கள்ளிக்காட்டில் பிறந்த தாயே - Kallikaatil Perantha Thaaye Lyrics

கள்ளிக்காட்டில் பிறந்த தாயே
என்ன கல்லொடச்சு வளர்த்த நீயே
முள்ளுக்காட்டில் மொளச்ச தாயே
என்ன முள்ளுத் தைக்க விடல நீயே
காடைக்கும் காட்டுக்குருவிக்கும்
எண்டம்புதருக்குள் இடமுண்டு
கோடைக்கும் அடிக்கும் குளிருக்கும்
தாயி ஒதுங்கத்தான் இடமுண்டா
கரட்டுமேட்டைய மாத்துனா
அவ கல்ல புழிஞ்சு கஞ்சி ஊத்துனா
கரட்டுமேட்டைய மாத்துனா
அவ கல்ல புழிஞ்சு கஞ்சி ஊத்துனா

கள்ளிக்காட்டில் பிறந்த தாயே
என்ன கல்லொடச்சு வளர்த்த நீயே
முள்ளுக்காட்டில் மொளச்ச தாயே
என்ன முள்ளுத் தைக்க விடல நீயே



உழவு காட்டுல விதை விதைப்பா
ஓணாங்கரட்டுல கூழ் குடிப்பா
ஆவாரங்குலையில கை தொடப்பா
பாவமப்பா.....ஓ..ஓ..ஓ..ஓ..
வேலி முள்ளில் அவ வெறகெடுப்பா
நாழி அரிசி வச்சு உலை எரிப்பா
புள்ள உண்ட மிச்சம் உண்டு உசிர் வளர்ப்பா
தியாகமப்பா....
கிழக்கு விடியுமுன்ன முழிக்கிறா
அவ உலைக்க புடிச்சு தான் பிறக்கிறா
மண்ணக் கிண்டி தான் பொழைக்கிறா
உடல் மக்கிப் போகுமட்டும் உழைக்கிறா

கள்ளிக்காட்டில் பிறந்த தாயே
என்ன கல்லொடச்சு வளர்த்த நீயே
முள்ளுக்காட்டில் மொளச்ச தாயே
என்ன முள்ளுத் தைக்க விடல நீயே



தங்கம் தனித்தங்கம் மாசு இல்ல
தாய்ப்பால் ஒன்னில் மட்டும் தூசு இல்ல
தாய்வழி சொந்தம் போல பாசம் இல்ல
நேசம் இல்ல... ஓ..ஓ..ஓ..ஓ..
தாயி கையில் என்ன மந்திரமோ
கேப்பைக்களியில் ஒரு நெய் ஒழுகும்
காஞ்ச கருவாடு தேன் ஒழுகும்
அவ சமைக்கையிலே....
சொந்தம் நூறு சொந்தம் இருக்குதே
பெத்த தாயி போல ஒன்னு நிலைக்குதா
சாமி நூறு சாமி இருக்குதே
அட தாயி ரெண்டு தாயி இருக்குதா

கள்ளிக்காட்டில் பிறந்த தாயே
என்ன கல்லொடச்சு வளர்த்த நீயே
முள்ளுக்காட்டில் மொளச்ச தாயே
என்ன முள்ளுத் தைக்க விடல நீயே

No comments:

Post a Comment