கண்ணதாசன் காரைக்குடி பேரச்சொல்லி ஊத்திக்குடி - Kannadaasan Kaarakudi Perasolli Oothikudi Lyrics

கண்ணதாசன் காரைக்குடி
பேரச்சொல்லி ஊத்திக்குடி
குன்னக்குடி மச்சானப் போல் பாடப்போறேன்டா
கண்ணதாசன் காரைக்குடி
பேரச்சொல்லி ஊத்திக்குடி
குன்னக்குடி மச்சானப் போல் பாடப்போறேன்டா
கண்ணாடிக் கோப்பையில
கண்ணமூடி நீச்சலடி
ஊறுகாய தொட்டுகிட்டா ஓடிப்போகும் காய்ச்சலடி
போதை என்பது ஒரு பாம்பு விஷம் தான்
சேர்ந்து குடிச்சா அது ஒரு சோஷ்யலிசம் தான்

கண்ணதாசன் காரைக்குடி
பேரச்சொல்லி ஊத்திக்குடி
குன்னக்குடி மச்சானப் போல் பாடப்போறேன்டா

ஆ...ஆ.. ஆ...ஆ..



பொண்டாட்டி புள்ளைங்க
தொல்லைங்க இல்லா இடம்
இந்த இடம் தானே
இந்த இடம் இல்லை இன்னா
சாமி மடம் தானே
மேஸ்திரி கலவை கலந்து குடிக்கிறாரே
ஓ..ஓ..ஓ..ஓ..
சித்தாளு பொண்ண நெனச்சு இடிக்கிறாரே
இயக்குநர் ஆரு அங்க பாரு பொலம்புறாரு
நூறு மில்லிய அடிச்சா போதையில்லையே
நூற தாண்டுனா நடக்க பாதையில்லையே

கண்ணதாசன் காரைக்குடி
பேரச்சொல்லி ஊத்திக்குடி
குன்னக்குடி மச்சானப் போல் பாடப்போறேன்டா

ஆ...ஆ.. ஆ...ஆ..



அண்ணனும் தம்பியும் எல்லாரும்
இங்க வந்தா டப்பாங்குத்து தானே
ஓவரா ஆச்சுதுன்னா வெட்டு குத்து தானே
ஓ..ஓ..ஓ..ஓ..
எங்களுக்கு தண்ணியில கண்டமில்ல
எங்களுக்குள் ஜாதி மதம் ரெண்டுமில்ல
கட்சிகாரன் மச்சி என்ன ஆச்சு
வேட்டி அவுந்து போச்சு
ரோட்டு கடையில மனுஷன் ஜாலிய பாரு
சேட்டு கடையில மனைவி தாலிய பாரு

கண்ணதாசன் காரைக்குடி
பேரச்சொல்லி ஊத்திக்குடி
குன்னக்குடி மச்சானப் போல் பாடப்போறேன்டா
கண்ணாடிக் கோப்பையில
கண்ணமூடி நீச்சலடி
ஊறுகாய தொட்டுகிட்டா ஓடிப்போகும் காய்ச்சலடி
போதை என்பது ஒரு பாம்பு விஷம் தான்
சேர்ந்து குடிச்சா அது ஒரு சோஷ்யலிசம் தான்

கண்ணதாசன் காரைக்குடி
பேரச்சொல்லி ஊத்திக்குடி
குன்னக்குடி மச்சானப் போல் பாடப்போறேன்டா

ஓ..ஓ..ஓ...ஓ..

கொத்தால்சாவடி லேடி நீ கோயம்பேடு வாடி - Kothaalsavadi Lady Nee Koyambedu Vaadi Lyrics

கொத்தால்சாவடி லேடி
நீ கோயம்பேடு வாடி
எக்கோ எக்கோ எக்கோ...
எக்கோ எக்கோ எக்கோ...
கொத்தால்சாவடி லேடி
நீ கோயம்பேடு வாடி
சின்ன சின்ன பீன்ஸ் வேணுமா.. வேணாமே.. 
மூக்கு போல நூக்கல் வேணுமா.. வேணாமே.. 
பெங்களூரு கத்திரி வேணுமா.. வேணாமே..
திண்டுக்கல்லு திராட்சை வேணுமா..வேணாம்..
நீ பச்சமிளகா கடிக்கும்போது
கண்ணு ரெண்டும் கலங்குதடி

கொத்தால்சாவடி லேடி
நீ கோயம்பேடு வாடி
கொத்தால்சாவடி லேடி
நீ கோயம்பேடு வாடி



பட்டினம்பாக்கம் ரூட்டுல
45 பஸ்ஸூல பரிமளாவ 
புருஷன் கூட பாத்தேன்டா
சுங்கிடி சேல மடிப்புல
கொத்து சாவி இடுப்புல ஊர்மிளாவ 
உரசி கொஞ்சம் பாத்தேன்டா
வாடியக்கா தலுக்கா 
மினுக்கா நடக்குற
போடியக்கா சிலுக்கா 
மலுக்கா ஒடியிற
வாடியக்கா தலுக்கா 
மினுக்கா நடக்குற
போடியக்கா சிலுக்கா 
மலுக்கா ஒடியிற
காஜா பீடி கரீம் பீடி கவர்னர் பீடிங்கோ
அத வலிச்சு பாத்த பசங்களெல்லாம்
ரொம்ப கேடிங்கோ
காஜா பீடி கரீம் பீடி கவர்னர் பீடிங்கோ
அத வலிச்சு பாத்த பசங்களெல்லாம்
ரொம்ப கேடிங்கோ



சிட்லபாக்கம் நைட்டுல
சிங்கிளு டீயி கடையில
சந்திரிகாவ சிலுமிசமா பாத்தேன்டா
பீச்சில் வச்சு பேசிப்போம்
பின்னால தானே யோசிப்போம்
வழக்கமாக நடக்குதிந்த காதல் தான்
ஜோடி போட்டு ஆயிஷா
நைசா நடக்குறா
மோடி வச்சு புடிக்க 
நெனச்சா நலுவுறா
ஜோடி போட்டு ஆயிஷா
நைசா நடக்குறா
மோடி வச்சு புடிக்க 
நெனச்சா நலுவுறா
ஜாம் பஜார் பர்மா பஜார் சிரிப்புகாரிங்கோ
அவ லவுசு காட்டும் பசங்களெல்லாம்
இப்போ காலிங்கோ
ஜாம் பஜார் பர்மா பஜார் சிரிப்புகாரிங்கோ
அவ லவுசு காட்டும் பசங்களெல்லாம்
இப்போ காலிங்கோ

கொத்தால்சாவடி லேடி
நீ கோயம்பேடு வாடி
கொத்தால்சாவடி லேடி
நீ கோயம்பேடு வாடி
சின்ன சின்ன பீன்ஸ் வேணுமா.. வேணாமே.. 
மூக்கு போல நூக்கல் வேணுமா.. வேணாமே.. 
பெங்களூரு கத்திரி வேணுமா.. வேணாமே.. 
திண்டுக்கல்லு திராட்சை வேணுமா..வேணாம்..
நீ பச்சமிளகா கடிக்கும்போது
கண்ணு ரெண்டும் கலங்குதடி

எட்டணா இருந்தா எட்டூரு எம்பாட்டா கேக்கும் - Ettanaa Iruntha Ettooru Empaatta kekukkum Lyrics

எட்டணா இருந்தா
எட்டூரு எம்பாட்ட கேக்கும்
பத்தணா இருந்தா
பத்தூரும் எம்பாட்ட பாடும்
மொட்டையோ கட்டையோ
நெட்டையோ குட்டையோ
மொத்தமா ஒத்தையா
பத்து ரூபா இருந்தா
ஊரே ரெண்டு பட்டு போகும்
இந்த நாடே ரெண்டுங்கெட்டான் ஆகும்
ஊரே ரெண்டு பட்டு போகும்
இந்த நாடே ரெண்டுங்கெட்டான் ஆகும்

எட்டணா இருந்தா
எட்டூரு எம்பாட்ட கேக்கும்
பத்தணா இருந்தா
பத்தூரும் எம்பாட்ட பாடும்



கால் வயித்து கஞ்சிக்காக
கடலக் கூடத் தாண்டுவேன்.. ஓ..ஓ...
வானவில்ல வாங்க பேரம்
கடவுளோட பேசுவேன்.. ஓ..ஓ...
இந்திரனும் கூட என்னோட ஃப்ரண்டு
என்று சொல்ல என்னத் தவிர யாருடா
அந்த லோகம் வாழும் சுந்தரிகள் கூட 
வந்து எனக்கு கால அமுக்கும் பேருடா
சின்ன ராசு பொன்னு ராசு
காத்து நம்ம பக்கம் வீசுனா
முட்டகோசு முட்டகோசு
என்றும் வாழ்க்கையில பாசுடா
நல்லா பூந்து விளையாடுடா

