


நெஞ்சிலே நெருப்ப வச்சா நீரும் அணைக்கமுடியுமா
கண்ணிலே முள்ளு தச்சா இமையும் மூட முடியுமா
பாரதக்கதையும் கூட பழியில் முடிஞ்ச காவியந்தான்
இருப்பதும் இறப்பதும் அந்த இயற்கையோட கையில
இருப்பதும் இறப்பதும் அந்த இயற்கையோட கையில
நான் மறஞ்சபின்பும் நிலைப்பது என் உயிர் எழுதும் கதையில

சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே
சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே


நீயும் நானும் வாழணும்னா தீமையெல்லாம் தீயிடு
கெட்டதிங்கு அழியணும்னா கொடுமையெல்லாம் பலிகொடு
கண்ணன் கீதையில சொன்னதப்போல் நடந்திடு
பச்சப்பயிர் வாழ மண்ணில் களையெடுத்தா தவறில்ல
பச்சப்பயிர் வாழ மண்ணில் களையெடுத்தா தவறில்ல
அந்த முடிவில் தானே தொடக்கம் தேடி புதுக்கத நான் எழுதல

சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே
சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே
கிழக்கு வெளுத்தடா மனசும் அங்கே சிவந்ததடா
சுட்டவடு ஆறல நெஞ்சில் பட்டபின்பு மாறல
சுட்டவடு ஆறல பட்டபின்பு மாறல

சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே
சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே

துள்ளித் திரிந்ததொரு காலம் - Thulli Thirinthathoru Kaalam Lyrics

துள்ளித் திரிந்ததொரு காலம்
பள்ளிப் பயின்றதொரு காலம்
துள்ளித் திரிந்ததொரு காலம்
பள்ளிப் பயின்றதொரு காலம்
காலங்கள் ஓடுது பூங்கொடியே பூங்கொடியே
இன்பத்தை தேடுது பூங்கொடியே பூங்கொடியே

துள்ளித் திரிந்ததொரு காலம்
பள்ளிப் பயின்றதொரு காலம்


அன்னை மடிதனில் சிலநாள்
அதை விடுத்தொரு சிலநாள்
திண்ணை வெளியினில் சிலநாள்
உண்ண வழியின்றி சிலநாள்
நட்பின் அரட்டைகள் சிலநாள்
நம்பித்திரிந்ததும் பலநாள்
கானல் நீரினில் சிலநாள்
கடல் நடுவிலும் சிலநாள்
கன்னி மயக்கத்தில் திருநாள்
கையில் குழந்தையும் அதனால்
ஓடி முடிந்தது காலங்கள் காலங்கள் பூங்கொடியே

துள்ளித் திரிந்ததொரு காலம்
பள்ளிப் பயின்றதொரு காலம்
துள்ளித் திரிந்ததொரு காலம்
பள்ளிப் பயின்றதொரு காலம்


துள்ளும் அலை என அலைந்தேன்
நெஞ்சில் கனவினை சுமந்தேன்
வாழ்க்கைப் பயணத்தை தொடர்ந்தேன்
வானம் எல்லையென நடந்தேன்
காதல் வேள்விதனில் விழுந்தேன்
கேள்விக்குறியென வளைந்தேன்
உன்னை நினைத்திங்கு சிரித்தேன்
உண்மைக் கதைதனை மறைத்தேன்
பதில் சொல்லிட நினைத்தேன்
சொல்ல மொழியின்றி தவித்தேன்
வாழ்கின்ற வாழ்வெல்லாம் நீர்க்குமிழ் போன்றது பூங்கொடியே

துள்ளித் திரிந்ததொரு காலம்
பள்ளிப் பயின்றதொரு காலம்
துள்ளித் திரிந்ததொரு காலம்
பள்ளிப் பயின்றதொரு காலம்
காலங்கள் ஓடுது பூங்கொடியே பூங்கொடியே
இன்பத்தை தேடுது பூங்கொடியே பூங்கொடியே

துள்ளித் திரிந்ததொரு காலம்
பள்ளிப் பயின்றதொரு காலம்
துள்ளித் திரிந்ததொரு காலம்
பள்ளிப் பயின்றதொரு காலம்

தாலாட்டு கேட்காத பேரிங்கு யாரு - Thalattu Ketkaatha Peringu Lyrics

தாலாட்டு கேட்காத பேரிங்கு யாரு
தாயாரின் தாலாட்டு போல் வேறு ஏது
பாட்டுக்கு நான் அடிமை
அந்தப் பாட்டுக்கு நான் அடிமை
தாய் போலே இங்கு வேறாரு
நம் தாய் போலே இங்கு வேறாரு

தாலாட்டு கேட்காத பேரிங்கு யாரு
தாயாரின் தாலாட்டு போல் வேறு ஏது
பாட்டுக்கு நான் அடிமை
அந்தப் பாட்டுக்கு நான் அடிமை


