என்னுயிரே வா என்னுயிரே - Ennuyire Vaa Ennuyire Lyrics

என்னுயிரே வா என்னுயிரே
என்னருகே வா என்னுயிரே
மலர்த்தூவும் மழைச்சாரல்
மனமெங்கும் ஒரு தூதல்
மலர்த்தூவும் மழைச்சாரல்
மனமெங்கும் ஒரு தூதல்

என்னுயிரே வா என்னுயிரே
என்னருகே வா என்னுயிரே



காளிதாசன் காதல் காவியம்
நேரில் காணும் நாளிது
காமதேவன் தேரின் ஓவியம்
ஜோடி சேரும் தோளிது
பார்வை அம்பு பாய்ந்தது
பார்த்து பார்த்து தேய்ந்தது
மாலை நேரம் ஓய்ந்தது
மானும் மார்பில் சாய்ந்தது
காதல் பாட்டு பாடாது
கண்கள் இன்று மூடாது
தேகம் தேடி கூடாது
தென்றல் வந்து ஆடாது
பூவிது பொன்னிது தூவும்போது

என்னுயிரே வா என்னுயிரே
மலர்த்தூவும் மழைச்சாரல்
மனமெங்கும் ஒரு தூதல்
என்னருகே வா என்னுயிரே



மாலை சூடும் மாலை நேரமே
காலை நெஞ்சில் பாரமே
மாலை போல கூடிச் சேருமே
போதை இன்னும் ஏறுமே
காதல் என்னும் மோகனம்
காதில் வந்து கூறவா
கன்னி வேக வாகனம்
கண்டு நானும் மாறவா
கன்னம் என்னும் தேன் கிண்ணம்
இன்பம் ஊறும் பூவண்ணம்
இன்னும் கொஞ்சம் தா என்னும்
இன்றும் என்றும் நீ என்னும்
காலையும் மாலையும் காதல் ராகம்

என்னுயிரே வா என்னுயிரே
என்னருகே வா என்னுயிரே
மலர்த்தூவும் மழைச்சாரல்
மனமெங்கும் ஒரு தூதல்
மலர்த்தூவும் மழைச்சாரல்
மனமெங்கும் ஒரு தூதல்
என்னுயிரே வா என்னுயிரே
என்னருகே வா என்னுயிரே

No comments:

Post a Comment