எட்டணா இருந்தா
எட்டூரு எம்பாட்ட கேக்கும்
பத்தணா இருந்தா
பத்தூரும் எம்பாட்ட பாடும்
மொட்டையோ கட்டையோ
நெட்டையோ குட்டையோ
மொத்தமா ஒத்தையா
பத்து ரூபா இருந்தா
ஊரே ரெண்டு பட்டு போகும்
இந்த நாடே ரெண்டுங்கெட்டான் ஆகும்
ஊரே ரெண்டு பட்டு போகும்
இந்த நாடே ரெண்டுங்கெட்டான் ஆகும்

எட்டணா இருந்தா
எட்டூரு எம்பாட்ட கேக்கும்
பத்தணா இருந்தா
பத்தூரும் எம்பாட்ட பாடும்

எதுவரை போகலாம் என்று நீ - Ethu Varai Pogalaam Endru Nee Lyrics

எதுவரை போகலாம் என்று நீ
சொல்லவேண்டும் என்று தான்
விடாமல் கேட்கிறேன்
தேன் முத்தங்கள் மட்டுமே
போதுமென்று சொல்வதால்
தொடாமல் போகிறேன்
யார் யாரோ கனாக்களில்
நாளும் நீ சென்று உலாவுகின்றவள்
நீ காணும் கனாக்களில் வரும்
ஓர் ஆணென்றால் நான் தான் எந்நாளிலும்
பூங்காற்றே நீ வீசாதே.. ஓ..ஓ..ஓ..ஓ..
பூங்காற்றே நீ வீசாதே
நான் தான் இங்கே விசிறி



என் வீட்டில் நீ நிற்கின்றாய்
அதை நம்பாமல் என்னை 
கிள்ளிக்கொண்டேன்
தோட்டத்தில் நீ நிற்கின்றாய்
உன்னை பூவென்று எண்ணி 
கொய்யச்சென்றேன்
புகழ் பூமாலைகள் தேன் சோலைகள்
நான் கண்டேன் ஏன் உன் பின் வந்தேன்
பெறும் காசோலைகள் பொன் மாலைகள்
வேண்டாமே நீ வேண்டும் என்றேன்
உயிரே...

நேற்றோடு என் வேகங்கள்
சிறு தீயாக மாறி தூங்கக் கண்டேன்
காற்றோடு என் கோபங்கள்
ஒரு தூசாக மாறி போகக் கண்டேன்
உனை பார்க்காத நாள் பேசாத நாள்
என் வாழ்வில் வீண் ஆகின்ற நாள்
தினம் நீ வந்ததால் தோள் தந்ததால்
ஆனேன் நான் ஆனந்த பெண் பால்
உயிரே...



எதுவரை போகலாம் என்று நீ
சொல்லவேண்டும் என்று தான்
விடாமல் கேட்கிறேன்
தேன் முத்தங்கள் மட்டுமே
போதுமென்று சொல்வதால்
தொடாமல் போகிறேன்
உன் போன்ற இளைஞனை
மனம் ஏற்காமல் மறுப்பதே பிழை
கண்டேன் உன் அலாதி 
தூய்மையை
என் கண் பார்த்து பேசும் 
பேராண்மையை
பூங்காற்றே நீ வீசாதே.. ஓ..ஓ..ஓ..ஓ..
பூங்காற்றே நீ வீசாதே
நான் தான் இங்கே விசிறி

என்ன ஒரு என்ன ஒரு அழகியடா - Enna Oru Enna Oru Alagiyadaa Lyrics

என்ன ஒரு என்ன ஒரு 
அழகியடா
கண்ணவிட்டு கண்ணவிட்டு 
விலகலடா
என்ன ஒரு என்ன ஒரு 
அழகியடா
கண்ணவிட்டு கண்ணவிட்டு 
விலகலடா

மனச தாக்குற 
மின்னலும் அவ தான்
மழையில் தெரியும் 
ஜன்னலும் அவ தான்
கனவில் பூக்குற 
தாமரை அவ தான்
கதையில கேக்குற 
தேவதை அவ தான்
என்ன ஊரு என்ன பேரு கேக்கலடா
எங்க போறா எங்க போறா பாக்கலடா
முன்னாடி அவளும் பின்னாடி நானும்
ஒருமுறை திரும்பி பாத்தா என்ன
துண்டான மனச ஒன்னாக்க தானே
மறுபடி அவள கேட்டேனே

என்ன ஒரு என்ன ஒரு 
அழகியடா
கண்ணவிட்டு கண்ணவிட்டு 
விலகலடா



ராகுகாலத்துல நல்ல நேரம் வருமா
ஒன்பது பத்தரையில் சிரிச்சா
புள்ளையாரு கோயிலுக்கு
தேங்கா ஒன்னு உடைக்க 
மனசு வேண்டிச்சு புதுசா
இஞ்சு இஞ்சா இடைவெளி குறைஞ்சு
இதயம் பறக்குது லேசா
இங்கிலாந்து ராணி போல
தங்கத்துல இழைச்சு 
வாழவைப்பேன் மாசா
அவளை பார்க்குற யாருமே
அவளை மறந்தும் கூட
மறப்பதும் சிரமம்
பீபீ ஊதணும் நேரத்த சொல்லுடி
பீபீ ஏறுது சீக்கிரம் சொல்லுடி

என்ன ஒரு என்ன ஒரு 
அழகியடா
கண்ணவிட்டு கண்ணவிட்டு 
விலகலடா
வா.. என் உயிரே வா..
என் அழகே வா.. 
என் மயிலே.. ஓ.. ஓ.. வா,..



ஓ.. தில்லை நகரா.. தேரடித் தெருவா..
அங்கிருக்கா உன் வீடு
சாரதாஸு கூரப் பட்டு 
சேல வாங்கித் தருவேன்
வெட்கப்பட்டு எனை தேடு
ஹே.. தன்னந்தனியா வாழ்வது பாவம்
வந்து மாலைய போடு
தண்டவாளம் போல நாம
ரெண்டு பேருக்கிடையில் 
நடுவில் எதுக்கடி கோடு
மனசில் கட்டுறேன் மாளிகை வீடு
வாசல் கோலம் வந்து நீ போடு
பீபீ ஊதணும் நேரத்த சொல்லுடி
பீபீ ஏறுது சீக்கிரம் சொல்லுடி

என்ன ஒரு.. அழகியடா
கண்ணவிட்டு..விலகலடா
கொஞ்சம் கூட கொஞ்சம் கூட
பழகலடா..
எங்களுக்கு இப்ப ரெண்டு குழந்தையடா
வா.. என் உயிரே வா..
என் அழகே வா.. 
என் மயிலே.. ஓ.. ஓ.. வா,..

ஆத்தங்கர ஓரத்தில் நின்னாளே - Aathangara Orathil Ninnaale Lyrics

ஆத்தங்கர ஓரத்தில் நின்னாளே
குயிலு குப்பம் குருவிய போல
அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம
லுக்குவிட்டா பக்குன்னு மேல
காத்தடிக்கும் தெசையில என் மனச
கயித்த கட்டி இழுக்குது சேல
ஆப்பத்துக்கு பாயா கறி போல
ஆராயி முழுங்குற ஆள
தூக்கத்தில் சிரிக்கிறேன் தன்னால
ஏக்கத்தில் தவிக்கிறேன் பொண்ணாலே
தூக்கத்தில் சிரிக்கிறேன் தன்னால
ஏக்கத்தில் தவிக்கிறேன் பொண்ணாலே
ஒரு கரப்பான் பூச்சி போல என்ன
கவுத்து போட்டாளே
மோசமா கடிக்கிற கண்ணால
பேசவே முடியல என்னாலே
அடி இன்னொரு தடவ
இதயம் சுளுக்க இடுப்ப ஆட்டாத

ஆத்தங்கர ஓரத்தில் நின்னாளே
குயிலு குப்பம் குருவிய போல
அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம
லுக்குவிட்டா பக்குன்னு மேல



வாய் பேசும் வாசனை கிளியோ
ஊர் பேசும் ஓவிய சிலையோ
அந்த வெண்ணிலாக்குள்ள
ஆயா சுட்ட வடகறி நீ தானே
நீ போனா யாரடி எனக்கு
நீ தானே ஜிஞ்ஜினாஜினுக்கு
அடி அஞ்சரை மணிக்கே
ஜிஞ்சர் சோடா தரவா நான் உனக்கு
நான் பார்த்த ஒரு தல நீ தானே
உன்னால தறுதல நான் தானே
அட நெருப்புல விழுந்த ரேசன் அரிசி
புழுவென ஆனேனே
மங்காத்தா ராணிய பாத்தேனே
கை மாத்தா காதல கேட்டேனே
இந்த கோமலவள்ளி என்ன தொட்டா
குளிக்கவே மாட்டேனே

ஆத்தங்கர ஓரத்தில் நின்னாளே
குயிலு குப்பம் குருவிய போல
அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம
லுக்குவிட்டா பக்குன்னு மேல

பக்குன்னு...பக்குன்னு...பக்குன்னு...
பக்குன்னு...பக்குன்னு...பக்குன்னு...
பக்குன்னு...பக்குன்னு...பக்குன்னு...
பக்குன்னு...பக்குன்னு...பக்குன்னு...
பக்குன்னு...பக்குன்னு...பக்குன்னு...
பக்குன்னு...பக்குன்னு...பக்குன்னு...