ஆவாரங்காடெல்லாம் நீரோடும் தோப்பெல்லாம்
யாராரு வேலை செய்வதாரு
பூவாரம் கேட்டானா பொன்னாரம் கேட்டானா
சோறுக்கு வேண்டி நிக்கும் பேரு
பொன் மின்ன வெள்ளி மின்ன வைரங்கள் மின்ன
தொழிலாளி கைகள் படத்தான் வேணும்
தாயுண்ண சேயும் உண்ண நாமென்றும் உண்ண
விவசாயி தான் உழைக்க வேணும்
ஏழை அவர் பாடு அது காற்றோடு போயாச்சு
ஏரோட்டி போனாலே எல்லோர்க்கும் சோறு
தோற்கேட்டு போவானே அவர் பாடும் பாட்டு
பாட்டுக்கு நான் அடிமை
அந்தப் பாட்டுக்கு நான் அடிமை


நாடாளும் பேரென்ன மாடோட்டும் பேரென்ன
யாராரு ஒன்ன பெத்த தாரு
விஞ்ஞானி ஆனாலும் மெய்ஞானி ஆனாலும்
தாய் தானே பெத்து போட்டா கூறு
பகலென்ன இரவும் என்ன என்றென்றும் இங்கே
ஆணுக்கு பெண்ணின் துணை வேணும்
வெயிலென்ன மழையும் என்ன காலங்கள் தோறும்
அன்புக்கு தாயும் இங்கு வேணும்
தாய் தான் படும் பாடு அதை உணர்வாயே கண்மணி

தாலாட்டு கேட்காத பேரிங்கு யாரு
தாயாரின் தாலாட்டு போல் வேறு ஏது
பாட்டுக்கு நான் அடிமை
அந்தப் பாட்டுக்கு நான் அடிமை
தாய் போலே இங்கு வேறாரு
நம் தாய் போலே இங்கு வேறாரு

நான் ஏரிக்கர மேலிருந்து - Naan Yerikara Melirunthu Lyrics

நான் ஏரிக்கர மேலிருந்து எட்டுத்திசை பாத்திருந்து
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆனபின்னும் ஊரடங்கிப் போனபின்னும்
சோறு தண்ணி வேணுமுன்னு தோணல
என் தெம்மாங்கு பாட்டக் கேட்டு
தெங்காத்து ஓடிவந்து தூதாகப் போகவேணும் அக்கரையில
நான் உண்டான ஆசைகள உள்ளாரப் பூட்டி வச்சு
ஒத்தையில வாடுறேனே இக்கரையில

நான் மாமரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும் பாத்திருந்து
மாமனுக்கு காத்திருந்தேன் காணல
அட சாயங்காலம் ஆனபின்னும் சந்த மூடி போன பின்னும்
வீடு போயி சேர்ந்திடத் தான் தோணல

நான் மாமரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும் பாத்திருந்து
மாமனுக்கு காத்திருந்தேன் காணல
அட சாயங்காலம் ஆனபின்னும் சந்த மூடி போன பின்னும்
வீடு போயி சேர்ந்திடத் தான் தோணல

என் தெம்மாங்கு பாட்டக் கேட்டு
தெங்காத்து ஓடிவந்து தூதாகப் போகவேணும் அக்கரையில
நான் உண்டான ஆசைகள உள்ளாரப் பூட்டி வச்சு
திண்டாடி நிக்கிறேனே இக்கரையில
நான் ஏரிக்கர மேலிருந்து எட்டுத்தெச பாத்திருந்து
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆனபின்னும் ஊரடங்கிப் போனபின்னும்
சோறு தண்ணி வேணுமுன்னு தோணல


தூரக்கிழக்குக் கரை ஓரந்தான்
தாழப் பறந்து வரும் மேகந்தான்
ஒங்கிட்டச் சேராதோ என் பாட்ட கூறாதோ
ஒன்னாக நாம் கூடும் சந்தர்ப்பம் வாராதோ

உன் கூட நானும் சேர ஒத்தக்காலில் நின்னேனே
செந்நாரி கூட்டத்தோடு சேதி ஒன்னு சொன்னேனே
கண்ணாளம் காட்சி எப்போது
எந்நாளும் என் நேசம் தப்பாது

நான் மாமரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும் பாத்திருந்து
மாமனுக்கு காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆனபின்னும் ஊரடங்கிப் போனபின்னும்
சோறு தண்ணி வேணுமுன்னு தோணல


மாமன் நெனப்பில் சின்னத்தாயி தான்
மாசக்கணக்கில் கொண்ட நோயி தான்
மச்சான் கை பட்டாத் தான் முச்சூதும் தீராதோ
அக்காளின் பொன்னுக்கோ பொற்காலம் வாராதோ
கையேந்தும் ஆட்டுக்குட்டி கன்னிப் பெண்ணா மாறாதோ
மையேந்தும் கண்ணக்காட்டி மையல் தீரப்பேசாதோ
உன்னாலே தூக்கம் போயாச்சு
உள்ளார ஏதேதோ ஆயாச்சு

நான் ஏரிக்கர மேலிருந்து எட்டுத்திசை பாத்திருந்து
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆனபின்னும் ஊரடங்கிப் போனபின்னும்
சோறு தண்ணி வேணுமுன்னு தோணல
என் தெம்மாங்கு பாட்டக் கேட்டு
தெங்காத்து ஓடிவந்து தூதாகப் போகவேணும் அக்கரையில
நான் உண்டான ஆசைகள உள்ளாரப் பூட்டி வச்சு
திண்டாடி நிக்கிறேனே இக்கரையில

நான் ஏரிக்கர மேலிருந்து எட்டுத்திசை பாத்திருந்து
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணல
அட சாயங்காலம் ஆனபின்னும் சந்த மூடி போன பின்னும்
வீடு போயி சேர்ந்திடத் தான் தோணல

