நிலவே நிலவே சரிகமபதநி பாடு - Nilave Nilave Sarigamapathani Paadu Lyrics

நிலவே நிலவே 
சரிகமபதநி பாடு
என் கனவை திருடி 
பல்லவி வரியாய் போடு
நிலவே நிலவே 
சரிகமபதநி பாடு
என் கனவை திருடி 
பல்லவி வரியாய் போடு
உனை ஒவ்வொரு இரவிலும் தேடுகிறேன்
நீ தேய்கின்ற நாளில் வாடுகிறேன்
உன் மௌனத்தில் ஆயிரம் பாட்டு
நான் மயங்குகிறேன் அதை கேட்டு
நீ மாலையில் வருவதும்
காலையில் மறைவதும் 
என்னடி விளையாட்டு

நிலவே நிலவே 
சரிகமபதநி பாடு
என் கனவை திருடி 
பல்லவி வரியாய் போடு



காதல் பேசும் 
வயசுக்கு வந்த நிலா
உனை நெஞ்சை தீண்ட 
அனுமதி தந்த நிலா
தன் மனதை சொல்லிவிட
தயங்குது தந்த நிலா
அட ஆதாம் ஏவாள்
பார்த்தது பழைய நிலா
என் ஆசை நெஞ்சை
ஈர்த்தது புதிய நிலா
உன் கனவுகளை மெல்ல உணரும் நிலா
என் ஆயுளையே அள்ளி பருகும் நிலா
பகலுடன் இரவும் பதினெட்டு வருடம்
வளர்ந்தது இந்த நிலா
இது உனக்கே சொந்த நிலா

நிலவே நிலவே 
சரிகமபதநி பாடு
என் கனவை திருடி 
பல்லவி வரியாய் போடு



கண்ணில் கண்ணில்
கனவுகள் பூசுகிறாய்
என் காதல் நெஞ்சில்
நினைவுகள் வீசுகிறாய்
தொட தொட நான் வருகையிலே
தொலைவினில் ஓடுகிறாய்
அட நானும் உன்னை
பார்ப்பது தெரியாதா
நான் பேசும் பாஷை
உனக்கது புரியாதா
அடி நானிருந்தேன் உன் ஞாபகமாய்
அதை சொல்லுகிறேன் நான் சூசகமாய்
அருகில் நானும் தொலைவில் நீயும்
இருந்தால் காதலெது
மனம் கேட்கும் கேள்வியிது

நிலவே நிலவே 
சரிகமபதநி பாடு
என் கனவை திருடி 
பல்லவி வரியாய் போடு
நிலவே நிலவே 
சரிகமபதநி பாடு
என் கனவை திருடி 
பல்லவி வரியாய் போடு

No comments:

Post a Comment