காலாலே ஆடுது கொலுசு
ஏலேலோ பாடுது மனசு
ஒரு இரும்ப பாத்த காந்தகம் போல
இழுக்குது அவ வயசு
ராசாத்தி என்னுடன் வர்றியா
ஏமாத்தி போவது சரியா
என்ன சௌகார்பேட்டை பீடா போல
மெல்லுற அரைகொறையா
மன்னாதி மகனென இருந்தேனே
உன்னால தெருவுல புரண்டேனே
என் வாடகை சைக்கிளில்
ஒரு முறை வந்தா வானத்தில் பறப்பேனே
கண்ணாலே கன்னத்தில் அடிக்காதே
கண்ணாடி வளையல சிணுங்காதே
உன்ன நம்பிய வந்த என்னயும்
இப்போ நம்பியார் ஆக்காதே

ஆத்தங்கர.. கம்மாங்கர..
ஆத்தங்கர ஓரத்தில் நின்னாளே
குயிலு குப்பம் ஜிஞ்ஜினுக்கு ஜினுக்கு
அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம
லுக்குவிட்டா டன்டனக்கா டனக்கு
காத்தடிக்கும் தெசையில என் மனச
கயித்த கட்டி இழுக்குது சேல
ஆப்பத்துக்கு பாயா கறி போல
ஆராயி முழுங்குற ஆள

என்ன அழகு எத்தனை அழகு - Enna Alagu Ethanai Alagu Lyrics

என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்றெந்தன் கை சேர்ந்ததே
சின்ன அழகு சித்திரை அழகு
சிறு நெஞ்சை கொத்திய அழகு
இன்றெந்தன் தோள் சாய்ந்ததே
எந்தன் உள்ளங்கையில் 
அவள் உயிரை வைத்தாள்
ஒரே சொல்லில் 
மனசை தைத்தாள்
சுட்டுவிழி பார்வையில்
சுகம் வைத்தாள்
நான் காதலின் கடலில் விழுந்துவிட்டேன்
நீ கரம் ஒன்று கொடுத்தாய் எழுந்துவிட்டேன்

என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்றெந்தன் கை சேர்ந்ததே



அன்பே உன் ஒற்றைப் பார்வை
அதைத் தானே யாசித்தேன்
கிடையாதென்றால் கிளியே 
என் உயிர் போக யோசித்தேன்
நான்காண்டு தூக்கம் கெட்டு
இன்றுன்னை சந்தித்தேன்
காற்றும் கடலும் நிலமும்
அடி தீக்கூடத் தித்தித்தேன்
மாணிக்கத் தேரே
உனை மலர் கொண்டு பூசித்தேன்
என்னை நான் கிள்ளி
இது நிஜம் தானா சோதித்தேன்
இது போதுமே இது போதுமே
இனி என் கால்கள் வான் போகுமே

என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்றெந்தன் கை சேர்ந்ததே



நான் கொண்ட ஆசை எல்லாம்
நான்காண்டு ஆசை தான்
உறங்கும் போதும் ஒலிக்கும்
அடி உன் கொலுசின் ஓசை தான்
நீ வீசும் பார்வை இல்லை
நெருப்பாச்சு நெஞ்சம் தான்
வலியின் கொடுமை முடிய
அடி தமிழ் வார்த்தை கொஞ்சம் தான்
இன்றே தான் பெண்ணே
உன் முழுப்பார்வை நான் கண்டேன்
கை தொட்ட நேரம்
என் முதல் மோட்சம் நான்
மகராணியே மலர்வாணியே
இனி என் ஆவி உன் ஆவியே

என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்றெந்தன் கை சேர்ந்ததே
சின்ன அழகு சித்திரை அழகு
சிறு நெஞ்சை கொத்திய அழகு
இன்றெந்தன் தோள் சாய்ந்ததே
எந்தன் உள்ளங்கையில் 
அவள் உயிரை வைத்தாள்
ஒரே சொல்லில் 
மனசை தைத்தாள்
சுட்டுவிழி பார்வையில்
சுகம் வைத்தாள்
நான் காதலின் கடலில் விழுந்துவிட்டேன்
நீ கரம் ஒன்று கொடுத்தாய் எழுந்துவிட்டேன்

என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்றெந்தன் கை சேர்ந்ததே

ஏன் பெண்ணென்று பிறந்தாய் - Yen Pennendru Piranthai Lyrics

ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் கண்ணில் விழுந்தாய்
ஏன் ஒரு பாதி சிரித்தாய்
என் உயிர்ப்பூவை எரித்தாய்
முதல் நாள் பார்த்தாய்
உறக்கம் கெடுத்தாய்
முறையா என்றேன்
கண்கள் பறித்தாய்
என் வலி தீர ஒரு வலி என்ன
என் பனிப்பூவே மீண்டும்
பார்த்தாலென்ன

ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் கண்ணில் விழுந்தாய்



நீ சூடும் ஒரு பூ தந்தால்
என் ஆஸ்தியெல்லாம் கொடுப்பேன்
உன் வாயால் என் பேர் சொன்னால்
உன் காலடியில் கிடப்பேன்
தூக்கத்தைத் தொலைத்தேனே
துடிக்குது நெஞ்சம்
தலை போன சேவல் போல்
தவிக்குது அங்கம்
இரண்டில் ஒன்று சொல்லிவிடு
இல்லை நீயே கொள்ளியிடு

ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் கண்ணில் விழுந்தாய்



நோகாமல் பிறர் காணாமல்
உந்தன் ஆடை நுனி தொடுவேன்
என்ன ஆனாலும் உயிர் போனாலும்
ஒரு தென்றல் என்றே வருவேன்
நீ என்னைப் பார்த்தால் தான்
துடிக்குது உள்ளம்
நீ எம்மைப் பிரிந்தாலோ
உள்ளம் வெறும் பள்ளம்
இமயம் கேட்கும் என் துடிப்பு
ஏனோ உனக்குள் கதவடைப்பு

ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் கண்ணில் விழுந்தாய்
ஏன் ஒரு பாதி சிரித்தாய்
என் உயிர்ப்பூவை எரித்தாய்
முதல் நாள் பார்த்தாய்
உறக்கம் கெடுத்தாய்
முறையா என்றேன்
கண்கள் பறித்தாய்
என் வலி தீர ஒரு வலி என்ன
என் பனிப்பூவே மீண்டும்
பார்த்தாலென்ன

ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் கண்ணில் விழுந்தாய்

மின்னலே நீ வந்ததேனடி என் கண்ணிலே - Minnale Nee Vanthathenadi En Kannile Lyrics

மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி
என் வானிலே 
நீ மறைந்து போன மாயம் என்னடி
சில நாளிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னை தேடுதே

மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி
என் வானிலே 
நீ மறைந்து போன மாயம் என்னடி
சில நாளிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னை தேடுதே



கண் விழித்து பார்த்தபோது
கலைந்த வண்ணமே
உன் கை ரேகை ஒன்று மட்டும்
நினைவு சின்னமே
கண் விழித்து பார்த்தபோது
கலைந்த வண்ணமே
உன் கை ரேகை ஒன்று மட்டும்
நினைவு சின்னமே
கதறி கதறி எனது உள்ளம்
உடைந்து போனதே
இன்று சிதறி போன சில்லில்
எல்லாம் உனது பிம்பமே
கண்ணீரில் தீ வளர்த்து
காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில் நான்
பூத்திருக்கிறேன்

மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி
என் வானிலே 
நீ மறைந்து போன மாயம் என்னடி
சில நாளிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னை தேடுதே



பால் மழைக்கு காத்திருக்கும்
பூமியில்லையா
ஓரு பண்டிகைக்கு காத்திருக்கும்
சாமியில்லையா
பால் மழைக்கு காத்திருக்கும்
பூமியில்லையா
ஓரு பண்டிகைக்கு காத்திருக்கும்
சாமியில்லையா
வார்த்தை வர காத்திருக்கும்
கவிஞனில்லையா
நான் காத்திருந்தால் காதல்
இன்னும் நீளுமில்லையா
கண்ணீரில் தீ வளர்த்து
காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில் நான்
பூத்திருக்கிறேன்

மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி
என் வானிலே 
நீ மறைந்து போன மாயம் என்னடி
சில நாளிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னை தேடுதே