கோட்டய விட்டு வேட்டைக்குப் போகும் - Kottaya Vittu Vettaiku Pogum Lyrics

கோட்டய விட்டு வேட்டைக்குப் போகும்
சொடல மாட சாமி
சொடல மாட சாமியும் நான்தான்
பூசாரி நீதான் சூடம் ஏத்திக் காமி

கோட்டய விட்டு வேட்டைக்குப் போகும்
சொடல மாட சாமி
சொடல மாட சாமியும் நான்தான்
பூசாரி நீதான் சூடம் ஏத்திக் காமி

கொட்ட வேணும் மேளம் கைய கட்டவேணும் யாரும்
அஞ்சி நிக்கும் ஊரும் அருள் வாக்குச் சொல்லும் நேரம்

கோட்டய விட்டு வேட்டைக்குப் போகும்
சொடல மாட சாமி
சொடல மாட சாமியும் நான்தான்
பூசாரி நீதான் சூடம் ஏத்திக் காமி


அந்நாடம் நாட்டுல வெண்டக்கா சுண்டக்கா
விலை ஏறிப் போகுது மார்க்கெட்டுல
அந்நாடம் நாட்டுல வெண்டக்கா சுண்டக்கா
விலை ஏறிப் போவுது மார்க்கெட்டுல
விலை ஏறிப் போவுது மார்க்கெட்டுல
என்னாட்டம் ஏழைங்க அத வாங்கித் திங்கத்தான்
துட்டில்ல சாமி என் பாக்கெட்டுல
துட்டில்ல சாமி என் பாக்கெட்டுல

வீட்டுக்கு வீடு எங்களத்தான்
மரமொன்னு வைக்க சொல்லுறாங்க
மரமே தான் எங்க வீடாச்சு சாமி
ஏழைங்க வாய மெல்லுறாக

எல்லாரின் வாழ்வும் சீராக வேணும் ஒன்னால தான்
கண்ணால பாரு நேராக்கி காட்டு முன்னால தான்

கோட்டய விட்டு வேட்டைக்குப் போகும்
சொடல மாட சாமி
சொடல மாட சாமியும் நான்தான்
பூசாரி நீதான் சூடம் ஏத்திக் காமி


ஊர்சுத்தும் சாமியே நீ கொண்ட கண்ணாலே
என்னாட்டம் ஏழைய பாக்கணுமே
ஊர்சுத்தும் சாமியே நீ கொண்ட கண்ணாலே
என்னாட்டம் ஏழைய பாக்கணுமே
என்னாட்டம் ஏழைய பாக்கணுமே
எல்லோரும் போல் என்னை நீயும் தான் தள்ளாம
எந்நாளும் தாய் என காக்கணுமே
ஒங்கிட்ட ஓர் வரம் கேக்கணுமே

எப்போதும் காவல் நானிருப்பேன்
என்னென்ன வேணும் நான் கொடுப்பேன்
பொல்லாங்கு பேசும் ஊர்சனந்தான்
புண்ணாகிப் போச்சே என் மனம் தான்

என்னாட்டம் சாமி எல்லோர்க்கும் சொந்தம் எப்போதும் தான்
என்னோட நீயும் உன்னோட நானும் எந்நாளும் தான்

கோட்டய விட்டு வேட்டைக்குப் போகும்
சொடல மாட சாமி
சொடல மாட சாமியும் நான்தான்
பூசாரி நீதான் சூடம் ஏத்திக் காமி

கொட்ட வேணும் மேளம் கைய கட்டவேணும் யாரும்
அஞ்சி நிக்கும் ஊரும் அருள் வாக்குச் சொல்லும் நேரம்

கோட்டய விட்டு வேட்டைக்குப் போகும்
சொடல மாட சாமி
சொடல மாட சாமியும் நான்தான்
பூசாரி நீதான் சூடம் ஏத்திக் காமி

கோட்டய விட்டு வேட்டைக்குப் போகும்
சொடல மாட சாமி
சொடல மாட சாமியும் நான்தான்
பூசாரி நீதான் சூடம் ஏத்திக் காமி

கொஞ்சி கொஞ்சி பேசி வரும் - Konji Konji Pesi Varum Lyrics

கொஞ்சி கொஞ்சி பேசி வரும் தமிழ் போல
அஞ்சி அஞ்சி வீசிவரும் அலை போல
நெஞ்சில் என்றும் தங்கும் சந்தக்கவி போல
நூறு ஜென்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம்
பூத்தூவுகிறோம்

கொஞ்சி கொஞ்சி பேசி வரும் தமிழ் போல
அஞ்சி அஞ்சி வீசிவரும் அலை போல
நெஞ்சில் என்றும் தங்கும் சந்தக்கவி போல
நூறு ஜென்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம்
பூத்தூவுகிறோம்


இரண்டு வரிகளில் திருக்குறள் இருந்திட
காரணம் இருக்கிறதே
கணவன் ஒரு வரி மனைவி ஒரு வரி
அர்த்தம் கிடைக்கிறதே
யார் பெரிதென்ற எண்ணங்கள் வேண்டாம்
சிந்தித்து பாருங்களே
சரிசமமாய் உள்ள தூண்களில் தானே
நிற்கும் கோபுரங்கள்
சந்தேகம் தான் தீயை வைக்கும்
நம்பிக்கை தான் தீபம் வைக்கும்
இந்த விண்ணும் மண்ணும் உள்ள நாள் வாழ்க

