என்ன அழகு எத்தனை அழகு - Enna Alagu Ethanai Alagu Lyrics

என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்றெந்தன் கை சேர்ந்ததே
சின்ன அழகு சித்திரை அழகு
சிறு நெஞ்சை கொத்திய அழகு
இன்றெந்தன் தோள் சாய்ந்ததே
எந்தன் உள்ளங்கையில் 
அவள் உயிரை வைத்தாள்
ஒரே சொல்லில் 
மனசை தைத்தாள்
சுட்டுவிழி பார்வையில்
சுகம் வைத்தாள்
நான் காதலின் கடலில் விழுந்துவிட்டேன்
நீ கரம் ஒன்று கொடுத்தாய் எழுந்துவிட்டேன்

என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்றெந்தன் கை சேர்ந்ததே



அன்பே உன் ஒற்றைப் பார்வை
அதைத் தானே யாசித்தேன்
கிடையாதென்றால் கிளியே 
என் உயிர் போக யோசித்தேன்
நான்காண்டு தூக்கம் கெட்டு
இன்றுன்னை சந்தித்தேன்
காற்றும் கடலும் நிலமும்
அடி தீக்கூடத் தித்தித்தேன்
மாணிக்கத் தேரே
உனை மலர் கொண்டு பூசித்தேன்
என்னை நான் கிள்ளி
இது நிஜம் தானா சோதித்தேன்
இது போதுமே இது போதுமே
இனி என் கால்கள் வான் போகுமே

என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்றெந்தன் கை சேர்ந்ததே



நான் கொண்ட ஆசை எல்லாம்
நான்காண்டு ஆசை தான்
உறங்கும் போதும் ஒலிக்கும்
அடி உன் கொலுசின் ஓசை தான்
நீ வீசும் பார்வை இல்லை
நெருப்பாச்சு நெஞ்சம் தான்
வலியின் கொடுமை முடிய
அடி தமிழ் வார்த்தை கொஞ்சம் தான்
இன்றே தான் பெண்ணே
உன் முழுப்பார்வை நான் கண்டேன்
கை தொட்ட நேரம்
என் முதல் மோட்சம் நான்
மகராணியே மலர்வாணியே
இனி என் ஆவி உன் ஆவியே

என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்றெந்தன் கை சேர்ந்ததே
சின்ன அழகு சித்திரை அழகு
சிறு நெஞ்சை கொத்திய அழகு
இன்றெந்தன் தோள் சாய்ந்ததே
எந்தன் உள்ளங்கையில் 
அவள் உயிரை வைத்தாள்
ஒரே சொல்லில் 
மனசை தைத்தாள்
சுட்டுவிழி பார்வையில்
சுகம் வைத்தாள்
நான் காதலின் கடலில் விழுந்துவிட்டேன்
நீ கரம் ஒன்று கொடுத்தாய் எழுந்துவிட்டேன்

என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்றெந்தன் கை சேர்ந்ததே

No comments:

Post a Comment