என் மேல் விழுந்த மழைத்துளியே - En Mel Viluntha Malaithuliye Lyrics

என் மேல் விழுந்த மழைத்துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என் மேல் விழுந்த மழைத்துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
உடம்பில் உறைகின்ற ஓர் உயிர் போல்
உனக்குள் தானே நானிருந்தேன்

என் மேல் விழுந்த மழைத்துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்



மண்ணை திறந்தால் நீர் இருக்கும்
என் மனதை திறந்தால் நீ இருப்பாய்
ஒலியை திறந்தால் இசை இருக்கும்
என் உயிரை திறந்தால் நீ இருப்பாய்
வானம் திறந்தால் மழை இருக்கும்
என் வயதை திறந்தால் நீ இருப்பாய்
இரவை திறந்தால் பகல் இருக்கும்
என் இமையை திறந்தால் நீ இருப்பாய்

என் மேல் விழுந்த மழைத்துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்



இலையும் மலரும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
அலையும் கரையும் உரசுகையில்
பேசும் பாஷை பேசிடுமோ
மண்ணும் விண்ணும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
பார்வை ரெண்டும் பேசிக்கொண்டால்
பாஷை ஊமையாய் விடுமோ

என் மேல் விழுந்த மழைத்துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என் மேல் விழுந்த மழைத்துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
உடம்பில் உறைகின்ற ஓர் உயிர் போல்
உனக்குள் தானே நானிருந்தேன்

என் மேல் விழுந்த மழைத்துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

அம்மா அம்மா நீ எங்க அம்மா - Amma Amma Nee Enga Amma Lyrics

அம்மா அம்மா நீ எங்க அம்மா
உன்ன விட்டா எனக்காரு அம்மா
தேடிப் பாத்தேனே காணோம் உன்ன
கண்ணாமூச்சி ஏன் வா நீ வெளியில
தாயே உயிர் பிரிந்தாயே
என்ன தனியே தவிக்கவிட்டாயே
இன்று நீ பாடும் பாட்டுக்கு
நான் தூங்கவேணும்
நான் பாடும் பாட்டுக்கு தாயே
நீ உன் கண்கள் திறந்தாலே போதும்

அம்மா அம்மா நீ எங்க அம்மா
உன்ன விட்டா எனக்காரு அம்மா



நான் தூங்கும் முன்னே நீ தூங்கிபோனாய்
தாயே என் மேல் உனக்கென்ன கோவம்
கண்ணான கண்ணே என் தெய்வப்பெண்ணே
கண்ணில் தூசி நீ ஊத வேண்டும்
ஐயோ ஏன் இந்த சாபம்
எல்லாம் என்றோ நான் செய்த பாவம்
பகலும் இரவாகி பயமானதே அம்மா
விளக்கு உன் துணையின்றி இருளானதே
உயிரின் ஒரு பாதி பறிபோனதே அம்மா
தனிமை நிலையானதே....

அம்மா அம்மா நீ எங்க அம்மா
உன்ன விட்டா எனக்காரு அம்மா



நான் போனபின்னும் நீ வாழ வேண்டும்
எந்தன் மூச்சு உனக்குள்ளும் உண்டு
வானெங்கும் வண்ணம்
பூவெல்லாம் வாசம்
நாம் வாழும் உலகில் தெய்வங்களுண்டு
நீ என் பெருமையின் எல்லை
உந்தன் தந்தை பேர் சொல்லும் பிள்ளை
தூரம் பிரிவில்லை கலங்காதே என் கண்ணே
உலகம் விளையாட உன் கண் முன்னே
காலம் கரைந்தோடும் 
உன் வாழ்வில் துணை சேரும்
மீண்டும் நான் உன் பிள்ளை

அம்மா அம்மா நீ எங்க அம்மா
உன்ன விட்டா எனக்காரு அம்மா
எங்கே போனாலும் நானும் வருவேன்
கண்ணாடி பாரு நானும் தெரிவேன்
தாயே உயிர் பிரிந்தாயே
கண்ணே நீயும் என் உயிர் தானே
இன்று நீ பாடும் பாட்டுக்கு
நான் தூங்க வேணும்
நான் பாடும் தாலாட்டு
நீ தூங்க காதோரம் என்றென்றும் கேட்கும்

கள்ளிக்காட்டில் பிறந்த தாயே - Kallikaatil Perantha Thaaye Lyrics

கள்ளிக்காட்டில் பிறந்த தாயே
என்ன கல்லொடச்சு வளர்த்த நீயே
முள்ளுக்காட்டில் மொளச்ச தாயே
என்ன முள்ளுத் தைக்க விடல நீயே
காடைக்கும் காட்டுக்குருவிக்கும்
எண்டம்புதருக்குள் இடமுண்டு
கோடைக்கும் அடிக்கும் குளிருக்கும்
தாயி ஒதுங்கத்தான் இடமுண்டா
கரட்டுமேட்டைய மாத்துனா
அவ கல்ல புழிஞ்சு கஞ்சி ஊத்துனா
கரட்டுமேட்டைய மாத்துனா
அவ கல்ல புழிஞ்சு கஞ்சி ஊத்துனா

கள்ளிக்காட்டில் பிறந்த தாயே
என்ன கல்லொடச்சு வளர்த்த நீயே
முள்ளுக்காட்டில் மொளச்ச தாயே
என்ன முள்ளுத் தைக்க விடல நீயே



உழவு காட்டுல விதை விதைப்பா
ஓணாங்கரட்டுல கூழ் குடிப்பா
ஆவாரங்குலையில கை தொடப்பா
பாவமப்பா.....ஓ..ஓ..ஓ..ஓ..
வேலி முள்ளில் அவ வெறகெடுப்பா
நாழி அரிசி வச்சு உலை எரிப்பா
புள்ள உண்ட மிச்சம் உண்டு உசிர் வளர்ப்பா
தியாகமப்பா....
கிழக்கு விடியுமுன்ன முழிக்கிறா
அவ உலைக்க புடிச்சு தான் பிறக்கிறா
மண்ணக் கிண்டி தான் பொழைக்கிறா
உடல் மக்கிப் போகுமட்டும் உழைக்கிறா

கள்ளிக்காட்டில் பிறந்த தாயே
என்ன கல்லொடச்சு வளர்த்த நீயே
முள்ளுக்காட்டில் மொளச்ச தாயே
என்ன முள்ளுத் தைக்க விடல நீயே



தங்கம் தனித்தங்கம் மாசு இல்ல
தாய்ப்பால் ஒன்னில் மட்டும் தூசு இல்ல
தாய்வழி சொந்தம் போல பாசம் இல்ல
நேசம் இல்ல... ஓ..ஓ..ஓ..ஓ..
தாயி கையில் என்ன மந்திரமோ
கேப்பைக்களியில் ஒரு நெய் ஒழுகும்
காஞ்ச கருவாடு தேன் ஒழுகும்
அவ சமைக்கையிலே....
சொந்தம் நூறு சொந்தம் இருக்குதே
பெத்த தாயி போல ஒன்னு நிலைக்குதா
சாமி நூறு சாமி இருக்குதே
அட தாயி ரெண்டு தாயி இருக்குதா

கள்ளிக்காட்டில் பிறந்த தாயே
என்ன கல்லொடச்சு வளர்த்த நீயே
முள்ளுக்காட்டில் மொளச்ச தாயே
என்ன முள்ளுத் தைக்க விடல நீயே

சாமி கிட்ட சொல்லிப் புட்டேன் - Saamy Kitta Solliputten Lyrics

சாமி கிட்ட சொல்லிப் புட்டேன்
உன்ன நெஞ்சில் வச்சுக் கிட்டேன்
ஒத்தையா நீ நானும் பேசிக்கவே முடியலனு
மனசுக்குள்ள பேசிக்கிட்டேன்
சுத்தமா நீ நானும் பாத்துக்கவே முடியலனு
கனவுக்குள்ள பாத்துக்கிட்டேன்

ஒரு கோடி புள்ளி வச்சு
நான் போட்ட காதல் கோலம்
ஒரு பாதி முடியும் முன்னே
அழிச்சுருச்சு காலம் காலம்
இன்னொரு சென்மம் நான்
மறுபடி பொறந்து வந்து
உனக்காக காத்திருப்பேன்
அப்பவும் சேராம 
இருவரும் பிரியணும்னா
பொறக்காம போயிருவேன்

சாமி கிட்ட சொல்லிப் புட்டேன்
சாமி கிட்ட சொல்லிப் புட்டேன்



தெப்பக்குளத்தில் படிஞ்ச பாசி
கல்லெறிஞ்சா கலையும் கலையும்
நெஞ்சுக்குளத்தில் படிஞ்ச காதல்
எந்த நெருப்பில் எரியும் எரியும்
நீ போன பாத மேல
சருகாக கெடந்தா சுகமா
உன்னோட ஞாபகமெல்லாம்
மனசுக்குள்ள இருக்கும் ரணமா
கட்டுக்காவல் மீறி வர
காதல் நெஞ்சு கெஞ்சுதே