கொஞ்சி கொஞ்சி பேசி வரும் தமிழ் போல
அஞ்சி அஞ்சி வீசிவரும் அலை போல
நெஞ்சில் என்றும் தங்கும் சந்தக்கவி போல
நூறு ஜென்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம்
பூத்தூவுகிறோம்


அவரவர் எண்ணம் அவரவர்க்குண்டு
ஆதிக்கம் வேண்டாமே
ஒரு தனிப்பட்ட சுதந்திரம் இருவருக்கிடையில்
அவசியம் இருக்கட்டுமே
ஒருவருக்கொருவர் பாசம் தந்து
நண்பர்கள் ஆகுங்கள்
ஒவ்வொரு நாளும் ஒருமுறையேனும்
ஒன்றாய் உண்ணுங்கள்
கொஞ்சம் நீங்கள் விட்டுத் தந்தால்
சொர்க்கம் உங்கள் வீட்டைத் தட்டும்
காலம் எல்லாம் உங்கள் நெஞ்சில் பூப்பூக்கும்

கொஞ்சி கொஞ்சி பேசி வரும் தமிழ் போல
அஞ்சி அஞ்சி வீசிவரும் அலை போல
நெஞ்சில் என்றும் தங்கும் சந்தக்கவி போல
நூறு ஜென்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம்
பூத்தூவுகிறோம்

பூவே செம்பூவே உன் வாசம் - Poove Sempoove Un Vaasam Lyrics

பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீ தான் ஒரு பூவின் மடல்

பூவே செம்பூவே உன் வாசம் வரும்
பூவே செம்பூவே


நிழல் போல நானும்.. ஆ.. ஆ....
நிழல் போல நானும் நடைபோட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்
கடல் வானம் கூட நிறம் மாறக்கூடும்
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது
நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே
நாள்தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே
எந்நாளும் சங்கீதம் சந்தோசமே

வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீ தான் ஒரு பூவின் மடல்

பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீ தான் ஒரு பூவின் மடல்

பூவே செம்பூவே உன் வாசம் வரும்
பூவே செம்பூவே


உனைபோல நானும் ஒரு பிள்ளை தானே
பலர்வந்து கொஞ்சும் கிளிப்பிள்ளை நானே
உனைபோல நானும் மலர்சூடும் பெண்மை
விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை
நான் செய்த பாவம் என்னோடு போகும்
நீ வாழ்ந்து நான் தான் பார்த்தாலே போதும்
இந்நாளும் எந்நாளும் உல்லாசமே

வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீ தான் ஒரு பூவின் மடல்

பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீ தான் ஒரு பூவின் மடல்

பூவே செம்பூவே உன் வாசம் வரும்
பூவே செம்பூவே

உன் கண்ணில் நீர் வழிந்தால் - Un Kannil Neer Valinthal Lyrics

உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவையன்றோ
கண்ணம்மா என் உயிர் நின்னதன்றோ

உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

உன்னை கரம் பிடித்தேன்
வாழ்க்கை ஒளிமயமானதடி
உன்னை கரம் பிடித்தேன்
வாழ்க்கை ஒளிமயமானதடி
பொன்னை மணந்ததனால்
சபையில் புகழும் வளர்ந்ததடி...

உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி


காலச் சுமைதாங்கி போலே
மார்பில் எனை தாங்கி
வீழும் கண்ணீர் துடைப்பாய்
அதில் என் விம்மல் தணியுமடி
ஆலம் விழுதுகள் போல்
உறவு ஆயிரம் வந்துமென்ன
ஆலம் விழுதுகள் போல்
உறவு ஆயிரம் வந்துமென்ன
வேரென நீ இருந்தாய்
அதில் நான் வீழ்ந்துவிடாதிருந்தேன்

உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி


முள்ளில் படுக்கையிட்டு
இமையை மூடவிடாதிருக்கும்
பிள்ளை குலமடியோ
என்னை பேதமை செய்ததடி
பேருக்கு பிள்ளை உண்டு
பேசும் பேச்சுக்கு சொந்தம் உண்டு
பேருக்கு பிள்ளை உண்டு
பேசும் பேச்சுக்கு சொந்தம் உண்டு
என் தேவையை யார் அறிவார்
என் தேவையை யார் அறிவார்
உன்னைப்போல் தெய்வம் ஒன்றே அறியும்

உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவையன்றோ
கண்ணம்மா என் உயிர் நின்னதன்றோ

உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில்.....

