என்ன ஒரு என்ன ஒரு அழகியடா - Enna Oru Enna Oru Alagiyadaa Lyrics

என்ன ஒரு என்ன ஒரு 
அழகியடா
கண்ணவிட்டு கண்ணவிட்டு 
விலகலடா
என்ன ஒரு என்ன ஒரு 
அழகியடா
கண்ணவிட்டு கண்ணவிட்டு 
விலகலடா

மனச தாக்குற 
மின்னலும் அவ தான்
மழையில் தெரியும் 
ஜன்னலும் அவ தான்
கனவில் பூக்குற 
தாமரை அவ தான்
கதையில கேக்குற 
தேவதை அவ தான்
என்ன ஊரு என்ன பேரு கேக்கலடா
எங்க போறா எங்க போறா பாக்கலடா
முன்னாடி அவளும் பின்னாடி நானும்
ஒருமுறை திரும்பி பாத்தா என்ன
துண்டான மனச ஒன்னாக்க தானே
மறுபடி அவள கேட்டேனே

என்ன ஒரு என்ன ஒரு 
அழகியடா
கண்ணவிட்டு கண்ணவிட்டு 
விலகலடா



ராகுகாலத்துல நல்ல நேரம் வருமா
ஒன்பது பத்தரையில் சிரிச்சா
புள்ளையாரு கோயிலுக்கு
தேங்கா ஒன்னு உடைக்க 
மனசு வேண்டிச்சு புதுசா
இஞ்சு இஞ்சா இடைவெளி குறைஞ்சு
இதயம் பறக்குது லேசா
இங்கிலாந்து ராணி போல
தங்கத்துல இழைச்சு 
வாழவைப்பேன் மாசா
அவளை பார்க்குற யாருமே
அவளை மறந்தும் கூட
மறப்பதும் சிரமம்
பீபீ ஊதணும் நேரத்த சொல்லுடி
பீபீ ஏறுது சீக்கிரம் சொல்லுடி

என்ன ஒரு என்ன ஒரு 
அழகியடா
கண்ணவிட்டு கண்ணவிட்டு 
விலகலடா
வா.. என் உயிரே வா..
என் அழகே வா.. 
என் மயிலே.. ஓ.. ஓ.. வா,..



ஓ.. தில்லை நகரா.. தேரடித் தெருவா..
அங்கிருக்கா உன் வீடு
சாரதாஸு கூரப் பட்டு 
சேல வாங்கித் தருவேன்
வெட்கப்பட்டு எனை தேடு
ஹே.. தன்னந்தனியா வாழ்வது பாவம்
வந்து மாலைய போடு
தண்டவாளம் போல நாம
ரெண்டு பேருக்கிடையில் 
நடுவில் எதுக்கடி கோடு
மனசில் கட்டுறேன் மாளிகை வீடு
வாசல் கோலம் வந்து நீ போடு
பீபீ ஊதணும் நேரத்த சொல்லுடி
பீபீ ஏறுது சீக்கிரம் சொல்லுடி

என்ன ஒரு.. அழகியடா
கண்ணவிட்டு..விலகலடா
கொஞ்சம் கூட கொஞ்சம் கூட
பழகலடா..
எங்களுக்கு இப்ப ரெண்டு குழந்தையடா
வா.. என் உயிரே வா..
என் அழகே வா.. 
என் மயிலே.. ஓ.. ஓ.. வா,..

No comments:

Post a Comment