மனசுக்குள்ள பூட்டி மறைச்ச
அப்ப எதுக்கு வெளியில சிரிச்ச
கனவுக்குள்ள ஓடி புடிச்ச
நெசத்துல தான் தயங்கி நடிச்ச
அடி போடி பயந்தாங்கோழி
எதுக்காக ஊமை ஜாடை
நீ இருந்த மனச அள்ளி
எந்த தீயில் நானும் போட
ஒன்ன என்ன கேட்டுக்கிட்டா
காதல் நெஞ்சு தட்டிச்சு

சில்லென்ற தீப்பொறி ஒன்று - Sillendra Theepori Ondru Lyrics

சில்லென்ற தீப்பொறி ஒன்று
சிலுசிலு சிலுவென
குளுகுளு குளுவென
சரசர சரவென
பரவுது நெஞ்சில் பார்த்தாயா
இதோ உன் காதலன் என்று
விறுவிறு விறுவென
கலகல கலவென
அடிமன வெளிகளில்
ஒரு நொடி நகருது கேட்டாயா
உன் மெத்தை மேல்
தலை சாய்கிறேன்
உயிர் என்னையே தின்னுதே
உன் ஆடைகள் நான் சூடினேன்
என்னென்னவோ பண்ணுதே

தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே
னான்னன னனனன னா....
தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே
னான்னன னனனன னா....

சில்லென்ற தீப்பொறி ஒன்று
சிலுசிலு சிலுவென
குளுகுளு குளுவென
சரசர சரவென
பரவுது நெஞ்சில் பார்த்தாயா



கண்ணா உன் காலணி உள்ளே
என் கால்கள் நான் சேர்ப்பதும்
கண்மூடி நான் சாய்வதும்
கனவோடு நான் தோய்வதும்
கண்ணா உன் காலுறை உள்ளே
என் கைகள் நான் தோய்ப்பதும்
உள்ளூற தேன் பாய்வதும்
உயிரோடு நான் தேய்வதும்
முத்து பையன் தேநீர் உண்டு
மிச்சம் வைத்த கோப்பைகளும்
தங்க கைகள் உண்ணும்போது
தட்டில் பட்ட ரேகைகளும்
மூக்கின் மேலே முகாமிடும்
கோபங்களும்.. ஓ....

தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே தித்திக்குதே



அன்பே உன் புன்னகைக் கண்டு
எனக்காகத் தான் என்று
இரவோடு நான் எரிவதும்
பகலோடு நான் உறைவதும்
நீ வாழும் அறைதனில் நின்று
உன் வாசம் நாசியில் உண்டு
நுரையீரல் பூ மலர்வதும்
நோய் கொண்டு நான் அழுவதும்
அக்கம் பக்கம் நோட்டம் விட்டு
ஆளைத் தின்னும் பார்வைகளும்
நேரில் கண்டு உண்மை சொல்ல
நெஞ்சில் முட்டும் வார்த்தைகளும்
மார்பைச் சுடும் தூரங்களில் 
சுவாசங்களும்.. ஓ...

தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே
னான்னன னனனன னா....
தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே
னான்னன னனனன னா....

லேசா லேசா நீ இல்லாமல் - Lesa Lesa Nee Illaamal Lyrics

லேசா லேசா
நீ இல்லாமல் வாழ்வது லேசா
லேசா லேசா
நீ இல்லாமல் வாழ்வது லேசா
லேசா லேசா
நீண்டகால உறவிது லேசா
காதல் தேவன் கோயில் தேடி 
வருகிறதே விரைவினிலே
கலர் கலர் கனவுகள் விழிகளிலே
உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே...



நான் தூங்கி நாளாச்சு
நாளெல்லாம் பாழாச்சு
கொல்லாமல் என்னை கொன்று வதைக்கிறதே
சொல்லாமல் என்னை சிதைக்கிறதே
கண்ணெல்லாம் கண்ணன் வண்ணம் 
தெரிகிறதே விரிகிறதே
தனிமையில் இருக்கையில் எரிகிறதே
பனி இரவும் அனல் மழையை பொழிகிறதே

லேசா லேசா
நீ இல்லாமல் வாழ்வது லேசா
லேசா லேசா
நீண்டகால உறவிது
உறவிது உறவிது உறவிது....



வெவ்வேறு பேரோடு
வாழ்ந்தாலும் வேறல்ல
நான் வாங்கும் மூச்சுக் காற்று உனதல்லவா
உன் தேகம் ஓடும் ரத்தம் எனதல்லவா
நீ என்றால் நான் தான் என்று
உறவறிய ஊரறிய
ஒருவரில் ஒருவரின் உயிர் கரைய
உடனடியாய் உதடுகளால் உயிலெழுது

லேசா லேசா
நீ இல்லாமல் வாழ்வது லேசா
லேசா லேசா
நீண்டகால உறவிது லேசா
உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே...
உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே...

மின்னல் ஒரு கோடி உந்தன் - Minnal Oru Kodi Unthan Lyrics

மின்னல் ஒரு கோடி
எந்தன் உயிர் தேடி வந்ததே
லட்சம் பல லட்சம் 
பூக்கள் ஒன்றாக பூத்ததே
ஐ லவ் யு...
உன் வார்த்தை தேன் வார்த்ததே

மின்னல் ஒரு கோடி
எந்தன் உயிர் தேடி வந்ததே
லட்சம் பல லட்சம் 
பூக்கள் ஒன்றாக பூத்ததே
உன் வார்த்தை தேன் வார்த்ததே
மௌனம் பேசியதே
குளிர் தென்றல் வீசியதே
ஏழை தேடிய ராணி 
நீ என் காதல் தேவதையே
மின்னல் ஒரு கோடி
எந்தன் உயிர் தேடி வந்ததே.  ஓ....



குளிரும் பனியும்
எனை சுடுதே சுடுதே
உடலும் உயிரும்
இனி தனியே தனியே.. ஓ...
காமன் நிலவே
எனை ஆளும் அழகே
உறவே உறவே
இன்று சரியோ பிரிவே
தீ ஆகினால் நான்
மழையாகிறேன்
நீ வாடினால் என்
உயிர் தேய்கிறேன்

ஆயுள் வரை உந்தன்
பாயில் உறவாட வருகிறேன்
ஓ.. காதல் வரலாறு எழுத
என் தேகம் தருகிறேன்
என் வார்த்தை உன் வாழ்க்கையில்



மழையில் நனையும்
பனிமலரைப் போலே
என் மனதில் நனைந்தேன்
உன் நினைவில் நானே
உலகைத் தழுவும்
நள்ளிரவைப் போலே
என் உள்ளே பரவும்
ஆருயிரும் நீயே
எனை மீட்டியே 
நீ இசையாக்கினாய்
உனை ஊற்றியே 
என் உயிர் ஏற்றினாய்

மின்னல் ஒரு கோடி
உந்தன் உயிர் தேடி வந்ததே
ஓ....லட்சம் பல லட்சம் 
பூக்கள் ஒன்றாக பூத்ததே
உன் வார்த்தை தேன் வார்த்ததே
மௌனம் பேசியதே
குளிர் தென்றல் வீசியதே
ஏழை தேடிய ராணி 
நீ என் காதல் தேவதையே
ஐ லவ் யு...

நிலவே நிலவே சரிகமபதநி பாடு - Nilave Nilave Sarigamapathani Paadu Lyrics

நிலவே நிலவே 
சரிகமபதநி பாடு
என் கனவை திருடி 
பல்லவி வரியாய் போடு
நிலவே நிலவே 
சரிகமபதநி பாடு
என் கனவை திருடி 
பல்லவி வரியாய் போடு
உனை ஒவ்வொரு இரவிலும் தேடுகிறேன்
நீ தேய்கின்ற நாளில் வாடுகிறேன்
உன் மௌனத்தில் ஆயிரம் பாட்டு
நான் மயங்குகிறேன் அதை கேட்டு
நீ மாலையில் வருவதும்
காலையில் மறைவதும் 
என்னடி விளையாட்டு

நிலவே நிலவே 
சரிகமபதநி பாடு
என் கனவை திருடி 
பல்லவி வரியாய் போடு



காதல் பேசும் 
வயசுக்கு வந்த நிலா
உனை நெஞ்சை தீண்ட 
அனுமதி தந்த நிலா
தன் மனதை சொல்லிவிட
தயங்குது தந்த நிலா
அட ஆதாம் ஏவாள்
பார்த்தது பழைய நிலா
என் ஆசை நெஞ்சை
ஈர்த்தது புதிய நிலா
உன் கனவுகளை மெல்ல உணரும் நிலா
என் ஆயுளையே அள்ளி பருகும் நிலா
பகலுடன் இரவும் பதினெட்டு வருடம்
வளர்ந்தது இந்த நிலா
இது உனக்கே சொந்த நிலா