வரச்சொல்லி இந்நேரம் - புதுச்சேரி கச்சேரி - Puduchery Kacheri Sad Lyrics

வரச்சொல்லி இந்நேரம் 
வனக்குயில் அழைத்தது வந்தேன்
குறை சொல்லி இப்போது 
விரட்டிட தெருவினில் நின்றேன்
அழுகையை கண்ணோடு
அடக்கிட நினைக்கையில் நானும்
எனக்கென கண்ணீரை 
வடிக்குது வடிக்குது வானம்

உனை நினைத்து உயிர் துடித்து
தினம் தினம் நான் இசை படித்தேன்
உனதழகை விழியிரண்டால்
அழகழகாய் சிலை வடித்தேன்


கலங்கம் இல்லாத காதல்
பிழைகள் இல்லாத பாடல்
இடையில் உண்டான ஊடல்
நிஜங்கள் ஆகாது கானல்

வார்த்தை பொய்யாகும் வாழ்க்கை பொய்யாகும்
காதல் பொய்யாவதேது

புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒன்னு புடிச்சேன்
புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன்
புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒன்னு புடிச்சேன்
புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன்
பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்பம்பம்
பம்சிக்கு பம்சிக்கு பம்சபம்

இதயமே இதயமே - Ithayame Ithayame Lyrics

இதயமே இதயமே
உன் மௌனம் என்னைக் கொல்லுதே 
இதயமே இதயமே

இவ்விரகம் என்னை வாட்டுதே
நிலவில்லாத நீலவானம் போலவே
உயிரில்லாமல் எனது காதல் ஆனதே

இதயமே இதயமே
உன் மௌனம் என்னைக் கொல்லுதே 
இதயமே இதயமே


பனியாக உருகி நதியாக மாறி
அலைவீசி விளையாடி இருந்தேன்
தனியாக இருந்தும் உன் நினைவோடு வாழ்ந்து
உயிர்க்காதல் உறவாடி கலந்தே நின்றேன்
இது எந்தன் வாழ்வில் நீ போட்ட கோலம்
இது எந்தன் வாழ்வில் நீ போட்ட கோலம்
கோலம் கலைந்ததே புது சோகம் பிறந்ததே
நீ இல்லாத வாழ்வு இங்கு கானல் தான்

இதயமே இதயமே
உன் மௌனம் என்னைக் கொல்லுதே 
இதயமே இதயமே


என் ஜீவராகம் கலந்தாடும் காற்று
உன்மீது படவில்லை துடித்தேன்
அரங்கேறும் பாடல் உலகெங்கும் கேட்டும்
உன் நெஞ்சை தொடவில்லை ஏன் சொல்லம்மா
இசைக்கின்ற கலைஞன் நானாகிப் போனேன்
இசைக்கின்ற கலைஞன் நானாகிப் போனேன்
ஜீவன் நீயம்மா என் பாடல் நீயம்மா
நீ இல்லாத வாழ்வு இங்கு கானல் தான்

இதயமே இதயமே
உன் மௌனம் என்னைக் கொல்லுதே 
இதயமே இதயமே

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - Pottu Vaitha Oru Vatta Nila Lyrics

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் எனை தொட்ட நிலா

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று எனை சுட்ட நிலா
வாழ்நாள் தோறும் தினம் தான் காதோரம்
பாடல் கூறும்

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று எனை சுட்ட நிலா


ஆறாத ஆசைகள் தோன்றும் எனை தூண்டும்
ஆனாலும் வாய்பேச அஞ்சும் இந்த நெஞ்சம்
அவள் பேரை நாளும் அசை போடும் உள்ளம்
அவள் போகும் பாதை நிழல் போல செல்லும்
மௌனம் பாதி மோகம் பாதி
என்னை கொல்லும் எந்நாளும்

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று எனை சுட்ட நிலா
வாழ்நாள் தோறும் தினம் தான் காதோரம்
பாடல் கூறும்

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று எனை சுட்ட நிலா


யாப்போடு சேராதோ பாட்டு தமிழ் பாட்டு
தோப்போடு சேராதோ காற்று பனிக்காற்று
வினாத்தாள் போல் இங்கே கனாக்காணும் காளை
விடை போலே அங்கே நடைபோடும் பாவை
ஒன்றாய்க் கூடும் ஒன்றாய்ப் பாடும்
பொன்னாள் இங்கு எந்நாளோ

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று எனை சுட்ட நிலா
வாழ்நாள் தோறும் தினம் தான் காதோரம்
பாடல் கூறும்

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று எனை சுட்ட நிலா

ஈரமான ரோஜாவே என்னைப் பார்த்து - Eeramaana Rojave Ennai Paarthu Lyrics

ஈரமான ரோஜாவே என்னைப் பார்த்து மூடாதே

ஈரமான ரோஜாவே என்னைப் பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

ஈரமான ரோஜாவே என்னைப் பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே


என்னைப் பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்திவிட்டு போகும்
என்னைப் பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்திவிட்டு போகும்
உன் வாசலில் எனை கோலம் இடு
இல்லை என்றால் ஒரு சாபம் இடு
பொன்னாரமே.. ஏ.. ஏ..
கண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து
என்னோடு நீ பாடி வா சிந்து

ஈரமான ரோஜாவே என்னைப் பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே


நேரம் கூடிவந்த வேளை
நீ நெஞ்சை மூடி வைத்த கோழை
நேரம் கூடிவந்த வேளை
நீ நெஞ்சை மூடி வைத்த கோழை
என் நெஞ்சிலே இனி ரத்தம் இல்லை
கண்ணீருக்கே நான் தத்துப்பிள்ளை
என் காதலி.. இ...இ...
உன் போல என் ஆசை தூங்காது ராணி
கண்ணீரில் தள்ளாடுதே தோணி

ஈரமான ரோஜாவே ஏக்கம் என்ன ராஜாவே
கண்ணில் என்ன சோகம் தீரும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே
ஏங்காதே என் அன்பே ஏங்காதே

துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே - Thulli Thulli Pogum Penne Lyrics

துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே
சொல்லிக் கொண்டு போனால் என்ன
கன்னி உந்தன் பேரென்ன
வெள்ளிக் கொலுசு போகும் திசையில்
பாவி நெஞ்சு போவதென்ன

துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே
சொல்லிக் கொண்டு போனால் என்ன
கன்னி உந்தன் பேரென்ன
வெள்ளிக் கொலுசு போகும் திசையில்
பாவி நெஞ்சு போவதென்ன

துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே
சொல்லிக் கொண்டு போனால் என்ன
ஓ.. ஓ...


பூமி என்னும் பெண்ணும் பொட்டு வைத்துக் கொண்டு
பச்சை ஆடை கட்டிப் பார்த்தாள்
கோடைப் பெண் நாணம் கொண்டு
ஏன் வளைந்து போகிறாள்

பூமி என்னும் பெண்ணும் பொட்டு வைத்துக் கொண்டு
பச்சை ஆடை கட்டிப் பார்த்தாள்
கோடைப் பெண் நாணம் கொண்டு
ஏன் வளைந்து போகிறாள்
பூமிப்பெண்ணுக்கும் கன்னிப் பெண்ணைப் போல்
நெஞ்சில் ஈரம் உண்டு

துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே
சொல்லிக் கொண்டு போனால் என்ன
ஓ.. ஓ...


அந்தி வெளிச்சம் முந்தி விரித்து
பந்தி இங்கு வைக்கும் நேரம்
பூச்சிந்தும் பூமியெல்லாம் நான் வணங்கும் காதலி

அந்தி வெளிச்சம் முந்தி விரித்து
பந்தி இங்கு வைக்கும் நேரம்
பூச்சிந்தும் பூமியெல்லாம் நான் வணங்கும் காதலி
மண்டியிட்டு நான் முத்தம் தரவா
தென்றல் பெண்ணே வா வா வா

துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே
சொல்லிக் கொண்டு போனால் என்ன
கன்னி உந்தன் பேரென்ன
வெள்ளிக் கொலுசு போகும் திசையில்
பாவி நெஞ்சு போவதென்ன

துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே
சொல்லிக் கொண்டு போனால் என்ன
ஓ.. ஓ...
ஓ.. ஓ...

ஏத்தமய்யா ஏத்தம் ஏலோலங்கடி - Yethamayya Yetham Lyrics

முந்தி முந்தி விநாயகரே.. ஏய்
முப்பத்து முக்கோடி தேவர்களே.. ஏய்
நீர் கொடுத்த நீரையெல்லாம்
நீர் கொடுத்த நெலத்துக்கே பாச்ச போறேன்
சீராக ஏரோட்டி பார் முழுக்க 
சோறு கொடுத்து காக்க போறேன்
ஆதரிக்க வேணுமய்யா...

ஏத்தமய்யா ஏத்தம் ஏலோலங்கடி
ஏத்தமய்யா ஏத்தம்
ஏத்தமய்யா ஏத்தம் ஏலோலங்கடி
ஏத்தமய்யா ஏத்தம்

எங்கப்பன் உன் பாட்டன் முப்பாட்டன் சொத்து இது
ஏத்தமய்யா ஏத்தம் ஏலோலங்கடி
ஏத்தமய்யா ஏத்தம்
ஏலோலங்கடி ஏத்தமய்யா ஏத்தம்

ஏலோலங்கடி ஏத்தமய்யா ஏத்தம்
ஒனக்கு ரொம்ப ஏத்தமய்யா ஏத்தம்
ஏத்தமய்யா ஏத்தம்
ஒனக்கு ரொம்ப ஏத்தமய்யா ஏத்தம்


கோவணத்தில் ஒரு காசிருந்தா
கோழி கூவ ஒரு பாட்டு வரும்
பாட்டு படிக்கிற என் மாமா
உன் கோவணத்தில் ஒரு காசிருக்கா

கோவணத்தில் ஒரு காசிருந்தா
கோழி கூவ ஒரு பாட்டு வரும்
பாட்டு படிக்கிற என் மாமா
உன் கோவணத்தில் ஒரு காசிருக்கா

கோவணமும் இல்ல கையில் காசும் இல்ல
பாட்டு வருதே என்ன புள்ள
கோயில் சிலை போல உன்னக் கண்டாதான்
ஏத்தம் கெடுதே கன்னிப் புள்ள

சேலையப் பாத்தாலே சொக்கிப்போகிற என் மாமா
வேலயப் பார் மாமா அந்த வெட்டிப் பேச்சு ஏம்மா
காஞ்ச வயலில தண்ணியப் பாச்சணும்
பஞ்சத்த தீக்கணும் பசிதாகம் போக்கணும்

ஏத்தமய்யா ஏத்தம்
ஒனக்கு ரொம்ப ஏத்தமய்யா ஏத்தம்
ஏத்தமய்யா ஏத்தம்
ஒனக்கு ரொம்ப ஏத்தமய்யா ஏத்தம்


சுவிட்சு ஒன்ன தட்டிவுட்டுப்புட்டா
பம்பு செட்டுல தண்ணி கொட்டிப்புடும்
வச்சு வேல செய்ய வக்கில்லையே
இங்கு வக்கன பேச்சு ஏன் மாமா