நிலவே நிலவே 
சரிகமபதநி பாடு
என் கனவை திருடி 
பல்லவி வரியாய் போடு



கண்ணில் கண்ணில்
கனவுகள் பூசுகிறாய்
என் காதல் நெஞ்சில்
நினைவுகள் வீசுகிறாய்
தொட தொட நான் வருகையிலே
தொலைவினில் ஓடுகிறாய்
அட நானும் உன்னை
பார்ப்பது தெரியாதா
நான் பேசும் பாஷை
உனக்கது புரியாதா
அடி நானிருந்தேன் உன் ஞாபகமாய்
அதை சொல்லுகிறேன் நான் சூசகமாய்
அருகில் நானும் தொலைவில் நீயும்
இருந்தால் காதலெது
மனம் கேட்கும் கேள்வியிது

நிலவே நிலவே 
சரிகமபதநி பாடு
என் கனவை திருடி 
பல்லவி வரியாய் போடு
நிலவே நிலவே 
சரிகமபதநி பாடு
என் கனவை திருடி 
பல்லவி வரியாய் போடு

அடி கானக்கருங்குயிலே கச்சேரி - Adi Kaanakarungiyile Kacheri Lyrics

அடி கானக்கருங்குயிலே
கச்சேரி வைக்கப் போறேன்
உன்ன கணக்காக சேர்த்துவச்சு
கைராசி பாக்கப்போறேன்
இனி மனசெல்லாம் மத்தாப்பூ போல
மலராக தூவும் அம்மா
இனி வருங்காலம் துன்பங்கள் நீங்கி
மலர்மாலை போடும் அம்மா

அடி கானக்கருங்குயிலே
கச்சேரி வைக்கப் போறேன்
உன்ன கணக்காக சேர்த்துவச்சு
கைராசி பாக்கப்போறேன்



ஜாதி ஆண் ஜாதி
இவ உன் பொஞ்ஜாதி
இனிமே வேறேதும் ஜாதி இல்லை
பாதி உன் பாதி
மானம் மருவாதி
நாளும் காப்பாத்தும் கன்னிப் புள்ள
சொன்னத கேளு
மன்னவன் தோளு
இன்பத்த காட்டும் பாரு புள்ள
சிந்திச்சு பாத்து
சொந்தத்த சேத்து
பெத்துக்க வேணும் முத்துப் புள்ள
நீரா நில்லாது
நேரம் செல்லாது
சேரு எப்போதும் வீட்டுக்குள்ள
பாலும் நல்லால்ல
பழமும் நல்லால்ல
பசிக்கும் வேறேதோ ஏக்கத்துல
அடி பரிமாறு மச்சானப் பாத்து
பாய் போட்ட கூட்டுக்குள்ள

அடி கானக்கருங்குயிலே
கச்சேரி வைக்கப் போறேன்
உன்ன கணக்காக சேர்த்துவச்சு
கைராசி பாக்கப்போறேன்
இனி மனசெல்லாம் மத்தாப்பூ போல
மலராக தூவும் அம்மா
இனி வருங்காலம் துன்பங்கள் நீங்கி
மலர்மாலை போடும் அம்மா



பாசம் அன்போட
பழகும் பண்போட
நாளும் நீ எந்தன் நெஞ்சுக்குள்ள
காதல் கல்யாணம்
கலந்த பின்னால
கண்ணே இனி உந்தன் கண்ணுக்குள்ள
சந்தனம் போல குங்குமம் போல
சங்கமம் ஆகும் ராசாக்கண்ணு
வந்தது வேள தந்தது மாலை
கேட்டது யாரு சின்னப் பொண்ணு
இனிமே ரெண்டல்ல
இதயம் ஒன்னாச்சு
இரவும் பகலெல்லாம்
இன்பம் உண்டு
நெனச்சா நெஞ்செல்லாம்
நெறஞ்சு கொண்டாடும் 
நெதமும் சுகமுண்டு சொர்க்கமுண்டு
ஒரு இலை போட்டு போடாத சோறு
எடுக்கும் உன் நேரம் இன்று

அடி கானக்கருங்குயிலே
கச்சேரி வைக்கப் போறேன்
உன்ன கணக்காக சேர்த்துவச்சு
கைராசி பாக்கப்போறேன்
இனி மனசெல்லாம் மத்தாப்பூ போல
மலராக தூவும் அம்மா
இனி வருங்காலம் துன்பங்கள் நீங்கி
மலர்மாலை போடும் அம்மா

அடி கானக்கருங்குயிலே
கச்சேரி வைக்கப் போறேன்
உன்ன கணக்காக சேர்த்துவச்சு
கைராசி பாக்கப்போறேன்

காதல் காதல் காதலில் நெஞ்சம் - Kathal Kathal Kathalil Nenjam Lyrics

காதல் காதல் காதலில் நெஞ்சம்
கண்ணாமூச்சி ஆடுதடா
தேடும் கண்ணில் பட படவென்று
பட்டாம்பூச்சி ஓடுதடா

எங்கேயோ எங்கேயோ
இவனை இவனே தேடுகிறான்
தாய்மொழி எல்லாம் மறந்துவிட்டு
தனக்குள் தானே பேசுகிறான்
காதல் மட்டும் புரிவதில்லை
காற்றா நெருப்பா தெரிவதில்லை
காதல் தந்த மூர்ச்சை நிலை
நான் கண்கள் திறந்தும் தெளியவில்லை

காதல் காதல் காதலில் நெஞ்சம்
கண்ணாமூச்சி ஆடுதடா
தேடும் கண்ணில் பட படவென்று
பட்டாம்பூச்சி ஓடுதடா



நேற்றுவரைக்கும் இங்கிருந்தேன்
இன்றென்னை காணவில்லை
வெயிலில்லை மழையில்லை
பார்த்தேனே வானவில்லை
என் நெஞ்சோடு ரசித்தேன்
கொல்லாமல் கொல்கின்ற அழகை
உயிரில் ஓர் வண்ணம் குழைத்து
வரைந்தேன் அவளை
காதல் மட்டும் புரிவதில்லை
காற்றா நெருப்பா தெரிவதில்லை
காதல் தந்த மூர்ச்சை நிலை
நான் கண்கள் திறந்தும் தெளியவில்லை

காதல் காதல் காதலில் நெஞ்சம்
கண்ணாமூச்சி ஆடுதடா
தேடும் கண்ணில் பட படவென்று
பட்டாம்பூச்சி ஓடுதடா



பாலைவனத்தில் நடந்திருந்தேன்
நீ வந்து குடை விரித்தாய்
எந்தன் பெயரே மறந்திருந்தேன்
நீ இன்று குரல் கொடுத்தாய்
உன் கண்ணாடி மனதில்
இப்போது என் முகம் பார்த்தேன்
நீ வந்த பொழுதில் எந்தன் 
நெஞ்சம் பூத்தேன்
நதிகள் கடலில் தெரிவதில்லை
நட்பில் கவலை புரிவதில்லை
இதயம் இரண்டும் சேர்ந்திருந்தால்
இரவும் பகலும் பார்ப்பதில்லை

காதல் காதல் காதலில் நெஞ்சம்
கண்ணாமூச்சி ஆடுதடா
தேடும் கண்ணில் பட படவென்று
பட்டாம்பூச்சி ஓடுதடா

எங்கேயோ எங்கேயோ
இவனை இவனே தேடுகிறான்
தாய்மொழி எல்லாம் மறந்துவிட்டு
தனக்குள் தானே பேசுகிறான்
காதல் மட்டும் புரிவதில்லை
காற்றா நெருப்பா தெரிவதில்லை
காதல் தந்த மூர்ச்சை நிலை
நான் கண்கள் திறந்தும் தெளியவில்லை

உன் மனசில பாட்டு தான் இருக்குது - Un Manasila Paatu Than Irukuthu Lyrics

உன் மனசில பாட்டு தான் இருக்குது
என் மனசத கேட்டு தான் தவிக்குது
அதில் என்ன வச்சு பாட மாட்டியா
நெஞ்ச தொட்டு ஆளும் ராசய்யா
மனசு முழுதும் இசை தான் உனக்கு
அதிலே எனக்கோர் இடம் நீ  ஒதுக்கு