சுவிட்சு ஒன்ன தட்டிவுட்டுப்புட்டா
பம்பு செட்டுல தண்ணி கொட்டிப்புடும்
வச்சு வேல செய்ய வக்கில்லையே
இங்கு வக்கன பேச்சு ஏன் மாமா

எந்திரம் வச்சு வேலை செய்யலாம்
நாமென்ன செய்ய பூமியில
மண்ணோட மனுசன் மனசு இணையும்
மகத்துவம் வருமா சொல்லு புள்ள

மண்ணு வெளஞ்சாலே அது வேணாங்குதா மாமா
கையில் பொன்னு நெறஞ்சாலே அது பொல்லாததா மாமா
விஞ்ஞான காலத்தில் எல்லாமே மிஷினு
மனுசன் மனசு கூட மிஷினாச்சு போ புள்ள

ஏத்தமய்யா ஏத்தம்
ஒனக்கு ரொம்ப ஏத்தமய்யா ஏத்தம்
ஏத்தமய்யா ஏத்தம்
ஒனக்கு ரொம்ப ஏத்தமய்யா ஏத்தம்

ஒங்கப்பன் ஒம்பாட்டன் முப்பாட்டன் சொத்திருக்கு
ஏத்தமய்யா ஏத்தம் ஏலோலங்கடி
ஏத்தமய்யா ஏத்தம் ஏலோலங்கடி
ஏத்தமய்யா ஏத்தம்

ஏலோலங்கடி ஏத்தம் ரொம்ப ஏத்தம்
ஒனக்கும் கூட ஏத்தம் ரொம்ப ஏத்தம் 
ஏத்தம் ரொம்ப ஏத்தம்
ஒனக்கும் கூட ஏத்தம் ரொம்ப ஏத்தம்

நீ பொட்டு வச்ச தங்கக்கொடம் - Nee Pottu Vacha Thanga Lyrics

நீ பொட்டு வச்ச தங்கக்கொடம்
ஊருக்கு நீ மகுடம்
நாங்க தொட்டு தொட்டு இழுத்துவரும்
ஜோரான தங்கரதம்

அட நீ தங்கக்கட்டி சிங்கக்குட்டி
தனத்தான் தனத்தான் தனத்தான் தனத்தான்

இனி உன் பேரச்சொல்லும் பட்டிதொட்டி
தனத்தான் தனத்தான் தனத்தான் தனத்தான்

நீ பொட்டு வச்ச தங்கக்கொடம்
ஊருக்கு நீ மகுடம்
நாங்க தொட்டு தொட்டு இழுத்துவரும்
ஜோரான தங்கரதம்


பெத்தவங்க செஞ்ச புண்ணியந்தான்
பிள்ளைகள வந்து சேருமய்யா
உத்தமரு ரொம்ப ஒசந்தவரு
என்ன பெத்தவரு இந்த பெரியவரு
அவரப்போல இங்காருமில்ல
அலசிப்பாரு நீ ஒலகத்துல

அண்ணனுன்னா அண்ணனய்யா
அன்பு உள்ள மன்னனய்யா
அண்ணனுன்னா அண்ணனய்யா
அன்பு உள்ள மன்னனய்யா
ஊரெல்லாம் கொண்டாடும் உன் பேரய்யா

அட நீ தங்கக்கட்டி சிங்கக்குட்டி
தனத்தான் தனத்தான் தனத்தான் தனத்தான்

நீ பொட்டு வச்ச தங்கக்கொடம்
ஊருக்கு நீ மகுடம்
நாங்க தொட்டு தொட்டு இழுத்துவரும்
ஜோரான தங்கரதம்


வெற்றியெல்லாம் உங்க கூட வரும்
நீங்க போற எடம் நல்ல பெருமை பெறும்
சத்தியத்த தெனம் காத்து வரும்
அந்த சாமி தரும் பல நூறு வரம்
மனசு எல்லாமே கோவிலய்யா
அதுல நீதானே சாமியய்யா

நல்லவன் தான் இவன் வல்லவன் தான்
நல்லதெல்லாம் இங்கே சொல்ல வந்தான்
நல்லவன் தான் இவன் வல்லவன் தான்
நல்லதெல்லாம் இங்கே சொல்ல வந்தான்
நாடெல்லாம் நாடெல்லாம் வெல்ல வந்தான்

அட நீ தங்கக்கட்டி சிங்கக்குட்டி
தனத்தான் தனத்தான் தனத்தான் தனத்தான்

நீ பொட்டு வச்ச தங்கக்கொடம்
ஊருக்கு நீ மகுடம்
நாங்க தொட்டு தொட்டு இழுத்துவரும்
ஜோரான தங்கரதம்

அட நீ தங்கக்கட்டி சிங்கக்குட்டி
தனத்தான் தனத்தான் தனத்தான் தனத்தான்

இனி உன் பேரச்சொல்லும் பட்டிதொட்டி
தனத்தான் தனத்தான் தனத்தான் தனத்தான்

தந்தானனா தந்தானனா தந்தான தானனனா
தந்தானனா தந்தானனா தந்தான தானனனா

உன்னை தினம் தேடும் தலைவன் - Unnai Dinam Thedum Thalaivan Lyrics

மாலை கருக்கலிலே மையிருட்டு வேளையிலே
சோலை மலர்களுக்கு சோர்வு என்ன கால்களுக்கு
சோர்வு என்ன கால்களுக்கு...

உன்னை தினம் தேடும் தலைவன்
இன்று கவிபாடும் கலைஞன்
உன்னை தினம் தேடும் தலைவன்
கவிபாடும் கலைஞன்
காவல் வரும்போது கையில் விலங்கேது
கால்கள் நடமாடட்டும்

லலல லல லல்ல லால்லா

பூந்தோட்டம் தாங்காதம்மா
பூப்பறிக்க நாளாகுமா
பூவாடுது தோள் சேருது
கண்ணே கலக்கமா
கண்ணில் மயக்கமா

உன்னை தினம் தேடும் தலைவன்
இன்று கவிபாடும் கலைஞன்
உன்னை தினம் தேடும் தலைவன்
கவிபாடும் கலைஞன்
காவல் வரும்போது கையில் விலங்கேது
கால்கள் நடமாடட்டும்

லலல லல லல்ல லால்லா

ல..ல.. ல.. ல.. ல...


துணிவிருந்தால் பாட முடியும்
துணையிருந்தால் ஆட முடியும்
பாடும் மயிலானது
அரங்கில் துணை தேடுது
தோகை விரித்தாடம்மா
தோளில் சாய்ந்தாடம்மா
தோல்வி எனக்கேதம்மா
கேள்வி இனியேதம்மா

பூந்தோட்டம் தாங்காதம்மா
பூப்பறிக்க நாளாகுமா
பூவாடுது தோள் சேருது
கண்ணே கலக்கமா
கண்ணில் மயக்கமா


அன்றொரு நாள் பிறந்த நிலவு
முழுமதியாய் வளர்ந்த அழகு
இன்று பெண்ணானது
எதிரில் நின்றாடுது
மேகம் பகையானது
நிலவு சிறையானது
மன்னன் துணை வந்ததும்
சிறையும் சுகமானது

பூந்தோட்டம் தாங்காதம்மா
பூப்பறிக்க நாளாகுமா
பூவாடுது தோள் சேருது
கண்ணே கலக்கமா
கண்ணில் மயக்கமா

உன்னை தினம் தேடும் தலைவன்
இன்று கவிபாடும் கலைஞன்
உன்னை தினம் தேடும் தலைவன்
கவிபாடும் கலைஞன்
காவல் வரும்போது கையில் விலங்கேது
கால்கள் நடமாடட்டும்

லலல லல லல்ல லால்லா

பூந்தோட்டம் தாங்காதம்மா
பூப்பறிக்க நாளாகுமா
பூவாடுது தோள் சேருது
கண்ணே கலக்கமா
கண்ணில் மயக்கமா

ல.. ல.. லாலல்லா..
ல.. ல.. லாலல்லா..

சொல்லால் அடிச்ச சுந்தரி - Sollaal Adicha Sundari Lyrics

சொல்லால் அடிச்ச சுந்தரி
மனம் சுட்டுவிட்ட கோலம் என்னடி

சொல்லால் அடிச்ச சுந்தரி
மனம் சுட்டுவிட்ட கோலம் என்னடி
பட்ட காயத்துக்கு மருந்தென்னடி
என் தாயத்தந்த தாயும் நீயடி

என்னதான் சொல்ல
ஒண்ணும் கூட இல்ல
மன்னவன் நெஞ்சிலே மூச்சடைச்சதென்ன

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் - Mayanginen Solla Thayanginen Lyrics

ஆ.. ஆ...ஆ...

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம் 
பெறத் தவிக்குதே மனமே
இங்கு நீயில்லாது வாழும் வாழ்வு தான் ஏனோ

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம் 
பெறத் தவிக்குதே மனமே
இங்கு நீயில்லாது வாழும் வாழ்வு தான் ஏனோ

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம் 
பெறத் தவிக்குதே....


உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும்
இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்
வாடை காலமும் நீ வந்தால் வசந்தமாகலாம்
கொதித்திருக்கும் கோடை காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்
எந்நாளும் தனிமையே எனது நிலைமையா
துன்பக்கவிதையோ கதையோ
இரு கண்ணும் என் நெஞ்சும்
இரு கண்ணும் நெஞ்சும் நீரில் ஆடுமோ

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம் 
பெறத் தவிக்குதே மனமே
இங்கு நீயில்லாது வாழும் வாழ்வு தான் ஏனோ

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம் 
பெறத் தவிக்குதே....


ஒரு பொழுதேனும் உன்னோடு சேர்ந்து வாழணும்
உயிர் பிரிந்தாலும் அன்பே உன் மார்பில் சாயணும்
மாலை மங்கலம் கொண்டாடும் வேளை வாய்க்குமோ
மணவறையில் நீயும் நானும் தான் பூச்சூடும் நாளும் தோன்றுமோ
ஒன்றாகும் பொழுதுதான் இனிய பொழுதுதான்
உந்தன் உறவு தான் உறவு
அந்த நாளை எண்ணி நானும்
அந்த நாளை எண்ணி நானும் வாடினேனே

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம் 
பெறத் தவிக்குதே மனமே
இங்கு நீயில்லாது வாழும் வாழ்வு தான் ஏனோ

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம் 
பெறத் தவிக்குதே....