உன் மனசில பாட்டு தான் இருக்குது
என் மனசத கேட்டு தான் தவிக்குது



பாட்டால புள்ளி வச்சு
பார்வையில கிள்ளி வச்சு
பூத்திருந்த என்னச் சேர்ந்த தேவனே
போடாத சங்கதி தான்
போட ஒரு மேடை உண்டு
நாளு வச்சு சேர வாங்க ராசனே
நெஞ்சோடு கூடு கட்டி
நீங்க வந்து வாழனும்
நில்லாம பாட்டுச் சொல்லி
காலமெல்லாம் ஆளனும்
சொக்கத் தங்கம் உங்களத்தான்
சொக்கி சொக்கி பாத்து
தத்தளிச்சேன் நித்தம் நித்தம்
நான் பூத்து

உன் மனசில பாட்டு தான் இருக்குது
என் மனசத கேட்டு தான் தவிக்குது



நீ பாடும் ராகம் வந்து
நிம்மதிய தந்ததய்யா
நேத்து வரை நெஞ்சில் ஆச தோணல
பூவான பாட்டு இந்த
பொண்ணத் தொட்டு போனதய்யா
போன வழி பாத்து கண்ணு மூடல
உன்னோட வாழ்ந்திருந்தா
ஊருக்கெல்லாம் ராணி நான்
என்னோட ஆசையெல்லாம்
ஏத்துக்கனும் நீங்க தான்
உங்களத்தான் எண்ணி எண்ணி
என்னுசிரு வாழும்
சொல்லுமய்யா நல்ல சொல்லு
சொன்னா போதும்

என் மனசில பாட்டு தான் இருக்குது
உன் மனசத கேட்டு தான் தவிக்குது
நான் உன்ன மட்டும் பாடும் குயிலு தான்
நீ என்ன எண்ணி வாழும் மயிலு தான்
மனசு முழுதும் இசை தான் எனக்கு
இசையோடொனக்கு இடமும் இருக்கு
என் மனசில பாட்டு தான் இருக்குது
உன் மனசத கேட்டு தான் தவிக்குது

ராசாத்தி மனசுல என் ராசா - Rasaathi Manasula En Raasa Lyrics

ராசாத்தி மனசுல
என் ராசா உன் நெனப்பு தான்
இந்த ராசாத்தி மனசுல
என் ராசா உன் நெனப்பு தான்
புது நேசம் உண்டானது
இரு நெஞ்சம் கொண்டாடுது
புது நேசம் உண்டானது
இரு நெஞ்சம் கொண்டாடுது

ராசாவின் மனசுல
என் ராசாத்தி நெனப்பு தான்
இந்த ராசாவின் மனசுல
என் ராசாத்தி நெனப்பு தான்



முள்ளிருக்கும் பாதை
நீ நடந்தபோதும்
முள்ளெடுத்து போட்டு
நீ நடக்கலாகும்
வீதியிலே நீ நடந்தா
கண்கள் எல்லாம் உன் மேல தான்
முள்ளு தச்சா தாங்கும் நெஞ்சம்
கண்கள் தச்சா தாங்காதய்யா
நெதமும் உன் நெனப்பு
வந்து விரட்டும் வீட்டுல
உன்ன சேர்ந்தாலும் உன் உருவம்
என்ன வாட்டும் வெளியில
இது ஏனோ அடி மானே
அத நானோ அறியேனே

ராசாத்தி மனசுல
என் ராசா உன் நெனப்பு தான்
இந்த ராசாத்தி மனசுல
என் ராசா உன் நெனப்பு தான்



செந்தூரக்க கோலம் 
வானத்துல பாரு
வந்து இந்த நேரம்
போட்டு வச்ச தாரு
சேரும் இள நெஞ்சங்கள
வாழ்த்துச் சொல்ல போட்டாகளா
ஊருக்குள்ள சொல்லாதத 
வெளியில் சொல்லி தந்தாகளா
வானம் பாடுது
இந்த பூமி பாடுது
ஊரும் வாழ்த்துது
இந்த உலகம் வாழ்த்துது
தடை ஏதும் கிடையாது
அதை நானும் அறிவேனே

ராசாவின் மனசுல
என் ராசாத்தி நெனப்பு தான்
இந்த ராசாத்தி மனசுல
என் ராசா உன் நெனப்பு தான்
புது நேசம் உண்டானது
இரு நெஞ்சம் கொண்டாடுது
புது நேசம் உண்டானது
இரு நெஞ்சம் கொண்டாடுது

லா.. லா.. லா.. லா.. 

காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா - Kaathoram Lolaakku Kathai Solluthayya Lyrics

காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதய்யா
காத்தாடும் மேலாக்கு
உனை பின்னுதய்யா
காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதடி
காத்தாடும் மேலாக்கு
எனை பின்னுதடி
உன் முகத்த பாக்கையில
என் முகத்த நான் மறந்தேன்

காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதடி
காதோரம் லோலாக்கு



நான் விரும்பும் மாப்பிள்ளக்கு
நாள் கணக்கா காத்திருந்தேன்
நான் விரும்பும் மாப்பிள்ளக்கு
நாள் கணக்கா காத்திருந்தேன்
வந்தாயே நீயோ வாசலத்தேடி
கண்டேனே நானும் எனக்கொரு ஜோடி
உன்னாட்டந்தான் தங்கத்தேரு
கண்டதில்ல எங்க ஊரு
காதல் போதை தந்த கள்ளி
கந்தன் தேடி வந்த வள்ளி
நீ தொடத் தானே நான் பொறந்தேன்
நாளொரு வண்ணம் நான் வளர்ந்தேன்

காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதடி
காத்தாடும் மேலாக்கு
எனை பின்னுதடி
காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதய்யா
காதோரம் லோலாக்கு



வானவில்ல விலை கொடுத்து
வாங்கிடத்தான் காசிருக்கு
வானவில்ல விலை கொடுத்து
வாங்கிடத்தான் காசிருக்கு
என் கூட உன் போல் ஓவியப்பாவை
இல்லாமல் போனால் நான் ஒரு ஏழை
எந்நாளும் நான் உந்தன் சொத்து
இஷ்டம் போல அள்ளிக் கட்டு
மேலும் கீழும் மெல்லத் தொட்டு
மேளம் போல என்னத் தட்டு
நான் அதுக்காக காத்திருந்தேன்
நீ வரும் பாத பாத்திருந்தேன்

காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதய்யா
காத்தாடும் மேலாக்கு
உனை பின்னுதய்யா
உன் முகத்த பாக்கையில
என் முகத்த நான் மறந்தேன்
காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதய்யா
காத்தாடும் மேலாக்கு
உனை பின்னுதய்யா
காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதடி
காத்தாடும் மேலாக்கு
எனை பின்னுதடி

என்னுயிரே வா என்னுயிரே - Ennuyire Vaa Ennuyire Lyrics

என்னுயிரே வா என்னுயிரே
என்னருகே வா என்னுயிரே
மலர்த்தூவும் மழைச்சாரல்
மனமெங்கும் ஒரு தூதல்
மலர்த்தூவும் மழைச்சாரல்
மனமெங்கும் ஒரு தூதல்

என்னுயிரே வா என்னுயிரே
என்னருகே வா என்னுயிரே



காளிதாசன் காதல் காவியம்
நேரில் காணும் நாளிது
காமதேவன் தேரின் ஓவியம்
ஜோடி சேரும் தோளிது
பார்வை அம்பு பாய்ந்தது
பார்த்து பார்த்து தேய்ந்தது
மாலை நேரம் ஓய்ந்தது
மானும் மார்பில் சாய்ந்தது
காதல் பாட்டு பாடாது
கண்கள் இன்று மூடாது
தேகம் தேடி கூடாது
தென்றல் வந்து ஆடாது
பூவிது பொன்னிது தூவும்போது

என்னுயிரே வா என்னுயிரே
மலர்த்தூவும் மழைச்சாரல்
மனமெங்கும் ஒரு தூதல்
என்னருகே வா என்னுயிரே



மாலை சூடும் மாலை நேரமே
காலை நெஞ்சில் பாரமே
மாலை போல கூடிச் சேருமே
போதை இன்னும் ஏறுமே
காதல் என்னும் மோகனம்
காதில் வந்து கூறவா
கன்னி வேக வாகனம்
கண்டு நானும் மாறவா
கன்னம் என்னும் தேன் கிண்ணம்
இன்பம் ஊறும் பூவண்ணம்
இன்னும் கொஞ்சம் தா என்னும்
இன்றும் என்றும் நீ என்னும்
காலையும் மாலையும் காதல் ராகம்

என்னுயிரே வா என்னுயிரே
என்னருகே வா என்னுயிரே
மலர்த்தூவும் மழைச்சாரல்
மனமெங்கும் ஒரு தூதல்
மலர்த்தூவும் மழைச்சாரல்
மனமெங்கும் ஒரு தூதல்
என்னுயிரே வா என்னுயிரே
என்னருகே வா என்னுயிரே

வெள்ளைப் புறா ஒன்று ஏங்குது - Vellai Puraa Ondru Yenguthu Lyrics

வெள்ளைப் புறா ஒன்று
ஏங்குது கையில் வராமலே
வெள்ளைப் புறா ஒன்று
ஏங்குது கையில் வராமலே
நமது கதை புதுக்கவிதை
இலக்கணங்கள் இதற்கு இல்லை
நான் உந்தன் பூமாலை.. ஓ...ஓ..
வெள்ளைப் புறா ஒன்று
ஏங்குது கையில் வராமலே



கங்கை வெள்ளம் பாயும் போது
கரைகள் என்ன வேலியோ
ஆவியோடு சேர்ந்த ஜோதி
பாதை மாறக் கூடுமோ
மனங்களின் நிறம் பார்த்த காதல்
முகங்களின் நிறம் பார்க்குமோ
நீ கொண்டு வா காதல் வரம்
பூத்தூவுமே பன்னீர் மரம்
சூடான கனவுகள் கண்ணோடு தள்ளாட

வெள்ளைப் புறா ஒன்று
ஏங்குது கையில் வராமலே



பூவில் சேர்ந்து வாழ்ந்த வாசம்
காவல்தனை மீறுமே
காலம் மாறும் என்ற போதும்
காதல் நதி ஊறுமே
வரையறைகளை மாற்றும் போது
தலைமுறைகளும் மாறுமே
என்றும் உந்தன் நெஞ்சோரமே
அன்பே உந்தன் சஞ்சாரமே
கார்கால சிலிர்ப்புகள்
கண்ணோரம் உண்டாக

வெள்ளைப் புறா ஒன்று
ஏங்குது கையில் வராமலே
நமது கதை புதுக்கவிதை
இலக்கணங்கள் இதற்கு இல்லை
நான் உந்தன் பூமாலை.. ஓ...ஓ..

லா.. லா.. லா.. லா...

கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள் - Kannaa Varuvaayaa Meeraa Ketkiraal Lyrics

கண்ணா வருவாயா
கண்ணா வருவாயா
மீரா கேட்கிறாள்
மன்னன் வரும் பாதை
மங்கை பார்க்கிறாள்
மாலை மலர்ச்சோலை
நதியோரம் நடந்து

கண்ணா வருவாயா
மீரா கேட்கிறாள்



ஆ..
நீலவானும் நிலமும் நீரும்
நீயென காண்கிறேன்
உண்ணும் போதும் உறங்கும் போதும்
உன் முகம் பார்க்கிறேன்
கண்ணன் வந்து நீந்திடாது
காய்ந்து போகும் பாற்கடல்
உன்னை இங்கு ஆடை போல
ஏற்றுக் கொள்ளும் பூவுடல்
வேறில்லையே பிருந்தாவனம்
விடிந்தாலும் நம் ஆலிங்கனம்
ஸ்வர்க்கம் இதுவோ

மீரா வருவாளா
கண்ணன் கேட்கிறான்
மாலை மலர்ச்சோலை
நதியோரம் நடந்து
மீரா வருவாளா
கண்ணன் கேட்கிறான்
 


மல்லிகை பஞ்சணையிட்டு
மெல்லிய சிற்றிடைத் தொட்டு
மோகம் தீர்க்கவா
மல்லிகை பஞ்சணையிட்டு
மெல்லிய சிற்றிடைத் தொட்டு
மோகம் தீர்க்கவா
மன்மத மந்திரம் சொல்லி
வந்தனள் சுந்தர வள்ளி
ராகம் சேர்க்கவா
மன்மத மந்திரம் சொல்லி
வந்தனள் சுந்தர வள்ளி
ராகம் சேர்க்கவா
கொடியிடை ஒடிவதன் முன்னம்
மடியினில் எடுத்திடவா
மலர்விழி மயங்கிடும் வண்ணம்
மதுரசம் கொடுத்திடவா
இரவு முழுதும் உறவு மழையிலே
இருவர் உடலும் நனையும் பொழுதிலே
ஒருவர் கவிதை ஒருவர் விழியிலே

கண்ணா வருவாயா
மீரா கேட்கிறாள்
மீரா வருவாளா
கண்ணன் கேட்கிறான்
மாலை மலர்ச்சோலை
நதியோரம் நடந்து

மீரா வருவாளா
கண்ணன் கேட்கிறான்
கண்ணா.. கண்ணா..கண்ணா...

கல்யாண தேன் நிலா - Kalyaana Then Nila Lyrics

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீ தானே வான் நிலா
என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா



தென்பாண்டிக் கூடலா
தேவாரப் பாடலா
தீராத ஊடலா
தேன் சிந்தும் கூடலா
என் அன்புக் காதலா
எந்நாளும் கூடலா
பேரின்பம் மெய்யிலா
நீ தீண்டும் கைய்யிலா
பார்ப்போமே ஆவலா
வா வா நிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீ தானே வான் நிலா
என்னோடு வா நிலா



உன் தேகம் தேக்கிலா
தேன் உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா
நான் கைதிக் கூண்டிலா
சங்கீதம் பாட்டிலா
நீ பேசும் பேச்சிலா
என் ஜீவன் என்னிலா
உன் பார்வை தன்னிலா
தேனூறும் வேர் பலா
உன் சொல்லிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீ தானே வான் நிலா
என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா
கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா

உன் பார்வையில் ஓராயிரம் - Un Paarvaiyil Oraayiram Lyrics

உன் பார்வையில் ஓராயிரம்
உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன்
காற்றில் நானே
உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன்
காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அணைக்கிறேன்

உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன்
காற்றில் நானே



அசைத்து இசைத்தது வளைக்கரம் தான்
இசைந்து இசைத்தது புது ஸ்வரம் தான்
சிரித்த சிரிப்பொலி சிலம்பொலி தான்
கழுத்திலிருப்பது வலம்புரி தான்
இருக்கும் வரைக்கும் எடுத்து கொடுக்கும்
இருக்கும் வரைக்கும் எடுத்து கொடுக்கும்
மனதை மயிலிடம் இழந்தேனே
மயங்கி தினம் தினம் விழுந்தேனே
மறந்து இருந்து பறந்து தினம் மகிழ

உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன்
காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அணைக்கிறேன்
உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன்
காற்றில் நானே



அணைத்து நனைந்தது தலையணை தான்
அடுத்த அடி என்ன எடுப்பது நான்
படுக்கை விரித்தது உனக்கெனத் தான்
இடுப்பை வளைத்துனை அணைத்திடத் தான்
நினைக்க மறந்தாள் தனித்து பறந்தேன்
நினைக்க மறந்தாள் தனித்து பறந்தேன்
மறைத்த முகத்திரை திறப்பாயோ
திறந்து அகச்சிறை இருப்பாயோ
இருந்து விருந்து இரண்டு மனம் இணைய

உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன்
காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அணைக்கிறேன்
உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன்
காற்றில் நானே

வா வா அன்பே பூஜை உண்டு - Vaa Vaa Anbe Poojai Undu Lyrics

வா வா அன்பே பூஜை உண்டு
பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு
பறவை அழைத்தது
அதற்கொரு துணையும் கிடைத்தது
சிறகை விரிப்பது வலம் வரத் தான்
வா வா அன்பே பூஜை உண்டு
வா வா அன்பே...



மாலை நேரச் சூரியன்
மேற்கிலிருந்து பார்க்கிறான்
வேலியோரப் பூக்களின்
வசந்த கீதம் கேட்கிறான்
அந்தி வெயில் வேளை தான்
ஆசை பூக்கும் நேரம்
புல்லின் மீது வாடை தான்
பனியை மெல்ல தூவும்
போதும் போதும் தீர்ந்தது வேதனை
வண்ண மானும் தான் சேர்ந்தது நாதனை
விரலைக் கண்டதும் மீட்டச் சொன்னது வீணை

வா வா அன்பே பூஜை உண்டு
பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு
பறவை அழைத்தது
அதற்கொரு துணையும் கிடைத்தது
சிறகை விரிப்பது வலம் வரத் தான்
வா வா அன்பே பூஜை உண்டு
வா வா அன்பே...



நீலம் பூத்த பார்வைகள்
நூறு கடிதம் போட்டது
நீயும் நானும் சேர்ந்திட
நேரம் பொழுது கேட்டது
மலரை வண்டு மொய்த்திட
மாதம் தேதி ஏது
மீனம் மேஷம் பார்ப்பதோ
காதல் தோன்றும் போது
காலை மாலை ஏங்கினேன் ஏங்கினேன்
கையில் நான் உனை வாங்கினேன் வாங்கினேன்
நீயும் நீயல்ல நானும் நானல்ல கண்ணா

வா வா அன்பே பூஜை உண்டு
பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு
பறவை அழைத்தது
அதற்கொரு துணையும் கிடைத்தது
சிறகை விரிப்பது வலம் வரத் தான்
வா வா அன்பே பூஜை உண்டு
வா வா அன்பே...